Apple Music & தனியுரிமை
Apple Music உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
![]()
- சந்தா சேர்ந்தால் நீங்கள் பிளே செய்யும் பாடல்கள், அவை பிளே செய்யப்படும் கால அளவு போன்ற உங்களது Apple Music மற்றும் Apple Music Classical செயல்பாடு பற்றிய தகவல்களை உங்கள் சேவைகளைப் பிரத்தியேகமாக்குவதற்கும், உங்களுக்கு அறிவிப்புகளை அனுப்புவதற்கும், எங்கள் கூட்டாளர்களுக்கு ஈடுசெய்வதற்கும் Apple சேகரிக்கும்.
- Apple Music சேவையிலும் கிடைக்கக்கூடிய உங்கள் பாடல்கள் அனைத்தின் நகல்களையும் அடையாளம் காணவும் அன்லாக் செய்யவும், Apple கிளவுடு லைப்ரரி உங்கள் சாதனத்தில் உள்ள இசை லைப்ரரியில் இருந்து பாடல், கலைஞர்களின் பெயர் போன்ற தகவல்களை Appleக்கு அனுப்பும்.
- நீங்கள் சந்தாதாரராக இருக்கும் வரையிலும் அதற்குப் பிறகு ஒரு குறுகிய காலத்திற்கும், உங்கள் கிளவுடு லைப்ரரி தகவல்களை உங்களுடன் தொடர்புபடுத்துகிறோம். நீங்கள் பிளே செய்யும் பாடல்களின் பதிவுகளை, நிதி அறிக்கை தொடர்பான பொருந்தும் உள்ளூர் சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கால அளவிற்குத் தக்க வைக்கிறோம்.
- மோசடியை அடையாளம் கண்டு தடுக்க உதவுவதற்காக, நீங்கள் வாங்க முயலும்போது உங்கள் சாதனத்தை நீங்கள் பயன்படுத்தும் விதத்தின் அடிப்படையில் சாதனத்தின் நம்பகத்தன்மை மதிப்பெண் கணக்கிடப்படும், பயன்படுத்தும் விதம் என்பதில் ஃபோன் அழைப்புகளின் தோராயமான எண்ணிக்கை அல்லது நீங்கள் அனுப்பும் மற்றும் பெறும் மின்னஞ்சல்களின் தோராயமான எண்ணிக்கை அடங்கும். உங்கள் சாதனத்தில் உள்ள உண்மை மதிப்புகளை Apple அறிந்துகொள்ளாத வகையில் இந்தக் கணக்கீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்கள் குறிப்பிட்ட காலத்திற்கு எங்கள் சர்வரில் சேமிக்கப்பட்டிருக்கும்.
உங்கள் தகவலின் தனியுரிமையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது Appleஇல் உள்ள அனைவரின் முன்னுரிமையாகும். உங்கள் அனுபவத்தைச் சிறப்பாக்குவதற்காக எங்களுக்குத் தேவைப்படும் தரவை மட்டுமே நாங்கள் சேகரிக்க முயல்கிறோம் மற்றும் தரவைச் சேகரிக்கும்போது எதைச் சேகரிக்கிறோம், அது எங்களுக்கு ஏன் தேவைப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்வது முக்கியம் என நினைக்கிறோம், இதன்மூலம் தகவலறிந்த முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். அனைத்து Apple தயாரிப்புகளையும் சேவைகளையும் போல இந்தக் கொள்கைகளைக் கருத்தில் கொண்டு Apple Music மற்றும் Apple Music Classical வடிவமைக்கப்பட்டுள்ளன.
Apple Musicஇல் சேவைகள் மற்றும் அம்சங்களை வழங்க நாங்கள் உங்கள் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துகிறோம். இந்தத் தகவல்களில் Apple Musicஇல் உள்ள பகிர்தல் அம்சங்களுடன் பயன்படுத்தக்கூடிய உங்கள் பெயரும், உங்கள் Apple கணக்கின் புகைப்படமும் (அமைத்திருந்தால்) அடங்கும் (Apple Music செயலி அமைப்புகளில் நீங்கள் இவற்றை அணுகலாம், மாற்றலாம்). அத்துடன் அமைப்புகள் அல்லது சிஸ்டம் அமைப்புகளில் நீங்கள் அணுகக்கூடிய, மாற்றக்கூடிய கணக்கு மற்றும் பேமெண்ட் தகவல்களும் இதில் அடங்கும்.
