-
Apple ஆரோக்கிய ஆய்வு செயலிகளுக்கான தனியுரிமைக் கொள்கை
-
-
Apple ஆரோக்கிய ஆராய்ச்சி ஆய்வு செயலிக்கான தனியுரிமைக் கொள்கை, நவம்பர் 20, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது
உங்கள் தனியுரிமை Apple-க்கு முக்கியமாகும். அதனால் Apple ஆரோக்கிய ஆராய்ச்சி ஆய்வு செயலிகள் (“செயலிகள்”) தொடர்பாக உங்கள் தகவல்களை நாங்கள் எவ்வாறு கையாளுகிறோம் என்பதை உள்ளடக்கிய ஒரு தனியுரிமைக் கொள்கையை நாங்கள் உருவாக்கியுள்ளோம். தயவுசெய்து எங்கள் தனியுரிமை நடைமுறைகளைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள சிறிது நேரம் ஒதுக்குங்கள், மேலும் உங்களுக்கு எவையேனும் கேள்விகள் இருந்தால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
Apple ஆரோக்கிய ஆராய்ச்சி ஆய்வுகள்
இந்தத் தனியுரிமைக் கொள்கையானது, எங்களின் ஏதேனும் ஆரோக்கிய ஆராய்ச்சி ஆய்வு செயலிகளை நீங்கள் பயன்படுத்துவது மற்றும் எங்களின் எந்தவொரு ஆரோக்கிய ஆராய்ச்சி ஆய்வுகளிலும் (ஒவ்வொன்றும் ஒரு “ஆய்வு” மற்றும் கூட்டாக “ஆய்வுகள்” எனப்படும்) பங்கேற்பது தொடர்பாக நாங்கள் சேகரிக்கக்கூடிய அல்லது பெறக்கூடிய தகவல்களைச் சுருக்கமாகக் கூறுகிறது. நீங்கள் ஒரு Apple தயாரிப்பை வாங்கும்போது, Apple வலைத்தளங்களில் உலாவும்போது, பிற Apple கைப்பேசிச் செயலிகளைப் பயன்படுத்தும்போது அல்லது உங்கள் iPhone, iPad அல்லது Apple Watch போன்ற உங்கள் Apple சாதனத்தை உங்கள் பொதுவான ஆய்வு-அல்லாத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும்போது போன்ற பிற சூழல்களில் நாங்கள் உங்களைப் பற்றி சேகரிக்கும் அல்லது பெறும் தகவல்களை இந்தத் தனியுரிமைக் கொள்கை உள்ளடக்காது. எங்களின் பொதுவான தனியுரிமை நடைமுறைகளுக்கு, தயவுசெய்து எங்களின் பொதுவான தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கவும்.
தகவலறிந்த ஒப்புதல்
எந்தவொரு ஆய்விலும் பங்கேற்பதற்கு, நீங்கள் முதலில் ஆய்வுக்கான தகவலறிந்த ஒப்புதல் மற்றும் அங்கீகாரமளித்தல் படிவத்தை (பொருந்தினால்) ("தகவலறிந்த ஒப்புதல்") மதிப்பாய்வு செய்து கையொப்பமிட வேண்டும். ஒரு செயலியைப் பயன்படுத்துவதன் மூலம், இந்தத் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி மற்றும் தகவலறிந்த ஒப்புதலில் குறிப்பிடப்பட்டுள்ளபடி உங்கள் தகவல்களைச் சேகரிக்க, பயன்படுத்த மற்றும் பகிர்ந்துகொள்ள நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். இந்தத் தனியுரிமைக் கொள்கையில் உள்ள ஏதேனும் விஷயங்கள் தகவலறிந்த ஒப்புதலுடன் முரண்பட்டால், அவற்றைத் தகவலறிந்த ஒப்புதலின் விதிமுறைகள் கட்டுப்படுத்தும்.
