மேம்பட்ட தரவுப் பாதுகாப்புப் பகுப்பாய்வுகள் & தனியுரிமை
மேம்பட்ட தரவுப் பாதுகாப்பு அம்சம் முழுமையான என்கிரிப்ஷனைப் பயன்படுத்தி Appleஇன் அதிகபட்ச கிளவுடு தரவுப் பாதுகாப்பை வழங்குகிறது, இது உங்கள் தகவல்களைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
![]()
- உங்கள் பெரும்பான்மையான iCloud தரவுகள் உங்கள் நம்பகமான சாதனங்களில் மட்டுமே டீகிரிப்ட் செய்யப்படுவதை உறுதிசெய்ய மேம்பட்ட தரவுப் பாதுகாப்பு முழுமையான என்கிரிப்ஷனைப் பயன்படுத்துகிறது.
- மேம்பட்ட தரவுப் பாதுகாப்பு அம்சத்தைச் செயல்படுத்த நீங்கள் ஒரு ரெகவரி கீ மற்றும்/அல்லது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ரெகவரி தொடர்புகளை அமைக்க வேண்டும். உங்கள் தரவை மீட்டெடுக்கத் தேவையான கீக்கள் Appleஇடம் இருக்காது என்பதால், கணக்கிற்கான அணுகலை நீங்கள் இழந்துவிட்டால் கணக்கு மீட்டெடுப்பு முறைகள் மூலம் மட்டுமே உங்கள் தரவைத் திரும்பப் பெற முடியும்.
- தரவு மீட்டெடுப்பின் அதிமுக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, நீங்கள் மேம்படுத்தப்பட்ட தரவுப் பாதுகாப்பைச் செயல்படுத்தினால் கணக்கு மற்றும் தரவு மீட்டெடுப்புச் செயல்முறைகளின் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்காகவும் உறுதிசெய்வதற்காகவும் இந்த அம்சத்தை நீங்கள் பயன்படுத்துவது, கணக்கு மீட்டெடுப்பு வழிமுறைகளை நீங்கள் பயன்படுத்தும் விதம், உங்கள் என்கிரிப்ஷன் கீக்கள் கையாளப்படும் விதம் பற்றிய குறிப்பிட்ட தகவல்களை Apple சேகரிக்கும்.
உங்கள் அனுபவத்தைச் சிறப்பாக்குவதற்காக எங்களுக்குத் தேவைப்படும் தரவை மட்டுமே நாங்கள் சேகரிக்க முயல்கிறோம் மற்றும் தரவைச் சேகரிக்கும்போது எதைச் சேகரிக்கிறோம், அது எங்களுக்கு ஏன் தேவைப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்வது முக்கியம் என நினைக்கிறோம், இதன்மூலம் தகவலறிந்த முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். அனைத்து Apple தயாரிப்புகளையும் சேவைகளையும் போல இந்தக் கொள்கைகளைக் கருத்தில் கொண்டு மேம்பட்ட தரவுப் பாதுகாப்பு அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
iCloudக்கான மேம்பட்ட தரவுப் பாதுகாப்பு என்பது ஒரு விருப்பத்தேர்வு அமைப்பாகும், இது உங்கள் பெரும்பான்மையான iCloud தரவுகளுக்கு முழுமையான என்கிரிப்ஷனை வழங்குவதன் மூலம் Appleஇன் அதிகபட்ச கிளவுடு தரவுப் பாதுகாப்பை வழங்குகிறது. பாஸ்வேர்டுகள், iCloud கீசெயின், உடல்நலத் தரவுகள் போன்ற அதிமுக்கியத் தரவு வகைகளை முழுமையான என்கிரிப்ஷன் மூலம் iCloud ஏற்கெனவே பாதுகாக்கிறது என்றாலும், iCloud பேக்-அப், குறிப்புகள், புகைப்படங்கள் போன்ற பல கூடுதல் வகைகளையும் மேம்பட்ட தரவுப் பாதுகாப்பு முழுமையாக என்கிரிப்ஷன் செய்கிறது.
மேம்பட்ட தரவுப் பாதுகாப்பு செயல்படுத்தப்பட்டிருந்தால், முழுமையான என்கிரிப்ஷன் செய்யப்பட்ட உங்கள் தரவுகளை மீட்டெடுப்பதற்கான என்கிரிப்ஷன் கீயை Apple சேமித்து வைப்பதில்லை. உங்கள் கணக்கிற்கான அணுகலை நீங்கள் இழந்துவிட்டால், உங்கள் iCloud தரவுகளை மீட்டெடுக்க உங்கள் சாதன பாஸ்கோடு அல்லது பாஸ்வேர்டு, உங்கள் ரெகவரி தொடர்பு, ரெகவரி கீ ஆகிய கணக்கு மீட்டெடுப்பு முறைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பயன்படுத்த வேண்டும், இவை பற்றிய தகவல்கள் Appleக்குத் தெரியாது. உங்கள் பெரும்பான்மையான iCloud தரவுகள் முழுமையான என்கிரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படுவதால், மேம்பட்ட தரவுப் பாதுகாப்பை ஆன் செய்வதற்கு முன் குறைந்தபட்சம் ஒரு ரெகவரி தொடர்பு அல்லது ரெகவரி கீயையாவது அமைக்குமாறு உங்களிடம் கேட்கப்படும்.
- கணக்கு மற்றும் தரவு மீட்டெடுப்புச் செயல்முறைகளின் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்காகவும் உறுதிப்படுத்துவதற்காகவும், மேம்பட்ட தரவுப் பாதுகாப்பைச் செயல்படுத்தும்போது உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்ட குறிப்பிட்ட தகவல்களை Apple சேகரிக்கும். இந்தத் தகவல்களில் இவையும் அடங்கும்:
- மேம்பட்ட தரவுப் பாதுகாப்பைச் செயல்படுத்தும் அல்லது முடக்கும் செயல்முறைகளின் வெற்றி அல்லது தோல்வி விகிதம்.
