Apple Cash மற்றும் Apple Payments Inc. & தனியுரிமை
பாதுகாப்பான, தனிப்பட்ட முறையில் நீங்கள் பணத்தை அனுப்பவும் பெறவும் உதவும் வகையில் Apple Cash வடிவமைக்கப்பட்டுள்ளது.
![]()
- நீங்கள் அனுப்பிய தொகை, பெறுநர் மற்றும் உங்கள் பேலன்ஸ் குறித்து Appleஇன் இதர சேவைகளுக்குத் தெரியாத வகையில் சேமிப்பதன் மூலம் உங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக முற்றிலும் தங்களுக்குச் சொந்தமான துணைநிறுவனமான Apple Payments Inc. நிறுவனத்தை Apple உருவாக்கியுள்ளது.
- நீங்கள் Apple Cashஐச் செயலிகளிலும் இணையத்திலும் பயன்படுத்தும்போது, பேமெண்ட்டைச் செயலாக்கத் தேவைப்படும் தகவல்கள் செயலியுடனோ இணையதளத்துடனோ பகிரப்படும். உங்களின் அசல் Apple Cash கணக்கு எண் வணிகத்துடன் பகிரப்படாது.
- Apple Pay மற்றும் பிற Apple தயாரிப்புகள் & சேவைகளை மேம்படுத்த, இனி உங்களுடன் தொடர்புபடுத்தப்படாத Apple Cash தரவுகளை Apple பயன்படுத்தக்கூடும்.
Apple Cash மூலம் நீங்கள் பிறருக்குப் பணம் அனுப்பலாம் மற்றும் அவர்களிடமிருந்து பணத்தைப் பெறலாம், தகுதியான வணிகங்கள் விநியோகிக்கும் பணத்தைப் பெறலாம் மற்றும் அவற்றுக்கு நேரடியாகப் பணம் செலுத்தலாம்.
ஒருவருக்கொருவர் பேமெண்ட் அனுப்புதல் மற்றும் Apple Cashஐப் பயன்படுத்துதல் (அமெரிக்காவில் மட்டும்)
Apple Cash மூலம் மெசேஜஸ், வாலெட் ஆகியவற்றில் Siriஐப் பயன்படுத்தி நீங்கள் பிறருக்குப் பணம் அனுப்பலாம் மற்றும் அவர்களிடமிருந்து பணம் பெறலாம். நீங்கள் பெறக்கூடிய பணம் உங்கள் Apple Cash கார்டில் சேர்க்கப்படும். ஸ்டோர்கள், செயலிகள் மற்றும் இணையத்தில் Apple Payஐப் பயன்படுத்தி வாங்கும்போது இதை நீங்கள் பயன்படுத்தலாம். ஒருவருக்கொருவர் பேமெண்ட் அனுப்புதலும் Apple Cash கணக்கும் Appleஇன் கூட்டாளர் வங்கியான Green Dot Bank வழங்கும் சேவைகளாகும்.
Apple Cashஐ அமைத்தல்
Apple Cashஐ அமைக்கும்போது, உங்கள் அடையாளத் தகவல் மற்றும் தொடர்புத் தகவலும் நீங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டைச் சேர்க்கும்போது உள்ள அதே தகவலும் Green Dot Bank மற்றும் Apple Payments Inc. நிறுவனங்களுடன் பகிரப்படலாம்.
உங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக முற்றிலும் தங்களுக்குச் சொந்தமான துணைநிறுவனமும் உரிமம் பெற்ற பணப்பரிமாற்ற நிறுவனமுமான Apple Payments Inc. நிறுவனத்தை Apple உருவாக்கியுள்ளது. Appleஇன் இதர சேவைகளுக்குத் தெரியாத வகையில், உங்கள் Apple Cash கணக்குப் பதிவுத் தகவல்கள் (பெயர், முகவரி), பேலன்ஸ், பரிவர்த்தனைத் தொகை, நீங்கள் யாருக்குப் பணம் அனுப்புகிறீர்கள் என்ற தகவல்கள் ஆகியவை Apple Payments Inc நிறுவனத்தால் தனியாகச் சேமிக்கப்படும். Apple Payments Inc. நிறுவனத்தால் சேமித்து வைக்கப்படும் உங்கள் தனிப்பட்ட தரவு நீங்கள் கோரும் சேவைகளை வழங்குதல், சிக்கல்களைக் கண்டறிந்து சரிசெய்தல், ஒழுங்குமுறை நோக்கங்கள், மோசடியைத் தடுத்தல் ஆகியவற்றுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.