இந்தக் கொள்கை முழுவதும், செயலிகள் மூலமாக அல்லது ஆய்வுகளின் ஒரு பகுதியாக உங்களிடமிருந்து அல்லது உங்களைப் பற்றி சேகரிக்கப்படும் தரவுகளை அணுகக்கூடிய அனைத்து நிறுவனங்களையும் குறிப்பதற்கு "ஆய்வுக் குழு" என்ற வார்த்தையை நாங்கள் பயன்படுத்தலாம். அனைத்து ஆய்வுகளுக்கும், தகவலறிந்த ஒப்புதலில் ஆய்வுக் குழு உறுப்பினர்களைப் பற்றிய குறிப்பிட்ட தகவல்கள் உள்ளடங்கியிருக்கும்.
தகவல் சேகரிப்பு மற்றும் பயன்பாடு
தனிநபர் தகவல்கள் என்பது ஒரு நபரை அடையாளம் காண அல்லது தொடர்புகொள்ளப் பயன்படுத்தக்கூடிய தரவுகளாகும். கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி, சில தனிநபர் தகவல்கள் மற்றும் தனிநபர் அல்லாத தகவல்கள், செயலிகள் மூலமாக அல்லது ஆய்வுகளின் ஒரு பகுதியாக உங்களிடமிருந்து அல்லது உங்களைப் பற்றி சேகரிக்கப்படலாம்.
செயலியின் மூலம் நாங்கள் சேகரிக்கும் தகவல்களை Apple மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மற்றும் பிற ஆய்வுக் குழு உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளலாம் மற்றும் இந்தத் தனியுரிமைக் கொள்கையுடன் ஒத்துப்போகும் வகையில் பயன்படுத்தலாம்.
நீங்கள் ஆய்வில் பங்கேற்க முடிவு செய்தால், நாங்கள் சேகரிக்கக்கூடிய தகவல்களின் வகைகள் மற்றும் அவற்றை நாங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கான எடுத்துக்காட்டுகள் கீழே உள்ளன.
நாங்கள் என்ன தகவல்களைச் சேகரிக்கிறோம்
நீங்கள் செயலிகளில் ஒன்றைப் பதிவிறக்கி, ஆய்வுகளில் ஒன்றில் சேரும்போது, செயலிகள் ("ஆய்வுத் தரவுகள்") மூலம் உங்களிடமிருந்து அல்லது உங்களைப் பற்றி சேகரிக்கப்படக்கூடிய தகவல் வகைப்பாடுகளின் (சில தனிநபர் தகவல்களை உள்ளடக்கியிருக்கலாம்) எடுத்துக்காட்டுகள் கீழே உள்ளன. ஓர் ஆய்வின் பகுதியாக உங்களைப் பற்றி சேகரிக்கப்படும் குறிப்பிட்ட தகவல் வகைப்பாடுகள், தகவலறிந்த ஒப்புதலில் விவரிக்கப்படும்.
- தொடர்புத் தகவல்கள் - உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் போன்றவை.
- மக்கள்தொகை சார்ந்த தகவல்கள், இதில் உங்கள் வயது, பாலினம், வசிப்பிட நிலை மற்றும் இனம் போன்றவை.
- மருத்துவ வரலாறு மற்றும் தகவல்கள்- உங்கள் உயரம்/எடை, முந்தைய மருத்துவ நோயறிதல் மற்றும் பரிசோதனை (எ.கா., சீரற்ற இதயத் தாளத்தைக் கண்டறிதல்), சில மருந்துகளின் தற்போதைய மற்றும் முந்தைய பயன்பாடு (எ.கா., இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகள்), குறிப்பிட்ட சில குடும்ப வரலாறு (எ.கா., சீரற்ற இதயத்துடிப்பு (ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன்) வரலாறு) மற்றும் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் பழக்கவழக்கங்கள் (எ.கா., புகைத்தல்) போன்றவை. பூர்த்திசெய்யுமாறு உங்களிடம் கேட்கப்படக்கூடிய, அக-செயலி கருத்தாய்வுகள் அல்லது பிற ஆரோக்கியம் தொடர்பான கருத்தாய்வுகள் மூலம் இந்தத் தகவல்கள் சேகரிக்கப்படலாம்.