- Apple கணக்கில் உள்நுழைதல், உங்களுக்கு ஏற்கெனவே சொந்தமான அருகிலுள்ள மற்றொரு சாதனத்தைப் பயன்படுத்தி புதிய சாதனத்தை அமைத்தல், உங்கள் Apple கணக்கு அமைப்புகளைப் புதுப்பித்தல், உங்கள் தரவுகளை அணுகுவதற்காக உங்கள் கணக்கை அங்கீகரித்தல் ஆகியவற்றின் போதான உங்கள் அனுபவம், எத்தனை முறை அதை வெற்றிகரமாக முடித்தீர்கள், எத்தனை முறை சிக்கல்களை எதிர்கொண்டீர்கள் என்ற தகவல்கள்.
- ரெகவரி தொடர்புகளை உருவாக்குதல், பயன்படுத்துதல் ஆகிய செயல்முறைகளின்போது அவற்றின் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையைப் பதிவுசெய்யும் நிகழ்வுகள், இதில் ரெகவரி தொடர்பை அமைக்கும்போது, ரெகவரி தொடர்பைப் பயன்படுத்தி உங்கள் தரவுகளுக்கான அணுகலை மீட்டெடுக்கும்போது அந்தச் செயல்முறைகளை நீங்கள் கையாண்ட விதம் ஆகியவையும் அடங்கும். Appleக்கு உங்கள் ரெகவரி தொடர்புகள் தெரியாது அல்லது அவற்றிற்கான அணுகல் இருக்காது.
- ரெகவரி கீயை உருவாக்குதல், பயன்படுத்துதல் ஆகிய செயல்முறைகளின்போது அதன் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையைப் பதிவுசெய்யும் நிகழ்வுகள், இதில் ரெகவரி கீ உருவாக்கச் செயல்முறையை நீங்கள் கையாண்ட விதம், ரெகவரி கீயைப் பயன்படுத்தி உங்கள் தரவுகளுக்கான அணுகலை மீட்டெடுக்கும் செயல்முறையுடன் தொடர்புடைய நிகழ்வுகள் ஆகியவையும் அடங்கும். Appleக்கு உங்கள் ரெகவரி கீ தெரியாது அல்லது அதற்கான அணுகல் இருக்காது.
- உங்கள் தரவுகளுக்கான அணுகலை மீட்டெடுக்க உங்கள் சாதனத்தின் பாஸ்கோடு அல்லது பாஸ்வேர்டைப் பயன்படுத்துதல் வழிமுறையின் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையைப் பதிவுசெய்யும் நிகழ்வுகள், இதில் உங்கள் பாஸ்கோடைப் பயன்படுத்தி தரவை மீட்டெடுக்க முயலும்போது எத்தனை முறை வெற்றியடைந்தீர்கள் அல்லது எத்தனை முறை சிக்கல்களை எதிர்கொண்டீர்கள், மீட்டெடுப்பதற்கு உங்கள் பாஸ்கோடைப் பயன்படுத்தும்போது அந்தச் செயல்முறையுடனான உங்கள் அனுபவம், அதை நீங்கள் கையாண்ட விதம் ஆகியவை பற்றிய தகவல்களும் அடங்கும். Appleக்கு உங்கள் சாதனத்தின் பாஸ்கோடோ பாஸ்வேர்டோ தெரியாது அல்லது அவற்றிற்கான அணுகல் இருக்காது.
- நீங்கள் மேம்பட்ட தரவுப் பாதுகாப்பைச் செயல்படுத்தும்போது அல்லது முடக்கும்போது உங்கள் சாதனத்தில் என்கிரிப்ஷன் கீக்கள் கையாளப்படும் விதம் பற்றிய தரவுகள், இதில் என்கிரிப்ஷன் கீக்கள் எப்போதெல்லாம் மாற்றப்படுகின்றன, கணக்கு அல்லது தரவு மீட்டெடுப்பு தோல்வியடைந்தன் விளைவாக உங்கள் iCloud தரவுகள் அனைத்தும் மீட்டமைக்கப்படுதல் அல்லது நீக்கப்படுதல் செயல்முறையுடன் தொடர்புடைய நிகழ்வுகள் ஆகியவையும் அடங்கும்.
தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்குப் பொருந்தக்கூடிய சட்டரீதியான அடிப்படை
பொதுவாக Apple உடனான உங்கள் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்காகவும், சேவைகளை வழங்கத் தேவைப்படும் அளவிற்கும், எங்கள் சட்டரீதியான கடமைகளுக்கு இணங்குவதற்காகவும் உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்குகிறோம். ஒப்புதல் என்பது சட்டரீதியான அடிப்படையாக அமையும் இடங்களில், பொருந்தும் சட்டங்களின் அடிப்படையில் அதைப் பெற முயல்கிறோம்.
தக்கவைத்தல்
இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டபடி, சேகரிக்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றத் தேவைப்படும் காலம் வரை அல்லது சட்டப்படி தேவைப்படும் காலம் வரை மட்டுமே Apple தனிப்பட்ட தரவைத் தக்கவைக்கும். தக்கவைத்தல் காலத்தை மதிப்பிடும்போது, சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவைத் தக்கவைப்பது தேவையா என்று முதலில் கவனமாக ஆராய்கிறோம். தக்கவைத்தல் தேவை எனில், சட்டப்படி அனுமதிக்கப்பட்ட குறுகிய காலத்திற்கு மட்டுமே தனிப்பட்ட தரவைத் தக்கவைக்க முயல்கிறோம்.
Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும், இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.
2025-12-12