கூடுதலாக, Apple Cash செயல்படுத்தப்பட்டுள்ளதா அல்லது Apple Cash சேவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளனவா (எ.கா., Apple Cash குடும்பம் செயல்படுத்தப்பட்டுள்ளதா) போன்றவற்றையும் Apple Inc. தெரிந்துகொள்ளும். Apple Cash மற்றும் Apple Pay அம்சங்களை நீங்கள் கண்டறியவும் பயன்படுத்தவும் உதவுவதற்கு மட்டுமே இந்தத் தகவல்கள் பயன்படுத்தப்படும்.
உங்கள் அடையாளத்தைச் சரிபார்த்தல்
உங்கள் அடையாளத்தைச் சரிபார்ப்பதற்கும் வங்கி நெறிமுறைகளுடன் இணங்குவதற்கும் உங்கள் பெயர், முகவரி, பிறந்த நாள், சமூகப் பாதுகாப்பு எண் போன்ற தகவல்களை உங்கள் வங்கியிடமும் அதன் அடையாளச் சரிபார்ப்புச் சேவை வழங்குநரிடமும் வழங்கும்படி உங்களிடம் கேட்கப்படலாம். உங்கள் அடையாளத்தைச் சரிபார்ப்பதற்கு நீங்கள் வழங்கும் தகவல்கள் மோசடியைத் தடுப்பதற்கும், அமெரிக்க நிதி நெறிமுறைகளுடன் இணங்குவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படும். உங்கள் பெயரும் முகவரியும், கூட்டாளார் வங்கி மற்றும் Apple Payments Inc. நிறுவனங்களால் பாதுகாப்பாகச் சேமிக்கப்படும். உங்கள் அடையாளம் சரிபார்க்கப்பட வேண்டுமென்றால், உங்கள் அரசு அடையாள அட்டையின் நகல் போன்ற கூடுதல் தகவல்களை வழங்கும்படி உங்களிடம் கேட்கப்படலாம். இந்தக் கூடுதல் தகவல்களை Apple Inc. நிறுவனத்தால் படிக்க முடியாது.
உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கும்போதே மோசடியைத் தடுப்பதற்கு உதவியாக, குறிப்பிட்ட சாதனம் மற்றும் கணக்கு பயன்படுத்தப்படும் விதம் பற்றிய தகவல்களை உங்கள் சாதனம் மதிப்பிடக்கூடும். இதில் ஸ்கேமைக் குறிக்கக்கூடிய நிகழ்வுகள், அனுப்புநர் அல்லது பெறுநர் குறித்து அறிந்து வைத்திருத்தல், மோசடியைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இடர் மதிப்பீடுகளை உருவாக்குதல் போன்றவை அடங்கும். இந்த இடர் மதிப்பீடுகள் (அடிப்படைத் தகவல்கள் இதில் அடங்காது) அடையாளங்காணும் வகையில் Apple Payments Inc. நிறுவனத்துடன் பகிரப்பட்டாலும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே சேமித்து வைக்கப்படும், அவற்றை Appleஆல் உங்களுடன் தொடர்புபடுத்த முடியாது. Apple Cashஐப் பயன்படுத்தும்போது உங்கள் பணத்தைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் மோசடி குறித்த நடவடிக்கைகளில் (எ.கா., ஸ்கேம்களைத் தடுத்தல்) பயன்படுத்துதல், அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டைத் தவிர்த்தல், Apple Cash இயங்குதளத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பை உறுதிசெய்தல் போன்றவற்றுக்கு இந்தத் தகவல்கள் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, Apple Payஇல் ஒரு கார்டை நீங்கள் சேர்ப்பது போலவே நீங்கள் Apple Cashஐ பயன்படுத்தும்போது, சாதனத்தைப் பயன்படுத்தும் விதத்தை (எடுத்துக்காட்டாக, சாதனம் நகர்வில் இருந்த நேரத்தின் சதவீதம் அல்லது ஒரு வாரத்தில் மேற்கொண்ட அழைப்புகளின் தோராய எண்ணிக்கை) உங்கள் சாதனம் மதிப்பிடக்கூடும். உங்கள் தகவல் தொடர்பில் உள்ள எந்த உள்ளடக்கமும் சேகரிக்கப்படாது. சந்தேகத்திற்குரிய செயல்பாடு காரணமாக, கூடுதல் பகுப்பாய்வு தேவைப்படும் பரிவர்த்தனைகள் தக்கவைக்கப்படலாம் மற்றும் உங்களுடன் தொடர்புபடுத்தப்படலாம். இதுவரையான Apple Cash கார்டு பரிவர்த்தனைகளுக்குச் செல்வதன் மூலம் சந்தேகத்திற்குரிய செயல்பாடு காரணமாக எந்தெந்தப் பரிவர்த்தனைகளுக்குக் கூடுதல் பகுப்பாய்வு தேவைப்படும் என்பதை நீங்கள் பார்க்கலாம்.