- உணர்திறன் கொண்ட தகவல்கள், இதயத் துடிப்பு விகிதம் மற்றும் துடிப்புகளுக்கு இடையிலான கணக்கீடுகள் போன்றவை.
- தொழில்நுட்பத் தரவுகள், இது பல சந்தர்ப்பங்களில் தனிநபர் அல்லாத தகவல்களாகும், அதாவது, எந்தவொரு குறிப்பிட்ட நபருடனும், சுயமாக, நேரடித் தொடர்புகொள்ள அனுமதிக்காத வடிவத்தில் உள்ள தரவுகள். தொழில்நுட்பத் தரவுகளில், எடுத்துக்காட்டாக, உங்கள் செயலியின் பயன்பாடு பற்றிய தகவல்கள் (எ.கா., ஒரு செயலி முதலில் தொடங்கப்பட்டபோது), செயலியின் பதிப்பு மற்றும் நிறுவல் அடையாளம், சாதன அடையாளங்காட்டி மற்றும் இயக்க முறைமை மற்றும் மாடல் போன்ற உங்கள் சாதனத்தைப் பற்றிய தொழில்நுட்பத் தரவுகள் ஆகியவை அடங்கும். இலக்கிடப்பட்ட விளம்பரங்களை வழங்க Apple தனது வாடிக்கையாளர்களைக் காலப்போக்கில் மற்றும் மூன்றாம் தரப்பு வலைத்தளங்களில் கண்காணிக்காது, எனவே “கண்காணிக்க வேண்டாம்” (DNT) சமிக்ஞைகளுக்குப் பதிலளிக்காது.
- பாதகமான நிகழ்வுத் தகவல்கள், கவலை, பாதகமான நிகழ்வு அல்லது ஓர் ஆய்வில் எழுகின்ற பிற தெரிவிக்கத்தக்க விவகாரம் போன்றவை.
- பிற தகவல்கள், ஏதேனும் இருந்தால், தகவலறிந்த ஒப்புதலில் விவரிக்கப்பட்டுள்ளவை.
செயலிகள் வழியாகவும், ஆய்வுகளின் ஒரு பகுதியாகவும் உங்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட மீதமுள்ள தரவுகளிலிருந்து உங்கள் தொடர்புத் தகவல்கள் பிரிக்கப்பட்டு, Apple அமைப்புகளில் பெறப்படுவதற்கு முன்பு ஒரு தற்போக்கான குறியீட்டைக் கொண்டு ("குறியிடப்பட்ட ஆய்வுத் தரவுகள்”) இடமாற்றப்படும். நிதிஆதரவாளராக Apple செயல்படும்போது, சில நீதிபரிபாலன எல்லைகளில் சட்டத்திற்கு இணங்குவதற்காக அல்லது நிதிஆதரவாளராக Apple-க்கு உள்ள கடப்பாடுகளை நிறைவேற்றத் தேவையான குறியீடு-செய்யப்படாத ஆய்வுத் தரவுகளின் மதிப்பாய்வை உள்ளடக்கக்கூடிய ஒரு செயல்முறையை நடைமுறைப்படுத்துவதற்கு கடமைப்பட்டுள்ளது. Apple தனது சார்பாக அத்தகைய கடமைகளை நிறைவேற்றுவதற்கு மூன்றாம் தரப்பினரை நியமிக்கிறது, மேலும் குறியிடப்பட்ட ஆய்வுத் தரவுகள் மட்டுமே Apple அமைப்புகளில் பெறப்படுகின்றன. குறிப்பிட்ட சில ஆய்வுகளுக்கு, நீங்கள் ஒரு தொழில்நுட்பச் சிக்கலை எதிர்கொண்டால் மற்றும் கூடுதல் தொழில்நுட்ப ஆதரவுக்காக Apple நிறுவனத்திற்கு இடமாற்றம் செய்ய ஒப்புதல் அளித்தால், உங்களை நேரடியாக அடையாளம் காணக்கூடிய சில தகவல்களை Apple அணுகலாம். ஆய்வில் சம்பந்தப்பட்ட பிற நிறுவனங்கள், ஆய்வு முதன்மை ஆய்வாளர் அல்லது பிற ஆய்வுக் குழு உறுப்பினர்கள் போன்றவர்கள், ஆய்வுத் தரவுகளை அடையாளம் காணக்கூடிய வடிவத்தில் பராமரிக்கலாம்.
