App Store & தனியுரிமை
App Store உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
![]()
- App Store மற்றும் iTunes Store, Apple Books போன்ற பிற Apple ஆன்லைன் ஸ்டோர்களில் நீங்கள் வாங்கும், பதிவிறக்கும் அல்லது புதுப்பிக்க விரும்பும் உள்ளடக்கத்தை உங்களுக்கு வழங்குவதற்காக நாங்கள் உங்கள் தனிப்பட்ட தரவைச் சேகரிக்கிறோம்.
- App Store, Apple News மற்றும் பங்குகள் செயலிகளில் காட்டப்படும் விளம்பரங்கள் உங்களுக்குப் பொருத்தமானதாக இருப்பதை உறுதிப்படுத்த ஸ்டோர்களில் உங்கள் கணக்கு, வாங்குதல்கள் மற்றும் பதிவிறக்கங்கள் பற்றிய தகவல்களையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்த விளம்பரப்படுத்தல் தொடர்பாக கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி தேர்வுகளைக் கொண்டுள்ளீர்கள்.
- உங்களுக்கு ஏற்ற அம்சங்கள் மற்றும் பிரத்தியேகப் பரிந்துரைகளை வழங்கவும் Apple மார்க்கெட்டிங் உள்ளிட்ட அறிவிப்புகளை உங்களுக்கு அனுப்பவும் ஸ்டோர்களில் உங்கள் வாங்குதல்கள், பதிவிறக்கங்கள் மற்றும் பிற செயல்பாடுகள் பற்றிய தகவல்களை நாங்கள் பயன்படுத்துகிறோம். கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி இந்த நோக்கத்திற்காக இந்தத் தரவு பயன்படுத்தப்படுவதில் இருந்து நீங்கள் விலகிக் கொள்ளலாம்.
- மோசடியை அடையாளம் கண்டு தடுக்க உதவுவதற்காக, நீங்கள் வாங்க முயலும்போது உங்கள் சாதனத்தை நீங்கள் பயன்படுத்தும் விதத்தின் அடிப்படையில் சாதனத்தின் நம்பகத்தன்மை மதிப்பெண் கணக்கிடப்படும், பயன்படுத்தும் விதம் என்பதில் ஃபோன் அழைப்புகளின் தோராயமான எண்ணிக்கை அல்லது நீங்கள் அனுப்பும் மற்றும் பெறும் மின்னஞ்சல்களின் தோராயமான எண்ணிக்கை அடங்கும். உங்கள் சாதனத்தில் உள்ள உண்மை மதிப்புகளை Apple அறிந்துகொள்ளாத வகையில் இந்தக் கணக்கீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்கள் குறிப்பிட்ட காலத்திற்கு எங்கள் சர்வரில் சேமிக்கப்பட்டிருக்கும்.
- ஸ்டோர்களை மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிவதற்காக உங்கள் உலாவல், வாங்குதல்கள், தேடல்கள் மற்றும் பதிவிறக்கங்கள் பற்றிய தகவல்களை நாங்கள் பயன்படுத்துகிறோம். IP முகவரி, ரேண்டமான தனித்துவ அடையாளத் தகவல் (தேவைப்படும் இடங்களில்), நீங்கள் App Store அல்லது பிற Apple ஆன்லைன் ஸ்டோர்களில் உள்நுழைந்திருக்கும்போது Apple கணக்கு ஆகியவற்றுடன் இந்தப் பதிவுகள் சேமிக்கப்படக்கூடும்.
ஸ்டோர் சேவைகளை வழங்குதல்
App Storeஇல் சேவைகள் மற்றும் அம்சங்களை வழங்க நாங்கள் உங்கள் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துகிறோம். உங்கள் கணக்கு, பேமெண்ட் தகவல் (அமைப்புகளில் இதை அணுகலாம், மாற்றலாம்), இதுவரை நீங்கள் வாங்கியவை போன்ற தகவல்கள் இதில் அடங்கும்.
ரீஃபண்டு கோரிக்கைகள் போன்று நீங்கள் கோரும் குறிப்பிட்ட சில சேவைகளை வழங்கவும் உங்கள் தனிப்பட்ட தரவுகளை நாங்கள் பயன்படுத்தக்கூடும். இதில் நீங்கள் Appleக்கு நேரடியாக அனுப்பும் அல்லது செயலி டெவலப்பர்களால் வழங்கப்பட்ட முறையில் நீங்கள் Appleக்கு அனுப்பும் ரீஃபண்டு கோரிக்கைகளும் அடங்கலாம். Apple இந்த ரீஃபண்டு கோரிக்கைகளைச் செயலாக்க உதவியாக, நீங்கள் வாங்கியதைப் பயன்படுத்தியுள்ளீர்களா போன்ற குறிப்பிட்ட சில தனிப்பட்ட தரவுகளை உங்கள் ஒப்புதலுடன் டெவலப்பர்கள் Appleக்கு அனுப்பக்கூடும்.
