Apple கணக்கு & தனியுரிமை
Apple கணக்கு உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
![]()
- உங்கள் Apple கணக்கு மூலம் உள்நுழையும்போது, இந்த iPhoneஇல் iCloud, App Store, iMessage, “இடம் அறி” போன்ற சேவைகளைச் செயல்படுத்துவீர்கள்.
- உங்கள் சார்பாகச் சேமிக்கவும், பேக்-அப் செய்யவும், உங்கள் தொடர்புகள், கேலண்டர்கள், புகைப்படங்கள், ஆவணங்கள், உடல்நலம், செயல்பாடு உள்ளிட்ட குறிப்பிட்ட சில தரவுகளும் பிற செயலித் தரவுகளும் Appleக்கு அனுப்பப்படும்.
- கூடுதலாக, இன்னும் சிறப்பான சேவையையும் உதவிகளையும் உங்களுக்கு வழங்க, உங்கள் சாதனம் உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்படும்.
உங்கள் Apple கணக்கும் அனைத்து Apple சேவைகளும் அடிப்படையிலேயே உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. உங்கள் அனுபவத்தைச் சிறப்பாக்கத் தேவைப்படும் தரவை மட்டும் சேகரிக்க நாங்கள் கடினமாக முயல்கிறோம். நாங்கள் தரவைச் சேகரிக்கும்போது எதைச் சேகரிக்கிறோம், அது எங்களுக்கு ஏன் தேவைப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்வது முக்கியம் என நினைக்கிறோம், இதன்மூலம் தகவலறிந்த முடிவுகளை நீங்கள் எடுக்கலாம்.
Apple கணக்கு என்பது iCloud, App Store மற்றும் பிற Apple ஆன்லைன் ஸ்டோர்கள், iMessage, FaceTime போன்ற Apple சேவைகளை அணுகவும், இணையத்திலும் உங்கள் சாதனங்களிலும் உங்கள் உள்ளடக்கத்தை அணுகவும் நீங்கள் பயன்படுத்தக்கூடிய தனிப்பட்ட கணக்கு ஆகும். உங்கள் அனைத்து Apple சேவைகளிலும் உள்நுழைய நீங்கள் பயன்படுத்தும் தகவல்கள், அனைத்துத் தொடர்புகள், பேமெண்ட்கள், நம்பகமான ஃபோன் எண்கள் அல்லது பாதுகாப்புக் கேள்விகள் போன்ற பாதுகாப்பு விவரங்கள் ஆகியவை உங்கள் Apple கணக்கில் இருக்கும். சிறந்த சேவையையும் ஆதரவையும் உங்களுக்கு வழங்குவதற்காக உங்கள் சாதனத்தின் பெயர், வரிசை எண், பிற வன்பொருள் அடையாளத் தகவல்கள் ஆகியவற்றை Apple தக்கவைக்கிறது. உங்கள் சாதனத்தின் உத்தரவாத நிலையைக் காட்டுதல், ஒரு சாதனத்தைச் செயல்படுத்தும்போது சேவைச் சலுகைகளுக்கான உங்கள் தகுதியைச் சரிபார்த்தல் ஆகிய நோக்கங்களும் இதில் அடங்கும். account.apple.com என்ற முகவரியில் உள்ள உங்கள் Apple கணக்குப் பக்கத்தில் உங்கள் Apple கணக்குத் தகவல்களைத் திருத்தலாம் மற்றும் உங்கள் சாதனங்களின் பட்டியல், ஃபோன் எண்கள் போன்றவற்றைப் பார்க்கலாம்.
உங்கள் Apple கணக்கு மூலம் உள்நுழையும்போது, இந்த iPhoneஇல் iCloud, App Store, iMessage, FaceTime, “இடம் அறி” போன்ற சேவைகளைச் செயல்படுத்துவீர்கள். ஒவ்வொரு சேவையுடனும் உங்கள் Apple கணக்குத் தகவல்கள் (இணைக்கப்பட்டுள்ள உங்கள் ஃபோன் எண் உட்பட) பயன்படுத்தப்படும், இதனால் உருவாக்கப்படும் பகுப்பாய்வுத் தகவல்கள் அந்தச் சேவைகளைப் பராமரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படலாம். இத்துடன், உங்கள் சார்பாகச் சேமித்து பேக்-அப் செய்ய உங்கள் சாதனத்தில் இருந்து குறிப்பிட்ட தரவுகள் Appleக்கு அனுப்பப்படும், நீங்கள் தேர்ந்தெடுத்த சுயவிவரப் புகைப்படம், உங்கள் தொடர்புகள், கேலண்டர்கள், புகைப்படங்கள், ஆவணங்கள், உடல்நலத்தரவுகள், செயல்பாடுகள், Safari தாவல்கள், பிற செயலித் தரவுகள் ஆகியவை இதில் அடங்கும்.
உங்கள் சாதனம் இருக்கும் நாடு அல்லது வட்டாரத்தின் அடிப்படையில், சட்டப்பூர்வமாகத் தேவைப்படும் சில அம்சங்களுக்கும் சேவைகளுக்கும் உங்கள் சாதனம் தகுதிபெறுகிறதா என்பதைத் தீர்மானிக்க உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள தகவல்களை Apple சேகரிக்கிறது. இந்தச் சட்டப்பூர்வமாகத் தேவைப்படும் அம்சங்களையும் சேவைகளையும் செயல்படுத்துவது தொடர்பான கணக்கியல், அறிக்கையிடுதல், பகுப்பாய்வுகள், மோசடி கண்டறிதல் ஆகிய நோக்கங்களுக்காக உங்கள் Apple கணக்கு தொடர்பாக நீங்கள் நிறுவும் செயலிகள் பற்றிய தகவல்களையும், அவை எங்கிருந்து நிறுவப்பட்டன என்ற (எடுத்துக்காட்டாக, இணையதளம் அல்லது செயலி மார்க்கெட்பிளேஸ்) விவரத்துடன் நாங்கள் சேகரிக்கிறோம். மேலும், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் உங்கள் தனியுரிமையைப் பாதுகாத்து வயதுக்குப் பொருத்தமான தகவல்களை வழங்குதல் உள்ளிட்ட எங்கள் கடமைகளுக்கு இணங்குவதற்காக உங்கள் Apple கணக்கில் உள்ள வயது தொடர்பான தகவல்களை நாங்கள் பயன்படுத்துவோம்.
சில நாடுகள் அல்லது வட்டாரங்களில் நீங்கள் ஒரு வயது வந்தோர் என்பதை உறுதிசெய்ய கிரெடிட் கார்டு, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை போன்ற கூடுதல் தகவல்களை நீங்கள் வழங்க வேண்டியிருக்கலாம். இந்தத் தேவைகள் உள்ள நாடு அல்லது வட்டாரத்தில் நீங்கள் இருக்கிறீர்களா என்பதைத் தீர்மானிக்க கணக்குத் தகவல்கள், சாதனத் தொழில்நுட்பம், IP முகவரி (சில சமயங்களில்) ஆகியவற்றை நாங்கள் ஒருங்கிணைத்துப் பயன்படுத்துகிறோம். App Storeஇல் செயலிகளைப் பதிவிறக்குதல், இணைய உள்ளடக்க ஃபில்டர்கள் மற்றும் தகவல் தொடர்புகள் பாதுகாப்பு போன்ற ஆன்லைன் பாதுகாப்பு அம்சங்களை முடக்குதல், சிறார்களுக்கான Apple கணக்கை உருவாக்குதல் ஆகிய சில செயல்களைச் செய்வதற்கு உங்களை அனுமதிக்க, சட்டப்பூர்வமாகத் தேவைப்படும் இடங்களில் கூடுதல் வயது உறுதிப்படுத்தல் தகவல்களை நாங்கள் கேட்போம். அரசு வழங்கிய அடையாள அட்டையின் படத்தை நீங்கள் சமர்ப்பிக்கும்போது, நீங்கள் வயதுவந்தவர் என்பதை உறுதிப்படுத்தவும் மோசடியைத் தடுக்கவும் Apple மற்றும் அதன் சேவை வழங்குநர்கள் உங்கள் அடையாள அட்டையின் படத்தையும் Apple கணக்குத் தகவலையும் பயன்படுத்துவார்கள். Appleஇன் சேவை வழங்குநர்கள் மதிப்பீட்டை நிறைவுசெய்ய குறுகிய காலத்திற்கு இந்தப் படத்தைச் சேமித்து வைத்திருப்பார்கள், அதன் பிறகு படம் நீக்கப்படும். உங்கள் Apple கணக்குடன் தொடர்புடைய தேதி, முறை மற்றும் நாடு அல்லது வட்டாரம் குறித்த வயது உறுதிப்படுத்தல் தகவல்களை Apple சேமிக்கிறது. நீங்கள் அடையாள அட்டையை வழங்கினால், மோசடியைத் தடுப்பதற்கும் கண்டறிவதற்கும் குறிப்பிட்ட காலத்திற்கு அந்த ஆவணத்தில் உள்ள குறிப்பிட்ட தகவல்களின் ஒருவழி ஹேஷைச் சேமிப்போம். வாங்குதல்கள் அல்லது வாலெட்டில் டிஜிட்டல் சான்றுகளைப் பயன்படுத்துதல் போன்ற பிற காரணங்களுக்காகத் தனியாகச் சேமிக்க நீங்கள் தேர்வுசெய்யும் வரை நாங்கள் கிரெடிட் கார்டு அல்லது அடையாள ஆவணத்தை அப்படியே சேமிப்பதில்லை.