நாங்கள் உங்கள் தகவலை எவ்வாறு பயன்படுத்துகிறோம்
உங்களின் தொடர்புத் தகவல்கள் போன்ற உங்களின் தனிப்பட்ட தகவல்கள் செயலி வழியாகச் சேகரிக்கப்பட்டால், அவை பின்வருவன உட்பட தகவலறிந்த ஒப்புதலில் விவரிக்கப்பட்டிருக்கும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம்:
- ஆய்வில் பங்கேற்பதற்கான உங்கள் தகுதியைத் தீர்மானிப்பது உட்பட, உங்களை ஆய்வில் சேர்த்துக்கொள்வதற்கு
- ஆய்வை நடத்துவதற்கு மற்றும் ஆதரிப்பதற்கு
- செயலியில் உள்ள அறிவிப்புகள், மின்னஞ்சல் அல்லது வேறு வழிகளில் ஆய்வு தொடர்பான கருத்தாய்வுகள் அல்லது பிற செய்திகளுடன் உங்களைத் தொடர்பு கொள்வதற்கு
பின்வருவன உள்பட, தகவலறிந்த ஒப்புதலில் விவரிக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்காக உங்களின் குறியிடப்பட்ட ஆய்வுத் தரவுகள் பயன்படுத்தப்படலாம்:
- ஆய்வை நடத்துவதற்கு மற்றும் ஆதரிப்பதற்கு
- ஆரோக்கியம் தொடர்பான தயாரிப்புகள் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை உருவாக்குவதற்கு
- தகவலறிந்த ஒப்புதலில் அனுமதிக்கப்பட்டால், பிற ஆராய்ச்சி ஆய்வுகளுக்கு
- உங்களை அடையாளப்படுத்தாத ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் தொடர்புடைய அறிக்கைகளை வெளியிடுவதற்கு
ஆய்வுக்கான உங்கள் தகுதியை தீர்மானிப்பதற்கும், செயலிகளின் பொதுவான பயன்பாட்டிற்கும் உங்கள் தொழில்நுட்பத் தரவுகள் (மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி) பயன்படுத்தப்படலாம்.
மூன்றாம் தரப்பினருக்கு வெளிப்படுத்துதல்
சேவை வழங்குநர்கள்
Apple மற்றும் பிற ஆய்வுக் குழு உறுப்பினர்கள் ஆய்வுக்காக அல்லது ஆய்வின் சார்பாக சேவைகளை வழங்கும் நிறுவனங்களுடன், அதாவது ஆய்வை மதிப்பாய்வு செய்வதற்கும், ஓர் ஆராய்ச்சிப் பங்கேற்பாளராக உங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பொறுப்பான சுயாதீனமான மூன்றாம் தரப்பு நிறுவன மீள்பார்வை அமைப்பு அல்லது எங்கள் சார்பாக ஆய்வு தொடர்பான புகார்களைப் பெறுதல் மற்றும் செயலாக்குதல் போன்ற ஆய்வு தொடர்பான சேவைகளைச் செய்ய பணியமர்த்தப்பட்டுள்ள மூன்றாம் தரப்பினர் போன்றவர்களுன் உங்கள் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம். இந்த நிறுவனங்கள் உங்கள் தகவல்களைப் பாதுகாப்பதற்கு கடமைப்பட்டுள்ளன.
