Apple மேப்ஸ் & தனியுரிமை
Apple மேப்ஸ் (“மேப்ஸ்”) அடிப்படையிலேயே உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் மேப்ஸ் பயன்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ள தனிப்பட்ட தரவைச் சேகரிக்க மாட்டோம்.
மேப்ஸ் செயலி உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் அனுபவத்தைச் சிறப்பாக்கத் தேவைப்படும் தரவை மட்டும் சேகரிக்க நாங்கள் கடினமாக முயல்கிறோம். நாங்கள் தரவைச் சேகரிக்கும்போது எதைச் சேகரிக்கிறோம், அது எங்களுக்கு ஏன் தேவைப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்வது முக்கியம் என நினைக்கிறோம்.
உள்நுழைதல் மற்றும் ஒத்திசைத்தல்
மேப்ஸ் செயலியைப் பயன்படுத்த உங்கள் Apple கணக்கில் உள்நுழைய வேண்டியதில்லை. உங்கள் கணக்கில் உள்நுழைவதைத் தேர்வுசெய்வதுடன் இரு காரணி அங்கீகாரத்தைச் செயல்படுத்தியிருந்தால், மேப்ஸ் உங்கள் தரவை உங்கள் சாதனங்கள் அனைத்திலும் முழுமையான என்கிரிப்ஷனைப் பயன்படுத்தி ஒத்திசைத்துச் சேமிக்கிறது. உதாரணமாக, நீங்கள் பின்செய்த இடங்கள், சமீபத்தியவை, சென்ற இடங்கள், வழிகாட்டிகள் ஆகியவை முழுமையாக என்கிரிப்ட் செய்யப்படுவதால் Apple அவற்றைப் படிக்க முடியாது. உங்கள் ETAஐப் பிற மேப்ஸ் பயனர்களுடன் பகிரும்போது, பகிரப்பட்ட இருப்பிடத்தை Apple பார்க்க முடியாது.
உங்கள் Apple கணக்கில் உள்நுழைந்திருந்தால், உங்களுக்கான சில குறிப்பிட்ட அம்சங்களை வழங்குவதைத் தீர்மானிப்பதற்கு உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள நீங்கள் பெரியவரா அல்லது குழந்தையா போன்ற தகவலையும் மேப்ஸ் பயன்படுத்த முடியும். மேப்ஸ் அந்தத் தகவல்களைச் சேமிக்காது.
இருப்பிடம்
பெரும்பாலான மேப்ஸ் அம்சங்கள் சிறப்பாகச் செயல்பட உங்கள் இருப்பிடப் பயன்பாடு தேவை. உங்கள் இருப்பிடத்தின் மூலம் உங்களின் அடையாளத்தைத் தெரிந்துகொள்ளலாம் என்பதால், 24 மணிநேரத்திற்குள் நாங்கள் துல்லியமான இருப்பிடங்களில் இருந்து துல்லியம் குறைவான இருப்பிடங்களாக மாற்றுகிறோம். மேப்ஸை நீங்கள் வழிகாட்டுவதற்காகப் பயன்படுத்தினால், உங்கள் வழி தொடங்கும் இடத்தில் இருந்து துல்லியமான இருப்பிடங்களைத் துல்லியம் குறைவான பகுதியாக நாங்கள் மாற்றுவோம்.
உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில் அமைப்புகள் > செயலிகள் > மேப்ஸ் > இருப்பிடம் என்பதற்குச் சென்று துல்லியமான இருப்பிடத்தை ஆஃப் செய் என்பதைத் தட்டி மேப்ஸுக்கான இருப்பிடம் அடிப்படையிலான செயல்பாடுகளை முடக்கலாம். Mac சாதனத்தில் சிஸ்டம் அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு என்பதற்குச் சென்று இருப்பிடச் சேவைகள் பட்டியலில் மேப்ஸை ஆஃப் செய்ய கிளிக் செய்யவும். இந்த அமைப்பை முடக்கினால், “படிப்படியான வழிகாட்டுதல்” போன்ற சில குறிப்பிடத்தக்க மேப்ஸ் அம்சங்களைப் பயன்படுத்த முடியாது.