நீங்கள் உங்கள் சாதனத்தில் ஸ்கிரீன் டைம் செயலி உள்ளடக்கக் கட்டுப்பாடுகளை ஆன் செய்திருந்தால், உங்களுக்குக் கிடைக்கக்கூடிய உள்ளடக்கத்தைக் காட்டுவதற்காகச் செயலி உள்ளடக்கக் கட்டுப்பாடு பற்றிய தகவல்களை நாங்கள் பயன்படுத்துவோம். சில நாடுகள் அல்லது வட்டாரங்களில் சட்டப்படி தேவைப்படும்போது, நீங்கள் வயதுவந்தவர்தான் என்பதை உறுதிப்படுத்த கூடுதல் தகவல்களை வழங்கிய பின்னரே செயலியைப் பதிவிறக்க முடியும். உங்கள் Apple கணக்குடன் தொடர்புடைய தேதி, முறை மற்றும் நாடு அல்லது வட்டாரம் குறித்த வயது உறுதிப்படுத்தல் தகவல்களை Apple சேமிக்கிறது. App Storeஇல் இருந்து நீங்கள் ஒரு செயலியைப் பதிவிறக்கும்போதோ உங்கள் Apple Watchஇல் ஒரு செயலியை நிறுவும்போதோ உங்கள் Apple கணக்குடன் உங்கள் சாதனத்தின் வன்பொருள் ஐடி, IP முகவரி போன்ற அடையாளத் தகவல்களை Apple பதிவுசெய்கிறது. சில பகுதிகளில் சட்டரீதியான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுள்ள சில செயலிகளை உங்களுக்குக் கிடைக்கச் செய்யலாமா என்பதைத் தீர்மானிக்க, உங்கள் தோராயமான இருப்பிடத்தைக் கண்டறிவதற்கு உங்கள் இணைய இணைப்பின் IP முகவரியை Apple பயன்படுத்தக்கூடும்.
ஸ்டோர் அனுபவத்தை மேம்படுத்துதல்
App Store மற்றும் பிற Apple செயலிகள், சேவைகள் போன்றவற்றின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் உகந்ததாக்குவதற்கும், App Storeஐ நீங்கள் பயன்படுத்துவது தொடர்பான தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம். இதில் நீங்கள் App Storeஐத் திறக்கும் அல்லது மூடும் நேரம், நீங்கள் தேடும் உள்ளடக்கம், நீங்கள் பார்க்கும் அல்லது பதிவிறக்கும் உள்ளடக்கம், App Store push அறிவிப்புகள் மற்றும் பேட்ஜ்களில் நீங்கள் மேற்கொண்ட செயல்கள், செயலிகளினுள் App Storeஇல் இருந்து பெறும் மெசேஜ்கள் ஆகியவை அடங்கும். உங்கள் சாதனத்தின் வகை, ஆபரேட்டிங் சிஸ்டத்தின் பதிப்பு, சாதனத்தில் காலியாக உள்ள சேமிப்பிடம் போன்ற உங்கள் சாதனம் மற்றும் கணக்கு தொடர்பான தகவல்களையும், உங்கள் கணக்கு எந்த வயது வரம்பிற்குள் உள்ளது என்பதைப் பற்றிய மக்கள்தொகைத் தகவல்களையும் நாங்கள் சேகரிக்கிறோம். நாங்கள் பின்வரும் வழிகளில் இந்தத் தகவல்களைப் பயன்படுத்தக்கூடும். எடுத்துக்காட்டு:
- பிரபலமடையும் தேடல்கள் மற்றும் “நீங்கள் விரும்பக்கூடிய பிற கேம்கள்” போன்ற பிரத்தியேக அம்சங்களை வழங்குதல்
- கோரப்பட்ட உள்ளடக்கத்தைப் பதிவிறக்க முடியுமா என மதிப்பீடு செய்தல்
- சாதனத்தின் சேமிப்பகம் பயன்படுத்தப்படும் முறையைப் புரிந்துகொள்ளுதல், உங்கள் சாதனம் Wi-Fi அல்லது மொபைல் டேட்டா மூலம் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்ளுதல்
உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில் App Storeஐ நீங்கள் பயன்படுத்தும் விதம் பற்றிய தகவல்களுடன் தொடர்புடைய அடையாளத் தகவலை மீட்டமைக்க, அமைப்புகள் > செயலிகள் > App Store > “அடையாளத் தகவலை மீட்டமை” என்பதற்குச் செல்லவும். உங்கள் Macகில், App Store > அமைப்புகள் > அடையாளத் தகவலை மீட்டமை என்பதற்குச் செல்லவும்.
App Storeஇல் பயன்படுத்தப்படும் மாடல்களை மேம்படுத்துவதற்காக App Storeஇல் செயலிகளுக்கு நீங்கள் வழங்கும் மதிப்பீடுகளையும் கருத்துகளையும், உங்கள் தேடல்களையும் நாங்கள் பயன்படுத்தக்கூடும். உதாரணத்திற்கு, செயலியின் மதிப்பாய்வுகள் மற்றும் உங்களிடம் இருந்தும் பிற App Store பயனர்களிடம் இருந்தும் பெற்ற தொகுக்கப்பட்ட தேடல் வினவல்கள் மதிப்பாய்வுக்கான சுருக்கவிவரங்களை வழங்கவும் App Store தேடல் மாடலை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.