நீங்கள் Apple Cashஐப் பயன்படுத்துபோது பகிரப்படும் தகவல்கள்
நீங்கள் Apple Cashஐப் பயன்படுத்தும்போது (வங்கிக் கணக்கில் பணத்தைச் சேர்த்தல், பணப்பரிமாற்றம் செய்தல் போன்றவை உட்பட) எங்கள் கூட்டாளர் வங்கி, Apple, மற்றும் Apple Payments Inc. ஆகிய நிறுவனங்கள் பரிவர்த்தனையைச் செயலாக்கவும், மோசடியைத் தடுக்கவும், நிதி சார்ந்த நெறிமுறைகளுடன் இணங்கவும் உங்களைப் பற்றியும், உங்கள் சாதனம் மற்றும் உங்கள் கணக்கு பற்றியும் உள்ள தகவல்களைப் பயன்படுத்தலாம் மற்றும் சேமிக்கலாம். நீங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டைச் சேர்க்கும்போது செயல்படுத்தப்படும் தகவல்களைப் போல் உள்ள இந்தத் தகவல்களில் உங்கள் சாதனத்தின் இருப்பிடம் இருக்காது. நீங்கள் வாலெட்டிற்கு “இருப்பிடச் சேவைகள்” அம்சத்தைச் செயல்படுத்தி இருந்தால், சாதனத்திலேயே மோசடித் தடுப்பு மதிப்பீடுகளை உருவாக்க உங்கள் சாதனத்தின் இருப்பிடம் பற்றிய தகவல்களையும் உங்கள் சாதனம் மதிப்பிடும். மதிப்பீடுகளின் வெளியீடு (அடிப்படைத் தரவுகள் இதில் அடங்காது) Appleக்கு அனுப்பப்படும். மோசடி தடுப்புக்காகவும் உங்களுக்கு உதவி வழங்கவும், கூட்டாளர் வங்கி அல்லது Apple உடனும் நாங்கள் தகவல்களைப் பகிரலாம். சிக்கல்களைக் கண்டறிந்து சரிசெய்வதற்காகவும், மோசடியைத் தடுப்பதற்காகவும், நிதிசார்ந்த நெறிமுறைகளுக்கு இணங்குவதற்காகவும் உங்கள் பரிவர்த்தனைத் தரவை Apple Payments Inc. சேமித்துப் பயன்படுத்தும். நீங்கள் ஒரு பரிவர்த்தனையை மேற்கொள்ளும்போது அது மோசடியாக இருக்கக்கூடும் என நாங்கள் சந்தேகித்தால், ஸ்கேம்களில் இருந்து உங்களைப் பாதுகாக்க, கடைசியாக எப்போது உங்கள் அடையாளத்தை உறுதிசெய்தீர்கள் என்பது போன்ற Apple Cash கணக்குடன் தொடர்புடைய தகவல்களை எங்கள் கூட்டாளர் வங்கியிடமிருந்து Apple Payments Inc. கேட்டுப் பெறக்கூடும். மோசடியைத் தடுக்க, இந்தத் தரவுகளை Apple Payments Inc. சேமித்துப் பயன்படுத்தும்.