இருப்பிடச் சேவைகள் ஆன் செய்யப்பட்டிருந்தால், மேப்ஸை மேம்படுத்தும் நோக்கத்திற்காக வழிகாட்டுதல், போக்குவரத்து நெரிசல், அருகில் உள்ள செல்ல விரும்பும் இடங்கள் போன்றவற்றின் விவரங்கள் அடையாளம் இல்லாமல் சேகரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படும். உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில் அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > இருப்பிடச் சேவைகள் > சிஸ்டம் சேவைகள் என்பதற்குச் சென்று, ரௌட்டிங் & டிராஃபிக்கை ஆஃப் செய் அம்சத்தைத் தட்டி இதை முடக்கலாம்.
சென்ற இடங்கள் அம்சத்தைச் செயல்படுத்தினால் உணவகங்கள், பூங்காக்கள் போன்று சமீபத்தில் நீங்கள் சென்ற இடங்கள் குறித்த தகவல்களை மேப்ஸ் அணுகும். சென்ற இடங்கள் அம்சத்தைச் செயல்படுத்திய பிறகு நீங்கள் செல்லும் இடங்கள் குறித்த தகவல்கள் மட்டுமே மேப்ஸுடன் பகிரப்படும். நீங்கள் சென்ற இடங்கள் முழுமையாக என்கிரிப்ட் செய்யப்பட்டுள்ளதால், இதை Apple படிக்க முடியாது. நீங்கள் சென்ற இடங்கள் குறித்த தரவுகளை எவ்வளவு நாட்கள் மேப்ஸ் சேமித்து வைத்திருக்க வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யலாம். லைப்ரரி > சென்ற இடங்கள் என்பதற்குச் சென்று “இடங்களை வைத்திரு” என்பதைத் தட்டி மேப்ஸில் எப்போது வேண்டுமானாலும் தக்கவைத்தல் காலவரம்பை நீங்கள் மாற்றலாம்.
விருப்பமான வழிகள் & கணிக்கப்பட்ட சேருமிடங்கள் அம்சத்தைச் செயல்படுத்தினால் அடிக்கடி நீங்கள் செல்லும் இடங்கள் குறித்த தகவல்கள் மேப்ஸுடன் பகிரப்படும். உங்கள் சேருமிடத்திற்கான வழிகளைத் தேடும்போது மேப்ஸ் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உங்களுக்கு விருப்பமான மற்றும் இனிவரும் வழிகள் குறித்த தகவல்களை Appleக்கு அனுப்பும். இந்த வழிகளை மேப்ஸ் விட்ஜெட்டில் காட்டவோ, உங்களின் அடுத்த சேருமிடத்திற்கு எப்போது கிளம்பவேண்டும் என்ற பரிந்துரைகளை உருவாக்கவோ ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உங்கள் விருப்பமான மற்றும் கணிக்கப்பட்ட வழிகளை மேப்ஸ் Appleக்கு அனுப்பலாம். இந்தத் தகவல் உங்கள் Apple கணக்குடன் தொடர்புபடுத்தப்படாது, இது விருப்பமான வழி அல்லது கணிக்கப்பட்ட இருப்பிடம் என்பதை Apple அறிந்துகொள்ளாமல் இருப்பதை உறுதிசெய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை 24 மணிநேரத்திற்குள் எடுப்போம்.
சென்ற இடங்கள் அல்லது விருப்பமான வழிகள் & கணிக்கப்பட்ட சேருமிடங்கள் அம்சத்தைச் செயல்படுத்த, முக்கியமான இடங்கள் & வழிகள் அம்சத்தைச் செயல்படுத்தி உங்கள் தற்போதைய இருப்பிடத்திற்கு மேப்ஸுக்கான அணுகலை வழங்க வேண்டும். அமைப்புகள் > செயலிகள் > மேப்ஸ் > மேப்ஸ் செயலிக்கு அணுகல் வழங்குதல் > இருப்பிடம்> கூடுதல் இருப்பிட அணுகலை அனுமதி என்பதற்குச் சென்று, “சென்ற இடங்கள்” அல்லது “விருப்பமான வழிகள் & கணிக்கப்பட்ட சேருமிடங்கள்” என்பதை கிளிக் செய்து ஆஃப் செய்வதன் மூலம் “சென்ற இடங்கள்” அல்லது “விருப்பமான வழிகள் & கணிக்கப்பட்ட சேருமிடங்கள்” என்பதை முடக்கலாம். சென்ற இடங்கள், விருப்பமான வழிகள் & கணிக்கப்பட்ட சேருமிடங்கள் உட்பட இருப்பிடச் சேவைகள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு www.apple.com/legal/privacy/data/en/location-services இணையதளத்தைப் பார்வையிடவும்.