ஸ்டோரைப் பிரத்தியேகமாக்குதல்
உங்களுக்கு மிகப் பொருத்தமான உள்ளடக்கத்தைக் கண்டறிய உங்களுக்கு உதவுவதற்காக App Storeஐ நீங்கள் பயன்படுத்துவது தொடர்பான தகவல்களை நாங்கள் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, App Storeஇல் இதற்கு முன்பு நீங்கள் தேடியவை, பார்த்தவை, பதிவிறக்கியவை, புதுப்பித்தவை அல்லது மதிப்பாய்வு செய்தவற்றின் அடிப்படையில் உங்களுக்குப் பொருத்தமானதாகக் கருதும் உள்ளடக்கத்தை நாங்கள் பரிந்துரைக்கிறோம். நீங்கள் பயன்படுத்தும் சாதனங்கள், நீங்கள் செயல்படுத்தும் புதிய சாதனங்கள் போன்று உங்கள் Apple கணக்கில் இருந்து பெறப்பட்ட கணக்குத் தகவல்களுடன் சேர்த்து நீங்கள் செயலியில் வாங்கியவை, சந்தாக்கள் போன்று இதுவரை நீங்கள் வாங்கியவை, பேமெண்ட் முறைகள் ஆகியவற்றையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். மேலும் சிறப்பான பரிந்துரைகளை வழங்க, செயலி தொடக்கங்கள், நிறுவல்கள் மற்றும் Apple உடன் தங்கள் சாதனப் பகுப்பாய்வுகளைப் பகிரத் தேர்வுசெய்த பயனர்களிடமிருந்து பெற்ற நீக்குதல் குறித்த தகவல்கள் பற்றிய தொகுக்கப்பட்ட தகவல்களையும் செயலி மதிப்பீடுகள் பற்றிய தொகுக்கப்பட்ட தகவல்களையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். எங்கள் பரிந்துரைகளை மேம்படுத்த, உள்ளகத்தில் சாதனத்திலேயே செய்யப்படும் செயலாக்கத்தை App Store பயன்படுத்தும். நீங்கள் அடிக்கடி திறக்கும் செயலிகள், குறிப்பிட்ட சில செயலிகளில் நீங்கள் செலவிடும் நேரம், உங்கள் செயலி நிறுவல்கள், நிறுவல் நீக்கங்கள் போன்று உங்கள் சாதனத்தில் சேமிக்கப்படும் செயலிப் பயன்பாட்டுத் தரவைப் பயன்படுத்துதல் தொடர்பாக, உங்களுக்கு இன்னும் தொடர்புடைய செயலிகளையும் அவற்றில் உள்ள நிகழ்வுகளையும் App Store பரிந்துரைக்கலாம். நீங்கள் ஸ்டோர்களைப் பயன்படுத்துவது பற்றி Apple பெறும் தகவல்களில் நீங்கள் தட்டிப் பார்வையிடும் பிரத்தியேக உள்ளடக்கம் பற்றிய தகவல்களும் அடங்கும்.
உங்கள் Apple கணக்கில் பிரத்தியேகப் பரிந்துரைகள் அம்சத்தை ஆஃப் செய்வதன் மூலம் App Store, Apple Books, iTunes Store, Apple TV, பாட்காஸ்ட்கள் மற்றும் Appleஇல் சந்தாக்களுக்கான பிரத்தியேகமாக்கல் அம்சங்களை ஆஃப் செய்யலாம். உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனங்களில், அமைப்புகள் > [உங்கள் பெயர்] > மீடியா & வாங்குதல்கள் > கணக்கைக் காட்டு என்பதற்குச் சென்று பிரத்தியேகப் பரிந்துரைகளை ஆஃப் செய்ய அதைத் தட்டுங்கள். iOS மற்றும் iPadOS சாதனங்களில், அமைப்புகள் > செயலிகள் > App Store > பிரத்தியேகப் பரிந்துரைகள் என்பதற்குச் சென்று “செயலிப் பயன்பாட்டுத் தரவை அழி” என்பதைத் தட்டுவதன் மூலம் தனிப்பயனாக்கத்திற்காக உங்கள் சாதனத்தில் பதிவுசெய்யப்பட்ட செயலிப் பயன்பாட்டுத் தரவை நீங்கள் அழிக்கலாம். உங்கள் சாதனத்தில் பதிவுசெய்யப்பட்ட தரவுகளை இது நீக்காது, ஆனால் உங்கள் செயலிப் பயன்பாட்டுத் தரவுகளை நீங்கள் அழிக்கும்போது அதில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் தரவுகள் இனி பிரத்தியேகமாக்கலுக்காகப் பயன்படுத்தப்படாது. உங்கள் செயலிப் பயன்பாட்டுத் தரவுக்கான பதிவுகளை நீங்கள் அழித்த பிறகு, பதிவுசெய்யப்பட்ட புதிய தரவுகளை App Store பிரத்தியேகமாக்கல் அம்சங்கள் பயன்படுத்தும்.
