Apple Books & தனியுரிமை
Apple Books உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
![]()
- App Store மற்றும் பிற Apple ஆன்லைன் ஸ்டோர்களில் நீங்கள் வாங்கும், பதிவிறக்கும் அல்லது புதுப்பிக்க விரும்பும் உள்ளடக்கத்தை உங்களுக்கு வழங்குவதற்காக நாங்கள் உங்கள் தனிப்பட்ட தரவைச் சேகரிக்கிறோம்.
- App Store, Apple News மற்றும் பங்குகள் செயலிகளில் காட்டப்படும் விளம்பரங்கள் உங்களுக்குப் பொருத்தமானதாக இருப்பதை உறுதிப்படுத்த ஸ்டோர்களில் உங்கள் கணக்கு, வாங்குதல்கள் மற்றும் பதிவிறக்கங்கள் பற்றிய தகவல்களையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்த விளம்பரப்படுத்தல் தொடர்பாக கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி தேர்வுகளைக் கொண்டுள்ளீர்கள்.
- உங்களுக்கு ஏற்ற அம்சங்கள் மற்றும் பிரத்தியேகப் பரிந்துரைகளை வழங்கவும், Apple மார்க்கெட்டிங் உள்ளிட்ட அறிவிப்புகளை உங்களுக்கு அனுப்பவும் ஸ்டோர்களில் உங்கள் வாங்குதல்கள், பதிவிறக்கங்கள் மற்றும் Apple Books செயலியில் பிற செயல்பாடுகள் பற்றிய தகவல்களை நாங்கள் பயன்படுத்துகிறோம். கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி இந்த நோக்கத்திற்காக இந்தத் தரவு பயன்படுத்தப்படுவதில் இருந்து நீங்கள் விலகிக் கொள்ளலாம். எங்கள் பயனர்களுக்கு Apple Books செயலியை மேம்படுத்துவதற்காக புத்தகங்களைப் பயனர் பயன்படுத்தும் விதம் குறித்த தனிப்பட்டவை அல்லாத தரவுகளை நாங்கள் சேகரிக்கிறோம்.
- மோசடியை அடையாளம் கண்டு தடுக்க உதவுவதற்காக, நீங்கள் வாங்க முயலும்போது உங்கள் சாதனத்தை நீங்கள் பயன்படுத்தும் விதத்தின் அடிப்படையில் சாதனத்தின் நம்பகத்தன்மை மதிப்பெண் கணக்கிடப்படும், பயன்படுத்தும் விதம் என்பதில் ஃபோன் அழைப்புகளின் தோராயமான எண்ணிக்கை அல்லது நீங்கள் அனுப்பும் மற்றும் பெறும் மின்னஞ்சல்களின் தோராயமான எண்ணிக்கை அடங்கும். உங்கள் சாதனத்தில் உள்ள உண்மை மதிப்புகளை Apple அறிந்துகொள்ளாத வகையில் இந்தக் கணக்கீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்கள் குறிப்பிட்ட காலத்திற்கு எங்கள் சர்வரில் சேமிக்கப்பட்டிருக்கும்.
- ஸ்டோர்களை மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிவதற்காக உங்கள் உலாவல், வாங்குதல்கள், தேடல்கள் மற்றும் பதிவிறக்கங்கள் பற்றிய தகவல்களை நாங்கள் பயன்படுத்துகிறோம். IP முகவரி, ரேண்டமான தனித்துவ அடையாளத் தகவல் (தேவைப்படும் இடங்களில்), நீங்கள் App Store அல்லது பிற Apple ஆன்லைன் ஸ்டோர்களில் உள்நுழைந்திருக்கும்போது Apple கணக்கு ஆகியவற்றுடன் இந்தப் பதிவுகள் சேமிக்கப்படுகின்றன.