மேப்ஸைப் பயன்படுத்துதல்
நீங்கள் மேப்ஸைப் பயன்படுத்தும்போது பின்வரும் தகவல்கள் Appleக்கு அனுப்பப்படும்:
- வழியை நீங்கள் கோரிய நேரம்
- சாதன மாடல் மற்றும் மென்பொருள் பதிப்பு
- உள்ளீட்டு மொழி
- உங்கள் இருப்பிடத்தை அணுக “மேப்ஸை” அனுமதித்திருந்தால் சாதனத்தின் இருப்பிடம்
- உங்கள் சாதனத்தில் காட்டப்படும் வரைபடப் பகுதியின் எல்லைகள்
- உங்களுக்கும் மேப்ஸுக்குமான தொடர்புகள். இதில் நீங்கள் பயன்படுத்தும் தேடல் சொற்கள் மற்றும் அம்சங்கள், நீங்கள் பார்க்கும் இடங்கள், மேப்ஸில் இருந்து பெற்ற அறிவிப்புகளை நீங்கள் கையாளும் விதம் போன்றவை அடங்கும்
மேப்ஸைப் பயன்படுத்தும்போது செயலி, சாதனம், நெட்வொர்க் உள்ளமைவு ஆகியவற்றில் உள்ள தரவையும் செயல்திறனையும் சேகரிக்கிறோம். ஒரு மணிநேரத்தில் பலமுறை மாறக்கூடிய அடையாளத் தகவலுடன் தொடர்புடைய தனிப்பட்ட பயன்பாட்டு அளவீடுகள் உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்டிருக்காது. உங்களுடனோ உங்கள் சாதனத்துடனோ இணைக்கப்பட்டுள்ள அடையாளத் தகவலை அடிப்படையாகக் கொண்டுள்ள உங்களைப் பற்றியத் தகவலை மேப்ஸ் தேடாது. செயலியின் செயல்திறன், அளவீடுகளின் ஒட்டுமொத்தப் பயன்பாடு மற்றும் சேவையின் நம்பகத்தன்மையைப் பராமரிக்க நீண்டகாலம் சேமிக்கப்படும் அடையாளத் தகவல்கள் பயன்படுத்தப்படும். இந்த நீண்டகாலம் சேமிக்கப்படும் அடையாளத் தகவல்கள் உங்கள் Apple கணக்குடன் அல்லது உங்களை அடையாளப்படுத்தக்கூடிய பிற தகவலுடன் இணைக்கப்பட்டிருக்காது.
மேலும், மேப்ஸை நீங்கள் வழிசெலுத்துதல் அல்லது வழிகாட்டுதல் கோரிக்கைக்காகப் பயன்படுத்தும்போது உங்கள் வழி குறித்து Appleக்கு அனுப்பப்படும் விவரங்களில் இவை அடங்கும்:
- உங்கள் வழிகாட்டல் அமர்வின்போது உங்கள் இருப்பிடத்தை அணுக “மேப்ஸை” அனுமதித்திருந்தால் நீங்கள் கோரிக்கை செய்தபோது இருந்த இடம் மற்றும் சாதனத்தின் தற்போதைய இடம்
- சேருமிடம்
- CarPlay உடன் நீங்கள் இணைக்கப்பட்டுள்ளீர்களா என்பது உட்பட போக்குவரத்து முறை
- நீங்கள் வழிகளைக் கேட்டபோது உருவாக்கப்பட்ட அடையாளத் தகவல். வழிகாட்டுதல் முடிவடைந்ததும் இது நீக்கப்படும்
EV வழிப் பரிந்துரையைப் பயன்படுத்தினால், EV வழிப் பரிந்துரைக் கோரிக்கையின் தொடக்கத்தின்போதும் பயணத்தின்போதும் உங்கள் வாகனத்தின் சார்ஜிங் நிலை குறித்த தகவலும் Appleக்கு அனுப்பப்படும். மேலும், EV வழிப் பரிந்துரை மேம்படுத்துதலைத் தேர்வுசெய்திருந்தால், பயணத்தை மேம்படுத்துவதற்கான வழிகளைக் கோரும்போது உங்கள் வாகனத்தை எப்போது சார்ஜ் செய்ய வேண்டும், உங்கள் பயணத்தை முடிக்கத் தேவைப்படும் சார்ஜ் அளவு போன்ற தகவல்களை வழங்க உங்கள் எலக்ட்ரிக் வாகனத்தில் இருந்து பெறும் தரவை Apple பயன்படுத்தக்கூடும். பேட்டரி திறன், சார்ஜிங் நிலை, வாகனத்தின் மைலேஜ் வரம்பைப் பாதிக்கக்கூடிய பிற அம்சங்கள் போன்றவை இந்தத் தகவல்களில் இருக்கும். எனினும், இந்தத் தகவல்களில் எதுவும் உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்படாது. EV வழிப் பரிந்துரை பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, www.apple.com/in/legal/privacy/data/en/improve-ev-routing இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.
