Apple Fitness+ & தனியுரிமை
Apple Fitness+ உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
![]()
- சந்தா சேரும் முன்பாக Fitness+ சேவையை நீங்கள் ஆராயும்போது, உங்கள் உலாவல் செயல்பாடு பற்றிய தகவல்களை Apple சேகரிக்கிறது. நீங்கள் பார்க்கும் உடற்பயிற்சி முன்னோட்டங்கள், செயலியை நீங்கள் பார்வையிடக் காரணமாக இருந்த மார்க்கெட்டிங் பிரச்சாரம் பற்றிய தகவல்கள் போன்றவையும் இதில் அடங்கும். இந்தத் தகவல்கள் உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்டு, சேவையை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும்.
- நீங்கள் சந்தா சேர்ந்தால், உங்களுக்குச் சேவை வழங்குவதற்காகவும், மார்க்கெட்டிங் தகவல்களை உங்களுக்கு அனுப்புவதற்காகவும், (கிடைக்கும்பட்சத்தில்) App Store, Apple News, பங்குகள் செயலிகளில் காட்டப்படும் விளம்பரங்கள் உங்களுக்குப் பொருத்தமாக இருப்பதை உறுதிசெய்வதற்காகவும் உங்கள் சந்தா நிலை பற்றிய தகவல்களை உங்கள் Apple கணக்குடன் இணைத்து நாங்கள் பயன்படுத்துவோம். Fitness+ சேவையை நீங்கள் பயன்படுத்துவது தொடர்பான தரவுகள் Fitness+ சேவைக்கான ரேண்டம் அடையாளத் தகவலுடன் சேமிக்கப்படும், இவை உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்படாது.
- ஃபிட்னஸ் செயலியில் செயல்பாட்டுப் பகிர்வை நீங்கள் செயல்படுத்தினால், உங்கள் Fitness+ உடற்பயிற்சி மற்றும் செயல்பாட்டுத் தரவுகள் நண்பர்களுடன் பகிரப்படும் மற்றும் Appleக்கு அனுப்பப்பட்டு குறுகிய காலத்திற்குத் தக்கவைக்கப்படும், இதன்மூலம் நீங்கள் தேர்வுசெய்யும் நபர்களுடன் இந்தத் தரவுகளைப் பாதுகாப்பான முறையில் Apple பகிரலாம். இந்தத் தரவுகளில் இவையும் அடங்கும்: செலவழிக்கப்படும் கலோரிகள் அல்லது கிலோஜூல்கள், உடற்பயிற்சி நிமிடங்கள், நிற்றல் அல்லது வீல்சேர் இயக்க நேரம், காலடிகள், நேரமண்டலம் மற்றும் உடற்பயிற்சியின் பெயர், வகை, காலஅளவு போன்ற உடற்பயிற்சி குறித்த தகவல்கள்.
Apple Fitness+ என்பது பயிற்சி நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் உடற்பயிற்சிகளையும் தியானப் பயிற்சிகளையும் வழங்கும் ஃபிட்னஸ் மற்றும் நல்வாழ்வுச் சேவையாகும்.
சந்தாவிற்கு முந்தைய செயல்பாடு
சந்தா சேர்வதற்கு முன்பு Apple Fitness+ சேவையை நீங்கள் ஆராயலாம், உடற்பயிற்சி முன்னோட்டங்களைப் பார்க்கலாம். Fitness+ தாவலில் உங்கள் உலாவல் செயல்பாடு பற்றிய தகவல்களை Apple சேகரிக்கும். நீங்கள் பார்க்கும் பக்கங்கள், பார்வையிடும் உடற்பயிற்சி முன்னோட்டங்கள், பயன்படுத்தும் சாதன வகை, அறிவிப்புகளைக் கையாளும் விதம் போன்றவையும் இதில் அடங்கும். மின்னஞ்சல் அல்லது டிஜிட்டல் விளம்பரப்படுத்தல் போன்ற மார்க்கெட்டிங் பிரச்சார இணைப்பு வழியாக Apple Fitness+ தாவலில் நீங்கள் உள்நுழைந்தால், மார்க்கெட்டிங் ஆதாரத்திற்கு அட்ரிபியூஷன் வழங்குவதற்காகவும் எங்கள் மார்க்கெட்டிங் பிரச்சாரங்களை மேம்படுத்துவதற்காகவும் மார்க்கெட்டிங் பிரச்சாரம் பற்றிய தகவல்களை Apple பதிவுசெய்யும்.