நீங்கள் Apple Musicஇல் சந்தா சேர்ந்தால், அதன் மூலம் Apple Music மற்றும் Apple Music Classical சேவைகளுக்கான முழு அணுகலைப் பெறுவீர்கள். உங்கள் இசை ரசனைக்கு ஏற்ப அம்சங்களை வடிவமைப்பதற்காக, Apple Music மற்றும் Apple Music Classicalஐ நீங்கள் பயன்படுத்தும் விதம் குறித்த தகவல்களை Apple சேகரிக்கும். இந்த அம்சங்களில் தனிப்பட்ட பரிந்துரைகளும் அடங்கும். (உங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆல்பங்கள் மற்றும் பிளேலிஸ்ட்கள், உங்களுக்குப் பிடித்த கலைஞர்கள் மற்றும் வகைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுபவற்றை பிளே செய்யும் ரேடியோ போன்றவை). இனிவரும் வெளியீடுகள், புதிய கலைஞர்கள், உங்களுக்குப் பிடித்தவாறு Apple Music மற்றும் Apple Music Classicalஇல் உள்ள மற்ற நிகழ்வுகள் ஆகியவற்றைப் பற்றி மின்னஞ்சல் அல்லது Push அறிவிப்புகள் மூலம் உங்களுக்குத் தொடர்புகொள்ளவும் நாங்கள் இந்தத் தகவல்களைப் பயன்படுத்தலாம்.
குறிப்பிட்ட சில பிராட்காஸ்ட் ரேடியோ ஸ்டேஷன்கள் போன்ற சில Apple Music அம்சங்கள் உங்கள் வட்டாரத்தில் கிடைக்காமல் இருக்கலாம். உங்கள் தோராயமான இருப்பிடத்தையும் சேவையின் கிடைக்கும்தன்மையையும் கண்டறிய Apple உங்கள் இணைய இணைப்பின் IP முகவரியைப் பயன்படுத்தலாம்.
Apple Music Classical
Apple Music சந்தாதாரர்களுக்கு Apple Music Classicalக்கான அணுகல் உள்ளது. கிளாசிகல் பாடல்களையும் ஆல்பங்களையும் கண்டறியவும், உங்களுக்குப் பிடித்த கிளாசிகல் பாடல்களை ஒரே இடத்தில் சேமிக்கவும் உதவும் வகையில் இந்த கிளாசிகல் இசைச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் சந்தா இல்லாமலே Apple Music Classical அட்டவணையில் தேடலாம். ஆனால் Apple Music Classicalஇல் உள்ள அனைத்து அம்சங்களையும் அணுக உங்களிடம் Apple Music சந்தா இருக்க வேண்டும். உங்களிடம் செயலில் உள்ள Apple Music சந்தா இல்லை எனில், Apple Music Classicalக்கான முழு அணுகலைப் பெற Apple Musicஇல் சந்தா சேர்வதற்கான வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படும்.