மேம்படுத்தப்பட்ட துல்லியமான வழிசெலுத்துதல், இருப்பிடத் தகவலைத் துல்லியமாக்குதல், AR நடைபயணம் போன்றவற்றுக்காக நீங்கள் வழிசெலுத்துதல் அம்சங்களைப் பயன்படுத்தினால், நீங்கள் இருக்கும் இடத்தின் துல்லியத்தை மேம்படுத்தவும் செல்லவேண்டிய இடத்துக்குச் செல்ல உங்களுக்கு நீங்களே வழிகாட்ட உதவவும் உங்கள் கேமரா மற்றும் நகர்தல் சென்சார்களை மேப்ஸ் பயன்படுத்தும். இந்தத் தரவு உங்கள் சாதனத்தில் சேமிக்கப்படாது மற்றும் சாதனத்தில் இருந்து அகற்றப்படாது. AR இருப்பிடத் துல்லியத்தை மேம்படுத்துதலை ஆன் செய்வதைத் தேர்வுசெய்தால், மேப்ஸில் உள்ள இருப்பிடத் தகவலைத் துல்லியமாக்குதல், AR நடைபயணம் ஆகியவற்றை நீங்கள் பயன்படுத்தும்போது உங்களைச் சுற்றி இருக்கும் கட்டடங்கள் மற்றும் பிறவற்றின் அளவு, வடிவம் ஆகியவை குறித்து உங்கள் சாதனத்தின் கேமராவில் உள்ள தரவு Appleக்கு அனுப்பப்படும். இந்தத் தரவு உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்படாது. உங்களையோ பிறரையோ அடையாளப்படுத்தாது. அமைப்புகள் > செயலிகள் > மேப்ஸ் என்பதற்குச் சென்று, அங்கிருந்து “வழிகள்” பிரிவில் “நடைபயணம்” என்பதைத் தட்டி பின்னர் “மேம்படுத்தப்பட்டது” என்பதை ஆஃப் செய்வதன் மூலம் “மேம்படுத்தப்பட்ட துல்லியமான வழிசெலுத்துதல்” அம்சத்தை முடக்கலாம். அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > பகுப்பாய்வுகள் & மேம்பாடுகள் என்பதற்குச் சென்று, “AR இருப்பிடத் துல்லிய மேம்பாடு” என்பதைத் தட்டி ஆஃப் செய்வதன் மூலம் AR இருப்பிடத் துல்லியத்தை மேம்படுத்துதலை ஆஃப் செய்யலாம்.
நீங்கள் விஷுவல் நுண்ணறிவைப் பயன்படுத்தினால், வணிகங்கள், லேண்ட்மார்க்குகள் மற்றும் நீங்கள் விரும்பக்கூடிய பிற இடங்களைப் பற்றிய தகவல்களை மேப்ஸ் வழங்கக்கூடும். அத்தகைய தகவல்களை மேப்ஸ் வழங்கும்போது, நீங்கள் விரும்பக்கூடிய பரிந்துரைக்கப்படும் இடத்தைப் பற்றிய தரவையும், மேப்ஸ் வழங்கும் தகவல்களை நீங்கள் பயன்படுத்தும் விதத்தையும் Apple சேகரிக்கலாம்.
மேப்ஸ் மற்றும் பிற இருப்பிடம் சார்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கவும் மேம்படுத்தவும் உங்கள் மேப்ஸ் பயன்பாட்டுத் தரவில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை Apple பயன்படுத்தக்கூடும்.
