Apple Arcade & தனியுரிமை

உங்கள் அனுபவத்தைப் பிரத்தியேகமாக்க, Apple மார்க்கெட்டிங் உள்ளிட்ட அறிவிப்புகளை உங்களுக்கு அனுப்ப, ஸ்டோர் மற்றும் Apple Arcadeஐ மேம்படுத்தி வழங்க மற்றும் மோசடியைத் தடுக்க உங்கள் தேடல்கள், உலாவல், வாங்குதல்கள், சாதனத்தின் நம்பகத்தன்மை மதிப்பெண், Apple Arcade கேமிங் செயல்பாடுகள் ஆகியவை பயன்படுத்தப்படலாம். சேவைச் சலுகைகளுக்கான தகுதியைச் சரிபார்க்க உங்கள் சாதன வரிசை எண் பயன்படுத்தப்படலாம்.
 

Apple Arcade உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Privacy Icon

  • நீங்கள் வாங்கும், பதிவிறக்கும் அல்லது புதுப்பிக்க விரும்பும் உள்ளடக்கத்தை உங்களுக்கு வழங்குவதற்காக நாங்கள் உங்கள் தனிப்பட்ட தரவைச் சேகரிக்கிறோம்.
  • App Store, Apple News மற்றும் பங்குகள் செயலிகளில் காட்டப்படும் விளம்பரங்கள் உங்களுக்குப் பொருத்தமானதாக இருப்பதை உறுதிப்படுத்த App Store மற்றும் Arcadeஇல் உங்கள் கணக்கு, வாங்குதல்கள் மற்றும் பதிவிறக்கங்கள் பற்றிய தகவல்களையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்த விளம்பரப்படுத்தல் தொடர்பாக கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி தேர்வுகளைக் கொண்டுள்ளீர்கள்.
  • உங்களுக்கு ஏற்ற அம்சங்கள் மற்றும் பிரத்தியேகப் பரிந்துரைகளை வழங்க App Store மற்றும் Arcadeஇல் உங்கள் கேமிங் செயல்பாடு, வாங்குதல்கள், பதிவிறக்கங்கள் மற்றும் பிற செயல்பாடுகளைப் பற்றிய தகவல்களை நாங்கள் பயன்படுத்துகிறோம். கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி இந்த நோக்கத்திற்காக இந்தத் தரவு பயன்படுத்தப்படுவதில் இருந்து நீங்கள் விலகிக் கொள்ளலாம்.
  • மோசடியை அடையாளம் காணவும் தடுக்கவும் உதவுவதற்காக, நீங்கள் சந்தாச் சேர முயலும்போது உங்கள் சாதனத்தை நீங்கள் பயன்படுத்தும் விதத்தின் அடிப்படையில் சாதனத்தின் நம்பகத்தன்மை மதிப்பெண் கணக்கிடப்படும், பயன்படுத்தும் விதம் என்பதில் ஃபோன் அழைப்புகளின் தோராயமான எண்ணிக்கை அல்லது நீங்கள் அனுப்பும் மற்றும் பெறும் மின்னஞ்சல்களின் தோராயமான எண்ணிக்கை அடங்கும். உங்கள் சாதனத்தில் உள்ள உண்மை மதிப்புகளை Apple அறிந்துகொள்ளாத வகையில் இந்தக் கணக்கீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்கள் குறிப்பிட்ட காலத்திற்கு எங்கள் சர்வரில் சேமிக்கப்பட்டிருக்கும்.
  • App Store மற்றும் Arcadeஐ மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிவதற்காக App Storeஇல் உங்கள் உலாவல், வாங்குதல்கள், தேடல்கள் மற்றும் பதிவிறக்கங்கள் பற்றிய தகவல்களை நாங்கள் பயன்படுத்துகிறோம். நீங்கள் ஒரு ஸ்டோரில் உள்நுழைந்திருக்கும்போது IP முகவரி, ரேண்டமான தனித்துவ அடையாளத் தகவல் (தேவைப்படும் இடங்களில்), Apple கணக்கு ஆகியவற்றுடன் இந்தப் பதிவுகள் சேமிக்கப்படுகின்றன.