கிளவுடு லைப்ரரி
உங்கள் Apple Music சந்தாவின் பலனாகக் கிடைக்கும் Apple கிளவுடு லைப்ரரி மூலம் உங்கள் அனைத்துச் சாதனங்களிலும் உள்ள லைப்ரரியில் இருந்து பாடல்களையும் பிளேலிஸ்ட்களையும் நீங்கள் அணுகலாம். Apple Music மற்றும் Apple Music Classicalஇல் கிடைக்கக்கூடிய உங்கள் பாடல்கள் அனைத்தின் நகல்களையும் அடையாளம் காணவும் அன்லாக் செய்யவும், இந்த அம்சம் உங்கள் சாதனத்தில் உள்ள லைப்ரரியில் இருந்து பாடல், கலைஞர்களின் பெயர் போன்ற தகவல்களை Appleக்கு அனுப்பும். உங்கள் சாதனங்களில் உள்ள தொகுப்பு முழுவதற்குமான அணுகல் Apple Music மூலம் உங்களுக்குக் கிடைக்க, Apple Musicஇல் கண்டறியப்படாத அனைத்துப் பாடல்களும் உங்கள் தனிப்பட்ட கிளவுடு லைப்ரரியில் பதிவேற்றப்படுகின்றன. உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில் உங்கள் கிளவுடு லைப்ரரியின் ஒத்திசைவை நிறுத்த, அமைப்புகள் > செயலிகள் > Music என்பதற்குச் சென்று “லைப்ரரி ஒத்திசைவு” என்பதைத் தட்டுங்கள். Macஇல் Apple Musicஐத் திறந்து அமைப்புகள் > பொது அமைப்புகள் என்பதற்குச் சென்று “லைப்ரரி ஒத்திசைவு” என்பதைத் தேர்வுநீக்குங்கள்.
Apple Music சுயவிவரம்
Apple Musicஐப் பயன்படுத்தி இணைக்கவோ பிறருடன் பகிரவோ விரும்பினால், பயனர் பெயர் (எ.கா., @johnappleseed), டிஸ்ப்ளே பெயர், சுயவிவரப் புகைப்படம் (விரும்பினால்) மற்றும் பிற தகவல்களை வழங்கி ஒரு தனிப்பட்ட சுயவிவரத்தை நீங்கள் உருவாக்கலாம். உங்களுடைய எந்தச் சாதனத்தில் இருந்தும் அணுகும் வகையில் Apple இந்தத் தகவல்களை உங்கள் கணக்கில் சேமிக்கும். உங்கள் பயனர் பெயர், டிஸ்ப்ளே பெயர், சுயவிவரப் புகைப்படம் ஆகியவை Apple Musicஇல் நீங்கள் பதிவிடும் உள்ளடக்கம் மற்றும் பகிரும் செயல்பாட்டுடன் காட்டப்படும். குழந்தைகளுக்கான Apple கணக்குகளில் தற்போது உள்ளடக்கத்தைப் பகிர்வதற்கும் பதிவிடுவதற்குமான வசதி இல்லை.
நீங்கள் வழங்கிய தகவல்களைப் பயன்படுத்தி, பிறரும் உங்கள் Apple Music சுயவிவரத்தைக் கண்டறியலாம்.
கேட்டல் செயல்பாடு, பிளேலிஸ்ட்கள் போன்று உங்கள் சுயவிவரத்தில் கிடைக்கக்கூடிய உள்ளடக்கத்தை நீங்கள் தேர்வுசெய்யும் நபர்கள் மட்டுமே அணுகும் வகையில் நீங்கள் அமைக்கலாம். இருப்பினும், பயனர் பெயர், காட்சிப் பெயர், புகைப்படம், உங்களைப் பின்தொடர்பவர்கள், நீங்கள் பின்தொடர்பவர்கள் போன்ற உங்களின் சுயவிவரத் தகவல்கள் இயல்பாகவே அனைவருக்கும் காட்டப்படும். உங்கள் சுயவிவரத்தைப் பார்க்காதவாறு ஒரு பயனதைத் தடுக்க, பயனர் சுயவிவரத்திற்குச் சென்று “மேலும்” என்பதைத் தட்டி, பிறகு “தடு” என்பதைத் தட்டவும். நீங்கள் தடுக்கும் நபர்களால் Apple Musicஇல் உங்கள் இசையைப் பார்க்கவோ உங்கள் சுயவிவரத்தைக் கண்டறியவோ முடியாது.