App Store மற்றும் Apple Games
நீங்கள் Apple Games செயலியைப் பயன்படுத்தினால், மேலேயுள்ள “ஸ்டோரை மேம்படுத்துதல் மற்றும் ஸ்டோரைத் தனிப்பயனாக்குதல்” பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளபடி நீங்கள் தேடும், பார்க்கும் மற்றும் பதிவிறக்கும் உள்ளடக்கம் உட்பட App Storeஐ எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பற்றிய தகவல்கள் கேம்ஸில் உங்கள் அனுபவத்தைத் தனிப்பயனாக்கவும், App Store மற்றும் Apple Games செயலிகளை உகந்ததாக்கவும், மேம்படுத்தவும், உங்களுக்கு அறிவிப்புகளை அனுப்பவும் கேம்ஸ் செயலியால் பயன்படுத்தப்படும். கேம்ஸ் செயலி பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, www.apple.com/legal/privacy/data/en/apple-games தளத்தைப் பார்வையிடுங்கள்.
உங்களுடனான தகவல்தொடர்புகள்
App Store மற்றும் நீங்கள் விரும்பக்கூடிய பிற Apple தயாரிப்புகள், சேவைகள் மற்றும் சலுகைகள் பற்றிய தகவல்களை உங்களுக்கு அனுப்ப, உங்களுக்குச் சொந்தமான Apple தயாரிப்புகள், Apple சேவைகளுக்கான உங்கள் சந்தாக்கள் போன்ற உங்கள் கணக்கு பற்றிய தகவல்களை Apple பயன்படுத்தக்கூடும். App Storeஇல் கிடைக்கும் புதிய அம்சங்கள், உள்ளடக்கம் மற்றும் சலுகைகள் பற்றிய தகவல்களை உங்களுக்கு அனுப்ப App Storeஇல் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளைப் பற்றிய தகவல்களையும் Apple பயன்படுத்தக்கூடும்.
மின்னஞ்சல் மார்க்கெட்டிங்
மார்க்கெட்டிங் மின்னஞ்சல்களைப் பெற நீங்கள் ஒப்புதலளித்தால், இந்தத் தகவல்கள் மின்னஞ்சல் வழியாக உங்களுக்கு அனுப்பப்படலாம். account.apple.com இணையதளத்திற்குச் சென்று அல்லது உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில் அமைப்புகள் > [உங்கள் பெயர்] > தனிப்பட்ட தகவல்கள் > “தகவல்தொடர்பு முன்னுரிமைகள்” என்பதற்குச் சென்று உங்கள் மின்னஞ்சல் முன்னுரிமைகளை நீங்கள் மாற்றலாம், இந்த மின்னஞ்சல்களைப் பெறுவதற்கான ஒப்புதலைத் திரும்பப் பெறலாம்.
அறிவிப்புகள்
Push, பேனர் அல்லது பேட்ஜ் அறிவிப்புகள் வழியாகவும் இந்தத் தகவல்களை நீங்கள் பெறலாம். உங்கள் அறிவிப்பு முன்னுரிமைகளை மாற்ற அல்லது அறிவிப்புகளைப் பெறுவதற்கான ஒப்புதலைத் திரும்பப் பெற உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில், அமைப்புகள் > அறிவிப்புகள் > App Store என்பதற்குச் செல்லுங்கள்.
விளம்பரப்படுத்துதல்
App Store, Apple மேப்ஸ், Apple News, பங்குகள் மற்றும் Apple TV செயலிகளில் தயாரிப்புகள், சேவைகள், செயலிகள் ஆகியவற்றைக் கண்டறிய Apple வழங்கும் விளம்பரங்கள் உதவுகின்றன. விளம்பரங்கள் பொருத்தமாக இருப்பதை உறுதிப்படுத்த உங்கள் சாதனம், கணக்கு, வாங்குதல்கள், சந்தாக்கள், முந்தைய பதிவிறக்கங்கள் ஆகியவை பற்றிய தகவல்களை App Storeஇல் நாங்கள் பயன்படுத்துகிறோம். தொடர்புடைய விளம்பரத்தை உங்களுக்கு வழங்குவதற்காக, அமர்வின்போது சூழல் சார்ந்த தகவல்களையும் நாங்கள் பயன்படுத்தக்கூடும். இதில் நீங்கள் தேடும்போது பயன்படுத்தும் தேடல் சொற்கள், நீங்கள் பார்வையிடும் பக்கம், பதிவிறக்கும் செயலி பற்றிய தகவல்கள் போன்றவையும் அடங்கும். ஒரே மாதிரியான பண்புகளைக் கொண்ட நபர்களை ஒன்றிணைத்து “பிரிவுகள்” எனப்படும் குழுக்களை உருவாக்குகிறோம், இலக்கிடப்பட்ட விளம்பரங்களை வழங்க இந்தக் குழுக்களை நாங்கள் பயன்படுத்துகிறோம். எந்தப் பிரிவுகளில் உங்களை வைப்பது, அதாவது எந்த விளம்பரங்களை உங்களுக்கு வழங்குவது என்பதைத் தீர்மானிக்க உங்களைப் பற்றிய தகவல்கள் பயன்படுத்தப்படும். உங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக, இலக்கிற்கான வரையறையை 5,000க்கும் அதிகமான நபர்கள் பூர்த்திசெய்தால் மட்டுமே இலக்கிடப்பட்ட விளம்பரங்கள் வழங்கப்படும். உங்களுக்குப் பொருத்தமான விளம்பரங்களைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் தகவல்கள் ரேண்டம் அடையாளத் தகவல்களுடன் இணைக்கப்பட்டிருக்கும், உங்கள் Apple கணக்குடன் அல்ல.