புகைப்படங்கள், ஆர்வத்தைக் குறிப்பிடும் பிற உள்ளடக்கங்கள் (“POIs”) மற்றும் உங்கள் மதிப்பீடுகளைப் பொதுவில் பகிர உங்களை அனுமதிக்கும் மதிப்பீடுகள் & ஃபோட்டோஸ் செயலியில் நீங்கள் பங்கேற்பதைத் தேர்வுசெய்யலாம். நீங்கள் சமர்ப்பித்த புகைப்படங்கள் உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளன. மதிப்பீடுகள் & ஃபோட்டோஸ் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, www.apple.com/in/legal/privacy/data/en/ratings-photos இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.
“சிக்கலைப் புகாரளித்தல்” அம்சத்தைப் பயன்படுத்தி மேப்ஸ் செயலியில் சிக்கல்கள் குறித்துப் புகாரளிப்பதையும் நீங்கள் தேர்வுசெய்யலாம். சில புகார்கள் உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளன. “சிக்கலைப் புகாரளித்தல்” அம்சம் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு www.apple.com/in/legal/privacy/data/en/maps-report-an-issue இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.
மேப்ஸைப் பிரத்தியேகமாக்குதல்
சென்ற இடங்கள், பார்க் செய்த கார், கிளம்பவேண்டிய நேரம், பின்செய்த இடங்கள் மற்றும் பரிந்துரைகள் (செல்லவிருக்கும் இடங்கள் போன்றவை) போன்ற மேப்ஸில் உள்ள அதிக பிரத்தியேகமாக்கப்பட்ட அம்சங்கள் உங்கள் சாதனத்தில் உள்ள தரவில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளன. இது உங்கள் சாதனத்திற்கு அனுப்பப்படும் தரவின் அளவைக் குறைக்க உதவுகிறது.
விருப்பமான வழிகள் & கணிக்கப்பட்ட இருப்பிடங்களுக்குச் செல்வதற்கான வழிகளைப் பரிந்துரைக்கவும், கோரிக்கைகளை பேரில் வழிகாட்டவும் Appleக்கு விருப்பமான & கணிக்கப்பட்ட வழியின் ஜியோமெட்ரி தகவலை அனுப்ப வேண்டும். இந்தத் தகவல் உங்கள் Apple கணக்குடன் தொடர்புபடுத்தப்படாது, இது விருப்பமான வழி அல்லது கணிக்கப்பட்ட இருப்பிடம் என்பதை Apple அறிந்துகொள்ளாமல் இருப்பதை உறுதிசெய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை 24 மணிநேரத்திற்குள் எடுப்போம்.
விளம்பரப்படுத்துதல்
மேப்ஸில் Apple வழங்கும் விளம்பரம், சூழல் சார்ந்த தகவல்களை மட்டும் பயன்படுத்தி தொடர்புடைய வணிகங்கள் மற்றும் சேவைகளைக் கண்டறிய உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் செல்லும் இடங்களும் மேப்ஸில் நீங்கள் பார்க்கும் மற்றும் தொடர்புகொள்ளும் விளம்பரங்களும் உங்கள் அடையாளம் அல்லது உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்டிருக்காது.
உங்கள் தற்போதைய தேடல் சொற்கள், நீங்கள் தேடும்போது மேப்பின் காட்சி, (நீங்கள் எங்களுக்கு அனுமதி அளித்தால்) சாதனத்தின் தோராயமான இருப்பிடம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தொடர்புடைய விளம்பரங்கள் தேர்ந்தெடுக்கப்படலாம். கூடுதலாக, உங்கள் சாதன மொழி, சாதன வகை, OS பதிப்பு மற்றும் நாளின் நேரம் பற்றிய தகவல்களும் உங்களுக்கு விளம்பரங்களை வழங்கப் பயன்படுத்தப்படலாம்.
உங்கள் விளம்பர அனுபவத்தை மேம்படுத்த, எந்த விளம்பரத்தைக் காட்ட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க, நீங்கள் அமர்வின்போது பார்க்கும் அல்லது தொடர்புகொள்ளும் உள்ளடக்கம் போன்ற கூடுதல் சூழல் சார்ந்த தகவல்களை உங்கள் சாதனம் பயன்படுத்தக்கூடும். இந்தப் பகுப்பாய்வு உங்கள் சாதனத்தில் நேரடியாக நடக்கும் மேலும் Apple விளம்பரங்களுக்கு அனுப்பப்படாது. வயதுக் கொள்கை, விளம்பர உள்ளடக்கக் கட்டுப்பாடுகள், கிடைக்கும் தன்மை தொடர்பான கட்டுப்பாடுகள் ஆகியவற்றைச் செயல்படுத்துவதற்கும் உள்ளூர்ச் சட்டங்களுக்கு இணங்குவதற்கும் சாதனத்திலேயே நடைபெறும் லாஜிக்கையும் பயன்படுத்துகிறோம்.