உங்கள் தகவலின் தனியுரிமையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது Appleஇல் உள்ள அனைவரின் முன்னுரிமையாகும். உங்கள் அனுபவத்தைச் சிறப்பாக்குவதற்காக எங்களுக்குத் தேவைப்படும் தரவை மட்டுமே நாங்கள் சேகரிக்க முயல்கிறோம் மற்றும் தரவைச் சேகரிக்கும்போது எதைச் சேகரிக்கிறோம், அது எங்களுக்கு ஏன் தேவைப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்வது முக்கியம் என நினைக்கிறோம், இதன்மூலம் தகவலறிந்த முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். அனைத்து Apple தயாரிப்புகளையும் சேவைகளையும் போல இந்தக் கொள்கைகளைக் கருத்தில் கொண்டு Apple Books வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸ்டோர் சேவைகளை வழங்குதல்
App Store மற்றும் iTunes Store, Apple Books போன்ற பிற Apple ஆன்லைன் ஸ்டோர்களில் சேவைகள் மற்றும் அம்சங்களை வழங்க நாங்கள் உங்கள் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துகிறோம். உங்கள் கணக்கு, பேமெண்ட் தகவல் (அமைப்புகளில் இதை அணுகலாம், மாற்றலாம்), இதுவரை நீங்கள் வாங்கியவை, பதிவிறக்கியவை போன்ற தகவல்கள் இதில் அடங்கும்.
Apple Booksஇல் இருந்து நீங்கள் உள்ளடக்கத்தைப் பதிவிறக்கும்போது உங்கள் Apple கணக்குடன் உங்கள் சாதனத்தின் வன்பொருள் ஐடி, IP முகவரி போன்ற அடையாளத் தகவல்களை Apple பதிவுசெய்கிறது.
உங்கள் வசதிக்காக, நீங்கள் உள்நுழைந்துள்ள சாதனங்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் அனைத்திலும் உங்கள் புக்மார்க்குகள், குறிப்புகள் மற்றும் தொகுப்புகளை Apple Books ஒத்திசைக்கிறது. இந்தத் தகவல் உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது.
ஸ்டோர் அனுபவத்தை மேம்படுத்துதல்
App Store மற்றும் பிற Apple ஆன்லைன் ஸ்டோர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக Apple Booksஐ நீங்கள் பயன்படுத்துவது தொடர்பான தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம், இதில் நீங்கள் ஸ்டோரைத் திறக்கும் அல்லது மூடும் நேரம், நீங்கள் தேடும் உள்ளடக்கம், நீங்கள் பார்க்கும் மற்றும் பதிவிறக்கும் உள்ளடக்கம், அறிவிப்புகளை நீங்கள் கையாளும் விதம் ஆகியவை அடங்கும். உங்கள் சாதனத்தின் வகை, ஆபரேட்டிங் சிஸ்டத்தின் பதிப்பு, சாதனத்தில் காலியாக உள்ள சேமிப்பிடம் போன்ற உங்கள் சாதனம் தொடர்பான தகவல்களையும் நாங்கள் சேகரிக்கிறோம். கோரப்பட்ட உள்ளடக்கத்தைப் பதிவிறக்க முடியுமா என்பதை மதிப்பிடுவதற்காக, சாதனத்தின் சேமிப்பகம் பயன்படுத்தப்படும் முறையைப் புரிந்துகொள்வதற்காக, உங்கள் சாதனம் Wi-Fi அல்லது மொபைல் டேட்டா மூலம் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிவதற்காக நாங்கள் இந்தத் தகவலைப் பயன்படுத்தக்கூடும். பிரபலமடையும் தேடல்களை வழங்க உங்கள் தேடல் தொடர்பான தகவலும் உதவுகிறது. தேடல் மற்றும் பரிந்துரைகளை மேம்படுத்துவதற்காக செயலிப் பயன்பாடு மற்றும் வாசிப்புச் செயல்பாடு பற்றிய தொகுக்கப்பட்ட தகவல்களை நாங்கள் பயன்படுத்துகிறோம்.