நீங்கள் மெசேஜஸ் அல்லது வாலெட்டில் பணத்தை அனுப்பும்போதோ பெறும்போதோ உங்கள் மின்னஞ்சல் முகவரி, ஃபோன் எண் போன்ற தகவல்கள் நீங்கள் பரிவர்த்தனை மேற்கொள்ளும் நபர்களுக்குக் காட்டப்படும். மெசேஜஸ் அல்லது வாலெட்டிற்கு பணத்தை அனுப்பும்போதோ பெறும்போதோ காட்டப்படும் தொடர்புத் தகவல்களைத் தேர்ந்தெடுக்கவோ மாற்றவோ அமைப்புகள் > செயலிகள் > மெசேஜஸ் > “அனுப்பு & பெறு” என்பதற்குச் செல்லவும். ஒரு வங்கிக் கணக்கிற்கு நீங்கள் பணப்பரிமாற்றம் செய்தால் வருங்கால பணப்பரிமாற்றங்களை எளிதாக்க, கணக்கு எண் மற்றும் ரௌட்டிங் எண் உள்ளிட்ட உங்கள் வங்கிக் கணக்கு iCloud கீசெயினில் சேமிக்கப்படும். இந்தத் தகவல் என்கிரிப்ட் செய்யப்பட்டுள்ளது. இதை Apple அல்லது Apple Payments Inc. நிறுவனத்தால் படிக்க முடியாது.
“Tap to Cash” பரிவர்த்தனையைத் தொடங்க, நீங்கள் டிஸ்ப்ளே பெயர், புகைப்படம் மற்றும் பரிவர்த்தனைத் தொகையை உங்கள் சாதனத்தில் உள்ளமைத்து, பரிவர்த்தனைத் தொகையை அங்கீகரித்த பிறகு உங்கள் சாதனத்தைப் பெறுநர் சாதனத்திற்கு அருகே பிடித்துக்கொண்டு இரு சாதனங்களுக்கும் இடையே ஓர் இணைப்பை ஏற்படுத்தலாம். இணைப்பு ஏற்படுத்தப்பட்டதும், உங்கள் சாதனம் நீங்கள் உள்ளமைத்த டிஸ்ப்ளே பெயர் மற்றும் புகைப்படத்தையும் பரிவர்த்தனைத் தொகையையும் நேரடியாகப் பெறுநர் சாதனத்துடன் பகிரும். பிறகு, பெறுநரால் பேமெண்ட்டை மதிப்பாய்வு செய்து ஏற்க முடியும். ஏற்கப்பட்டால், பெறுநரின் ஏற்பும் உள்ளமைக்கப்பட்ட அவரது டிஸ்ப்ளே பெயரும் புகைப்படமும் என்கிரிப்ட் செய்யப்பட்டு உங்கள் சாதனத்துடன் திரும்பப் பகிரப்படும். செயலாக்கத்திற்காக, முழுமையாக அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனையில் உள்ள விவரங்கள் உங்கள் சாதனத்தால் Apple Pay சர்வர்களுக்கு அனுப்பப்படும்.
நேரடி பேமெண்ட்கள் மற்றும் விநியோகங்கள்
நீங்கள் அங்கீகரிக்கும், பங்கேற்கும் வணிகங்கள் உங்கள் Apple Cash கணக்கிற்கு நேரடியாக நிதியை வழங்குவதை அனுமதிப்பதற்கு, Apple Payments Inc. நிறுவனத்தை Apple Cash பயன்படுத்தும். Apple Payments Inc. நிறுவனம் நேரடி பேமெண்ட் சேவையையும் வழங்கும். நீங்கள் அங்கீகரிக்கும் குறிப்பிட்ட சில வணிகங்களுக்கு பேமெண்ட் செலுத்த, உங்கள் Apple Cash கணக்கில் உள்ள நிதியை இதன் மூலம் நீங்கள் பயன்படுத்தலாம்.
இந்தப் பரிவர்த்தனைகளை ஒழுங்குமுறை செய்வதற்கும், அவை பொருந்தக்கூடிய சட்டங்களுடன் இணங்குவதற்கும், அவற்றில் மோசடி எற்படுவதைத் தடுப்பதற்கும், உங்களுக்கு விநியோகிக்கப்படும் பணம் அல்லது நீங்கள் செலுத்தும் நேரடி பேமெண்ட்கள் பற்றிய தகவல்களை நீங்கள் கோரிய சேவைகளுக்கு மட்டுமே வழங்க, Green Dot Bank மற்றும் Apple Payments Inc. நிறுவனங்கள் பயன்படுத்தும். சந்தேகத்திற்குரியது எனக் கொடியிடப்பட்ட பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பரிவர்த்தனைப் பதிவுகளை Apple Payments Inc. நிறுவனம் ஐந்து ஆண்டு காலம் வரை கூட்டாட்சி மற்றும் மாநிலச் சட்டத்திற்குத் தேவைப்படும் வகையில் தக்கவைக்கும்.