Apple Musicஇல் ஒரு சுயவிவரத்தை உருவாக்கினால், நீங்கள் நண்பர்களாக இணைய விரும்பக்கூடிய மற்ற Apple Music சந்தாதாரர்களை நாங்கள் பரிந்துரைப்போம். பரிந்துரைப்பதற்கு நண்பர்களைத் தேடும்போது உங்கள் தொடர்புகளில் உள்ள தகவல்களை Apple தெரிந்துகொள்ளவோ சேமிக்கவோ செய்யாது. உங்கள் தொடர்புகளில் உள்ள ஃபோன் எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளின் சுருக்கப்பட்ட மற்றும் என்கிரிப்ஷன் செய்யப்பட்ட ஹாஷ்கள் மட்டுமே Appleக்கு அனுப்பப்படும். பிறகு பரிந்துரைக்கப்பட வேண்டிய Apple Music சந்தாதாரர்களைப் பொருத்துவது உங்கள் சாதனத்தில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். Apple Music எதிர்காலத்தில் புதிய நண்பர்களைப் பரிந்துரைக்க உங்கள் தொடர்புகளை அவ்வப்போது சரிபார்க்கலாம்; Apple Musicஇல் உள்ள கணக்கு அமைப்புகள் > தனியுரிமை & அணுகல் > தொடர்புகள் என்பதற்குச் சென்று இதை நீங்கள் கட்டுப்படுத்தலாம். பிறர் தங்களுடைய தொடர்புகளில் உங்களைப் பற்றி சேமித்து வைத்திருக்கக்கூடிய Apple கணக்குத் தொடர்புத் தகவல்களின் அடிப்படையில் உங்களைக் கண்டறிவதை நீங்கள் விரும்பவில்லை எனில், கணக்கு அமைப்புகள் > தனியுரிமை & அணுகல் > “Apple கணக்கு மூலம் தேட அனுமதி” என்பதற்குச் சென்று நீங்கள் இதை மாற்றலாம்.
சுயவிவரத்தில் நீங்கள் வழங்கும் தகவல்களை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் புதுப்பிக்கலாம் அல்லது அகற்றலாம். நீங்கள் ஆன்லைனில் பகிரும்போதெல்லாம் பொதுவில் எந்தெந்த தகவல்கள் காட்டப்படும் என்பது குறித்துக் கவனமாகப் பரிசீலனை செய்யுங்கள். நீங்கள் Apple Musicஇல் உள்ளவற்றை இணையதளங்கள் அல்லது சமூக நெட்வொர்க்குகளில் பகிரும்போது, பிற சேவைகளின் தனியுரிமைக் கொள்கையின்படி நீங்கள் பகிரும் அனைத்தும் நிர்வகிக்கப்படும்.
SharePlay
நீங்கள் Apple Musicஇல் சந்தா சேர்ந்தால், Apple TV, HomePod, CarPlayஇல் இணைந்துள்ளபோதோ Bluetoothஐப் பயன்படுத்தும்போதோ நீங்கள் SharePlay அமர்வுகளை ஹோஸ்ட் செய்யலாம். SharePlay மூலம் பிற Apple Music சந்தாதாரர்களால் உங்கள் SharePlay அமர்வில் இணைய முடியும் மற்றும் Apple Music மூலம் பிளே செய்யப்படும் இசையைக் கட்டுப்படுத்தவும் முடியும். Apple Musicஇல் சந்தா சேராதவர்களும் SharePlay மூலம் உங்கள் SharePlay அமர்வில் இணைய முடியும். உங்கள் Apple Music அமர்வைக் கண்டறிந்து அதில் இணையக் கோரும் உங்கள் சாதனத்தின் அருகில் உள்ள தொடர்புகளை அனுமதிப்பதற்காக Bluetoothஐ (செயல்படுத்தப்பட்டிருந்தால்) Apple பயன்படுத்தும். தொடர்புகள் உங்கள் சாதனத்தைக் கண்டறிந்து Apple Music அமர்வில் இணையக் கோருவதை நீங்கள் விரும்பவில்லை எனில் Apple Music செயலி அமைப்புகளில், அருகில் உள்ள தொடர்புகளால் கண்டறியப்படுவதை ஆஃப் செய்யலாம். Apple Music செயலி அமைப்புகளில் காட்டப்படும் அல்லது SharePlay அமர்வில் காரில் இருந்து பங்கேற்றால் வாகன இடைமுகத்தில் காட்டப்படும் QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமாகவும் அமர்வில் தொடர்புகளில் உள்ளவர்களும் பிற பங்கேற்பாளர்களும் சேரலாம்.