இந்தத் தகவல்களை உங்கள் Apple கணக்குடன் இணைந்து Apple சேமிக்கும், Apple Fitness+ சேவையை மேம்படுத்துவதற்காக இதைப் பயன்படுத்தும்.
சந்தாவிற்கு முந்தைய உடற்பயிற்சிகள்
Apple Fitness+ திட்டத்தில் சந்தா சேர்வதற்கு முன், குறிப்பிட்ட உடற்பயிற்சிகள் மற்றும் தியானங்களை நீங்கள் செய்து பார்க்கலாம். சந்தாவிற்கு முந்தைய இந்த உடற்பயிற்சிகள் மற்றும் தியானங்களை நீங்கள் செய்யும்போது, உடற்பயிற்சிகள் & தியானங்களின் பெயர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், நீங்கள் பயிற்சி செய்யும் எண்ணிக்கை, Apple Fitness+ சந்தாவிற்கு நீங்கள் பதிவுசெய்கிறீர்களா என்பது பற்றிய தகவல்களை Apple சேகரிக்கும். பயனர்களுக்கு ஆர்வமான உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ளவும் Apple Fitness+ திட்டத்தை மேம்படுத்தவும் இந்தத் தகவலைச் சேகரிக்கிறோம்.
இந்தத் தகவலை ஒருங்கிணைக்கப்பட்ட வடிவில் Apple சேமிக்கிறது மற்றும் இது உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்படாது.
Apple Fitness+ செயல்பாடு மற்றும் உடற்பயிற்சிகள்
Apple Fitness+ சேவைக்கு நீங்கள் சந்தா சேர்ந்ததும், ஃபிட்னஸ், உடற்பயிற்சி, மைண்ட்ஃபுல்னஸ் செயலிகளில் Fitness+ அம்சத்தில் உங்கள் உலாவல் செயல்பாடு பற்றிய தகவல்களை Apple சேகரிக்கக்கூடும். நீங்கள் பார்வையிடும் பக்கங்கள், பயன்படுத்தும் அம்சங்கள், வெளிப்புற இணைப்பு மூலம் Fitness+ செயலியைத் திறத்தல், இணைப்பு மூலம் வெளியேறி Apple Music செயலிக்குச் செல்லுதல் போன்று நீங்கள் செயலியைத் திறப்பதற்கும் மூடுவதற்கும் காரணமாக இருந்த செயல்கள் பற்றிய தகவல்கள் போன்றவை இதில் அடங்கும். நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தின் வகை, அறிவிப்புகளை நீங்கள் கையாளும் விதம், உங்கள் சந்தாக்கள் போன்றவற்றைப் பற்றிய தகவல்களையும் உங்கள் பாலினம், வயது வரம்பு போன்ற சில மக்கள்தொகைத் தகவல்களையும் Apple சேகரிக்கும்.
நீங்கள் Fitness+ உடற்பயிற்சியோ தியானப் பயிற்சியோ செய்யும்போது அந்த அமர்வைப் பற்றி, அதை நீங்கள் கையாளும் விதம் பற்றிய தகவல்களை Apple சேகரிக்கும். அமர்வின் காலஅளவும், பிளே செய்தல் மற்றும் இடைநிறுத்துதல் போன்ற நீங்கள் செய்யும் செயல்களும், அமர்வை எந்த அளவு நிறைவுசெய்தீர்கள், அது ஆடியோ அமர்வா வீடியோ அமர்வா, மொழி அமைப்புகள், அமர்வைப் பதிவிறக்கம் செய்தீர்களா ஸ்டிரீமிங் செய்தீர்களா, அமர்வில் AirPlay அல்லது பிக்சர்-இன்-பிக்சர் போன்ற அம்சங்களைப் பயன்படுத்துகிறீர்களா என்பன போன்ற தகவல்களும் இதில் அடங்கும். “Fitness+ சேவையை மேம்படுத்துதல்” அம்சத்தை நீங்கள் தேர்வுசெய்திருந்தால் மட்டுமே உங்கள் உடற்பயிற்சி அல்லது தியானப் பயிற்சியின் பெயர்களையும் பயிற்சியாளர்கள் விவரங்களையும் Apple சேகரிக்கும். நீங்கள் பிற பயனர்களுடன் இணைந்து உடற்பயிற்சி செய்ய SharePlayஐப் பயன்படுத்தினால், SharePlay அமர்வின்போது நீங்கள் உடற்பயிற்சி செய்தீர்கள் என்ற விவரம், அமர்வில் பங்கேற்ற சாதனங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை Apple சேகரிக்கும், ஆனால் SharePlay அமர்வின் பங்கேற்பாளர்களை அடையாளப்படுத்தும் தகவல்கள் எதையும் சேகரிக்காது.