நீங்கள் தகுதிபெறும் பல்வேறு விளம்பரங்களில் இருந்து எந்த விளம்பரத்தை App Storeஇல் காட்டுவது என்று தேர்ந்தெடுக்கும்போது, உங்களுக்கு மிகப் பொருத்தமான விளம்பரத்தைத் தீர்மானிக்க மேலே குறிப்பிட்ட தகவல்களில் சிலவற்றையும் உங்கள் App Store தேடல்களையும், உலாவல் செயல்பாடுகளையும் நாங்கள் பயன்படுத்தக்கூடும். App Store உலாவல் செயல்பாடு என்பதில் App Storeஐப் பார்வையிடும்போது நீங்கள் தட்டிப் பார்க்கும் உள்ளடக்கம், செயலிகள் போன்ற தகவல்களும் அடங்கும். இந்தத் தகவல்கள் பயனர்கள் அனைவருடனும் சேர்த்து ஒன்றிணைக்கப்படும் எனவே அவை உங்களை அடையாளப்படுத்தாது. நீங்கள் தட்டிப் பார்க்கும் விளம்பரங்களைப் பற்றிய தகவல்கள் உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்படாத ரேண்டமான அடையாளத் தகவலுடன் Appleஇன் விளம்பரப்படுத்தல் தளத்துக்கு அனுப்பப்படும்.
சாத்தியமான இடங்களை, உங்கள் விளம்பர அனுபவத்தை மேம்படுத்தவும், எந்த விளம்பரத்தைக் காட்டுவது என்பதைத் தீர்மானிக்கவும், நீங்கள் தற்போது நிறுவியுள்ள செயலிகள் மற்றும் உங்கள் தற்போதைய அமர்வின்போது நீங்கள் தட்டுவது அல்லது பார்ப்பது போன்ற கூடுதல் சூழல் சார்ந்த தகவல்களை உங்கள் சாதனம் பயன்படுத்தக்கூடும். இந்தப் பகுப்பாய்வு உங்கள் சாதனத்தில் நேரடியாக நடைபெறும் மேலும் Apple விளம்பரங்களுக்கு அனுப்பப்படாது.
உங்கள் இருப்பிடத்தை அணுக App Storeஐ அனுமதித்தால், App Storeஇல் புவியியல்ரீதியாகத் தொடர்புடைய விளம்பரங்களை வழங்குவதற்கு உங்கள் தோராயமான இருப்பிடம் பயன்படுத்தப்படக்கூடும். உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில் அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > இருப்பிடச் சேவைகள் > App Store என்பதற்குச் சென்று “ஒருபோதும் வேண்டாம்” என்பதைத் தட்டி இருப்பிடம் அடிப்படையிலான செயல்பாடுகளுக்கான உங்கள் ஒப்புதலை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெறலாம்.
பிரத்தியேக விளம்பரங்கள் அமைப்பு ஆன் செய்யப்பட்டிருந்தால், Appleஇன் விளம்பரப்படுத்தல் தளம் உங்களுக்குப் பொருத்தமான விளம்பரங்களை வழங்க உங்கள் தகவல்களைப் பயன்படுத்தக்கூடும். பிரத்தியேக விளம்பரங்களை ஆஃப் செய்வது விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்குவதற்காக இந்தத் தகவல்களைப் பயன்படுத்துவதில் இருந்து Appleஐத் தடுக்கும். இது நீங்கள் பெறும் விளம்பரங்களின் எண்ணிக்கையைக் குறைக்காது, ஆனால் விளம்பரங்கள் உங்களுக்குப் பொருத்தமானதாக இருப்பது குறையக்கூடும்.
Apple விளம்பரப்படுத்தல் & தனியுரிமை பற்றி மேலும் அறிய www.apple.com/in/legal/privacy/data/en/apple-advertising இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.
App Store, Apple News மற்றும் பங்குகள் செயலிகளில் பிரத்தியேக விளம்பரங்களில் இருந்து விலகுவது எப்படி என்று அறிய support.apple.com/105131 இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.