iCloud மற்றும் தனியுரிமை
iCloudஇல் உள்நுழைதல்
நீங்கள் iCloudஐப் பயன்படுத்தும்போது உங்கள் சாதனத்தில் நீங்கள் சேமிக்கும் சில தரவுகள் Appleக்கு அனுப்பப்பட்டுச் சேமிக்கப்படும். இது iCloud செயல்படுத்தப்பட்டுள்ள உங்கள் சாதனங்கள் அல்லது கம்ப்யூட்டர்கள் அனைத்திலும் (“சாதனங்கள்”) உங்கள் தரவுகளைத் தானாகவே அணுக உங்களுக்கு உதவுகிறது. இந்தத் தரவுகளில் இவையும் அடங்கும்:
- தொடர்புகள்
- கேலண்டர்கள்
- நினைவூட்டல்கள்
- புக்மார்க்குகள்
- Safari தாவல்கள்
- உடல்நலத் தரவுகள்
- ஹோம் தரவுகள்
- குறிப்புகள்
- Freeform
- புகைப்படங்கள்
- Apple Vision Pro செயலி
- ஆவணங்கள்
- வாலெட் தரவுகள்
- கீசெயின் மற்றும் பாஸ்வேர்டுகள்
- உங்கள் சாதனத்தில் உள்ள ஃபோன் எண்
- சாதன மற்றும் கணக்கு அமைப்புகள்
- iCloudஐப் பயன்படுத்தும் பிற Apple செயலிகளில் இருந்து தரவுகள்
- iCloudஐப் பயன்படுத்தும் மூன்றாம் தரப்புச் செயலிகளில் இருந்து தரவுகள்
உங்கள் சாதனத்தில் தரவுகளை மாற்றியமைக்கவோ மீட்டெடுக்கவோ வேண்டியிருந்தால் தரவுகளின் தற்போதைய பேக்-அப் உங்களிடம் இருப்பதை உறுதிசெய்ய iCloud பேக்-அப் அம்சமும் செயல்படுத்தப்படும்.
எந்தெந்த iCloud அம்சங்களைச் செயல்படுத்த வேண்டும் மற்றும் எந்தெந்தத் தரவுகள் iCloudக்கு அனுப்பப்பட வேண்டும் என்பதை எப்போது வேண்டுமானாலும் அமைப்புகளில் நீங்கள் மாற்றலாம்.
iCloud தரவுப் பாதுகாப்பு
தகவல் பரிமாற்றத்தின்போது என்கிரிப்ட் செய்தல், என்கிரிப்ட் செய்யப்பட்ட வடிவத்தில் iCloudஇல் சேமித்தல், அங்கீகரித்தலுக்குப் பாதுகாப்பு டோக்கன்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் iCloud உங்கள் தகவல்களைப் பாதுகாக்கிறது. குறிப்பிட்ட சில தகவல்களுக்கு, Apple முழுமையான என்கிரிப்ஷனைப் பயன்படுத்துகிறது. அதாவது நீங்கள் மட்டுமே இந்தத் தகவல்களை அணுகக்கூடிய வகையில், அதுவும் நீங்கள் iCloudஇல் உள்நுழைந்திருக்கும் சாதனங்களில் இருந்து மட்டுமே அணுகக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுமையான என்கிரிப்ஷன் செய்யப்பட்ட தகவல்களை வேறு எவரும், ஏன் Appleஆல் கூட அணுக முடியாது. iCloud தரவுப் பாதுகாப்பு குறித்த கூடுதல் தகவல்களுக்கு, support.apple.com/102651 இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.
உங்கள் தரவைச் சேமிப்பதற்கும் செயலாக்குவதற்கும் Apple மற்றும் மூன்றாம் தரப்புத் தரவு மையங்கள் பயன்படுத்தப்படலாம். மூன்றாம் தரப்புத் தரவு மையங்களில் சேமிக்கப்பட்டுள்ள தரவைச் செயலாக்கினால், தேவையான செயலாக்கம் நடைபெறும்போது மட்டும் மற்றும் Apple மென்பொருளால் இயங்கும் பாதுகாப்பான சர்வர்களால் மட்டுமே என்கிரிப்ஷன் கீக்கள் அணுகப்படும்.
iCloud கீசெயின்
iCloud கீசெயின் உங்கள் Safari இணையதளப் பயனர்பெயர்கள் மற்றும் பாஸ்வேர்டுகள், கிரெடிட் கார்டு தகவல்கள், Wi-Fi நெட்வொர்க் தகவல்கள் போன்றவற்றைப் புதுப்பித்த நிலையிலும், உங்கள் சாதனங்கள் அனைத்திலும் அவை கிடைக்கும் வகையிலும் வைத்திருக்கும். இதன்மூலம் Mail, தொடர்புகள், கேலண்டர், மெசேஜஸ், Facebook, X, LinkedIn மற்றும் பிற இணையக் கணக்குகள் தொடர்பான தகவல்களைச் சேமிக்கவும், உங்கள் சாதனங்கள் அனைத்திலும் இந்தத் தகவல்களைத் தானாகச் சேர்க்கவும் முடியும்.
iCloud கீசெயின் முழுமையான என்கிரிப்ஷனைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, எனவே இந்தத் தகவல்களை நீங்கள் மட்டுமே அணுக முடியும், அதுவும் நீங்கள் iCloudஇல் உள்நுழைந்திருக்கும் சாதனங்களில் இருந்து மட்டுமே அணுக முடியும். உங்கள் iCloud கீசெயின் தரவுகளை வேறு எவரும், ஏன் Appleஆல் கூட அணுக முடியாது. உங்கள் iCloud அமைப்புகளில் iCloud கீசெயினை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் ஆஃப் செய்யலாம்.
iCloud பேக்-அப்
நீங்கள் iCloud பேக்-அப்பைப் பயன்படுத்தினால், உங்கள் அமைப்புகளைப் பொறுத்து உங்கள் iOS அல்லது iPadOS சாதனத்தில் இருந்து புகைப்படங்கள், வீடியோக்கள், மெசேஜ்கள் (iMessage, SMS மற்றும் MMS), உடல்நலம் மற்றும் பிற செயலித் தரவுகள், இருப்பிட அமைப்புகள் (நீங்கள் அமைத்துள்ள இருப்பிட அடிப்படையிலான நினைவூட்டல்கள் போன்றவை), விஷுவல் வாய்ஸ்மெயில், சாதன அமைப்புகள், சாதனத்தின் சிறப்பியல்புகள் மற்றும் பிற தரவுகள் பேக்-அப் செய்யப்படலாம்.
அமைப்புகள் > [உங்கள் பெயர்] > iCloud > சேமிப்பகம் > பேக்-அப்கள் என்பதற்குச் சென்று, பேக்-அப்கள் பிரிவில் உங்கள் iOS அல்லது iPadOS சாதனத்தைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் பேக்-அப் செய்ய வேண்டாம் என நினைக்கும் செயலியைத் தட்டி ஆஃப் செய்வதன் மூலம் iCloud ஒரு குறிப்பிட்ட செயலியின் தரவுகளை பேக்-அப் செய்வதை நிறுத்தலாம்.