உங்கள் இருப்பிடத்தை அணுக மேப்ஸுக்கு அனுமதி வழங்கினால், மேப்ஸில் புவியியல் ரீதியாக தொடர்புடைய விளம்பரங்களை உங்களுக்கு வழங்க, மேப்ஸ் உங்கள் தோராயமான இருப்பிடத்தை மட்டும் Apple விளம்பரங்களுடன் பகிரும். நீங்கள் எதைத் தேர்ந்தெடுத்தாலும், உங்கள் இருப்பிடம் விளம்பரதாரர்களுடன் பகிரப்படாது. உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில் அமைப்புகள் > செயலிகள் > மேப்ஸ் > இருப்பிடம் என்பதற்குச் சென்று துல்லியமான இருப்பிடத்தை ஆஃப் செய் என்பதைத் தட்டி மேப்ஸுக்கான இருப்பிடம் அடிப்படையிலான செயல்பாடுகளை முடக்கலாம். Mac சாதனத்தில் சிஸ்டம் அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு என்பதற்குச் சென்று இருப்பிடச் சேவைகள் பட்டியலில் மேப்ஸை ஆஃப் செய்ய கிளிக் செய்யவும். இந்த அமைப்பை முடக்கினால், “படிப்படியான வழிகாட்டுதல்” போன்ற சில குறிப்பிடத்தக்க மேப்ஸ் அம்சங்களைப் பயன்படுத்த முடியாது.
நீங்கள் பார்க்கும் அல்லது தட்டும் விளம்பரங்கள் குறித்த தகவல்கள் ஒவ்வொரு மணிநேரமும் பலமுறை மாறக்கூடிய சீரற்ற அடையாளத் தகவலுடன் இணைக்கப்படும். அவை உங்கள் அடையாளத்துடனோ Apple கணக்குடனோ ஒருபோதும் இணைக்கப்படாது.
Apple விளம்பரப்படுத்தல் & தனியுரிமை பற்றி மேலும் அறிய www.apple.com/in/legal/privacy/data/en/apple-advertising இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.
சீனாவில் மேப்ஸ் சேவைகள்
சீனாவில் உள்ள Apple Maps தயாரிப்பு Amap Software Co., Ltd. நிறுவனத்தின் மேப்பிங் சேவைகளைப் பயன்படுத்துகிறது. சீனாவில் மேப்ஸ் செயலியைப் பயன்படுத்த நீங்கள் Apple கணக்கில் உள்நுழையத் தேவையில்லை. மேலும் உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்டிருக்காத வகையில், ரேண்டமான மற்றும் தொடர்ச்சியாக மாறக்கூடிய அடையாளத் தகவல்களுடன் உங்கள் செயல்பாடுகள் இணைக்கப்பட்டிருக்கும். உங்கள் இருப்பிடத் தகவலின் துல்லியத்தைக் குறைக்கக்கூடிய தனியுரிமைப் பாதுகாப்பு நுட்பங்களை Amap உடன் இணைந்து Apple பயன்படுத்துவதால், சேகரிக்கப்படும் தகவல்களில் எதுவும் உங்களைத் தனிப்பட்ட முறையில் அடையாளப்படுத்தாது.
சீனாவில் உள்ள “நம்பர் பிளேட் கட்டுப்பாடுகள்” அம்சம் தற்போதுள்ள சாலைக் கட்டுப்பாடுகளை உங்களுக்குத் தெரிவித்து, உங்கள் நம்பர் பிளேட்டின் அடிப்படையில் என்னென்ன மாற்று வழிகள் உள்ளன என்ற தகவலை உங்களுக்கு வழங்கும். மேப்ஸ், Amap உடன் இணைந்து உங்கள் நம்பர் பிளேட்டை அடிப்படையாகக் கொண்டு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர்க்கும் வகையிலான வழிகளைக் கண்டறிகிறது. நீங்கள் வழி கேட்கும்போது உங்கள் நம்பர் பிளேட் மீதான கட்டுப்பாடுகள் குறித்த தகவல்கள் மட்டுமே பகிரப்படும் என்பதால் Apple அல்லது Amap உங்கள் அசல் நம்பர் பிளேட்டைப் பார்க்க முடியாது, இந்தத் தகவல்களில் எதுவும் உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்படாது.