பயனர் செயல்பாடுகளைப் புரிந்துகொள்வதற்காகவும், அம்சங்களுக்கு முன்னுரிமையளிக்கவும், ஒட்டுமொத்த வாசிப்புச் செயல்பாட்டைப் புரிந்துகொள்வதற்காகவும் புத்தகங்களைப் பயன்படுத்தும் விதம் பற்றிய தகவல்களைச் சேகரிக்கிறோம். இந்தத் தகவல்கள் ஒவ்வொரு பயனருக்கும் ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒரு ரேண்டமான தனித்துவமான அடையாளத் தகவலுடன் இணைக்கப்படும், இதனால் ஒரு குறிப்பிட்ட பயனரின் வாசிப்புச் செயல்பாடு Appleக்குத் தெரியாது. Apple Booksஇல் இருந்து பதிவிறக்கப்படும் புத்தகங்களுக்கு, வகைப்பிரிவு போன்ற புத்தகத்தைப் பற்றிய தகவல்கள் பயனர்கள் அனைவருக்கும் இடையிலும் ஒன்றிணைக்கப்பட்டு ஒட்டுமொத்தப் பயன்பாட்டு விவரம் பெறப்படுகிறது. Apple Booksஇல் இருந்து பதிவிறக்கப்படாத புத்தகங்கள் அல்லது ஆவணங்களுக்கு, நாங்கள் கோப்பு வடிவமைப்பு பற்றிய தகவலைச் சேகரிக்கிறோம், ஆனால் புத்தகத்தின் உள்ளடக்கத்தைப் பற்றிய தகவலைச் சேகரிப்பதில்லை.
iCloudஇல் உள்நுழைந்துள்ள உங்கள் சாதனங்கள் அனைத்திலும் புத்தக வாசிப்புச் செயல்பாடுகளை ஒத்திசைப்பதற்காக முழுமையான என்கிரிப்ஷனைப் பயன்படுத்தி அடையாளத் தகவல்களை iCloud மூலம் ஒத்திசைக்கிறோம். இந்த அடையாளத் தகவல்களை மீட்டமைக்க உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில், அமைப்புகள் > செயலிகள் > புத்தகங்கள் என்பதற்குச் சென்று “அடையாளத் தகவலை மீட்டமை” என்பதைத் தட்டுங்கள்.
ஸ்டோர்களைப் பிரத்தியேகமாக்குதல்
உங்களுக்கு மிகப் பொருத்தமான உள்ளடக்கத்தைக் கண்டறிய உங்களுக்கு உதவுவதற்காக Apple Booksஐ நீங்கள் பயன்படுத்துவது தொடர்பான தகவல்களை நாங்கள் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, “நீங்கள் விரும்பக்கூடிய கூடுதல் புத்தகங்கள்” போன்ற பிரத்தியேக அம்சங்களை வழங்குவதற்கு நீங்கள் பார்த்த அல்லது பதிவிறக்கிய உள்ளடக்கத்தை அறிந்துகொள்வது உதவுகிறது. இதற்கு முன்பு நீங்கள் தேடியவை, பார்த்தவை, பதிவிறக்கியவை, புதுப்பித்தவை, மதிப்பாய்வு செய்தவை அல்லது “வாசிக்க வேண்டியவை” பட்டியலில் சேர்த்தவற்றின் அடிப்படையில் உங்களுக்குப் பொருத்தமானதாகக் கருதும் உள்ளடக்கத்தை நாங்கள் பரிந்துரைக்கிறோம். மிகவும் பொருத்தமான பரிந்துரைகளை உருவாக்குவதற்காக ஒரு புத்தகத்தை எவ்வளவு வாசித்துள்ளீர்கள் என்பது போன்ற உங்கள் வாசிப்புச் செயல்பாடு பற்றிய தகவலையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்த வாசிப்புச் செயல்பாடு உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்படாது. உங்கள் Apple கணக்கில் இருந்து பெறப்பட்ட கணக்குத் தகவல்களுடன் இதுவரை நீங்கள் வாங்கியவை, பேமெண்ட் முறைகள் ஆகியவற்றையும் பயன்படுத்துகிறோம். உங்கள் Apple கணக்கில் பிரத்தியேகப் பரிந்துரைகள் அம்சத்தை ஆஃப் செய்வதன் மூலம் App Store, Apple Books, iTunes Store, Apple TV, பாட்காஸ்ட்கள் மற்றும் Appleஇல் சந்தாக்களுக்கான பிரத்தியேகமாக்கல் அம்சங்களை ஆஃப் செய்யலாம். உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனங்களில், அமைப்புகள் > [உங்கள் பெயர்] > மீடியா & வாங்குதல்கள் என்பதற்குச் சென்று “கணக்கைக் காட்டு” என்பதைத் தட்டி பிரத்தியேகப் பரிந்துரைகளை ஆஃப் செய்யலாம்.