மூன்றாம் தரப்பினருடன் பகிர்தல்
எங்கள் தயாரிப்புகளையும் சேவைகளையும் வழங்க Apple உடன் இணைந்து பணியாற்றும், வாடிக்கையாளருக்கான சந்தைப்படுத்தலில் Appleக்கு உதவும், App Store, Apple News மற்றும் பங்குகள் செயலிகளில் காட்டுவதற்கான விளம்பரங்களை Appleஇன் சார்பாக விற்பனை செய்யும் உத்திசார் கூட்டாளர்களுக்குத் தனிப்பட்டவை அல்லாத சில தரவுகளை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எடுத்துக்காட்டாக, உங்கள் சந்தா மற்றும் நீங்கள் வாங்கிய உள்ளடக்கம் பற்றிய தனிப்பட்டவை அல்லாத தரவைச் செயலி டெவலப்பர்களுடன் நாங்கள் பகிரக்கூடும், இதன்மூலம் தங்கள் படைப்புகளின் செயல்திறனை அவர்கள் மதிப்பிடலாம், ராயல்டி மற்றும் கணக்கியல் தேவைகளைப் பூர்த்திசெய்யலாம், தங்கள் தயாரிப்புகளையும் சேவைகளையும் மேம்படுத்தலாம்.
டெவலப்பர்கள் அவர்களது செயலியை இயக்கவும் மேம்படுத்தவும் உதவியான தகவல்களை அவர்களுடன் நாங்கள் பகிரக்கூடும். ஒப்புதல் வழங்கிய பயனர்களால் வழங்கப்பட்ட பயன்பாட்டுத் தகவல்களை டெவலப்பர்கள் அணுகலாம். அணுகுவதன் மூலம் ஒரே மாதிரியான பண்புகளைக் கொண்ட அல்லது ஒரே மாதிரி செயல்படக்கூடிய பயனர்களின் குழுக்கள் வழங்கும் தொகுக்கப்பட்ட தரவை டெவலப்பர்களால் பார்க்க முடியும். இந்தப் பயன்பாட்டுத் தரவு தனியுரிமையை மேம்படுத்தும் நுட்பங்களுக்கு உட்பட்டது, மேலும் இது உங்களை தனிப்பட்ட முறையில் அடையாளம் காட்டாது. App Storeஇல் தங்களது தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் வாங்குதல்கள் மற்றும் ரீஃபண்டுகளுக்கான ரசீது குறித்த தகவல்களையும் டெவலப்பர்காளால் அணுக முடியும். டெவலப்பர்களுக்கு வழங்கப்பட்ட ரசீதுகளில் தனிப்பட்ட தரவு இருக்காது என்றாலும், டெவலப்பர்களின் செயலிகளை நீங்கள் பயன்படுத்தும் விதம் மற்றும் அவற்றின் பதிவிறக்கங்களில் இருந்து பெறப்பட்ட தனிப்பட்ட தரவுடன் (நீங்கள் டெவலப்பர்களுக்கு அவற்றை வழங்கியிருந்தால்) அவற்றைத் தொடர்புபடுத்த டெவலப்பர்கள் முயலலாம்.
மூன்றாம் தரப்புச் செயலியில் நீங்கள் ஒரு சந்தாவை வாங்கினால், உங்களுக்கும் டெவலப்பர் அல்லது வெளியீட்டாளருக்கும் தனித்துவமான சந்தாதாரர் IDஐ நாங்கள் உருவாக்குவோம். நீங்கள் வாங்கிய சந்தா, நீங்கள் வசிக்கும் நாடு, வட்டாரம் ஆகியவை பற்றிய தகவல்களைக் கொண்ட அறிக்கைகளை டெவலப்பருக்கு வழங்குவதற்காக சந்தாதாரர் IDஐ நாங்கள் பயன்படுத்துவோம். நீங்கள் ஒரு சந்தாத் தொகுப்பை வாங்கினால், அந்தத் தொகுப்பின் ஒரு பகுதியாகச் செயலி சந்தாவை வழங்கும் டெவலப்பர்கள் ஒவ்வொருவரும் தொகுப்பின் சந்தா அறிக்கைத் தகவல்களையும் ரசீதையும் பெறுவார்கள். டெவலப்பர்கள் தங்களது சந்தாக்களின் செயல்திறனைப் புரிந்துகொள்வதற்கு இந்தத் தகவல் அவர்களுக்கு வழங்கப்படும். குறிப்பிட்ட சந்தாதாரருடனான உங்களின் அனைத்துச் சந்தாக்களையும் ரத்துசெய்வதுடன் நீங்கள் மீண்டும் சந்தாதாரர் ஆகவில்லை எனில், 180 நாட்களுக்குப் பிறகு சந்தாதாரர் ID மீட்டமைக்கப்படும்.
குறிப்பிட்ட வட்டாரங்களில், ஒரு செயலிக்கான டிஜிட்டல் பொருட்கள் அல்லது சேவைகளை வெளி அமைப்பு மூலம் வாங்கினால், அதாவது செயலியிலேயே கிடைக்கும் Appleஇன் பேமெண்ட் முறையைப் பயன்படுத்தி வாங்காவிட்டால் Apple கணக்கியல், அறிக்கையிடுதல், பகுப்பாய்வுகள் ஆகியவற்றை மேற்கொள்ள உதவியாக, அந்தச் செயலிக்கான செயலி டெவலப்பரால் வாங்குதல் குறித்த தகவல்கள் (செலுத்திய தொகை, வாங்கிய பொருள் உட்பட) Appleக்கு அனுப்பப்படும். வாங்குதல் குறித்த தகவல்களை உங்கள் Apple கணக்குடன் Apple இணைக்காது.