சந்தாக்கள் போன்ற தொடர் கட்டணங்கள் அல்லது வணிகத்தால் தொடங்கப்படும் பிற கட்டணங்கள் உங்களால் அங்கீகரிக்கப்படுவதை உறுதிசெய்ய, தொடர் கட்டணங்கள் அல்லது வணிகத்தால் தொடங்கப்படும் கட்டணங்களைச் செயலாக்க நீங்கள் Apple Cashஐப் பங்குபெறும் வணிகங்களில் பேமெண்ட் முறையாகப் பயன்படுத்தத் தேர்வுசெய்யும்போது அத்தகைய கட்டணங்களுக்காகப் பயன்படுத்த வேண்டிய Apple Payஇன் வணிக டோக்கன் அம்சத்தைப் பயன்படுத்தி, வணிகம் சார்ந்த கணக்கு எண்ணை Green Dot Bank மற்றும் Visa நிறுவனங்கள் அங்கீகரிக்கும் மற்றும் உருவாக்கும். நீங்கள் குறிப்பிட்ட நடவடிக்கை எதையும் எடுக்காமல் பரிவர்த்தனைகள் அங்கீகரிக்கப்பட வேண்டுமெனில், வணிகம் சார்ந்த அந்தக் குறிப்பிட்ட கணக்கு எண்ணை மட்டுமே குறிப்பிட்ட பங்குபெறும் வணிகம் பயன்படுத்த வேண்டும். உங்கள் வணிகம் சார்ந்த கணக்கு எண்களுடன் எந்த வணிகங்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பது Appleக்குத் தெரிந்தாலும் நீங்கள் எதை வாங்கினீர்கள், அதற்கு எவ்வளவு செலவழித்தீர்கள் என்பது தெரியாது. உங்கள் Apple Cash கார்டு விவரங்களைப் பார்க்க, வாலெட்டில் கார்டைத் தட்டி, “மேலும்” பட்டனைத் தட்டுவதன் மூலம் Apple Cash வணிகம் சார்ந்த கணக்கு எண்களை நீங்கள் நிர்வகிக்கலாம்.
உங்கள் நண்பருக்குத் தொடர்ச்சியாக பேமெண்ட் அனுப்புதல், உங்கள் Apple Cash பேலன்ஸில் தானாகப் பணத்தை மீண்டும் ஏற்றுதல் போன்றவற்றுக்கு நீங்கள் Apple Cashஐப் பயன்படுத்தினால், தொடர் பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பாக அங்கீகரிப்பதற்கு உங்கள் Apple Pay டெபிட் கார்டுகளுடன் தொடர்புடைய வணிக டோக்கனை Apple Cash கோரிச் சேமிக்கும். வணிக டோக்கன் உருவாக்கம் Apple கட்டமைப்பைச் சார்ந்துள்ளது என்பதால் நீங்கள் அமைத்த தொடர் பேமெண்ட், தானாக மீண்டும் ஏற்றுதல் ஆகிய விருப்பங்கள் மற்றும் தொகை குறித்து Appleக்குத் தெரியும். ஆனால் அதற்கு நீங்கள் யாருடன் பரிவர்த்தனை செய்கிறீர்கள் என்பது பற்றியோ உங்கள் பேமெண்ட்டுடன் தொடர்புடைய மெமோ பற்றியோ தெரியாது.
உங்கள் Apple Cash கணக்கை மூடுதல்
உங்கள் Apple Cash கணக்கு மூடப்பட்டால் இதுவரையான பரிவர்த்தனைகள் உள்ளிட்ட கணக்கு பற்றிய தகவல்கள், சட்டரீதியாகத் தேவைப்படும் வகையிலும் மோசடியைத் தடுப்பதற்காகவும் தக்கவைக்கப்படும்.