நீங்கள் iCloud அமைப்புகளில் iCloud பேக்-அப்பை ஒட்டுமொத்தமாக ஆஃப் செய்யலாம், உங்கள் iOS அல்லது iPadOS சாதனத்தை உங்கள் கம்ப்யூட்டருக்கு பேக்-அப் செய்ய Finder (macOS Catalina 10.15 அல்லது பிந்தைய பதிப்புகள்) அல்லது iTunes (macOS Mojave 10.14 அல்லது முந்தைய பதிப்புகள்) ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். iCloudஇல் இருந்து உங்கள் பேக்-அப் தரவுகளை முற்றிலுமாக அகற்ற, நீங்கள் iCloud பேக்-அப்பை ஆஃப் செய்வதற்கு முன்பு தனித்தனி பேக்-அப்களை நீக்க வேண்டும். இல்லாவிட்டால், பேக்-அப் தரவுகள் 180 நாட்கள் வரை தக்கவைக்கப்படும்.
iCloud மூலம் தரவைப் பகிர்தல்
குறிப்புகள், Pages, Numbers, Keynote, Freeform மற்றும் குறிப்பிட்ட மூன்றாம் தரப்புச் செயலிகளில் பொதுவில் அல்லது தனிப்பட்ட முறையில் கோப்புகளைப் பகிர நீங்கள் iCloudஐப் பயன்படுத்தினால், பகிரப்படும் கோப்பை Apple சேமிக்கும் மற்றும் அதற்கான அணுகலைக் கொண்டிருக்கும். நீங்கள் பொதுவில் பகிர்ந்தாலும் தனிப்பட்ட முறையில் பகிர்ந்தாலும், பகிர்வு இணைப்புக்கு அணுகல் கொண்ட அனைவராலும் உங்கள் கணக்குடன் தொடர்புடைய முதல் மற்றும் கடைசிப் பெயர் (பொருந்தினால்), உங்கள் சாதனத்தில் உள்ள ஃபோன் எண், கோப்புப் பெயர் ஆகியவற்றைப் பார்க்க முடியும். தனிப்பட்ட பகிர்வுப் பங்கேற்பாளர்களின் அடையாளங்கள் அந்தத் தனிப்பட்ட பகிர்வுக்கு அழைக்கப்படாதவர்கள் மற்றும் அழைப்பை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எவருக்கும் காட்டப்படாது.
நீங்கள் ஒரு பகிர்ந்த லைப்ரரியை உருவாக்கினால், அனைத்துப் பங்கேற்பாளர்களும் அந்தப் பகிர்ந்த லைப்ரரியில் iCloud மூலமாகப் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சேர்க்கலாம், திருத்தலாம் அல்லது நீக்கலாம். நேரடியாகவோ தானியங்குப் பகிர்வின் மூலமாகவோ ஒரு பகிர்ந்த லைப்ரரியில் உள்ளடக்கத்தைச் சேர்க்க பல்வேறு வழிகள் உள்ளன. உங்கள் iOS அல்லது iPadOS சாதனத்தில் அமைப்புகள் > புகைப்படங்கள் > பகிர்ந்த லைப்ரரி > “கேமராவில் இருந்து பகிர்” என்பதற்குச் சென்று உள்ளடக்கத்தைப் பகிரும் விதத்தை உங்கள் விருப்பத்திற்கேற்ப கட்டுப்படுத்தலாம்.
iCloud மற்றும் செயலிகள்
சில செயலிகள் அந்தச் செயலிக்கு நீங்கள் வழங்கும் தரவையும் உள்ளடக்கத்தையும் சேமிக்க iCloudஐப் பயன்படுத்துகின்றன, இதன்மூலம் iCloud செயல்படுத்தப்பட்டுள்ள உங்கள் சாதனங்கள் அனைத்திலும் நீங்கள் அந்தத் தரவை அணுகலாம். செயலி உங்கள் தரவுகளில் சிலவற்றை அல்லது அனைத்தையும் iCloudஇல் சேமிக்கக்கூடும். மூன்றாம் தரப்புச் செயலிகள் உங்களைக் கண்டுபிடிப்பதற்காகக் கோரலாம், இதன்மூலம் அந்தச் செயலியைப் பயன்படுத்தும் பிற பயனர்கள் Apple கணக்கின்படி தேடும்போது அவர்களால் உங்கள் முதல் மற்றும் கடைசிப் பெயரைப் பார்க்க முடியும்.
ஒரு செயலியின் iCloud அணுகலை ஆஃப் செய்வதன் மூலம் அந்தச் செயலி iCloudஇல் தரவுகளைச் சேமிப்பதை நிறுத்தலாம். அமைப்புகள் > [உங்கள் பெயர்] > iCloud என்பதற்குச் சென்று பட்டியலில் காட்டப்படும் செயலிகளைத் தட்டி அதை ஆஃப் செய்யுங்கள்.
iCloud தேவைப்படும் Apple சேவைகள்
Apple Pay, செயல்பாட்டுப் பகிர்வு, ஹோம், Handoff, யுனிவர்சல் கிளிப்போர்டு, Apple Watch மூலம் அன்லாக் செய்தல் போன்ற Apple சேவைகளைப் பயன்படுத்த நீங்கள் உங்கள் சாதனத்தில் iCloudஇல் உள்நுழைந்திருக்க வேண்டும். ஹோம் செயலியில் “பாதுகாப்பான கேமரா பதிவுசெய்தல்” அம்சத்தை அமைத்துப் பயன்படுத்துவதற்கு நீங்கள் தகுதிபெறுகிறீர்களா என்பதைச் சரிபார்க்க உங்கள் iCloud திட்டத்தை Apple பயன்படுத்துகிறது. உங்கள் கேமரா பதிவுகளின் உள்ளடக்கத்தை Appleஆல் அணுக முடியாது. நீங்கள் அனைத்து iCloud அம்சங்களையும் பயன்படுத்த வேண்டியதில்லை, நீங்கள் பயன்படுத்த விரும்பாத iCloud அம்சங்களை உங்கள் சாதனத்தின் iCloud அமைப்புகளில் ஆஃப் செய்யலாம்.
iCloudஇல் இருந்து வெளியேறுதல்
உங்கள் iOS அல்லது iPadOS சாதனம் மற்றும் இணைக்கப்பட்ட Apple Watchஇல் iCloudஐப் பயன்படுத்துவதை நிறுத்த விரும்பினால், அமைப்புகள் > [உங்கள் பெயர்] என்பதற்குச் சென்று “வெளியேறு” என்பதைத் தட்டுங்கள். உங்கள் Macஇல் iCloudஐப் பயன்படுத்துவதை நிறுத்த, சிஸ்டம் அமைப்புகள் > [உங்கள் பெயர்] என்பதற்குச் சென்று “வெளியேறு” என்பதை கிளிக் செய்யுங்கள். உங்கள் Apple கணக்கு பாஸ்வேர்டு தேவைப்படலாம்.
உங்களுடனான தகவல்தொடர்புகள்
iCloud மற்றும் நீங்கள் விரும்பக்கூடிய பிற Apple தயாரிப்புகள், சேவைகள் மற்றும் சலுகைகள் (Apple One உட்பட) பற்றிய தகவல்களை உங்களுக்கு அனுப்ப, உங்களுக்குச் சொந்தமான Apple தயாரிப்புகள், நீங்கள் பதிவிறக்கிய Apple செயலிகள், உங்கள் கணக்கில் பதிவுசெய்யப்பட்டுள்ள சாதனங்கள், Apple சேவைகளுக்கான உங்கள் சந்தாக்கள் ஆகியவற்றுடன் உங்கள் கணக்கு மாணவர் கணக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா போன்ற கணக்கு பற்றிய தகவல்களையும் Apple பயன்படுத்தக்கூடும். சேவைச் சலுகைகளுக்கான தகுதியைச் சரிபார்க்க உங்கள் சாதன வரிசை எண் பயன்படுத்தப்படலாம். நீங்கள் குடும்பப் பகிர்வுக் குழுவில் இருந்தால், குடும்பப் பகிர்வின் வழியாக உங்களுக்குக் கிடைக்கக்கூடிய தயாரிப்புகள், சேவைகள் மற்றும் சலுகைகள் பற்றிய தகவல்களை Apple அனுப்பக்கூடும். நீங்கள் Apple One சந்தாச் செலுத்தியிருந்தால், சந்தாச் செலுத்தியுள்ள சேவைகளின் ஒவ்வொரு அம்சங்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் உங்களுக்கு அனுப்பக்கூடும். உங்கள் Apple கணக்கு தொடர்பாக நாங்கள் அனுப்பும் Apple One தகவல்தொடர்புகளில் நீங்கள் மேற்கொண்ட செயல்களைப் பற்றிய தகவல்களை, இந்தத் தகவல்தொடர்புகளையும் எங்கள் சேவைகளையும் மேம்படுத்துவதற்காக Apple சேகரிக்கிறது.
மின்னஞ்சல் மார்க்கெட்டிங்
மார்க்கெட்டிங் மின்னஞ்சல்களைப் பெற நீங்கள் ஒப்புதலளித்தால், இந்தத் தகவல்கள் மின்னஞ்சல் வழியாக உங்களுக்கு அனுப்பப்படலாம். account.apple.com இணையதளத்திற்குச் சென்று அல்லது உங்கள் iOS அல்லது iPadOS சாதனத்தில் அமைப்புகள் > [உங்கள் பெயர்] > தனிப்பட்ட தகவல்கள் என்பதற்குச் சென்று உங்கள் மின்னஞ்சல் முன்னுரிமைகளை நீங்கள் மாற்றலாம், இந்த மின்னஞ்சல்களைப் பெறுவதற்கான ஒப்புதலைத் திரும்பப் பெறலாம்.