அமர்வில் உள்ள பங்கேற்பாளர்களின் பெயரும் சுயவிவரப் புகைப்படமும் அமர்வில் உள்ள அனைவருக்கும் காட்டப்படும். SharePlay அமர்வுகளில் வழங்கப்படும் பங்களிப்புகள், அவற்றை உருவாக்கிய தனிநபருடையதாகக் காட்டப்படுவதுடன் அந்தப் பயனரின் பெயர் மற்றும் சுயவிவரப் புகைப்படத்துடனும் (வழங்கப்பட்டிருந்தால்) தொடர்புபடுத்தப்படும். விவரங்களை நீங்கள் Apple Music செயலிகளில் எப்போது வேண்டுமானாலும் திருத்தலாம். நீங்கள் ஹோஸ்ட் செய்யும் SharePlay அமர்வில் உள்ள பங்கேற்பாளர்களை, Apple Music செயலியில் உள்ள SharePlay ஐகானைத் தட்டி, பிறகு பங்கேற்பாளரைத் தேர்ந்தெடுத்து அகற்றலாம். SharePlay அமர்வில் இருந்து வெளியேற, Apple Music செயலியில் உள்ள SharePlay ஐகானைத் தட்டி, “வெளியேறு” என்பதைத் தட்டுங்கள். நீங்கள் ஹோஸ்ட் செய்யும் SharePlay அமர்வை முடிக்க, Apple Music செயலியில் “நிறைவுசெய்” என்பதைத் தட்டவும். SharePlay அமர்வு முடிந்த பிறகு, அதில் இணைந்த உங்கள் தொடர்புகள் அல்லது மற்ற பங்கேற்பாளர்கள் பற்றிய தகவல்களை Apple தக்கவைத்துக்கொள்ளாது.
பிறருடன் ஒத்திசைக்கும் வகையில் இசையைப் பகிர, நீங்கள் மெசேஜஸ் அல்லது FaceTime அழைப்பின்போதும் SharePlay அமர்வுகளைச் செயல்படுத்தலாம். ஓர் அமர்வைத் தொடங்க, நீங்கள் கேட்க விரும்பும் இசையைத் தேர்ந்தெடுத்து, இசை விருப்பங்களில் உள்ள SharePlay என்பதைத் தட்டி, பகிர விரும்பும் தொடர்புகளை உள்ளிட்டு, “மெசேஜஸ்” அல்லது “FaceTime” என்பதைத் தட்டிய பிறகு “தொடங்கு” என்பதைத் தட்டவும்.
பிளேலிஸ்ட்டுகளை உருவாக்குதல் மற்றும் ஒன்றாகச் சேர்ந்து கேட்டல்
Apple Music சந்தாதாரர்கள் தங்களுக்கான பிளேலிஸ்ட்டுகளை உருவாக்கலாம் அல்லது “பிளேலிஸ்ட் Playground” அம்சம் கிடைக்கும் இடங்களில் அதைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு மூலம் பிளேலிஸ்ட்டை உருவாக்கலாம். நீங்கள் “பிளேலிஸ்ட் Playground” அம்சத்தைப் பயன்படுத்தும்போது, நீங்கள் கேட்க விரும்பும் பாடல்களை விவரிக்கலாம். அதன்மூலம் பாடல்களின் மனநிலை, வகை அல்லது தீமினைப் புரிந்துகொள்ளும் வகையில் அது செயலாக்கப்படும். பிரத்தியேகமாக்கப்பட்ட பிளேலிஸ்ட்டை உருவாக்க, இந்தத் தகவல்கள் நீங்கள் இதுவரை கேட்டவை மற்றும் பிற பயன்பாட்டுத் தரவுகளுடன் இணைக்கப்படும். பிளேலிஸ்ட்டைச் சேமிக்கும் முன் அதைச் செம்மைப்படுத்தலாம், மேலும் உருவாக்கப்பட்ட பிளேலிஸ்ட்டை எப்போது வேண்டுமானாலும் நீக்கலாம் அல்லது மாற்றலாம்.