Apple Arcade அடிப்படையிலேயே உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் அனுபவத்தைச் சிறப்பாக்கத் தேவைப்படும் தரவை மட்டும் சேகரிக்க நாங்கள் கடினமாக முயல்கிறோம். நாங்கள் தரவைச் சேகரிக்கும்போது எதைச் சேகரிக்கிறோம், அது எங்களுக்கு ஏன் தேவைப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்வது முக்கியம் என நினைக்கிறோம், இதன்மூலம் தகவலறிந்த முடிவுகளை நீங்கள் எடுக்கலாம்.

Apple Arcadeஇல் சேவைகளை வழங்குதல்

Apple Arcadeஇல் சேவைகள் மற்றும் அம்சங்களை வழங்க Apple உங்கள் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துகிறது. உங்கள் கணக்கு, பேமெண்ட் தகவல் (அமைப்புகள் அல்லது சிஸ்டம் அமைப்புகளில் இதை அணுகலாம், மாற்றலாம்), App Storeஇல் இதுவரை நீங்கள் வாங்கியவை போன்ற தகவல்கள் இதில் அடங்கும்.

உங்கள் வசதிக்காக, உங்கள் சாதனங்கள் அனைத்திலும் உங்கள் அனுபவத்தைப் புதுப்பித்த நிலையில் வைத்திருக்க iCloudஐ Apple Arcade பயன்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, உங்கள் சாதனங்கள் அனைத்திலும் உங்கள் கேமிங் செயல்பாட்டை ஒத்திசைப்பதற்காக iCloudஐ Apple Arcade பயன்படுத்தும். உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில் உள்ள அமைப்புகள் அல்லது Macஇல் சிஸ்டம் அமைப்புகளில் உள்ள “Arcade கேம்களுக்கான iCloud” அம்சத்தை ஆஃப் செய்து இதை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் முடக்கலாம். கேம் டெவலப்பர் iCloud பேக்‑அப்பைப் பயன்படுத்தும்பட்சத்தில், நீங்கள் iCloud பேக்‑அப்பைச் செயல்படுத்தி இருந்தால், உங்கள் கேம் செயல்பாடு iCloudஇல் தொடர்ந்து பேக்‑அப் செய்யப்படும்.

Game Centerஇல் நீங்கள் உள்நுழையும்போது, ஸ்கோர்கள் மற்றும் சாதனைகள், சவால்கள், மல்டிபிளேயர் கேம்பிளே உள்ளிட்ட உங்கள் கேம்பிளே செயல்பாடுகளை Apple பெறும். கூடுதலாக, உங்கள் Arcade சந்தாவின் நிலை அனைத்து Game Center பயனர்களுக்கும் தெரியும் வகையில் இருக்கும். Game Center மற்றும் தனியுரிமை பற்றி மேலும் அறிய www.apple.com/in/legal/privacy/data/en/game-center இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.

Apple Arcadeஐ மேம்படுத்துதல் மற்றும் பிரத்தியேகமாக்குதல்

நீங்கள் ஒவ்வொரு வாரமும் விளையாடும் கேம்களைப் பற்றிய குறிப்பிட்ட தகவல்களை உங்கள் Apple கணக்குடன் இணைத்து Apple சேகரிக்கிறது. உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்படாத, Apple Arcade App Clipsஇல் கேம்பிளே உட்பட உங்கள் கேம்பிளே செயல்பாட்டைப் பற்றிய தனிப்பட்டவை அல்லாத சில தரவுகளையும் நாங்கள் சேகரிக்கிறோம். உங்களுக்கும் பிறருக்கும் Apple Arcade மற்றும் கேமிங் தொடர்பான பிற Apple சேவைகளை மேம்படுத்தி உகந்ததாக்க மற்றும் உங்களுக்கு மிகப் பொருத்தமான உள்ளடக்கத்தைக் கண்டறிய உங்களுக்கு உதவுவதற்காக Apple Arcade, App Store மற்றும் கேமிங் தொடர்பான பிற Apple சேவைகளில் உங்கள் அனுபவத்தைப் பிரத்தியேகமாக்க நாங்கள் சேகரிக்கும் தகவல்களைப் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, இதற்கு முன்பு நீங்கள் விளையாடிய அல்லது App Storeஇல் வாங்கிய கேம்களின் அடிப்படையில் நீங்கள் விரும்பக்கூடும் என நாங்கள் கருதும் கேம்களை உங்களுக்குப் பரிந்துரைக்கிறோம். App Store அமைப்புகளில் உங்கள் Apple கணக்குக்கான பிரத்தியேகப் பரிந்துரைகளை ஆஃப் செய்வதன் மூலம் பிரத்தியேக அம்சங்களை முடக்கலாம்.