Apple Cash குடும்பம்
குடும்பப் பகிர்வு அம்சம் செயல்படுத்தப்பட்டுள்ளபோது, 18 வயதுக்குக் கீழுள்ள குடும்ப உறுப்பினர்கள் (13 வயதுக்குக் கீழுள்ளவர்கள் உட்பட) Apple Cashஐப் பயன்படுத்த குடும்ப ஒருங்கிணைப்பாளர் அனுமதிக்கலாம். Apple Cash குடும்பத்தின் தொடக்கச் செயல்முறையில் வழங்கப்பட்டுள்ள தகவல்களை Apple பயன்படுத்துவதுடன் சிறார் கணக்கை அமைக்க அத்தகைய தகவல்களை Green Dot Bank உடனும் பகிரும். கணக்கை வழங்கவும், மோசடியைத் தடுக்கவும், சட்டத்துடன் இணங்கவும், Apple Cash கணக்கு பற்றிய தகவல்கள் Green Dot Bank உடனும் பகிரப்படும்.
மெசேஜஸைப் பயன்படுத்தி குழந்தை யாருக்குப் பணம் அனுப்பலாம் என்பதைக் குடும்ப ஒருங்கிணைப்பாளர்கள் வரையறுக்கலாம் என்றாலும் யார் வேண்டுமானாலும் குழந்தையின் கணக்கிற்குப் பணத்தை அனுப்பலாம். குடும்ப ஒருங்கிணைப்பாளரின் விருப்பங்களை நடைமுறைப்படுத்துவதற்கான கட்டுப்பாட்டை Apple சேமிக்கும். குடும்ப ஒருங்கிணைப்பாளர் எப்போது வேண்டுமானாலும் வாலெட்டில் உள்ள, சிறாரின் Apple Cash கார்டைத் தட்டி, குடும்பப் பகிர்வு அமைப்புகள் > குடும்பப் பகிர்வு > Apple Cash என்பதைத் தேர்ந்தெடுத்து, சிறாரின் பெயரைத் தட்டி Apple Cash சிறார் கணக்கு அமைப்புகளைப் பார்க்கலாம், மாற்றலாம்.
குடும்ப ஒருங்கிணைப்பாளர்கள், பெற்றோர் மற்றும் சட்டப்பூர்வப் பாதுகாவலர்களாலும் சிறாரின் கணக்குகளுக்கான பேலன்ஸ் மற்றும் இதுவரையான பரிவர்த்தனைகளை (பரிவர்த்தனைத் தொகைகள், தேதிகள், யாருக்குப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்கள் போன்றவை உட்பட) பார்க்க முடியும். மெசேஜஸில் பரிவர்த்தனைக்கான மெமோ புலத்தில் வழங்கப்பட்டுள்ள விளக்கங்கள் போன்ற கூடுதல் பரிவர்த்தனைத் தகவல்கள் இருந்தால் அவையும் காட்டப்படும். சிறார் கணக்கில் செய்யப்பட்ட இதுவரையான பரிவர்த்தனைகளைப் பார்க்க, வாலெட்டில் உள்ள Apple Cash கார்டைத் தட்டி, குடும்பப் பகிர்வு அமைப்புகள் > குடும்பப் பகிர்வு > Apple Cash > [பிள்ளையின் பெயர்] > பரிவர்த்தனைகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
13 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பிள்ளைகள் அவர்களது Apple Cash கணக்கில் நிதியை ஏற்றலாம். ஏதேனும் நிதி சேர்க்கப்பட்டால் அது கணக்கு உரிமையாளருக்குக் காட்டப்படும்.
பிள்ளைக்கு 18 வயது பூர்த்தியாகும்போது, அவர் இணைக்கப்பட்ட தனது கணக்கிற்கான உரிமையைப் பெற்று அதைத் தனித்து இயங்கக்கூடிய Apple Cash கணக்காக மேம்படுத்தலாம். கணக்கு மேம்படுத்தப்பட்டால், குடும்ப ஒருங்கிணைப்பாளர்கள், பெற்றோர், சட்டப்பூர்வப் பாதுகாவலர்கள் ஆகியோரால் பிள்ளையின் கணக்குத் தகவல்களையோ பிள்ளையின் கடந்த அல்லது வருங்கால Apple Cash பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களையோ இனி அணுக முடியாது. மேம்பாட்டிற்கு முன்பு செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்கள் மேம்படுத்தப்பட்ட கணக்கில் தொடர்ந்து காட்டப்படும்.