அறிவிப்புகள்
இந்தத் தகவல்தொடர்புகளை அறிவிப்புகள் வழியாகவும் நீங்கள் பெறலாம். உங்கள் அறிவிப்பு முன்னுரிமைகளை மாற்ற அல்லது அறிவிப்புகளைப் பெறுவதிலிருந்து விலக உங்கள் iOS அல்லது iPadOS சாதனத்தில், அமைப்புகள் > அறிவிப்புகள் என்பதற்குச் செல்லுங்கள்.
குடும்பப் பகிர்வு
சந்தாக்கள், வாங்குதல்கள், இருப்பிடம் ஆகியவற்றை நீங்களும் உங்கள் குடும்பக் குழுவினரும் பகிர குடும்பப் பகிர்வு உதவுகிறது. குடும்பக் குழுவில் உள்ள சிறார் மற்றும் பதின்ம வயதினருக்கு, குடும்ப ஒருங்கிணைப்பாளர் “வாங்க அனுமதி கோருதல்”, “ஸ்கிரீன் டைம்” போன்ற பெற்றோர் கட்டுப்பாடுகளை அமைக்கலாம். உங்கள் குடும்பக் குழுவில் உள்ள ஓர் உறுப்பினர் Apple TV போன்ற குறிப்பிட்ட Apple சாதனங்களில் உள்நுழைந்தால், குடும்பத்தில் உள்ள பிற உறுப்பினர்களின் Apple கணக்குப் பெயரையும் சுயவிவரப் புகைப்படத்தையும் காட்டி அவர்களையும் சேர்க்க அந்தச் சாதனம் பரிந்துரைக்கக்கூடும். குடும்பப் பகிர்வு பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, www.apple.com/in/legal/privacy/data/en/family-sharing இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.
tvOS மற்றும் மூன்றாம் தரப்பு டிவிகளில் உள்ள Apple TV செயலிச் சுயவிவரங்கள்
tvOS மற்றும் சில மூன்றாம் தரப்பு டிவிகளில் உள்ள Apple TV செயலியில் சிறார் சுயவிவரங்கள் உட்பட உங்கள் Apple கணக்குடன் தொடர்புபடுத்தப்பட்ட சுயவிவரங்களையும் நீங்கள் உருவாக்கலாம். அந்த பிளாட்ஃபார்ம்களில் உள்ள Apple TV செயலியில் இந்தச் சுயவிவரங்களைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் Apple TV செயலியில் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்களைப் பெறமுடியும். சுயவிவரங்கள் இணைக்கப்பட்டுள்ள Apple கணக்கே நிர்வகிக்கும் சுயவிவரம் ஆகும். உங்கள் Apple கணக்குடன் தொடர்புடைய சுயவிவரத்தை உருவாக்க, நீங்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். நீங்கள் சுயவிவரத்திற்கான பெயர் மற்றும் படத்தைத் தேர்ந்தெடுத்து, இந்தச் சுயவிவரம் குழந்தைக்கானதா என்பதையும் தீர்மானிப்பீர்கள். சுயவிவரத்தை அமைக்கும்போதும், அமைப்புகளில் எப்போது வேண்டுமானாலும் உங்கள் Apple கணக்கைப் பயன்படுத்தி வாங்குதல், வாடகைக்கு எடுத்தல் ஆகியவற்றைச் செய்வதற்கான சுயவிவரத்தின் திறனை நீங்கள் கட்டுப்படுத்தலாம். Apple TV செயலிக்கான உள்ளடக்கக் கட்டுப்பாடுகளையும் நீங்கள் அமைக்கலாம். tvOSஇல், அமைப்புகள் > செயலிகள் > டிவி > உள்ளடக்கக் கட்டுப்பாடுகள் என்பதற்குச் சென்று, சுயவிவரத்தைத் தேர்ந்தெடுத்து, அதிலுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் உள்ளடக்க மதிப்பீடுகளுக்கு ஏற்ப, Appleஇல் இருந்து நீங்கள் வாங்கிய அல்லது வாடகைக்கு எடுத்த உள்ளடக்கத்தையும் Apple TV சந்தா, Apple TV சேனல்கள் ஆகியவற்றையும் சுயவிவரத்தால் அணுகவும் பார்க்கவும் முடியும். நீங்கள் இணைத்த மூன்றாம் தரப்பு வீடியோ செயலிகளையும் சுயவிவரம் அணுக முடியும், ஆனால் உள்ளடக்கக் கட்டுப்பாடுகள் Apple TV செயலிக்கு மட்டுமே பொருந்தும்.
சுயவிவரங்கள் பற்றி Apple சேகரித்துச் சேமிக்கும் தகவல்கள், நிர்வகிக்கும் சுயவிவரத்தின் Apple கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும். உதாரணமாக ஒரு சுயவிவரம் எதைப் பார்க்கிறது, எப்போது பார்க்கப்பட்டது, எந்தச் சாதனத்தில் பார்க்கப்பட்டது, உள்ளடக்கத்தில் சுயவிவரத்தின் முன்னேற்றம் என்ன போன்ற விரிவான பிளேபேக் செயல்பாடுத் தகவல்கள் இதில் அடங்கும். தகவல்களை Apple TV செயலி எப்படிச் சேகரிக்கிறது மற்றும் அதை எப்படிப் பயன்படுத்துகிறது என்பதைப் பற்றி மேலும் அறிய www.apple.com/in/legal/privacy/data/en/apple-tv-app என்ற தளத்தைப் பார்வையிடுங்கள்.
சிறார் சுயவிவரங்களுக்கு Apple TV செயலியில் அந்தச் சுயவிவரத்தின் பயனருக்கு அவரது வயதுக்கு ஏற்ற அனுபவத்தை வழங்க, சிறார் சுயவிவரத்துடன் தொடர்புடைய நிரந்தரமான அடையாளத் தகவலைச் சேகரிப்போம். அடையாளத் தகவல் மற்றும் சிறார் சுயவிவரத்தின் செயல்பாட்டுத் தரவை (எடுத்துக்காட்டாக இதுவரை தேடியவை மற்றும் பார்த்தவை) அந்தச் சுயவிவரத்தின் பயனருக்கு Apple TV செயலியை வழங்குதல், சுயவிவரங்கள் அம்சம் மற்றும் Apple TV செயலியை மேம்படுத்துதல், மோசடி மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவோம். அடையாளத் தகவலும் அதனுடன் தொடர்புடைய தகவல்களும் சம்பந்தமில்லாத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படவோ வெளியிடப்படவோ இல்லை என்பதை உறுதிசெய்ய Apple தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும்.
நிர்வகிக்கும் சுயவிவரத்தின் ஒப்புதலுடன், அமைப்புகளில் ஒரு சுயவிவரத்தை Apple கணக்கிற்கு மேம்படுத்த முடியும். tvOSஇல், அமைப்புகள் > சுயவிவரங்கள் மற்றும் கணக்குகள் என்பதற்குச் சென்று, சுயவிவரத்தைத் தேர்ந்தெடுத்து, “Apple கணக்கிற்கு மேம்படுத்து” என்பதைத் தேர்ந்தெடுத்து, அதிலுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும். ஒரு சுயவிவரம் மேம்படுத்தப்படும்போது, அந்தச் சுயவிவரம் பார்த்தவை பற்றிய தகவல்களும், இதுவரை பார்த்தவையுடன் தொடர்புடைய விவரங்களும் புதிய Apple கணக்கிற்கு மாற்றப்படும், மேலும் நிர்வகிக்கும் சுயவிவரத்துடன் இனி தொடர்புபடுத்தப்படாது. இருப்பினும், ஒரு சுயவிவரம் மேம்படுத்தப்படும்போது, வாங்கியவை, சந்தாக்கள், வாடகைக்கு எடுத்தவை ஆகிய அனைத்தும் நிர்வகிக்கும் சுயவிவரத்துடனே இணைந்திருக்கும், அவை சுயவிவரத்தின் புதிய Apple கணக்கிற்கு மாற்றப்படாது அல்லது அதனுடன் இணைக்கப்படாது. அமைப்புகளில் எப்போது வேண்டுமானாலும், நிர்வகிக்கும் சுயவிவரம் மூலமும் ஒரு சுயவிவரத்தை நீக்கலாம். tvOSஇல், அமைப்புகள் > சுயவிவரங்கள் மற்றும் கணக்குகள் என்பதற்குச் சென்று, சுயவிவரத்தைத் தேர்ந்தெடுத்து, “சுயவிவரத்தை நீக்கு” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். நீக்கப்பட்ட பிறகு, நிர்வகிக்கும் சுயவிவரத்தின் Apple கணக்கில் சுயவிவரமும் இதுவரை பார்த்தவையும் கிடைக்காது.