Apple Fitness+ சேவைக்கான ரேண்டமான, மாறக்கூடிய அடையாளத் தகவலுடன் இணைத்து இந்தத் தரவுகள் அனைத்தும் சேமிக்கப்படும், உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்டிருக்காது. சேவையை வழங்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் இந்தத் தகவல்களை Apple பயன்படுத்துகிறது.
iCloud ஒத்திசைவு
உங்கள் வசதிக்காக, சாதனங்கள் அனைத்திலும் உங்கள் அனுபவத்தைச் சமீபத்திய நிலையில் வைத்திருக்க iCloudஐ Apple Fitness+ பயன்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, உங்கள் சாதனங்கள் அனைத்திலும் உடற்பயிற்சி அல்லது தியானப் பயிற்சியில் உங்கள் செயல்பாடுகளை ஒத்திசைப்பதற்காக iCloudஐ Fitness+ பயன்படுத்தும். iOS அல்லது iPadOS சாதனத்தில் அமைப்புகள் > [உங்கள் பெயர்] > iCloud > iCloudஇல் சேமிக்கப்பட்டவை > அனைத்தையும் காட்டு என்பதற்குச் சென்று, Fitness+ என்பதைத் தட்டி ஆஃப் செய்து நீங்கள் இதை எப்போது வேண்டுமானாலும் முடக்கலாம்.
பர்ன் பார்
அதே உடற்பயிற்சியை நிறைவுசெய்த பிற பயனர்களுடன் ஒப்பிட்டு உங்கள் உடற்பயிற்சிச் செயல்திறனை அளவிட “பர்ன் பார்” உங்களுக்கு உதவுகிறது. “பர்ன் பார்” அம்சத்தை நீங்கள் செயல்படுத்தினால், அந்த உடற்பயிற்சிக்கான பர்ன் பாரில் சேர்ப்பதற்காக அந்த உடற்பயிற்சியின் “பணிக்குச் சமமான வளர்சிதை மாற்ற” மதிப்பை (உங்கள் MET மதிப்பு) அடையாளம் நீக்கப்பட்ட வகையில் Apple சேமிக்கும், இது உங்கள் Apple கணக்குடனோ பிற Apple Fitness+ தரவுகளுடனோ இணைக்கப்பட்டிருக்காது. உடற்பயிற்சியை நிறைவுசெய்யும்போது நீங்கள் உடற்பயிற்சி அமைப்புகளுக்குச் சென்று “பர்ன் பார்” அம்சத்தை எப்போது வேண்டுமானாலும் முடக்கலாம்.
செயல்பாட்டுப் பகிர்வு
ஃபிட்னஸ் செயலியில் செயல்பாட்டுப் பகிர்வை நீங்கள் செயல்படுத்தினால், உங்கள் Fitness+ உடற்பயிற்சி மற்றும் செயல்பாட்டுத் தரவுகள் நண்பர்களுடன் பகிரப்படும் மற்றும் Appleக்கு அனுப்பப்படும், இதன்மூலம் நீங்கள் தேர்வுசெய்யும் நபர்களுடன் இந்தத் தரவுகளைப் பாதுகாப்பான முறையில் Apple பகிரலாம். இந்தத் தரவுகளில் இவையும் அடங்கும்: செலவழிக்கப்படும் கலோரிகள் அல்லது கிலோஜூல்கள், உடற்பயிற்சி நிமிடங்கள், நிற்றல் அல்லது வீல்சேர் இயக்க நேரம், காலடிகள், நேரமண்டலம் மற்றும் உடற்பயிற்சியின் பெயர், வகை, காலஅளவு போன்ற உடற்பயிற்சி குறித்த தகவல்கள். Apple உங்கள் உடற்பயிற்சி மற்றும் செயல்பாட்டுத் தரவுகளைக் குறுகிய காலத்திற்குத் தக்கவைக்கும், செயல்பாட்டுப் பகிர்வு அம்சத்தைச் செயல்படுத்துவதற்காக மட்டுமே இந்தத் தரவுகளைப் பயன்படுத்தும். iOS 18 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு மற்றும்/அல்லது watchOS 11 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் மற்றும் iOS 18 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு மற்றும்/அல்லது watchOS 11 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பைப் பயன்படுத்தும் நண்பருடன் உடற்பயிற்சி மற்றும் செயல்பாட்டுத் தரவுகளைப் பகிர்கிறீர்கள் எனில், உங்கள் தரவுகள் முழுமையாக என்கிரிப்ட் செய்யப்படும், உங்கள் நண்பருடன் நீங்கள் பகிரும் உடற்பயிற்சி மற்றும் செயல்பாட்டுத் தரவுகளை Appleஆல் படிக்க முடியாது.