குடும்பத்தை விட்டு பிள்ளை வெளியேறினால் இணைக்கப்பட்ட சிறார் கணக்கு மூடப்படும். மேலே “உங்கள் Apple Cash கணக்கை மூடுதல்” பக்கத்தில் விவரித்தபடி, கணக்கு பற்றிய தகவல்கள் கையாளப்படும்.
பிள்ளைகளின் தனிப்பட்ட தரவுகளை Apple கையாளும் விதம் பற்றிய தகவல்களைப் பெற, பிள்ளைகளுக்கான குடும்பத் தனியுரிமை வெளியீடு பக்கத்தை www.apple.com/in/legal/privacy/en-ww/parent-disclosure தளத்தில் பாருங்கள்.
மற்றவை
தொடர்புடைய தனிப்பட்ட தரவுகளின் செயலாக்கத்திற்குப் பொறுப்பேற்கக்கூடிய Apple Payments Inc. நிறுவனத்தால் மேலே விவரிக்கப்பட்ட நேரடி பேமெண்ட்கள் அல்லது விநியோகங்களுக்கான அம்சங்கள் வழங்கப்படுகின்றன. முற்றிலும் Appleக்குச் சொந்தமான துணைநிறுவனமான Apple Payments Services LLC நிறுவனத்தால் பிற Apple Cash தொழில்நுட்பச் சேவைகள் வழங்கப்படுகின்றன.
Apple Cash மூலம் செய்யப்பட்ட மோசடிப் பரிவர்த்தனை பற்றி உங்கள் நிதி நிறுவனத்திடம் நீங்கள் புகாரளித்தால், புகாரளிக்கப்பட்ட பரிவர்த்தனை குறித்து நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்க உதவும் வகையில் IP முகவரி, Apple கணக்கு, தொலைபேசி எண், சாதன அடையாளத் தகவல் போன்று புகார் தொடர்பான சில தகவல்களை Green Dot Bankஇடம் Apple கோரலாம். மோசடித் தடுப்புக்காக, இந்தப் பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை உங்கள் நிதி நிறுவனத்துடனும் பேமெண்ட் நெர்வொர்க்குடனும் (எ.கா., Visa அல்லது American Express) Green Dot Bank பகிரலாம். Green Dot Bank உங்கள் தனிப்பட்ட தரவை எப்படிப் பாதுகாக்கிறது மற்றும் பகிர்கிறது என்று அறிய அதன் தனியுரிமைக் கொள்கையை நீங்கள் https://applecash.greendot.com/privacy இணையதளத்தில் பார்க்கலாம்.
Apple Cashஐ மேம்படுத்த, நீங்கள் Apple Cashஐப் பயன்படுத்தும் விதம் பற்றிய தகவல்களை Apple சேகரிக்கும் மற்றும் உங்களைத் தனிப்பட்ட முறையில் அடையாளங்காணாத வகையில் அந்தத் தகவல்களைச் சேமிக்கும். பிற Apple தயாரிப்புகளையும் சேவைகளையும் மேம்படுத்துவதற்காகவும் மார்க்கெட்டிங்கிற்காகவும் மோசடித் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காகவும் இந்தத் தகவல்களை Apple பயன்படுத்தக்கூடும். Green Dot Bank நிறுவனத்திடம் உள்ள அடையாளம் நீக்கப்பட்ட சில Apple Cash தகவல்களையும் Apple அணுகக்கூடும். மேலும் அந்தத் தகவல்களை வணிகப் பகுப்பாய்வுகளுக்கும், Apple Cash மற்றும் தொடர்புடைய சேவைகளை மேம்படுத்தவும் பயன்படுத்தும்.
இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டபடி, சேகரிக்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றத் தேவைப்படும் காலம் வரை அல்லது சட்டப்படி தேவைப்படும் காலம் வரை மட்டுமே Apple தனிப்பட்ட தரவைத் தக்கவைக்கும். தக்கவைத்தல் காலத்தை மதிப்பிடும்போது, சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவைத் தக்கவைப்பது தேவையா என்று முதலில் கவனமாக ஆராய்கிறோம். தக்கவைத்தல் தேவை எனில், சட்டப்படி அனுமதிக்கப்பட்ட குறுகிய காலத்திற்கு மட்டுமே தனிப்பட்ட தரவைத் தக்கவைக்க முயல்கிறோம்.
Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.
2026-05-11