செயல்பாட்டுப் பகிர்வு & தனியுரிமை
“செயல்பாடு” அம்சம் உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
![]()
- நண்பர்களுடன் பகிரப்படும் உடற்பயிற்சித் தரவுகளில் இவையும் அடங்கும்: செலவழிக்கப்படும் கலோரிகள் அல்லது கிலோஜூல்கள், உடற்பயிற்சி நிமிடங்கள், நிற்றல் அல்லது வீல்சேர் இயக்க நேரம், காலடிகள், நேரமண்டலம் மற்றும் உடற்பயிற்சியின் பெயர், வகை, காலஅளவு போன்ற உடற்பயிற்சி குறித்த தகவல்கள்.
- நீங்கள் அழைப்பவர்களுக்கு அல்லது பிறரின் அழைப்பை நீங்கள் ஏற்கும்போது அவர்களுக்கு உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி காட்டப்படும்.
- இந்த அம்சத்தை நீங்கள் பயன்படுத்தினால், நீங்கள் தேர்வுசெய்யும் நபர்களுடன் பாதுகாப்பான முறையில் பகிர்வதற்காக உங்கள் உடற்பயிற்சி மற்றும் செயல்பாட்டுத் தரவுகள் Appleக்கு அனுப்பப்படும். Apple உங்கள் உடற்பயிற்சி மற்றும் செயல்பாட்டுத் தரவுகளைக் குறுகிய காலத்திற்குத் தக்கவைக்கும், பகிர்தல் அம்சத்தைச் செயல்படுத்துவதற்காக மட்டுமே இந்தத் தரவுகளைப் பயன்படுத்தும்.
நண்பர்களுடன் பகிரப்படும் உடற்பயிற்சித் தரவுகளில் இவையும் அடங்கும்: செலவழிக்கப்படும் கலோரிகள் அல்லது கிலோஜூல்கள், உடற்பயிற்சி நிமிடங்கள், நிற்றல் அல்லது வீல்சேர் இயக்க நேரம், காலடிகள், நேரமண்டலம் (உங்கள் நாளின் தொடக்கத்தை நண்பர்கள் அறிவதற்காக), உடற்பயிற்சியின் பெயர், வகை, காலஅளவு போன்ற உடற்பயிற்சி குறித்த தகவல்கள் மற்றும் தகவல்களை வழங்கும் மூன்றாம் தரப்புச் செயலியின் பெயர். பெயர் அல்லது பயிற்சியாளர் போன்ற உடற்பயிற்சி விவரங்கள் உங்கள் உடற்பயிற்சி பற்றிய அதிமுக்கியத் தகவல்களை வெளிப்படுத்தக்கூடும், அதாவது நீங்கள் செய்வது கர்ப்பகால உடற்பயிற்சி என்பது போன்ற தகவல்கள். உங்கள் செயல்பாடு மற்றும் உடற்பயிற்சி விருதுகள் பற்றிய அறிவிப்புகளையும் நண்பர்கள் பெறக்கூடும். இந்தத் தகவல்கள் குறுகிய காலத்திற்கு மட்டுமே நண்பர்களுக்குக் கிடைக்கும். நீங்கள் “பகிர்தல்” அம்சத்தில் உள்ள “நண்பரை அகற்று” விருப்பத்தைப் பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் ஒரு நண்பரை அகற்றலாம். நீங்கள் “என் செயல்பாட்டை மறை” விருப்பத்தைப் பயன்படுத்தி ஒரு நண்பருக்குக் காட்டாமல் உங்கள் செயல்பாட்டையும் மறைக்கலாம்.
நீங்கள் அழைப்பவர்களுக்கு அல்லது பிறரின் அழைப்பை நீங்கள் ஏற்கும்போது அவர்களுக்கு உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி காட்டப்படும்.
இந்த அம்சத்தை நீங்கள் பயன்படுத்தினால், நீங்கள் தேர்வுசெய்யும் நபர்களுடன் பாதுகாப்பான முறையில் பகிர்வதற்காக உங்கள் உடற்பயிற்சி மற்றும் செயல்பாட்டுத் தரவுகள் Appleக்கு அனுப்பப்படும். Apple உங்கள் உடற்பயிற்சி மற்றும் செயல்பாட்டுத் தரவுகளைக் குறுகிய காலத்திற்குத் தக்கவைக்கும், பகிர்தல் அம்சத்தைச் செயல்படுத்துவதற்காக மட்டுமே இந்தத் தரவுகளைப் பயன்படுத்தும். iOS 18 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு மற்றும்/அல்லது watchOS 11 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் மற்றும் iOS 18 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு மற்றும்/அல்லது watchOS 11 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பைப் பயன்படுத்தும் நண்பருடன் உடற்பயிற்சி மற்றும் செயல்பாட்டுத் தரவுகளைப் பகிர்கிறீர்கள் எனில், உங்கள் தரவுகள் முழுமையாக என்கிரிப்ட் செய்யப்படும், உங்கள் நண்பருடன் நீங்கள் பகிரும் உடற்பயிற்சி மற்றும் செயல்பாட்டுத் தரவுகளை Appleஆல் படிக்க முடியாது. உங்கள் செயல்பாட்டை நீங்கள் பகிரும் நண்பர்களின் பட்டியல் உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும், இந்தக் கணக்கைப் பயன்படுத்தி நீங்கள் உள்நுழையும் பிற iOS சாதனங்கள் அனைத்திலும் அது மீட்டமைக்கப்படும்.
தக்கவைத்தல்
இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டபடி, சேகரிக்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றத் தேவைப்படும் காலம் வரை அல்லது சட்டப்படி தேவைப்படும் காலம் வரை மட்டுமே Apple தனிப்பட்ட தரவைத் தக்கவைக்கும். தக்கவைத்தல் காலத்தை மதிப்பிடும்போது, சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவைத் தக்கவைப்பது தேவையா என்று முதலில் கவனமாக ஆராய்கிறோம். தக்கவைத்தல் தேவை எனில், சட்டப்படி அனுமதிக்கப்பட்ட குறுகிய காலத்திற்கு மட்டுமே தனிப்பட்ட தரவைத் தக்கவைக்க முயல்கிறோம்.
Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும், இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.
2025-12-12