iMessage, FaceTime மற்றும் iCloud
உங்கள் iPhoneஇல் Apple கணக்கு மூலம் உள்நுழையும்போது iMessage, FaceTime, iCloud மற்றும் பிற Apple சேவைகளில் தானாகவே உள்நுழைவீர்கள். உங்கள் சாதனத்தில் உள்ள ஃபோன் எண் சரிபார்க்கப்பட்டு உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்படும். நீங்கள் தொடர்புகொள்ளும் அல்லது தரவுகளைப் பகிரும் நபர்களுக்கு உங்கள் Apple கணக்கு அல்லது ஃபோன் எண்கள் காட்டப்படும், உங்கள் Apple கணக்கு மற்றும் கணக்கில் உள்ள மின்னஞ்சல் முகவரிகள் அல்லது ஃபோன் எண்களைப் பயன்படுத்தி அவர்கள் உங்களைத் தொடர்புகொள்ள முடியும். அமைப்புகள் > [உங்கள் பெயர்] > “தனிப்பட்ட தகவல்” என்பதற்குச் சென்று அவர்கள் உங்களைத் தொடர்புகொள்ளும் விதத்தை நீங்கள் தேர்வுசெய்யலாம். நீங்கள் அமைப்புகள் > மெசேஜஸ் என்பதற்குச் சென்று “iMessage மற்றும் FaceTime & தனியுரிமை பற்றி” என்பதைத் தட்டி iMessage, FaceTime மற்றும் தனியுரிமை பற்றி மேலும் அறியலாம்.
iTunes, App Store மற்றும் Music
உங்கள் iPhoneஇல் உங்கள் Apple கணக்கு மூலம் உள்நுழையும்போது, iTunes Store, App Store, Apple Music ஆகியவற்றில் தானாகவே உள்நுழைவீர்கள், இதன்மூலம் நீங்கள் வாங்குதல்களை மேற்கொள்ளலாம் அல்லது எளிதாகவும் விரைவாகவும் Apple Musicஐப் பயன்படுத்தத் தொடங்கலாம். உங்கள் வாங்குதல்கள் எங்கள் சிஸ்டத்தில் பதிவுசெய்யப்படும், இதன்மூலம் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அவற்றை மீண்டும் பதிவிறக்க முடியும். நீங்கள் Apple Musicஐப் பயன்படுத்தினால், நீங்கள் இதுவரை கேட்டவை தக்கவைக்கப்படுவதுடன் உங்களுக்குத் தனிப்பட்ட பரிந்துரைகளை வழங்கவும் அது பயன்படுத்தப்படும். Apple Music அமைப்புகளுக்குச் சென்று, நீங்கள் இதுவரை கேட்டவற்றைப் பகிராமல் இருக்க நீங்கள் தேர்வுசெய்யலாம்.
உங்கள் வட்டாரத்தில் iTunes Match கிடைக்கும் பட்சத்தில் அதை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் எனில் மீடியா குறித்த தகவல்களை உங்கள் iTunes லைப்ரரியில் இருந்து iCloud சேகரித்து, iTunes Storeஇல் தற்போது கிடைக்கக்கூடிய பாடல்களை மீடியாவுடன் பொருத்தும் அல்லது பொருத்த முடியாத பாடல்களைப் பதிவேற்றும். இதற்குப் பிறகு உங்களிடமுள்ள தகுதிபெறும் சாதனங்களால் அந்தப் பாடல்களை அணுக முடியும்.
தானாக உள்நுழைதல்
நீங்கள் அனுமதி வழங்கினால், Apple கணக்கைப் பயன்படுத்தி நீங்கள் உள்நுழைந்திருக்கும் iPhone, iPad, Apple TV போன்ற அனைத்துச் சாதனங்களிலும் நீங்கள் தொடர்புகொள்ளக்கூடிய ஒரு சில மூன்றாம் தரப்புச் செயலிகளில் Apple உங்களைத் தானாக உள்நுழையச் செய்ய முடியும். உங்கள் சாதனங்கள் அனைத்திலும் உள்நுழைவதற்கு உதவியாக, நீங்கள் தொடர்புகொள்ளக்கூடிய, உங்கள் Apple கணக்குடன் தொடர்புடைய மூன்றாம் தரப்புச் செயலிகள் வழங்கியிருக்கும் உள்நுழைவு டோக்கனை Apple சேமிக்கும். தானாக உள்நுழைவதற்கான இந்த அம்சத்தை Apple கணக்கு அமைப்புகளில் நீங்கள் தொடர்புகொள்ளக்கூடிய ஒவ்வொரு மூன்றாம் தரப்புச் செயலிக்கும் நிர்வகிக்கலாம். iOS அல்லது iPadOS சாதனத்தில், அமைப்புகள் > [உங்கள் பெயர்] > மீடியா & வாங்குதல்கள் > இணைக்கப்பட்ட கணக்குகள் என்பதற்குச் செல்லவும்.
கூட்டாளர்கள் வழங்கும் Apple சந்தாக்கள்
உங்கள் மொபைல் நெட்வொர்க் வழங்குநரோ மற்றொரு Apple கூட்டாளரோ Apple One, Apple Music, Apple TV போன்ற Apple சேவைகளுக்கான சந்தாக்களையும் கட்டணமில்லாப் பயன்பாடுகளையும் வழங்கினால், உங்கள் ஃபோன் எண் அல்லது தனித்துவமான கணக்கு அடையாளத் தகவலையும், சில சமயங்களில் கூட்டாளரால் பகிரப்படும் Apple சாதனத்தின் வரிசை எண்ணையும் கட்டணமில்லாப் பயன்பாடு அல்லது சந்தாவை அடையாளம் காண்பதற்கும், உள்நுழையும்போது உங்கள் கணக்கைச் சரிபார்ப்பதற்கும், Apple சந்தா அல்லது கட்டணமில்லாப் பயன்பாட்டை உங்கள் Apple கணக்குடன் இணைப்பதற்கும் Apple பயன்படுத்தும். கட்டணமில்லாப் பயன்பாடு அல்லது சந்தாவைச் செயல்படுத்தியுள்ளீர்கள் என்பதை மொபைல் நெட்வொர்க் வழங்குநர் அல்லது கூட்டாளரிடம் தெரிவிப்பதற்கும் நாங்கள் ஃபோன் எண் அல்லது தனித்துவமான கணக்கு அடையாளத் தகவல்களைப் பயன்படுத்துவோம்.
பேமெண்ட் முறைகள், கிஃப்ட் கார்டுகள் மற்றும் Apple கணக்கு இருப்புத் தொகையில் நிதியைச் சேர்த்தல்
App Store, iTunes, Music ஆகியவற்றுடன் மேலும் பலவற்றிலிருந்து வாங்க வேண்டுமெனில், உங்கள் Apple கணக்குடன் தகுதிபெறும் ஒரு பேமெண்ட் முறை சேர்க்கப்பட வேண்டும். iOSஇல் பேமெண்ட் முறையைச் சேர்க்க, அமைப்புகள் > [உங்கள் பெயர்] > பேமெண்ட் & ஷிப்பிங் என்பதற்குச் சென்று, “பேமெண்ட் முறையைச் சேர்” என்பதைத் தட்டி, தொடர்புடைய பேமெண்ட் விவரங்களைச் சேர்க்கவும். உங்கள் தகவல்களை நேரடியாக உள்ளிடுவதன் மூலமோ உங்கள் பேமெண்ட் கார்டைப் படமெடுப்பதன் மூலமோ பேமெண்ட் விவரங்களை நீங்கள் சேர்க்கலாம். பேமெண்ட் கார்டைப் படமெடுப்பதன் மூலம் பேமெண்ட் விவரங்களைச் சேர்க்க நீங்கள் தேர்வுசெய்தால், உங்கள் சாதனம் தொடர்புடைய தகவல்களைப் படத்தில் இருந்து எடுத்து தேவையான புலங்களில் நிரப்பும். இந்தப் படத்தை Appleஆல் பார்க்கவோ சேமிக்கவோ முடியாது. புதிய பேமெண்ட் கார்டைச் சேர்க்கும்போது, அது வேறொரு Apple கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதா என Apple சரிபார்க்கும். அது இணைக்கப்பட்டிருந்தால், புதிய Apple கணக்கில் அந்த கார்டு இணைக்கப்பட்டுள்ளது என்ற தகவலை ஏற்கெனவே பதிவுசெய்யப்பட்டுள்ள அந்த பேமெண்ட் கார்டை வைத்திருக்கும் Apple கணக்கு உரிமையாளருக்கு Apple தெரிவிக்கலாம். இந்த அறிவிப்பின் ஒரு பகுதியாக உங்கள் தனிப்பட்ட தகவல்களும் Apple கணக்குத் தகவல்களும் பகிரப்படாது. நீங்கள் வயது வந்தோர் என்பதை உறுதிசெய்ய வேண்டிய நாடு அல்லது வட்டாரத்தில் நீங்கள் இருந்தால், இந்த வயது உறுதிப்படுத்தல் தேவைப்படும் ஒரு கட்டண முறையை நீங்கள் சேர்த்தாலோ ஏற்கெனவே சேர்த்திருந்தாலோ உங்கள் Apple கணக்கு வயது வந்தோருக்கான கணக்குதானா என்பதை அடையாளம் காண அந்தக் கட்டண முறையை நாங்கள் பயன்படுத்துவோம்.