கூடுதலாக, செயலி டெவலப்பர்கள் வழங்கக்கூடிய செயலியிலேயே கிடைக்கும் உள்ளடக்கம் தானாகப் பதிவிறக்கப்பட்டால், செயலி திறக்கப்படுவதற்கு முன்பு உங்கள் சாதனத்தின் IP முகவரி செயலி டெவலப்பருக்குக் காட்டப்படும். செயலி டெவலப்பரால் உங்கள் IP முகவரி கையாளப்படுவதை செயலி டெவலப்பரின் தனியுரிமைக் கொள்கைகள் நிர்வகிக்கும். செயலியை நீங்கள் முதல்முறை திறக்கும் முன்பு செயலியில் டெவலப்பர்களால் வழங்கப்படும் உள்ளடக்கம் தானாகப் பதிவிறக்கப்படுவதை ஆஃப் செய்ய, அமைப்புகள் > செயலிகள் > App Store என்பதற்குச் சென்று “செயலிக்குள் இருக்கும் உள்ளடக்கம்” என்பதைத் தட்டி ஆஃப் செய்யுங்கள்.
தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்குப் பொருந்தக்கூடிய அடிப்படைச் சட்டங்கள்
பொதுவாக Apple உடனான உங்கள் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்காகவும், சேவைகளை வழங்கத் தேவைப்படும் அளவிற்கும், எங்கள் சட்டரீதியான கடமைகளுக்கு இணங்குவதற்காகவும் App Storeஇல் உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்குகிறோம். ஒப்புதல் என்பது சட்டரீதியான அடிப்படையாக அமையும் இடங்களில், பொருந்தும் உள்ளூர் சட்டங்களின் அடிப்படையில் அதைப் பெற முயல்கிறோம்.
பொருந்தும் உள்ளூர் சட்டங்கள் குறிப்பிடும் இடங்களில், பின்வரும் காரணங்களுக்காக எங்களின் அல்லது மூன்றாம் தரப்புகளின் நியாயமான நலன்களின் நோக்கத்திற்காகத் தேவைப்படும் அளவிற்குத் தனிப்பட்ட தரவைச் செயலாக்குகிறோம்:
- தொடர்புடைய உள்ளடக்கத்தைக் காட்டுதல், கோரப்பட்ட உள்ளடக்கத்தைப் பதிவிறக்க போதுமான இடம் உங்கள் சாதனத்தில் உள்ளதா என்பதைத் தீர்மானித்தல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட உள்ளடக்கம் தானியங்கு முறையில் பதிவிறக்கப்படுவதற்கு வழிவகுத்தல்
- உங்களுக்காகவும் பிறருக்காகவும் App Store, பிற Apple தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்தி உகந்ததாக்க உதவுதல்
- நீங்கள் விரும்பக்கூடிய சலுகைகளை மின்னஞ்சல் அல்லது அறிவிப்புகள் வழியாக அனுப்புதல், App Store, Apple News மற்றும் பங்குகள் செயலிகளில் உங்களுக்கு விளம்பரங்களை வழங்குவதற்காகப் பிரிவுகளை உருவாக்குதல்
- ரீஃபண்டு கோரிக்கைகளைச் செயலாக்குதல்
- டெவலப்பர்களின் செயலிகளில் வாங்கப்படுபவை தொடர்பான அறிக்கையை அவர்களுக்கு வழங்குதல்
- மோசடி மற்றும் பிற தீங்கிழைக்கும் செயல்பாட்டைத் தடுத்தல்
பயன்படுத்தப்படும் தரவில் இவையும் அடங்கும்:
- நீங்கள் தேடும், பார்க்கும், பதிவிறக்கும், வாங்கும் உள்ளடக்கத்துடனான உங்கள் செயல்பாடுகள் போன்ற App Store செயலியை நீங்கள் பயன்படுத்தும் விதம் மற்றும் App Store அறிவிப்புகள், மெசேஜ்கள் மற்றும் செயலியில் உள்ள அறிவிப்புகளும் மெசேஜ்களும்
- உங்கள் சாதனம் மற்றும் கணக்கு பற்றிய விவரங்கள்
- உங்கள் IP முகவரி
- சாதனத்தின் நம்பகத்தன்மை மதிப்பெண்
தக்கவைத்தல்