Apple Music
Apple Fitness+ பிளேலிஸ்ட்கள் Apple Music செயலியில் கிடைக்கின்றன. Apple Music செயலியில் ஒரு பிளேலிஸ்டைக் கேட்க நீங்கள் தட்டினால், அந்தச் செயலி திறக்கப்படும், அதில் நீங்கள் செய்யும் செயல்பாடுகள் www.apple.com/in/legal/privacy/data/en/apple-music இணையதளத்தில் உள்ள “Apple Music & தனியுரிமை” கொள்கைக்கு உட்பட்டது. எடுத்துக்காட்டாக, உங்கள் பிளேலிஸ்ட்களின் தலைப்புகள் Appleக்குத் தெரியும், இது நீங்கள் நிறைவுசெய்த உடற்பயிற்சியை வெளிப்படுத்தக்கூடும். Apple Music செயலியில் நண்பர்களுடன் பிளேலிஸ்ட்களைப் பகிர்கிறீர்கள் எனில், உங்கள் நண்பர்களுக்கும் அந்தத் தகவல்கள் தெரியவரும்.
மூன்றாம் தரப்பினருடன் பகிர்தல்
Apple Fitness+ சேவையில் நீங்கள் பிளே செய்த பாடல்கள் பற்றிய தனிப்பட்டவை அல்லாத சில தரவுகளை இந்தச் சேவையுடன் தொடர்புடைய உத்திசார் கூட்டாளர்களுக்கு (எ.கா. ரெக்கார்டு லேபிள்கள்) வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், இதன்மூலம் தங்கள் படைப்புகளின் செயல்திறனை அவர்கள் மதிப்பிடலாம், ராயல்டி மற்றும் கணக்கியல் தேவைகளைப் பூர்த்திசெய்யலாம், தங்கள் தயாரிப்புகளையும் சேவைகளையும் மேம்படுத்தலாம்.
உங்களுடனான தகவல்தொடர்புகள்
Fitness+ உடற்பயிற்சி குறித்த பிரத்தியேகப் பரிந்துரைகள் சாதனத்தின் நுண்ணறிவைப் பயன்படுத்தி வழங்கப்படுகின்றன, எனவே இதுவரை நீங்கள் செய்த உடற்பயிற்சிகள் பற்றிய தகவல்களை Apple சேமிக்கத் தேவையில்லை. உதாரணத்திற்கு, உங்களுக்கு விருப்பமான பயிற்சியாளர்கள் மற்றும் வகைப் பிரிவுகள், நீங்கள் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துபவரா இல்லையா போன்ற சாதனத்தில் உள்ள தகவல்கள் உங்களுக்கேற்ற உடற்பயிற்சித் திட்டத்தைப் பரிந்துரைக்கப் பயன்படுத்தப்படலாம்.
Apple Fitness+ மற்றும் நீங்கள் விரும்பக்கூடிய பிற தொடர்புடைய Apple தயாரிப்புகள், சேவைகள் மற்றும் சலுகைகள் (Apple One உட்பட) பற்றிய தகவல்களை உங்களுக்கு அனுப்ப, உங்களுக்குச் சொந்தமான Apple தயாரிப்புகள், Apple சேவைகளுக்கான உங்கள் சந்தாக்கள் போன்ற உங்கள் கணக்கு பற்றிய தகவல்களை Apple பயன்படுத்தக்கூடும். சேவைச் சலுகைகளுக்கான தகுதியைச் சரிபார்க்க உங்கள் சாதன வரிசை எண் பயன்படுத்தப்படலாம். நீங்கள் ஒரு குடும்பத்தில் இருந்தால், குடும்பப் பகிர்வின் வழியாக உங்களுக்குக் கிடைக்கக்கூடிய தயாரிப்புகள், சேவைகள் மற்றும் சலுகைகள் பற்றிய தகவல்களை Apple உங்களுக்கு அனுப்பக்கூடும். நீங்கள் Apple One சந்தா செலுத்தியிருந்தால், சந்தா செலுத்தியுள்ள சேவைகளின் ஒவ்வொரு அம்சங்களைப் பற்றிய மின்னஞ்சல்களையும் அறிவிப்புகளையும் நாங்கள் அனுப்பக்கூடும். Apple Fitness+ சேவையில் கிடைக்கும் புதிய அம்சங்கள், உள்ளடக்கம் மற்றும் சலுகைகள் பற்றிய அறிவிப்புகளை Apple Fitness+ உங்களுக்கு அனுப்பக்கூடும். உங்கள் அறிவிப்பு முன்னுரிமைகளை மாற்ற, iOS அல்லது iPadOS சாதனத்தில், அமைப்புகள் > அறிவிப்புகள் > ஃபிட்னஸ் என்பதற்குச் செல்லுங்கள்.