உங்களால் பிற Apple Music சந்தாதாரர்களுடன் பிளேலிஸ்ட்டில் இணைந்து கூட்டுப்பணியாற்ற முடியும். நீங்கள் பிளேலிஸ்ட்டை உருவாக்கியவர் எனில், அதில் இணைய விரும்பும் ஒவ்வொரு நபருக்கும் நீங்கள் அனுமதி வழங்கலாம் அல்லது பிளேலிஸ்ட்டுக்கான இணைப்புள்ள யார் வேண்டுமானாலும் அதில் தானாகச் சேர அனுமதிக்கலாம். அனைத்துப் பங்கேற்பாளர்களும் பாடல்களை பிளேலிஸ்ட்டில் சேர்க்கலாம் மற்றும் அகற்றலாம், அத்துடன் இமோஜி உணர்வு வெளிப்பாடுகளையும் சேர்க்கலாம். பங்களிப்புகள், அவற்றை உருவாக்கிய தனிநபருடையதாகக் காட்டப்படுவதுடன் அந்தப் பயனரின் பெயர் மற்றும் சுயவிவரப் புகைப்படத்துடனும் (வழங்கப்பட்டிருந்தால்) தொடர்புபடுத்தப்படும். விவரங்களை நீங்கள் Apple Music செயலிகளில் எப்போது வேண்டுமானாலும் திருத்தலாம். மற்ற பங்கேற்பாளர்களின் பெயரையும் புகைப்படத்தையும் பிளேலிஸ்ட்டில் உள்ள அனைத்துப் பங்கேற்பாளர்களும் பிளேலிஸ்ட்டிற்கான அணுகல் உள்ள எந்த நபரும் பார்க்கலாம். மற்ற பங்கேற்பாளர்கள் சேர்த்த அனைத்துப் பாடல்களையும் வெளிப்படுத்திய உணர்வுகளையும் பிளேலிஸ்ட் பங்கேற்பாளர்களால் பார்க்க முடியும். கூட்டுப்பணியாற்றுவதை நிறுத்த பிளேலிஸ்ட் அமைப்புகளுக்குச் சென்று பிளேலிஸ்ட்டில் இருந்து உங்களை அகற்றிக்கொள்ளவும் அல்லது நீங்கள்தான் பிளேலிஸ்ட்டை உருவாக்கியவர் எனில் “பிளேலிஸ்ட் நிர்வாகக் கூட்டுப்பணி அமைப்புகளில்” கூட்டுப்பணியை நீங்கள் நிறுத்தலாம். பிளேலிஸ்ட்டை உருவாக்கியவர் கூட்டுப்பணியை நிறுத்தினால், Apple Music லைப்ரரியில் கூட்டுப்பணியாற்றுபவர்களால் அணுகக்கூடிய, பகிர்ந்த பிளேலிஸ்ட்டாக அந்த பிளேலிஸ்ட் மாறும்.
இசை நிகழ்ச்சிகள்
உங்கள் இருப்பிடத்தை அணுக Apple Music செயலியை அனுமதித்தால், அருகில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகள் போன்ற உள்ளூர் தொடர்பான தகவல்களை உங்களுக்கு வழங்குவதற்கு, விருப்பமான நகரத்தைச் சேமிக்க உங்கள் தோராயமான இருப்பிடம் பயன்படுத்தப்படலாம். உங்கள் இருப்பிடத்தை அணுக Apple Music செயலியை அனுமதிக்கவில்லை எனில், உங்களுக்கு விருப்பமான நகரத்தில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளைக் கண்டறிய அதை நீங்களே கைமுறையாக உள்ளிடலாம். ஒத்திசைவு அம்சம் செயல்படுத்தப்பட்டிருந்தால், உங்களுக்கு விருப்பமான நகரம் அனைத்துச் சாதனங்களிலும் ஒத்திசைக்கப்படும். உங்கள் iOS அல்லது iPadOS சாதனத்தில் அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > இருப்பிடச் சேவைகள் > இசை என்பதற்குச் சென்று இருப்பிட அடிப்படையிலான அமைப்புகளை எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம்.