பொருட்களை வாங்கும்போது உங்களுக்கு உதவவும், சட்டத்துடன் இணங்கவும், மோசடியைத் தடுக்கவும், நீங்கள் வழங்கும் பேமெண்ட் விவரங்களை (கணக்கு எண், காலாவதித் தேதி உட்பட) Apple சேகரிக்கும், சேமிக்கும் மற்றும் பரிமாற்றும். சட்டப்படி தேவைப்படும் இடங்களில், உங்கள் பரிவர்த்தனையைச் செயலாக்கவும் சட்டத்திற்கு இணங்கவும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாளத் தகவல் போன்ற கூடுதல் தனிப்பட்ட தகவல்களை Apple அல்லது எங்கள் பேமெண்ட் கூட்டாளர்கள் (எடுத்துக்காட்டாக, வங்கிகள் அல்லது பேமெண்ட்களைச் செயலாக்குவதில் சம்பந்தப்பட்ட பிற நிறுவனங்கள்) சேகரிக்கவும், சேமிக்கவும், பரிமாற்றவும் கூடும். நீங்கள் Appleஇடம் பில்லிங் மற்றும் ஷிப்பிங் முகவரியையும் வழங்க வேண்டியிருக்கும். அவை மார்க்கெட்டிங் மற்றும் பகுப்பாய்வு நோக்கங்களுக்காகவும், சட்டத்துடன் இணங்கவும், மோசடியைத் தடுப்பதற்கும் பயன்படுத்தப்படலாம்.
நீங்கள் பேமெண்ட் கார்டைப் பயன்படுத்தும்போது எதிர்கால வாங்குதல்கள், தொடர் பரிவர்த்தனைகள் அல்லது நீங்கள் அங்கீகரிக்கும் பிற பயன்பாடுகளுக்காக Apple உங்கள் கார்டு எண்ணையும் பில்லிங் தகவல்களையும் தக்கவைத்து தானாகப் புதுப்பிக்கலாம். Apple இந்தத் தகவல்களை உங்கள் நிதி நிறுவனம் அல்லது பேமெண்ட் நெட்வொர்க்கிலிருந்து பெற்று மோசடித் தடுப்பு மற்றும் சரிபார்ப்புக்காகப் பயன்படுத்தலாம்.
Apple Pay செயல்படுத்தப்பட்டிருந்தால், உங்கள் Apple கணக்கில் பதிவுசெய்துள்ள Apple Pay பேமெண்ட் முறைகள் ஏதேனும் பேமெண்ட் முறையாகச் சேர்ப்பதற்குத் தகுதிபெறுகிறதா என்பதையும் Apple மதிப்பாய்வு செய்யும். அந்த பேமெண்ட் முறைகள் “வாலெட்டில் உள்ளவை” என்பதன் கீழ் காட்டப்படும். உங்கள் Apple கணக்கைப் பயன்படுத்தி ஒரு பரிவர்த்தனையை மேற்கொள்ளும்போது, பதிவுசெய்துள்ள Apple கணக்கு பேமெண்ட் முறைகள் ஏதேனும் Apple Pay உடன் பயன்படுத்தத் தகுதிபெறுகிறதா என்பதையும் Apple மதிப்பாய்வு செய்யும். தகுதிபெறும் பட்சத்தில், உங்கள் பேமெண்ட் தகவல்களைப் பாதுகாக்கும் வகையில் Apple அந்த பேமெண்ட் முறைக்கு Apple Payஐச் செயல்படுத்தலாம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அமைப்புகள் > [உங்கள் பெயர்] > பேமெண்ட் & ஷிப்பிங் என்பதற்குச் சென்று உங்கள் பேமெண்ட் முறைகளை மாற்றிக்கொள்ளலாம்.
உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள பேமெண்ட் முறையைப் பயன்படுத்தி நீங்கள் ஒரு Apple Gift Cardஐ வாங்கலாம். பிறகு பெறுநரின் மின்னஞ்சல் முகவரி, உங்கள் பெயர், கிஃப்ட் கார்டு தொகை ஆகியவற்றை Appleக்கு வழங்குவதன் மூலம் கிஃப்ட் கார்டை அவருடன் நீங்கள் பகிரலாம். வேண்டுமெனில் நீங்கள் ஒரு மெசேஜையும் சேர்க்கலாம். சட்டத்துடன் இணக்கமாக இருக்கவும் மோசடியைத் தடுக்கவும், கிஃப்ட் கார்டுகளை விற்கும்போதும் ரிடீம் செய்யும்போதும் பெறுநர் தகவல்களை Apple பயன்படுத்தும்.
உங்கள் Apple கணக்கு இருப்புத் தொகையில் கிஃப்ட் கார்டுக்கான மதிப்பைச் சேர்ப்பதன் மூலமும் நீங்கள் Apple Gift Cardஐ ரிடீம் செய்யலாம். நீங்கள் Apple Gift Cardஐ ரிடீம் செய்யும்போது, கிஃப்ட் கார்டு பற்றிய தகவல்கள் உங்கள் Apple கணக்கு இருப்புத் தொகையுடன் இணைக்கப்படும். அவை சட்டத்துடன் இணக்கமாக இருப்பதற்கும் மோசடியைத் தடுப்பதற்கும் Appleஆல் பயன்படுத்தப்படலாம். ரிடீம் செய்யும்போது உங்களுக்குக் கிடைக்கும் அனுபவத்தையும் Appleஇடம் இருந்து நீங்கள் பெறும் தகவல் தொடர்புகளையும் பிரத்தியேகமாக்க, நீங்கள் ரிடீம் செய்த கிஃப்ட் கார்டுகளின் எண்ணிக்கை போன்று கிஃப்ட் கார்டை ரிடீம் செய்வது பற்றிய சில தகவல்களும் பயன்படுத்தப்படக்கூடும். பிரத்தியேக அனுபவத்தை வழங்க கிஃப்ட் கார்டு தகவல்களைப் பயன்படுத்துவதற்கு வழங்கிய ஒப்புதலை நீக்க விரும்பினால் iTunes Storeக்குச் சென்று, கீழ் பகுதிக்கு ஸ்க்ரால் செய்து, Apple கணக்கைத் தட்டி அதைப் பார்வையிட்ட பிறகு “பிரத்தியேகப் பரிந்துரைகள்” என்பதை ஆஃப் செய்ய தட்டவும்.
பதிவுசெய்துள்ள உங்கள் பேமெண்ட் முறையைப் பயன்படுத்தி உங்கள் Apple கணக்கு இருப்புத் தொகையில் நீங்கள் நேரடியாக நிதியைச் சேர்க்கலாம். உங்கள் Apple கணக்கு இருப்புத் தொகை நீங்கள் நிதியைச் சேர்க்கும்போது, தொடர்ச்சியான முறையில் சேர்க்க வேண்டுமெனில் நீங்கள் தொகை மற்றும் கால இடைவெளிக்கான தானியங்கு விருப்பத்தைப் பயன்படுத்தி அமைத்துக் கொள்ளலாம். தானியங்கு நிதிச் சேர்ப்பு முறையை அமைக்க, நீங்கள் Appleஇடம் இருந்து உங்கள் சாதனத்தில் அல்லது மின்னஞ்சல் மூலம் உங்கள் பேலன்ஸ் அல்லது தொடர் நிதிச் சேர்ப்பு முறை குறித்து தகவல் தொடர்புகளைப் பெறுவீர்கள். எடுத்துக்காட்டாக, உறுதிசெய்தல் அறிக்கைகள், ரசீதுகள், பதிவுசெய்த பிறகு உங்களுக்கான நினைவூட்டல்கள் போன்றவை. Apple கணக்கு அமைப்புகளில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தானியங்கு நிதிச் சேர்ப்பு முறையை மாற்றலாம் அல்லது நிறுத்தலாம்.
ஒரு கிஃப்ட் கார்டை ரிடீம் செய்த பிறகு அல்லது உங்கள் Apple கணக்கு இருப்புத் தொகையில் தொகையைச் சேர்த்த பிறகு, புதுப்பிக்கப்பட்ட உங்கள் Apple கணக்கு இருப்புத் தொகை வாலெட்டில் காட்டப்படும். இதன் மூலம் Apple Store வாங்குதல்களுக்கு உங்கள் Apple கணக்கு இருப்புத் தொகையை நீங்கள் எளிதில் பயன்படுத்தலாம்.