நீங்கள் பயன்படுத்தும் செயலிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் குறித்து சாதனத்திலேயே செய்யப்படும் செயலாக்கத்தின் அடிப்படையில் நீங்கள் விரும்பக்கூடிய உள்ளடக்கத்தை Siri பரிந்துரைக்கிறது. இந்தத் தகவல் Apple உடன் பகிரப்படாது. உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில், அமைப்புகள் > செயலிகள் > புத்தகங்கள் > Siri என்பதற்குச் சென்று “செயலியில் காட்டு” என்பதைத் தட்டி ஆஃப் செய்து நீங்கள் இதை எப்போது வேண்டுமானாலும் முடக்கலாம். Apple Intelligence திறன் கொண்ட iOS, iPadOS visionOS சாதனத்தில், அமைப்புகள் > செயலிகள் > புத்தகங்கள் > Apple Intelligence & Siri என்பதற்குச் சென்று, “செயலியில் காட்டு” என்பதைத் தட்டி ஆஃப் செய்யவும்.
உங்களுடனான தகவல்தொடர்புகள்
Apple Books மற்றும் நீங்கள் விரும்பக்கூடிய பிற Apple தயாரிப்புகள், சேவைகள் மற்றும் சலுகைகள் பற்றிய தகவல்களை உங்களுக்கு அனுப்ப, உங்களுக்குச் சொந்தமான Apple தயாரிப்புகள், Apple சேவைகளுக்கான உங்கள் சந்தாக்கள் போன்ற உங்கள் கணக்கு பற்றிய தகவல்களை Apple பயன்படுத்தக்கூடும். Apple Booksஇல் கிடைக்கும் புதிய அம்சங்கள், உள்ளடக்கம் மற்றும் சலுகைகள் பற்றிய தகவல்களை உங்களுக்கு அனுப்ப Apple Booksஇல் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளைப் பற்றிய தகவல்களையும் Apple பயன்படுத்தக்கூடும்.
மார்க்கெட்டிங் மின்னஞ்சல்களைப் பெற நீங்கள் ஒப்புதலளித்தால், இந்தத் தகவல்கள் மின்னஞ்சல் வழியாக உங்களுக்கு அனுப்பப்படலாம். account.apple.com இணையதளத்திற்குச் சென்று அல்லது உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில் அமைப்புகள் > [உங்கள் பெயர்] > தனிப்பட்ட தகவல்கள் > “தகவல்தொடர்பு முன்னுரிமைகள்” என்பதற்குச் சென்று உங்கள் மின்னஞ்சல் முன்னுரிமைகளை நீங்கள் மாற்றலாம், இந்த மின்னஞ்சல்களைப் பெறுவதற்கான ஒப்புதலைத் திரும்பப் பெறலாம். Push, பேனர் அல்லது பேட்ஜ் அறிவிப்புகள் வழியாகவும் இந்தத் தகவல்களை நீங்கள் பெறலாம். உங்கள் அறிவிப்பு முன்னுரிமைகளைப் புதுப்பிக்க அல்லது அறிவிப்புகளைப் பெறுவதற்கான ஒப்புதலைத் திரும்பப் பெற உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில், அமைப்புகள் > அறிவிப்புகள் > புத்தகங்கள் என்பதற்குச் செல்லுங்கள்.