Apple Arcade மற்றும் Apple Games

நீங்கள் Apple Games செயலியைப் பயன்படுத்தினால், “Apple Arcadeஐ மேம்படுத்துதல் மற்றும் தனிப்பயனாக்குதல்” பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளபடி Apple Arcadeஐ நீங்கள் எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பற்றிய மேற்கூறிய தகவல்கள் Apple Games செயலியில் உங்கள் அனுபவத்தைத் தனிப்பயனாக்கவும், Apple Arcade மற்றும் Apple Games செயலிகளை உகந்ததாக்கவும், மேம்படுத்தவும், உங்களுடன் தகவல்களைப் பரிமாறவும் Apple Games செயலியால் பயன்படுத்தப்படும். Apple Games செயலியைப் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு www.apple.com/legal/privacy/data/en/apple-games தளத்தைப் பார்வையிடுங்கள்.

உங்களுடனான தகவல்தொடர்புகள்

Apple Arcade மற்றும் நீங்கள் விரும்பக்கூடிய பிற Apple தயாரிப்புகள், சேவைகள் மற்றும் சலுகைகள் (Apple One உட்பட) பற்றிய தகவல்களை உங்களுக்கு அனுப்ப, உங்களுக்குச் சொந்தமான Apple தயாரிப்புகள், Apple சேவைகளுக்கான உங்கள் சந்தாக்கள் போன்ற உங்கள் கணக்கு பற்றிய தகவல்களை Apple பயன்படுத்தக்கூடும். சேவைச் சலுகைகளுக்கான தகுதியைச் சரிபார்க்க உங்கள் சாதன வரிசை எண் பயன்படுத்தப்படலாம். நீங்கள் குடும்பப் பகிர்வுக் குழுவில் இருந்தால், குடும்பப் பகிர்வின் வழியாக உங்களுக்குக் கிடைக்கக்கூடிய தயாரிப்புகள், சேவைகள் மற்றும் சலுகைகள் பற்றிய தகவல்களை Apple அனுப்பக்கூடும். நீங்கள் Apple One சந்தா செலுத்தியிருந்தால், சந்தா செலுத்தியுள்ள சேவைகளின் ஒவ்வொரு அம்சங்களைப் பற்றிய மின்னஞ்சல்களையும் அறிவிப்புகளையும் நாங்கள் அனுப்பக்கூடும். App Store மற்றும் Arcadeஇல் கிடைக்கும் புதிய அம்சங்கள், உள்ளடக்கம் மற்றும் சலுகைகள் பற்றிய மின்னஞ்சல்கள் மற்றும் அறிவிப்புகளை உங்களுக்கு அனுப்ப App Store மற்றும் Arcadeஇல் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளைப் பற்றிய தகவல்களையும் Apple பயன்படுத்தக்கூடும். account.apple.com இணையதளத்திற்குச் சென்று உங்கள் மின்னஞ்சல் முன்னுரிமைகளை மாற்றலாம் மற்றும் இந்த மின்னஞ்சல்களைப் பெறுவதற்கான ஒப்புதலைத் திரும்பப் பெறலாம். உங்கள் அறிவிப்பு முன்னுரிமைகளை மாற்ற உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில், அமைப்புகள் > அறிவிப்புகள் > App Store என்பதற்குச் செல்லுங்கள். நாங்கள் அனுப்பும் அறிவிப்புகள் போன்றவற்றை நீங்கள் கையாளும் விதம் பற்றிய தகவல்களை எங்கள் சேவைகளை மேம்படுத்துவதற்காக Apple பயன்படுத்துகிறது.