பேமெண்ட் முறைகள், கிஃப்ட் கார்டுகள், உங்கள் Apple கணக்கு இருப்புத் தொகையில் தொகையைச் சேர்த்தல் போன்ற பயன்பாடுகளில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த, Apple கணக்கு பேமெண்ட் அமைப்புகளை நீங்கள் பயன்படுத்தும் விதம் (நீங்கள் செய்யும் கிளிக்குகளும் தட்டுதல்களும் உட்பட) பற்றிய சில தரவுகளை Apple சேகரிக்கலாம்.
சந்தாவை நிர்வகித்தல்
Apple சாதனங்களில் உள்ள செயலிகளில் வாங்கிய Apple சேவைகள் மற்றும் மூன்றாம் தரப்புச் சேவைகளுக்கான உங்கள் சந்தாக்களை உங்கள் Apple கணக்கு அமைப்புகளில் நீங்கள் பார்க்கலாம், நிர்வகிக்கலாம். iOS சாதனத்தில், அமைப்புகள் > [உங்கள் பெயர்] > சந்தாக்கள் என்பதற்குச் செல்லவும். செயலில் உள்ள அல்லது சமீபத்தில் செயல்படுத்தப்பட்ட சந்தாவின் விவரங்களைப் பார்க்கவோ, அதை நிர்வகிக்கவோ, ரத்துசெய்யவோ, சந்தாவைத் தட்டவும். நீங்கள் iCloud குடும்பத்தில் ஓர் அங்கமாக இருந்தால், உங்கள் சந்தாவைக் குடும்பத்தினருடன் பகிர்வதையும் புதுப்பிப்பு ரசீதுக்கான விருப்பங்களையும் நீங்கள் நிர்வகிக்கலாம். உங்கள் Apple கணக்கு மூலம் நீங்கள் சந்தாவைப் பார்க்கும்போதும் நிர்வகிக்கும்போதும், Apple மூலம் டெவலப்பர்கள் உங்களுக்கு மெசேஜ்கள் அல்லது ஆஃபர்களைக் காட்ட விரும்பினால், நீங்கள் சந்தாவை வாங்கும்போது டெவலப்பர்களுக்கு வழங்கிய ரசீது குறித்த தகவல்களை அவர்களிடமிருந்து பெற்று Apple பயன்படுத்தக்கூடும். டெவலப்பரின் சார்பாக நாங்கள் காட்டும் மெசேஜ்களின் உள்ளடக்கத்தை Apple சேமிக்கவோ அதன் சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்தவோ செய்யாது. ஆனால், உங்கள் சந்தாவை நீங்கள் நிர்வகிக்கிறீர்கள் என்பதை மெசேஜ்களுக்கான கோரிக்கைகள் டெவலப்பருக்குத் தெரிவிக்கும் மற்றும் மெசேஜ் காட்டப்பட்டதா இல்லையா எனவும், அது எந்த வகையான மெசேஜ் என்ற தகவலையும் Apple சேகரிக்கக்கூடும். சந்தாவை நிர்வகித்தல் தொடர்பாக உங்கள் அனுபவத்தை மேம்படுத்த, Apple கணக்குச் சந்தா அமைப்புகளில் நீங்கள் பார்வையிடுபவை, அதில் நீங்கள் செய்யும் கிளிக்குகள், தட்டுதல்கள் போன்ற நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகள் பற்றிய தரவுகளை Apple சேகரிக்கலாம்.
பள்ளி மற்றும் வணிக நிறுவனங்கள்
உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரி Apple School Manager அல்லது Apple Business Manager நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படும் டொமைனைப் பயன்படுத்தினால், டொமைனைக் கட்டுப்படுத்துவது இந்த நிறுவனம்தான் என்பதைச் சரிபார்த்த பிறகு உங்கள் மின்னஞ்சல் முகவரியை நிறுவனத்துடன் Apple பகிரலாம். உங்கள் கணக்கைப் பணி அல்லது பள்ளிக் கணக்காக மாற்ற அனுமதிப்பதன் மூலமோ உங்கள் மின்னஞ்சலைத் திரும்பப் பெறுவதன் மூலமோ உங்கள் Apple கணக்குடன் உங்கள் மின்னஞ்சல் முகவரியை இணைப்பதை நிறுவனம் தவிர்க்கக்கூடும். உங்கள் கணக்கை மாற்ற நீங்கள் தேர்வுசெய்தால் கணக்கின் தகுதியைத் தீர்மானிக்க, உங்கள் சந்தாக்கள் மற்றும் வாங்குதல்கள், பேமெண்ட் முறைகள் மற்றும் மீதமுள்ள பேலன்ஸ், குடும்பப் பகிர்வுக் குழுவில் உங்கள் கணக்கு ஓர் அங்கமாக உள்ளதா போன்ற தகவல்கள் மூலம் கணக்கின் பல பண்புக்கூறுகளை Apple சரிபார்க்கும். உங்கள் கணக்கு தகுதிபெற்றால், உங்கள் Apple கணக்கை நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படும் பணி அல்லது பள்ளிக் கணக்காக மாற்ற நீங்கள் தேர்வுசெய்யலாம். இதன் மூலம் கணக்குடன் தொடர்புடைய அனைத்துத் தகவல்களையும் நிறுவனத்தால் அணுக முடியும். உங்கள் கணக்கு தகுதிபெறவில்லை என்றாலோ கணக்கை மாற்ற நீங்கள் தேர்வுசெய்யவில்லை என்றாலோ, உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியை நீங்கள் புதுப்பிக்க வேண்டும். உங்கள் கணக்கின் பண்புக்கூறுகள் அடங்கிய முழுப் பட்டியல், உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் புதுப்பித்தல் உட்பட உங்கள் கணக்கை மாற்றுவது குறித்த கூடுதல் தகவல்களைப் பெற, support.apple.com/102159 தளத்திற்குச் செல்லுங்கள்.
பயன்பாட்டுத் தரவு
சேவையை வழங்குவதற்கும் அதன் தரத்தை மேம்படுத்துவதற்கும் உங்கள் iCloudஇன் பயன்பாடு குறித்த தரவுகளையும் நாங்கள் சேகரிக்கிறோம். வாடிக்கையாளர்கள் ஏதேனும் சிக்கல்களை எதிர்கொண்டால் அவற்றுக்குத் தீர்வு காண, இந்தத் தரவுகளில் சில உங்கள் Apple கணக்குடன் தொடர்புப்படுத்தப்படும். சேவையை நீங்கள் எந்த நகரம் அல்லது நாட்டில் இருந்து அணுகுகிறீர்கள் என்பதைக் கண்டறிய உங்கள் IP முகவரியை நாங்கள் பயன்படுத்தக்கூடும் என்றாலும் அதை நாங்கள் தக்கவைத்துக்கொள்ள மாட்டோம்.
கணக்குப் பாதுகாப்பு
உங்கள் தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்க, Apple சிறந்த பாதுகாப்புத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. Apple கணக்கு, Apple பாதுகாப்பு அம்சங்கள், Apple கணக்கு மீட்டெடுப்புச் செயல்முறைகளின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தவும் உறுதிசெய்யவும், Apple உங்கள் Apple கணக்குடன் தொடர்புடைய சில வரையறுக்கப்பட்ட தகவல்களைச் சேகரிக்கிறது, இதில் பின்வருவன அடங்கும்:
- Apple கணக்கில் உள்நுழைதல், உங்களுக்கு ஏற்கெனவே சொந்தமான அருகிலுள்ள மற்றொரு சாதனத்தைப் பயன்படுத்தி புதிய சாதனத்தை அமைத்தல், சாதனங்களை அகற்றுதல், உங்கள் Apple கணக்கு அமைப்புகளைப் புதுப்பித்தல், உங்கள் தரவை அணுகுவதற்காகவோ மீட்டெடுப்பதற்காகவோ உங்கள் கணக்கை அங்கீகரித்தல் ஆகியவற்றை நீங்கள் செய்யும்போது, எத்தனை முறை அதை வெற்றிகரமாக முடித்தீர்கள், எத்தனை முறை சிக்கல்களை எதிர்கொண்டீர்கள் போன்ற தகவல்களையும் அதன் எண்ணிக்கையையும் பதிவுசெய்யும் நிகழ்வுகள்
- Apple கணக்குடன் தொடர்புடைய ரெகவரி தொடர்புகள் மற்றும் ரெகவரி கீக்கள் அல்லது இதுபோன்ற பாதுகாப்பு மற்றும் மீட்டெடுப்பு விவரங்களை உருவாக்குதல் மற்றும் பயன்படுத்துதலின் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையைப் பதிவு செய்யும் நிகழ்வுகள். Appleக்கு உங்கள் ரெகவரி தொடர்புகள் அல்லது ரெகவரி கீக்கள் தெரியாது, அவற்றிற்கான அணுகலும் இருக்காது
- உங்கள் சாதனத்தின் பாஸ்கோடு அல்லது பாஸ்வேர்டைப் பயன்படுத்தி உங்கள் தரவுக்கான அணுகலை மீட்டெடுப்பதன் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையைப் பதிவு செய்யும் நிகழ்வுகள். Appleக்கு உங்கள் சாதனத்தின் பாஸ்கோடு அல்லது பாஸ்வேர்டு தெரியாது, அவற்றிற்கான அணுகலும் இருக்காது
- உங்கள் கணக்கிலிருந்து சாதனங்களை அகற்றும் செயல்முறை அல்லது தோல்வியடைந்த கணக்கு மற்றும் தரவு மீட்டெடுப்பின் விளைவைத் தீர்மானிப்பதற்கான உங்கள் iCloud தரவு அனைத்தையும் மீட்டமைத்தல் மற்றும் நீக்குவதுடன் தொடர்புடைய நிகழ்வுகள்
தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்குப் பொருந்தக்கூடிய அடிப்படைச் சட்டங்கள்
பொதுவாக Apple உடனான உங்கள் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்காகவும், சேவைகளை வழங்கத் தேவைப்படும் அளவிற்கும், எங்கள் சட்டரீதியான கடமைகளுக்கு இணங்குவதற்காகவும் உங்கள் Apple கணக்கையும் மேலே விவரிக்கப்பட்டுள்ள தொடர்புடைய தகவல்களையும் நாங்கள் செயலாக்குகிறோம். ஒப்புதல் என்பது சட்டரீதியான அடிப்படையாக அமையும் இடங்களில், பொருந்தும் உள்ளூர் சட்டங்களின் அடிப்படையில் அதைப் பெற முயல்கிறோம்.