App Store மற்றும் பிற Apple ஆன்லைன் ஸ்டோர்களில் உங்கள் வாங்குதல்கள் மற்றும் பதிவிறக்கங்கள் தொடர்பான தனிப்பட்ட தரவை நிதி அறிக்கை தொடர்பான பொருந்தும் உள்ளூர் சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கால அளவிற்குத் தக்க வைக்கிறோம், இது வட்டாரத்தைப் பொறுத்து மாறுபடும். பெரும்பான்மையான வாடிக்கையாளர்களுக்குக் குறைந்தபட்சம் 10 வருடம் தக்கவைத்தல் காலம் தேவையாக இருக்கிறது, ஆனால் சீனா போன்ற சில வட்டாரங்களில் இந்தக் காலம் 30 வருடங்களாக இருக்கலாம். நீங்கள் வாங்கும், பதிவிறக்கும் உள்ளடக்கத்தை எங்கள் பொருந்தும் விதிமுறைகளுக்கு ஏற்ப மீண்டும் பதிவிறக்க உங்களுக்கு உதவுவதற்காக உங்கள் கணக்கு இருக்கும் காலம் வரை அந்தப் பதிவை நாங்கள் தக்கவைக்கிறோம். உலாவல் செயல்பாடு, தேடல்கள் போன்ற பிற தகவல்களைக் குறுகிய காலத்திற்குத் தக்கவைக்கிறோம். தரவைத் தக்கவைப்பதற்கான பொருந்தும் சட்டரீதியான தேவைகள், குறிப்பிட்ட வணிகப் பயன்பாட்டு நோக்கங்கள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு இந்தக் காலஅளவு தீர்மானிக்கப்படுகிறது. இருப்பினும், நீங்கள் உங்கள் கணக்கை மூடிய பின்னர் App Storeஐப் பயன்படுத்துவதை நிறுத்திய பின்னரும்கூட வாங்குதல்கள் போன்ற சில தகவல்கள் (உங்கள் சேமிக்கப்பட்ட கார்டு விவரங்கள் இல்லை) வணிகப் பதிவுகளாகத் தக்கவைக்கப்படக்கூடும்.
நீங்கள் பேமெண்ட் கார்டைப் பயன்படுத்தும்போது எதிர்கால வாங்குதல்கள், தொடர் பரிவர்த்தனைகள் அல்லது நீங்கள் அங்கீகரிக்கும் பிற பயன்பாடுகளுக்காக Apple உங்கள் கார்டு எண்ணையும் பில்லிங் தகவல்களையும் தக்கவைத்து தானாகப் புதுப்பிக்கலாம். Apple இந்தத் தகவல்களை உங்கள் நிதி நிறுவனம் அல்லது பேமெண்ட் நெட்வொர்க்கிலிருந்து பெற்று மோசடித் தடுப்பு மற்றும் சரிபார்ப்புக்காகப் பயன்படுத்தலாம்.
மோசடி மற்றும் பிற தீங்கிழைக்கும் செயல்பாட்டைத் தடுத்தல்
App Store மற்றும் பிற Apple ஆன்லைன் ஸ்டோர்கள், பிற Apple செயலிகள் மற்றும் சேவைகளில் மோசடி மற்றும் பிற தீங்கிழைக்கும் செயல்பாட்டைத் தடுப்பதற்காகவும் தனிப்பட்ட தரவைச் சேகரிக்கிறோம். இந்தத் தகவல்களில் சாதன வகை, மென்பொருள் பதிப்பு போன்ற சாதனத் தகவல்கள், இருப்பிடத் தகவல்கள் (உங்கள் இணைய இணைப்பின் IP முகவரியை உங்கள் புவியியல் வட்டாரத்துடன் பொருத்துவதன் மூலம் கிடைக்கும் தோராயமான இருப்பிடம்), இதுவரையான பதிவிறக்கங்களும் வாங்குதல்களும், தேடல்கள், ஸ்டோர்களுடனான உங்களின் பிற செயல்பாடுகள் ஆகியவை அடங்கும்.
நீங்கள் எதையேனும் வாங்கத் தொடங்கும்போது அல்லது தானாகவே புதுப்பிக்கும் வகையில் சந்தாவை அமைத்திருக்கும்போது அந்தக் கோரிக்கையைச் செயலாக்கி, பேமெண்ட் கூட்டாளரிடமிருந்து அங்கீகாரத்தைப் பெறுவதற்கு முன்பாக அந்தத் தயாரிப்பு அல்லது சேவையை வழங்குவதா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க Apple உடனான உங்கள் வணிகத் தொடர்புகள் பற்றிய இதுவரையான தகவல்களை Apple பயன்படுத்தக்கூடும்.
நீங்கள் வாங்க முயலும்போது உங்கள் சாதனத்தை நீங்கள் பயன்படுத்தும் விதத்தின் அடிப்படையில் சாதனத்தின் நம்பகத்தன்மை மதிப்பெண்ணையும் நாங்கள் கணக்கிடுகிறோம், பயன்படுத்தும் விதம் என்பதில் ஃபோன் அழைப்புகளின் தோராயமான எண்ணிக்கை, நீங்கள் அனுப்பும் அல்லது பெறும் மின்னஞ்சல்கள் தோராயமான எண்ணிக்கை அடங்கும். உங்கள் சாதனத்தில் உள்ள பின்னணி மதிப்புகளை Apple அறிந்துகொள்ளாத வகையில் இந்தக் கணக்கீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண் குறிப்பிட்ட காலத்திற்கு எங்கள் சர்வரில் சேமிக்கப்பட்டிருக்கும்.
Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.
2026-05-11