மூன்றாம் தரப்பினருடன் பகிர்தல்

கேமிங் செயல்பாடு பற்றிய தொகுக்கப்பட்ட, தனிப்பட்டவை அல்லாத தரவை Apple Arcade உள்ளடக்க வழங்குநர்களுக்கு நாங்கள் வழங்குகிறோம், இதன்மூலம் தங்கள் கேம்களுடனான பிளேயர் ஈடுபாட்டை அவர்கள் மதிப்பிடலாம் மற்றும் மேம்படுத்தலாம்.

உங்கள் மொபைல் நெட்வொர்க் வழங்குநர் Apple Arcade சந்தாக்கள் மற்றும் இலவசப் பயன்பாட்டுக் காலத்தை வழங்கினால், உங்களிடம் Apple Arcade சந்தா இருக்கிறதா அல்லது மொபைல் நெட்வொர்க் வழங்குநர் மூலமாக அதற்கு நீங்கள் தகுதி பெறுகிறீர்களா என்பதைத் தீர்மானிக்க Apple உங்கள் ஃபோன் எண்ணைச் சரிபார்க்கலாம். உங்கள் மொபைல் நெட்வொர்க் வழங்குநர் அல்லது மற்றொரு Apple கூட்டாளர் மூலமாக நீங்கள் உள்நுழைந்திருந்தால், உங்கள் கணக்கை அடையாளம் காண்பதற்கும் நீங்கள் சந்தாவைச் செயல்படுத்தியதை உங்கள் மொபைல் நெட்வொர்க் வழங்குநருக்கோ பிற கூட்டாளருக்கோ தெரிவிப்பதற்கும் உங்கள் ஃபோன் எண் அல்லது கூட்டாளரால் பகிரப்பட்ட தனித்துவமான கணக்கு அடையாளத் தகவலை Apple பயன்படுத்தும். உள்நுழைவின்போது உங்கள் கணக்கைச் சரிபார்ப்பதற்காகவும் உங்கள் கணக்குடன் உங்கள் Apple Arcade சந்தாவை இணைப்பதற்காகவும் உங்கள் சந்தாவுடன் தொடர்புடைய ஃபோன் எண்ணையோ தனித்துவமான அடையாளத் தகவலையோ நாங்கள் பயன்படுத்துவோம்.

மூன்றாம் தரப்பு உள்ளடக்க வழங்குநர்களால் தரவுச் சேகரிப்பு

Arcade கேம்களை வழங்கும் உள்ளடக்க வழங்குநர்கள் உங்கள் தனிப்பட்ட தரவைச் சேகரிக்க உங்கள் அனுமதியைப் பெற வேண்டும். உங்கள் அனுமதியைப் பெறும்போது தெரிவிக்கப்பட்ட நோக்கத்திற்காக மட்டுமே உங்கள் தனிப்பட்ட தரவை உள்ளடக்க வழங்குநர்கள் பயன்படுத்தலாம். உங்கள் தரவை அவர்கள் சேகரிக்கும் மற்றும் பயன்படுத்தும் விதத்தைப் புரிந்துகொள்ள Apple Arcade உள்ளடக்க வழங்குநர் விதிமுறைகள், தனியுரிமைக் கொள்கைகள், நடைமுறைகள் ஆகியவற்றை நீங்கள் மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

விளம்பரப்படுத்தல்

பிரத்தியேகமாக்கப்பட்ட விளம்பரங்கள் அமைப்பு ஆன் செய்யப்பட்டிருந்தால், Appleஇன் விளம்பரப்படுத்தல் தளம் உங்களுக்குப் பொருத்தமான விளம்பரங்களை வழங்க உங்கள் தகவல்களைப் பயன்படுத்தக்கூடும். App Store, Apple News மற்றும் பங்குகள் செயலிகளில் காட்டப்படும் விளம்பரங்கள் பொருத்தமானதாக இருப்பதை உறுதிப்படுத்த நீங்கள் பதிவிறக்கும் Arcade செயலிகள் பற்றிய தகவல்களை நாங்கள் பயன்படுத்தக்கூடும். நீங்கள் Appleஇன் விளம்பரப்படுத்தல் தளத்தில் இருந்து உங்கள் ஆர்வங்களை இலக்கிடும் விளம்பரங்களைப் பெற விரும்பவில்லையெனில், பிரத்தியேகமாக்கப்பட்ட விளம்பரங்களை ஆஃப் செய்யலாம். பிரத்தியேகமாக்கப்பட்ட விளம்பரங்களை ஆஃப் செய்வது விளம்பரங்களை இலக்கிடுவதற்காக உங்கள் தகவல்களைப் பயன்படுத்துவதில் இருந்து Appleஐத் தடுக்கும். இது நீங்கள் பெறும் விளம்பரங்களின் எண்ணிக்கையைக் குறைக்காது, ஆனால் விளம்பரங்கள் உங்களுக்குப் பொருத்தமானதாக இருப்பது குறையக்கூடும்.