மூன்றாம் தரப்பினருடன் பகிர்தல்
நகர்வுத் தரவு, POI தரவு மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட பயனர் பகுப்பாய்வு ஆகியவற்றை எங்கள் கூட்டாளர்களுடன் Apple பகிரும். எனினும், இந்தத் தகவலை வேறொரு மேப்ஸ் பயனருடன் இந்த கூட்டாளர்கள் தொடர்படுத்துவதைத் தடுக்க, குறிப்பிட்ட சில குறைந்தபட்ச வரம்புகள் பூர்த்திசெய்யப்பட்டால் மட்டுமே தரவு பகிரப்படும்.
நீங்கள் ஒரு விளம்பரத்தைப் பார்க்கும்போது அல்லது அதனுடன் தொடர்புகொள்ளும்போது, விளம்பர இம்ப்ரஷன்கள் மற்றும் தொடர்புகள் பற்றிய தனிப்பட்டதல்லாத தகவல்களையும், ஒருங்கிணைக்கப்பட்ட விளம்பர அளவீடுகளையும் மேப்ஸில் விளம்பரங்களைக் காட்டும் விளம்பரதாரர்களுடன் Apple பகிரும்.
நீங்கள் CarPlay வழிப் பகிர்வை இயக்கினால், வழிசெலுத்தல் கோரிக்கைக்காக மேப்ஸைப் பயன்படுத்தும்போது உங்கள் வழி குறித்த விவரங்களை Apple உங்கள் வாகனத்துடன் பகிரும். இது வாகன வழிசெலுத்தல் மற்றும் ஓட்டுநர் உதவி அமைப்புகளுக்கு உதவுகிறது. இதில் பின்வருவன அடங்கும்:
- நீங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்கும்போதும் உங்கள் வழிகள் மாறும்போதும் காட்டப்படும் தொடக்கம் மற்றும் சாதனத்தின் தற்போதைய இருப்பிடம்
- சேருமிடம்
- வழித்தடம்
இந்தத் தகவல்கள் உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்படவில்லை. உங்கள் வாகனம் இந்தத் தகவல்களைப் பயன்படுத்துவது வாகனத்தின் தனியுரிமைக் கொள்கைக்கு உட்பட்டது. அமைப்புகள் > பொது அமைப்புகள் > CarPlay > எனது கார் > வழிப் பகிர்வு என்பதற்குச் சென்று உங்கள் வாகனத்திற்கான CarPlay வழிப் பகிர்வை நீங்கள் முடக்கலாம்.
மேப்ஸில் மூன்றாம் தரப்புத் தரவு வழங்குநர் குறித்த சிக்கலைப் புகாரளிக்கும்போது, அதைத் தீர்க்க உதவும் நோக்கத்திற்காக நீங்கள் புகாரளித்தவற்றில் இருந்து பெற்ற தகவலை மூன்றாம் தரப்புக்கு Apple வழங்கக்கூடும். ஒரு சிக்கலைத் தீர்க்கப்பதற்கான தேவை ஏற்படும்போது மட்டுமே அதுபோன்ற மூன்றாம் தரப்புடன் Apple தகவலைப் பகிரும். அதற்கு முன்பு, உங்களை அடையாளம்காணும் வகையில் உள்ள தகவல் ஏதேனும் இருந்தால் முதலில் அதை நீக்க முடியுமா எனப் பார்க்கும்.
Appleக்கு அனுப்பப்பட்ட தரவானது நம்பகமான சேவை வழங்குநர்களால் செயலாக்கப்பட்டுச் சேமிக்கப்படலாம்.
தக்கவைத்தல்
உங்கள் மேப்ஸ் பயன்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ள தனிப்பட்ட தரவைச் சேகரிக்கவோ தக்கவைக்கவோ மாட்டோம். மேப்ஸ் பயன்பாடு குறித்து உங்களுக்குக் கேள்விகள் இருந்தால் அல்லது எங்கள் தரவுப் பாதுகாப்பு அலுவலரைத் தொடர்புகொள்ள விரும்பினால், நீங்கள் எங்களை www.apple.com/in/legal/privacy/contact என்ற பக்கத்தில் தொடர்புகொள்ளலாம்.
Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.
2026-05-11