விளம்பரப்படுத்தல்
App Store, Apple News மற்றும் பங்குகள் செயலிகளில் தயாரிப்புகள், சேவைகள், செயலிகள் ஆகியவற்றைக் கண்டறிய Apple வழங்கும் விளம்பரங்கள் உதவுகின்றன. விளம்பரங்கள் பொருத்தமாக இருப்பதை உறுதிப்படுத்த உங்கள் சாதனம், கணக்கு, வாங்குதல்கள், சந்தாக்கள், பதிவிறக்கங்கள் ஆகியவை பற்றிய தகவல்களை நாங்கள் பயன்படுத்துகிறோம். App Storeஇல் நீங்கள் தேடும்போது உங்கள் தேடல் சொற்களையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். ஒரே மாதிரியான பண்புகளைக் கொண்ட நபர்களை ஒன்றிணைத்து “பிரிவுகள்” எனப்படும் குழுக்களை உருவாக்குகிறோம், இலக்கிடப்பட்ட விளம்பரங்களை வழங்க இந்தக் குழுக்களை நாங்கள் பயன்படுத்துகிறோம். எந்தப் பிரிவுகளில் உங்களை வைப்பது, அதாவது எந்த விளம்பரங்களை உங்களுக்கு வழங்குவது என்பதைத் தீர்மானிக்க உங்களைப் பற்றிய தகவல்கள் பயன்படுத்தப்படும். உங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக, இலக்கிற்கான வரையறையை 5,000க்கும் அதிகமான நபர்கள் பூர்த்திசெய்தால் மட்டுமே இலக்கிடப்பட்ட விளம்பரங்கள் வழங்கப்படும். உங்களுக்குப் பொருத்தமான விளம்பரங்களைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் தகவல்கள் ரேண்டம் அடையாளத் தகவல்களுடன் இணைக்கப்பட்டிருக்கும், உங்கள் Apple கணக்குடன் இணைக்கபட்டிருக்காது.
பிரத்தியேகமாக்கப்பட்ட விளம்பரங்கள் அமைப்பு ஆன் செய்யப்பட்டிருந்தால், Appleஇன் விளம்பரப்படுத்தல் தளம் உங்களுக்குப் பொருத்தமான விளம்பரங்களை வழங்க உங்கள் தகவல்களைப் பயன்படுத்தக்கூடும். நீங்கள் Appleஇன் விளம்பரப்படுத்தல் தளத்தில் இருந்து உங்கள் ஆர்வங்களை இலக்கிடும் விளம்பரங்களைப் பெற விரும்பவில்லையெனில், பிரத்தியேகமாக்கப்பட்ட விளம்பரங்களை ஆஃப் செய்யலாம். பிரத்தியேகமாக்கப்பட்ட விளம்பரங்களை ஆஃப் செய்வது விளம்பரங்களை இலக்கிடுவதற்காக உங்கள் தகவல்களைப் பயன்படுத்துவதில் இருந்து Appleஐத் தடுக்கும். இது நீங்கள் பெறும் விளம்பரங்களின் எண்ணிக்கையைக் குறைக்காது, ஆனால் விளம்பரங்கள் உங்களுக்குப் பொருத்தமானதாக இருப்பது குறையக்கூடும்.
Apple விளம்பரப்படுத்தல் & தனியுரிமை பற்றி மேலும் அறிய www.apple.com/in/legal/privacy/data/en/apple-advertising இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.
App Store, Apple News மற்றும் பங்குகள் செயலிகளில் பிரத்தியேக விளம்பரங்களில் இருந்து விலகுவது எப்படி என்று அறிய support.apple.com/105131 இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.
மூன்றாம் தரப்பினருடன் பகிர்தல்
எங்கள் தயாரிப்புகளையும் சேவைகளையும் வழங்க Apple உடன் இணைந்து பணியாற்றும், வாடிக்கையாளருக்கான சந்தைப்படுத்தலில் Appleக்கு உதவும், App Store, Apple News மற்றும் பங்குகள் செயலிகளில் காட்டுவதற்கான விளம்பரங்களை Appleஇன் சார்பாக விற்பனை செய்யும் உத்திசார் கூட்டாளர்களுக்கு நீங்கள் வாங்கிய உள்ளடக்கங்கள் பற்றிய தனிப்பட்டவை அல்லாத சில தரவுகளை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எடுத்துக்காட்டாக, தனிப்பட்டவை அல்லாத தரவை உள்ளடக்க உரிமையாளருடன் நாங்கள் பகிரக்கூடும், இதன்மூலம் தங்கள் படைப்பாக்கத்தின் செயல்திறனை அவர்கள் மதிப்பிடலாம், ராயல்டி மற்றும் கணக்கியல் தேவைகளைப் பூர்த்திசெய்யலாம், தங்கள் தயாரிப்புகளையும் சேவைகளையும் மேம்படுத்தலாம்.
தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்குப் பொருந்தக்கூடிய அடிப்படைச் சட்டங்கள்
பொதுவாக Apple உடனான உங்கள் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்காகவும், சேவைகளை வழங்கத் தேவைப்படும் அளவிற்கும், எங்கள் சட்டரீதியான கடமைகளுக்கு இணங்குவதற்காகவும் புத்தகங்கள் செயலியில் உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்குகிறோம். ஒப்புதல் என்பது சட்டரீதியான அடிப்படையாக அமையும் இடங்களில், பொருந்தும் உள்ளூர் சட்டங்களின் அடிப்படையில் அதைப் பெற முயல்கிறோம்.
பொருந்தும் உள்ளூர் சட்டங்கள் குறிப்பிடும் இடங்களில், தனிப்பட்ட தரவின் பின்வரும் வகைகளை எங்களின் அல்லது மூன்றாம் தரப்புகளின் நியாயமான நலன்களின் நோக்கத்திற்காகத் தேவைப்படும் அளவிற்குச் செயலாக்குகிறோம், இதில் பின்வருவன பற்றிய தகவல்களும் அடங்கும்:
- புத்தகங்கள் செயலியை நீங்கள் பயன்படுத்தும் விதம், இதில் நீங்கள் பயன்படுத்தும் அம்சங்கள் (எடுத்துக்காட்டாக, “வாசிக்க வேண்டியவை” பட்டியலில் நீங்கள் சேர்ப்பவை), நீங்கள் தேடும் உள்ளடக்கம், நீங்கள் பார்க்கும் உள்ளடக்கம், உங்கள் மதிப்பாய்வுகள், அறிவிப்புகளை நீங்கள் கையாளும் விதம் ஆகியவை அடங்கும்
- உங்கள் கணக்கு, இதில் உங்களுக்குச் சொந்தமான Apple தயாரிப்புகள், Apple சேவைகளுக்கான உங்கள் சந்தாக்கள், உங்கள் வாங்குதல்கள் மற்றும் பதிவிறக்கங்கள் போன்றவை அடங்கும்
- உங்கள் சாதனத்தின் வன்பொருள் ஐடி மற்றும் IP முகவரி
நியாயமான நலன்கள் என்பதில் இவையும் அடங்கும்:
- உங்களுக்காகவும் பிறருக்காகவும் சேவையை மேம்படுத்தி உகந்ததாக்குதல்
- உங்களுக்கு மிகவும் பொருத்தமான உள்ளடக்கத்தைக் கண்டறிய உங்களுக்கு உதவுதல்
- Apple Books மற்றும் நீங்கள் விரும்பக்கூடிய தொடர்புடைய பிற Apple தயாரிப்புகள், சேவைகள் மற்றும் சலுகைகள் பற்றிய தகவல்களை உங்களுக்கு அனுப்புதல்
- உள்ளடக்க உரிமையாளர்களுக்கு அறிக்கை வழங்குதல்
- மோசடி மற்றும் பிற தீங்கிழைக்கும் செயல்பாட்டைத் தடுத்தல்
தக்கவைத்தல்
உங்கள் வாங்குதல்கள் மற்றும் பதிவிறக்கங்கள் தொடர்பான தனிப்பட்ட தரவை நிதி அறிக்கை தொடர்பான பொருந்தும் உள்ளூர் சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கால அளவிற்குத் தக்க வைக்கிறோம், இது வட்டாரத்தைப் பொறுத்து மாறுபடும். பெரும்பான்மையான வாடிக்கையாளர்களுக்குக் குறைந்தபட்சம் 10 வருடம் தக்கவைத்தல் காலம் தேவையாக இருக்கிறது, ஆனால் சீனா போன்ற சில வட்டாரங்களில் இந்தக் காலம் 30 வருடங்களாக இருக்கலாம். எங்கள் பொருந்தும் விதிமுறைகளுக்கு ஏற்ப நீங்கள் வாங்கும், பதிவிறக்கும் உள்ளடக்கத்தை மீண்டும் பதிவிறக்க உங்களுக்கு உதவுவதற்காக உங்கள் கணக்கு இருக்கும் காலம் வரை அந்தப் பதிவை நாங்கள் தக்கவைக்கிறோம். உலாவல் செயல்பாடு, தேடல்கள் போன்ற பிற தகவல்களைக் குறுகிய காலத்திற்கு (பொதுவாக இரண்டு ஆண்டுகள்) தக்கவைக்கிறோம். தரவைத் தக்கவைப்பதற்கான பொருந்தும் சட்டரீதியான தேவைகள், குறிப்பிட்ட வணிகப் பயன்பாட்டு நோக்கங்கள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு இந்தக் காலஅளவு தீர்மானிக்கப்படுகிறது. இருப்பினும், நீங்கள் உங்கள் கணக்கை மூடிய பின்னர் அல்லது Apple Books அல்லது பிற Apple ஆன்லைன் ஸ்டோர்களைப் பயன்படுத்துவதை நிறுத்திய பின்னரும்கூட வாங்குதல்கள் போன்ற சில தகவல்கள் (உங்கள் சேமிக்கப்பட்ட கார்டு விவரங்கள் இல்லை) வணிகப் பதிவுகளாகச் சேமிக்கப்பட்டிருக்கக்கூடும்.