Apple விளம்பரப்படுத்தல் & தனியுரிமை பற்றி மேலும் அறிய www.apple.com/in/legal/privacy/data/en/apple-advertising இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.

App Store, Apple News மற்றும் பங்குகள் செயலிகளில் பிரத்தியேக விளம்பரங்களில் இருந்து விலகுவது எப்படி என்று அறிய support.apple.com/105131 இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.

தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்குப் பொருந்தக்கூடிய அடிப்படைச் சட்டங்கள்

பொதுவாக Apple உடனான உங்கள் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்காகவும், சேவைகளை வழங்கத் தேவைப்படும் அளவிற்கும், எங்கள் சட்டரீதியான கடமைகளுக்கு இணங்குவதற்காகவும் Apple Arcadeஇல் உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்குகிறோம். ஒப்புதல் என்பது சட்டரீதியான அடிப்படையாக அமையும் இடங்களில், பொருந்தும் உள்ளூர் சட்டங்களின் அடிப்படையில் அதைப் பெற முயல்கிறோம்.

பொருந்தும் உள்ளூர் சட்டங்கள் குறிப்பிடும் இடங்களில், தனிப்பட்ட தரவின் பின்வரும் வகைகளை எங்களின் அல்லது மூன்றாம் தரப்புகளின் நியாயமான நலன்களின் நோக்கத்திற்காகத் தேவைப்படும் அளவிற்குச் செயலாக்குகிறோம், இதில் பின்வருவன பற்றிய தகவல்களும் அடங்கும்:

  • Apple Arcadeஐ நீங்கள் பயன்படுத்துதல்
  • உங்கள் கணக்கு, இதில் Apple சேவைகளுக்கான உங்கள் சந்தாக்கள், உங்கள் வாங்குதல்கள் மற்றும் பதிவிறக்கங்கள், குடும்பப் பகிர்வுக் குழுவில் உள்ளீர்களா என்ற தகவல் ஆகியவை அடங்கும்
  • ஒவ்வொரு வாரமும் நீங்கள் விளையாடும் கேம்கள்

நியாயமான நலன்கள் என்பதில் இவையும் அடங்கும்:

  • உங்களுக்கும் பிறருக்கும் ஏற்ற வகையில் இந்தச் சேவையையும் கேமிங் தொடர்பான பிற Apple சேவைகளையும் மேம்படுத்துதல் மற்றும் உகந்ததாக்குதல்
  • உங்களுக்கு மிகவும் பொருத்தமான உள்ளடக்கத்தைக் கண்டறிய உங்களுக்கு உதவுதல்
  • Apple Arcade மற்றும் நீங்கள் விரும்பக்கூடிய தொடர்புடைய பிற Apple தயாரிப்புகள், சேவைகள் மற்றும் சலுகைகள் (Apple One உட்பட) பற்றிய தகவல்களை உங்களுக்கு அனுப்புதல்
  • உள்ளடக்க வழங்குநர்களுக்கு அறிக்கை வழங்குதல்
  • மோசடி மற்றும் பிற தீங்கிழைக்கும் செயல்பாட்டைத் தடுத்தல்

தக்கவைத்தல்

Apple Arcadeஇல் உங்கள் பரிவர்த்தனைகள், பதிவிறக்கங்கள், கேம்பிளே செயல்பாடு ஆகியவை தொடர்பான தனிப்பட்ட தரவை வணிகத் தேவை, ஒப்பந்தக் கடமை அல்லது சட்டப்பூர்வத் தேவைக்காக எங்களுக்குத் தேவைப்படும் காலம் வரை மட்டுமே தக்கவைக்கிறோம். நீங்கள் உங்கள் கணக்கை மூடிய பின்னர் அல்லது Apple Arcadeஇல் இருந்து சந்தா விலகிய பின்னரும் இதுவரையில் வாங்கிய சந்தாக்கள் போன்ற சில தகவல்கள் (உங்கள் சேமிக்கப்பட்ட கார்டு விவரங்கள் இல்லை) வணிகப் பதிவுகளாகச் சேமிக்கப்பட்டிருக்கக்கூடும். சீனா போன்ற சில வட்டாரங்களில் இந்தக் காலம் 30 ஆண்டுகளாக இருக்கலாம்.