மற்றவை
உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் குறியிடப்பட்ட ஆய்வுத் தரவுகள் பின்வரும் மூன்றாம் தரப்பினருக்கும் வெளியிடப்படலாம்:
- அரசாங்கம் மற்றும் ஒழுங்குமுறை ஆணையங்கள்,அமெரிக்க அரசின் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை, மருந்து ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் பிற கூட்டாட்சி அல்லது மாநில அரசு முகமைகள் போன்றவை.
- சட்ட அமலாக்கம் அல்லது பிற மூன்றாம் தரப்பினர் நீதிமன்ற அழைப்பாணை, வழக்காடல் அல்லது நீதிமன்ற ஆணை போன்ற செல்லுபடியாகும் சட்ட நடைமுறைகளுக்கு இணங்குவதற்கு. தேசியப் பாதுகாப்பு நோக்கங்களுக்காக அல்லது பொது முக்கியத்துவம் வாய்ந்த பிற பிரச்சினைகளுக்கு, வெளிப்படுத்தல் அவசியம் அல்லது பொருத்தமானது என்று நாங்கள் தீர்மானித்தால் உங்களைப் பற்றிய தகவல்களை நாங்களும் வெளியிடலாம்.
- பிற அங்கீகரிக்கப்பட்ட ஆய்வு ஆராய்ச்சியாளர்கள், தகவலறிந்த ஒப்புதலால் அனுமதிக்கப்பட்டால், அங்கீகரிக்கப்பட்ட சில மூன்றாம் தரப்பு ஆராய்ச்சியாளர்கள் வரையறுக்கப்பட்ட ஆய்வுத் தரவுகளை அணுகலாம். அங்கீகரிக்கப்பட்ட ஆய்வு ஆராய்ச்சியாளர்களின் வகைப்பிரிவுகள், அவர்கள் அணுகக்கூடிய ஆய்வுத் தரவுகளின் வகை மற்றும் அவர்கள் தரவுகளைப் பயன்படுத்தக்கூடிய நோக்கங்கள் ஆகியவை தகவலறிந்த ஒப்புதலில் மேலும் விரிவாக விவரிக்கப்படும்.
- மற்றவை, எங்கள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் நடைமுறைப்படுத்த அல்லது எங்கள் செயல்பாடுகள் அல்லது பயனர்களைப் பாதுகாக்க வெளிப்படுத்தல் அவசியம் என்று நாங்கள் தீர்மானித்தால். தகவலறிந்த ஒப்புதலில் விவரிக்கப்பட்டுள்ளவாறே நாங்கள் தகவல்களை வெளிப்படுத்துகிறோம். கூடுதலாக, மறுசீரமைப்பு, இணைப்பு அல்லது விற்பனை நிகழும் சந்தர்ப்பத்தில், நாங்கள் சேகரிக்கும் எந்தவொரு மற்றும் அனைத்துத் தனிப்பட்ட தகவல்களையும் தொடர்புடைய மூன்றாம் தரப்பினருக்கு நாங்கள் இடமாற்றம் செய்யலாம்.
உங்கள் தகவல்களின் பாதுகாப்பு
Apple உங்கள் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. Apple, தான் பராமரிக்கின்ற ஆய்வுத் தரவுகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும், உங்கள் தகவல்களின் இரகசியத்தன்மையைப் பாதுகாக்கவும் நியாயமான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது, இதில் பௌதிகப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்தி சேமிப்புக் கூடங்களில் உள்ள வரையறுக்கப்பட்ட அணுகலுடன் கூடிய அமைப்புகளில் சேமித்து வைப்பதும் அடங்கும். நாங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கின்ற போதிலும், முழு இரகசியக்காப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது.