நீங்கள் பேமெண்ட் கார்டைப் பயன்படுத்தும்போது எதிர்கால வாங்குதல்கள், தொடர் பரிவர்த்தனைகள் அல்லது நீங்கள் அங்கீகரிக்கும் பிற பயன்பாடுகளுக்காக Apple உங்கள் கார்டு எண்ணையும் பில்லிங் தகவல்களையும் தக்கவைத்து தானாகப் புதுப்பிக்கலாம். Apple இந்தத் தகவல்களை உங்கள் நிதி நிறுவனம் அல்லது பேமெண்ட் நெட்வொர்க்கிலிருந்து பெற்று மோசடித் தடுப்பு மற்றும் சரிபார்ப்புக்காகப் பயன்படுத்தலாம்.
மோசடி மற்றும் பிற தீங்கிழைக்கும் செயல்பாட்டைத் தடுத்தல்
Apple Books மற்றும் பிற Apple ஆன்லைன் ஸ்டோர்கள், பிற Apple செயலிகள் மற்றும் சேவைகளில் மோசடி மற்றும் பிற தீங்கிழைக்கும் செயல்பாட்டைத் தடுப்பதற்காகவும் தனிப்பட்ட தரவைச் சேகரிக்கிறோம். இந்தத் தகவல்களில் சாதன வகை, மென்பொருள் பதிப்பு போன்ற சாதனத் தகவல்கள், இருப்பிடத் தகவல்கள் (உங்கள் இணைய இணைப்பின் IP முகவரியை உங்கள் புவியியல் வட்டாரத்துடன் பொருத்துவதன் மூலம் கிடைக்கும் தோராயமான இருப்பிடம்), இதுவரையான பதிவிறக்கங்களும் வாங்குதல்களும், ஸ்டோர்களுடனான உங்களின் பிற செயல்பாடுகள் ஆகியவை அடங்கும். நீங்கள் எதையேனும் வாங்கத் தொடங்கும்போது அந்தக் கோரிக்கையைச் செயலாக்கி, பேமெண்ட் கூட்டாளரிடமிருந்து அங்கீகாரத்தைப் பெறுவதற்கு முன்பாக அந்தத் தயாரிப்பு அல்லது சேவையை வழங்குவதா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க Apple உடனான உங்கள் வணிகத் தொடர்புகள் பற்றிய இதுவரையான தகவல்களை Apple பயன்படுத்தக்கூடும்.
நீங்கள் வாங்க முயலும்போது உங்கள் சாதனத்தை நீங்கள் பயன்படுத்தும் விதத்தின் அடிப்படையில் சாதனத்தின் நம்பகத்தன்மை மதிப்பெண்ணையும் நாங்கள் கணக்கிடுகிறோம், பயன்படுத்தும் விதம் என்பதில் ஃபோன் அழைப்புகளின் தோராயமான எண்ணிக்கை, நீங்கள் அனுப்பும் அல்லது பெறும் மின்னஞ்சல்கள் தோராயமான எண்ணிக்கை அடங்கும். உங்கள் சாதனத்தில் உள்ள உண்மை மதிப்புகளை Apple அறிந்துகொள்ளாத வகையில் இந்தக் கணக்கீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண் குறிப்பிட்ட காலத்திற்கு எங்கள் சர்வரில் சேமிக்கப்பட்டிருக்கும்.
Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.
2025-12-12