செயலிப் பகுப்பாய்வுகள் & தனியுரிமை
“பகுப்பாய்வுகள்” அம்சம் உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
செயலிப் பகுப்பாய்வுகள்
பகுப்பாய்வுத் தகவல்களும் புள்ளிவிவரங்களும் தொகுக்கப்பட்டு அல்லது உங்களைத் தனிப்பட்ட வகையில் அடையாளப்படுத்தாதபடி இருக்கும் வரையில், Apple தயாரிப்புகளுடன் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட தங்களின் செயலிகள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்த Appleஇன் கூட்டாளர்கள் மற்றும் மூன்றாம் தரப்பு டெவலப்பர்களுக்கு உதவும் நோக்கத்தில், அவர்களின் செயலி, தயாரிப்பு அல்லது சேவை தொடர்பான பகுப்பாய்வுத் தகவல்கள், அவர்களின் செயலி அல்லது அதுபோன்ற பிற செயலிகளை நீங்கள் பயன்படுத்தும் விதம் பற்றிய புள்ளிவிவரங்கள் ஆகியவற்றைத் தொகுத்து அந்தக் கூட்டாளர்கள் அல்லது டெவலப்பர்களுடன் Apple பகிரக்கூடும்.
சிதைவுத் தரவு மற்றும் செயலிகளை நீங்கள் பயன்படுத்தும் விதம் பற்றிய புள்ளிவிவரங்களை மூன்றாம் தரப்புச் செயலி டெவலப்பர்களுடன் பகிர்வதை நீங்கள் நிறுத்தலாம். அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > பகுப்பாய்வுகள் & மேம்பாடுகள் என்பதற்குச் சென்று “செயலி டெவலப்பர்களுடன் பகிர்” என்பதைத் தட்டி இதை ஆஃப் செய்யுங்கள். “iPhone & Watch பகுப்பாய்வுகளைப் பகிர்” ஆஃப் செய்யப்பட்டிருந்தால், மூன்றாம் தரப்புச் செயலி டெவலப்பர்களுடன் சிதைவுத் தரவு மற்றும் புள்ளிவிவரங்களைப் பகிர்வதும் தானாகவே ஆஃப் செய்யப்படும்.
இந்த அம்சங்களைப் பயன்படுத்துவதன் மூலம், Apple மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் மேலே விவரிக்கப்பட்டுள்ளவாறு இந்தத் தகவல்களைப் பரிமாற்றம் செய்வது, சேகரிப்பது, பராமரிப்பது, செயலாக்குவது மற்றும் பயன்படுத்துவதை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வழங்குகிறீர்கள்.
Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும், இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.
2025-12-12