தனிப்பட்ட தகவல்களைத் தக்கவைத்தல்
எந்த ஆய்விலும் உங்கள் பங்கேற்பு தன்னார்வத்திலானது. நீங்கள் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுக்கலாம் அல்லது எந்த நேரத்திலும் எந்த ஆய்வில் இருந்தும் வெளியேறலாம். நீங்கள் வெளியேற முடிவு செய்தால், நாங்கள் ஏற்கனவே சேகரித்த தகவல்களை நாங்கள் நீக்காமல் அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தக்கூடும், ஆனால் உங்களைப் பற்றிய புதிய ஆய்வுத் தரவுகளைப் பெறுவதை நாங்கள் நிறுத்துவோம், மேலும் தீவிரமான, நடவடிக்கை எடுக்க வேண்டிய மருத்துவத் தேவை ஏற்படும் சூழ்நிலை தவிர்த்து ஆய்வுத் தொடர்பாக உங்களைத் தொடர்புகொள்வதை நிறுத்திவிடுவோம். குறிப்பிட்ட தக்கவைப்புக் கொள்கைகள் மற்றும் நீங்கள் விலகுவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஒவ்வொரு ஆய்விற்கான தகவலறிந்த ஒப்புதலில் விவரிக்கப்படும்.
பிள்ளைகள்
எங்கள் செயலிகள் 13 வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கோ அல்லது தொடர்புடைய நீதிபரிபாலன எல்லைக்குள் அதற்கு இணையான குறைந்தபட்ச வயதினருக்கோ பயன்படுத்த நோக்கம் கொள்ளப்படவில்லை. 13 வயதிற்குட்பட்ட ஒரு பிள்ளையின் தனிநபர் தகவல்களை நாங்கள் சேகரித்தோம் என்பதை நாங்கள் அறிந்தால், கூடிய விரைவில் அத்தகவல்களை நீக்க நடவடிக்கை எடுப்போம்.
உங்கள் தனியுரிமைக்கான எங்கள் நிறுவன அளவிலான உறுதியேற்பு
உங்கள் தனிநபர் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளன என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு, நாங்கள் எங்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை Apple ஊழியர்களுடன் கருத்துப்பரிமாற்றம் செய்துகொள்கிறோம், மேலும் நிறுவனத்திற்குள் தனியுரிமை பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கண்டிப்பாக அமல்படுத்துகிறோம்.
தனியுரிமைக் கேள்விகள்
இந்தத் தனியுரிமைக் கொள்கையைப் பற்றி உங்களுக்கு எவையேனும் கேள்விகள் அல்லது கவலைகள் இருந்தால் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள். ஓர் ஆய்வு பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தகவலறிந்த ஒப்புதலில் பட்டியலிடப்பட்டுள்ள தொடர்புத் தகவல்களைப் பயன்படுத்தி ஆய்வுக் குழு உறுப்பினரைத் தொடர்பு கொள்ளவும். ஆய்வில் இருந்து விலகுவதற்கு, தயவுசெய்து தகவலறிந்த ஒப்புதலில் உள்ள குறிப்பிட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும். ஒரு செயலியை நீக்குவது உங்களை ஆய்வில் இருந்து விலக்காது என்பதைத் தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள்.
Apple இந்தத் தனியுரிமைக் கொள்கையை அவ்வப்போது புதுப்பிக்கலாம். நாங்கள் கொள்கையைத் தளவாடரீதி வழியில் மாற்றினால், புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கையுடன் உங்களுக்குச் செயலியில் அல்லது ஆய்வுக்குப் பிரத்யேகமான மின்னஞ்சல் மூலம் அறிவிப்பு வழங்கப்படும். ஆய்வுக்குப் பிரத்யேகமான எந்த வலைத்தளத்திலும் நாங்கள் ஒரு அறிவிப்பை வழங்கலாம்.
Apple Inc., 1 Apple Park Way, Cupertino, California, USA, 95014