பொருந்தும் சட்டங்கள் குறிப்பிடும் இடங்களில், தனிப்பட்ட தரவின் பின்வரும் வகைகளை எங்களின் அல்லது மூன்றாம் தரப்புகளின் நியாயமான நலன்களின் நோக்கத்திற்காகத் தேவைப்படும் அளவிற்குச் செயலாக்குகிறோம், இதில் பின்வருவன பற்றிய தகவல்களும் அடங்கும்:
- உங்கள் Apple கணக்கு (உங்கள் அனைத்து Apple சேவைகளிலும் உள்நுழைய நீங்கள் பயன்படுத்தும் தகவல்களுடன் அனைத்துத் தொடர்புகள், பேமெண்ட்கள், நம்பகமான ஃபோன் எண்கள் மற்றும் பாதுகாப்புக் கேள்விகள் போன்ற பாதுகாப்பு விவரங்களும் இதில் அடங்கும்)
- நீங்கள் நிறுவும் செயலிகள் (செயலி எங்கிருந்து நிறுவப்பட்டது, அதாவது இணையதளம் அல்லது செயலி மார்க்கெட்பிளேஸ் போன்ற விவரங்களும் இதில் அடங்கும்)
- உங்கள் சாதனம் இருக்கக்கூடிய நாடு அல்லது வட்டாரத்தின் அடிப்படையில், சட்டப்பூர்வமாகத் தேவைப்படும் சில சேவைகளையும் அம்சங்களையும் சாதனம் பெறத் தகுதிபெறுகிறதா என்பதைத் தீர்மானித்தல்
- உங்கள் சாதனங்கள் (உங்கள் சாதனத்தின் பெயர், வரிசை எண் மற்றும் பிற வன்பொருள் அடையாளத் தகவல்களும் இதில் அடங்கும்)
- iCloud, iTunes Store, App Store, Apple Music, Apple One போன்ற பல்வேறு Apple சேவைகளை நீங்கள் பயன்படுத்துதல் மற்றும் அவற்றுக்கான சந்தாக்கள்
- பேமெண்ட் விவரங்கள் (கணக்கு எண்கள் மற்றும் காலாவதித் தேதிகள், பில்லிங் மற்றும் ஷிப்பிங் முகவரிகள் மற்றும் கிஃப்ட் கார்டை ரிடீம் செய்வது குறித்த தகவல்களும் இதில் அடங்கும்)
நியாயமான நலன்கள் என்பதில் இவையும் அடங்கும்:
- உங்களுக்கும் பிறருக்கும் சிறப்பான சேவையையும் உதவிச் சேவையையும் வழங்குதல் மற்றும் கணக்கியல், அறிக்கையிடல் மற்றும் பகுப்பாய்வு நோக்கங்களைப் பூர்த்திசெய்தல்
- சட்டப்பூர்வமாகத் தேவைப்படும் அம்சங்கள் மற்றும் சேவைகளின் கிடைக்கும்தன்மையைக் கண்டறிதலும் அவற்றைச் செயல்படுத்துதலும்
- உங்கள் தரவுகளைப் பயன்படுத்தி மின்னஞ்சல் மூலமும் Push அறிவிப்புகள் மூலமும் நீங்கள் விரும்பக்கூடிய சலுகைகள் பற்றிய தகவல்களை உங்களுக்கு அனுப்புதல்
- சலுகைகளுக்கான தகுதியைச் சரிபார்த்தல்
- மோசடி மற்றும் பிற தீங்கிழைக்கும் செயல்பாட்டைத் தடுத்தல்
தக்கவைத்தல்
சந்தா போன்றவற்றை நீங்கள் வாங்கும்போது, உங்கள் வாங்குதல் தொடர்பான தனிப்பட்ட தரவை நிதி அறிக்கை தொடர்பான பொருந்தும் உள்ளூர் சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கால அளவிற்கு நாங்கள் தக்கவைக்கிறோம், இது வட்டாரத்தைப் பொறுத்து மாறுபடும். பெரும்பான்மையான வாடிக்கையாளர்களுக்குக் குறைந்தபட்சம் 10 வருடம் தக்கவைத்தல் காலம் தேவையாக இருக்கிறது, ஆனால் சீனா போன்ற சில வட்டாரங்களில் இந்தக் காலம் 30 வருடங்களாக இருக்கலாம். iCloud தொடர்பான சேவைகளை நீங்கள் கையாளும் விதம் பற்றிய பதிவுகளையும் நாங்கள் தக்கவைக்கக்கூடும். இந்தப் பதிவுகளைச் சட்டப்படி அல்லது சட்டரீதியான செயல்முறைகளின்படி நீண்டகாலத்திற்குச் சேமித்து வைக்கும் அவசியம் ஏற்படாத வரையில், இவை பொதுவாக 30 நாட்களுக்குச் சேமிக்கப்படும், ஆனால் தொகுக்கப்பட்ட வடிவத்தில் மூன்று ஆண்டுகள் வரை சேமிக்கப்பட்டிருக்கலாம்.
நீங்கள் உங்கள் Apple கணக்கை நீக்கினால், மேலே விவரிக்கப்பட்டபடி சட்டரீதியான கடமைகளுக்கு இணங்குவதற்காகவும் கணக்குப் பாதுகாப்பின் நியாயமான நலன்களுக்குத் தேவைப்படும் வரையிலும் நீக்கப்பட்ட கணக்கின் பதிவை நாங்கள் தக்கவைக்கிறோம். புதிய கணக்கைப் பின்னர் உருவாக்குவதற்கு நீங்கள் தேர்வுசெய்தால், நீக்குவதற்காக எங்களிடம் நீங்கள் கேட்ட கணக்குடன் தொடர்பில்லாத மின்னஞ்சல் முகவரியை நீங்கள் பயன்படுத்த வேண்டும். கணக்கை உருவாக்குவதற்காக ஒரு ஃபோன் எண்ணை நீங்கள் பயன்படுத்தியிருந்தால், அதே காரணங்களுக்காக மற்றொரு கணக்கை உருவாக்க அந்த எண்ணை நீங்கள் பயன்படுத்த முடியாது. கணக்கிற்கான முதன்மை மின்னஞ்சல் முகவரி அல்லது ஃபோன் எண்ணைக் கணக்கை உருவாக்குவதற்காக நீங்கள் பயன்படுத்தியிருந்தால் அதை உங்களால் அகற்ற முடியாது. நீதிமன்றத்தின் தீர்ப்பு அல்லது அதற்கு நிகரான அங்கீகரிக்கப்பட்ட செயலாக்கத்திற்கு இணங்குவதற்காகவும் தகவல்களை நாங்கள் தக்கவைக்க வேண்டியிருக்கலாம்.
கணக்கை நாங்கள் நீக்கும்போது உங்கள் கணக்குடன் தொடர்புடைய அனைத்துத் தனிப்பட்ட தரவையும் நீக்குவதற்கான சிறந்த முயற்சிகளை மேற்கொள்வோம். உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் நீக்கினால், உங்களைப் பற்றிய குறிப்பிட்ட சில தனிப்பட்ட தரவுகளை நிரந்தரமாக மீட்டெடுக்க முடியாத வகையில் ரெண்டர் செய்வதுடன் குறிப்பிட்ட சில தனிப்பட்ட தரவுகளின் அடையாளத்தையும் நீக்குவோம்.
Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.
2026-05-11