குடும்பப் பகிர்வு

Apple Arcadeக்கு நீங்கள் சந்தாச் சேர்ந்தால், அந்தச் சந்தாவை உங்கள் குடும்பத்தின் பிற உறுப்பினர்களும் பயன்படுத்தலாம். ஸ்கிரீன் டைம் அமைப்புகளில் உள்ள “உள்ளடக்கம் & தனியுரிமைக் கட்டுப்பாடுகள்” மூலம், உங்கள் குழந்தையின் சாதனத்தில் குறிப்பிட்ட செயலிகளில் செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்தலாம் மற்றும் அம்சங்களை முடக்கலாம். iPhone, iPad, iPod touch அல்லது Apple Vision Proஇல் உள்ள அமைப்புகளில் வெளிப்படையான உள்ளடக்கம், வாங்குதல்கள் மற்றும் பதிவிறக்கங்கள், தனியுரிமை ஆகியவற்றையும் கட்டுப்படுத்தலாம். நீங்கள் Arcade சந்தாவை உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர வேண்டாம் என நினைத்தால், நீங்கள் வாங்குதல் பகிர்வை முடக்கலாம். உங்கள் iOS அல்லது iPadOS சாதனத்தில், அமைப்புகள் > [உங்கள் பெயர்] > குடும்பப் பகிர்வு > “வாங்குதல் பகிர்வு” என்பதற்குச் செல்லுங்கள். Macஇல், சிஸ்டம் அமைப்புகள் > [உங்கள் பெயர்] > குடும்பப் பகிர்வு> “வாங்குதல் பகிர்வு” என்பதற்குச் செல்லுங்கள்.

மோசடி மற்றும் பிற தீங்கிழைக்கும் செயல்பாட்டைத் தடுத்தல்

Apple Arcade மற்றும் பிற Apple செயலிகள் மற்றும் சேவைகளில் மோசடி மற்றும் பிற தீங்கிழைக்கும் செயல்பாட்டைத் தடுப்பதற்காக தனிப்பட்ட தரவைச் சேகரிக்கிறோம். இந்தத் தகவல்களில் சாதன வகை, மென்பொருள் பதிப்பு போன்ற சாதனத் தகவல்கள், இருப்பிடத் தகவல்கள் (உங்கள் இணைய இணைப்பின் IP முகவரியை உங்கள் புவியியல் வட்டாரத்துடன் பொருத்துவதன் மூலம் கிடைக்கும் தோராயமான இருப்பிடம்), இதுவரையான பதிவிறக்கங்களும் வாங்குதல்களும், தேடல்கள், Apple Arcade மற்றும் பிற செயலிகள் மற்றும் சேவைகளுடனான பிற செயல்பாடுகள் ஆகியவை அடங்கும்.

நீங்கள் சந்தாச் சேர முயலும்போது உங்கள் சாதனத்தை நீங்கள் பயன்படுத்தும் விதத்தின் அடிப்படையில் சாதனத்தின் நம்பகத்தன்மை மதிப்பெண்ணையும் நாங்கள் கணக்கிடக்கூடும், பயன்படுத்தும் விதம் என்பதில் ஃபோன் அழைப்புகளின் தோராயமான எண்ணிக்கை, நீங்கள் அனுப்பும் அல்லது பெறும் மின்னஞ்சல்கள் தோராயமான எண்ணிக்கை அடங்கும். உங்கள் சாதனத்தில் உள்ள பின்னணி மதிப்புகளை Apple அறிந்துகொள்ளாத வகையில் இந்தக் கணக்கீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண் குறிப்பிட்ட காலத்திற்கு எங்கள் சர்வரில் சேமிக்கப்பட்டிருக்கும்.

Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.

2025-12-12