விளம்பரப்படுத்துதல்
பிரத்தியேக விளம்பரங்கள் அமைப்பு ஆன் செய்யப்பட்டிருந்தால், App Store, Apple News மற்றும் பங்குகள் செயலிகளில் காட்டப்படும் விளம்பரங்கள் பொருத்தமாக இருப்பதை உறுதிசெய்வதற்காக Appleஇன் விளம்பரப்படுத்தல் தளம் உங்கள் Fitness+ சந்தா நிலை பற்றிய தகவல்களைப் பயன்படுத்தக்கூடும், Apple One வழியாக சந்தாச் செலுத்தினீர்களா என்ற தகவலும் இதில் அடங்கும்.
நீங்கள் Appleஇன் விளம்பரப்படுத்தல் தளத்தில் இருந்து உங்கள் ஆர்வங்களை இலக்கிடும் விளம்பரங்களைப் பெற விரும்பவில்லையெனில், பிரத்தியேக விளம்பரங்களை ஆஃப் செய்யலாம். பிரத்தியேகமாக்கப்பட்ட விளம்பரங்களை ஆஃப் செய்வது விளம்பரங்களை இலக்கிடுவதற்காக உங்கள் தகவல்களைப் பயன்படுத்துவதில் இருந்து Appleஐத் தடுக்கும். இது நீங்கள் பெறும் விளம்பரங்களின் எண்ணிக்கையைக் குறைக்காது, ஆனால் விளம்பரங்கள் உங்களுக்குப் பொருத்தமானதாக இருப்பது குறையக்கூடும். உங்கள் iOS அல்லது iPadOS சாதனத்தில் பிரத்தியேக விளம்பரங்களை முடக்க, அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > Apple விளம்பரப்படுத்தல் என்பதற்குச் சென்று “பிரத்தியேக விளம்பரங்கள்” என்பதைத் தட்டி அதை ஆஃப் செய்யலாம். Macஇல், சிஸ்டம் அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > Apple விளம்பரப்படுத்தல் என்பதற்குச் சென்று, “பிரத்தியேக விளம்பரங்கள்” என்பதைத் தேர்வுநீக்குங்கள்.
Apple விளம்பரப்படுத்தல் & தனியுரிமை பற்றி மேலும் அறிய www.apple.com/in/legal/privacy/data/en/apple-advertising இணையதளத்தைப் பார்வையிடுங்கள். App Store, Apple News செயலிகளில் பிரத்தியேக விளம்பரங்களைப் பெறுவதற்கான ஒப்புதலைத் திரும்பப் பெறுவது எப்படி என்று அறிய support.apple.com/105131 இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.
மோசடி மற்றும் பிற தீங்கிழைக்கும் செயல்பாட்டைத் தடுத்தல்
மோசடி மற்றும் பிற தீங்கிழைக்கும் செயல்பாட்டைத் தடுப்பதற்காகத் தனிப்பட்ட தரவையும் சேகரிக்கிறோம். நீங்கள் வாங்க முயலும்போது உங்கள் சாதனத்தை நீங்கள் பயன்படுத்தும் விதத்தின் அடிப்படையில் சாதனத்தின் நம்பகத்தன்மை மதிப்பெண்ணை நாங்கள் கணக்கிடுகிறோம், பயன்படுத்தும் விதம் என்பதில் ஃபோன் அழைப்புகளின் தோராயமான எண்ணிக்கை, நீங்கள் அனுப்பும் அல்லது பெறும் மின்னஞ்சல்கள் தோராயமான எண்ணிக்கை அடங்கும். உங்கள் சாதனத்தில் உள்ள பின்னணி மதிப்புகளை Apple அறிந்துகொள்ளாத வகையில் இந்தக் கணக்கீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண் குறிப்பிட்ட காலத்திற்கு எங்கள் சர்வரில் சேமிக்கப்பட்டிருக்கும். உங்கள் Fitness+ சந்தாத் திட்டம் தானாகப் புதுப்பிக்கப்படும்படி அமைக்கப்பட்டிருந்தால், அந்தக் கோரிக்கையைச் செயலாக்கி, பேமெண்ட் கூட்டாளரிடமிருந்து அங்கீகாரத்தைப் பெறுவதற்கு முன்பாக உங்கள் சந்தாவிற்குத் தொடர்ந்து அணுகல் வழங்குவதா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க Apple உடனான உங்கள் வணிகத் தொடர்புகள் பற்றிய இதுவரையான தகவல்களையும் Apple பயன்படுத்தக்கூடும்.
தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்குப் பொருந்தக்கூடிய அடிப்படைச் சட்டங்கள்
பொதுவாக Apple உடனான உங்கள் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்காகவும், சேவைகளை வழங்கத் தேவைப்படும் அளவிற்கும், எங்கள் சட்டரீதியான கடமைகளுக்கு இணங்குவதற்காகவும் Apple Fitness+ சேவையில் உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்குகிறோம். ஒப்புதல் என்பது சட்டரீதியான அடிப்படையாக அமையும் இடங்களில், பொருந்தும் உள்ளூர் சட்டங்களின் அடிப்படையில் அதைப் பெற முயல்கிறோம்.
பொருந்தும் உள்ளூர் சட்டங்கள் குறிப்பிடும் இடங்களில், பின்வரும் காரணங்களுக்காக எங்களின் அல்லது மூன்றாம் தரப்பின் நியாயமான நல நோக்கங்களுக்காகத் தேவைப்படும் அளவிற்குத் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்குகிறோம்:
- உங்களுக்காகவும் பிறருக்காகவும் Apple Fitness+ சேவையை மேம்படுத்துதல்
- சலுகைகளுக்கான தகுதிநிலையைச் சரிபார்த்தல், Apple Fitness+ மற்றும் நீங்கள் விரும்பக்கூடிய தொடர்புடைய பிற Apple தயாரிப்புகள், சேவைகள் மற்றும் சலுகைகள் பற்றிய தகவல்களை உங்களுக்கு அனுப்புதல்
- மோசடி மற்றும் பிற தீங்கிழைக்கும் செயல்பாட்டைத் தடுத்தல்
பயன்படுத்தப்படும் தரவில் இவையும் அடங்கும்:
- சந்தா சேர்வதற்கு முன்பு Fitness+ தாவலில் உங்களுடைய உலாவல் செயல்பாடு. எ.கா., நீங்கள் பார்வையிடும் பக்கங்கள், நீங்கள் பார்க்கும் உடற்பயிற்சிகளின் முன்னோட்டங்கள், அறிவிப்புகளுடனான உங்கள் தொடர்புமுறைகள், மார்க்கெட்டிங் பிரச்சாரத்தில் உள்ள இணைப்பின் மூலம் Apple Fitness+ தாவலில் உள்நுழைகிறீர்களா என்னும் தகவல் போன்றவை
- உங்கள் சாதனம் மற்றும் உங்கள் கணக்கு பற்றிய விவரங்கள்
- சாதனத்தின் நம்பகத்தன்மை மதிப்பெண்
தக்கவைத்தல்
உங்கள் பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய தனிப்பட்ட தரவையும் Apple Fitness+ பயன்பாடு பற்றியும், வணிகத் தேவை, ஒப்பந்தக் கடமை அல்லது சட்டப்பூர்வத் தேவைக்காக எங்களுக்குத் தேவைப்படும் காலம் வரை மட்டுமே Apple தக்கவைக்கும். Apple Fitness+இல் சந்தா சேர்வதற்கு முன்பு சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவுகள் இரண்டு ஆண்டுகள் வரை சேமிக்கப்படும். நீங்கள் உங்கள் கணக்கை மூடிய பின்னர் அல்லது Apple Fitness+ செயலியில் இருந்து சந்தா விலகிய பின்னரும் இதுவரையில் வாங்கிய சந்தாக்கள் போன்ற சில தகவல்கள் (உங்கள் சேமிக்கப்பட்ட கார்டு விவரங்கள் இல்லை) வணிகப் பதிவுகளாகச் சேமிக்கப்பட்டிருக்கக்கூடும்.
Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.
2026-03-30