Apple Music மற்றும் Apple Music Classicalஐப் பிரத்தியேகப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்
நீங்கள் Apple Music சந்தாவைப் பயன்படுத்தும்போதோ லைப்ரரியில் இல்லாத இலவச உள்ளடக்கத்தை பிளே செய்யும்போதோ, நீங்கள் பிளே செய்யும் அல்லது இசை லைப்ரரியில் சேர்க்கும் பாடல்கள் மற்றும் வீடியோக்கள் அல்லது நீங்கள் பிடித்தவை எனக் குறிக்கும் பிளேலிஸ்ட்கள், கலைஞர்கள் மற்றும் உள்ளடக்கம் அல்லது பகிர்வு (பொருந்தும் இடங்களில்) பற்றிய தகவல்களை நாங்கள் சேகரிக்கலாம். கணக்கு, IP முகவரி, சாதனம், செயலி, நீங்கள் பிளே செய்யப் பயன்படுத்திய காரின் இடைமுகம், அதை பிளே செய்யும்போது Apple Music அல்லது Apple Music Classicalஇல் எந்த இடத்தில் இருந்தீர்கள், அதை பிளே செய்த நேரம் மற்றும் கால அளவு போன்ற தகவல்கள் குறிக்கப்பட்டு Appleக்கு அனுப்பப்படும். உங்கள் அனுபவத்தைப் பிரத்தியேகமாக்கவும், உங்களுக்கு மின்னஞ்சல்களையும் அறிவிப்புகளையும் அனுப்பவும், Apple Music மற்றும் Apple Music Classical எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை நாங்கள் புரிந்துகொள்ளவும், எங்கள் சேவைகளை மேம்படுத்தக்கூடிய வகையில் இந்தத் தகவல்களை நாங்கள் பயன்படுத்துவோம். உதாரணத்திற்கு, Apple Music மற்றும் Apple Music Classicalஇல் உங்களுக்குக் காட்டப்படும் இசை, வீடியோக்கள் மற்றும் கலைஞர்களின் உள்ளடக்கத்தை நாங்கள் தேர்வுசெய்ய இந்தத் தகவல்கள் எங்களுக்கு உதவும். மேலும் இதன் மூலம் உங்கள் ரசனைகளைப் பிரதிபலிக்கும் வகையில் பிற பரிந்துரைகளை உங்களுக்கு வழங்கவும், நகரத்தில் பிரபலமாகும் இசையை உங்களுக்குக் காட்டுவதற்கு நகர அட்டவணைகளை உருவாக்கவும், உங்களின் கேட்டல் வரலாறு, உங்களுக்குப் பிடித்த பாடல் வகைகள் போன்ற தகவல்களின் கலவையைப் பயன்படுத்தி பிரத்தியேகமான Apple Music தேடல் முடிவுகளை வழங்கவும் எங்களால் முடிகிறது. மேலும், இந்தத் தகவல்களை உரிமத்தொகையைச் செலுத்துதல் மற்றும் Apple மீடியா சேவைகளின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அல்லது பொருந்தக்கூடிய சட்டத்தை மீறும் அல்லது மீறக்கூடிய செயல்பாடுகளைத் தவிர்த்தல் அல்லது அவற்றுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்தல் போன்றவற்றுக்கு நாங்கள் பயன்படுத்துவோம்.
Apple Musicஇல் நீங்கள் பிற பயனர்களுடன் இணைந்து உள்ளடக்கத்தைக் கேட்க SharePlayஐப் பயன்படுத்தினால், SharePlay அமர்வின்போது நீங்கள் கேட்ட உள்ளடக்கம் பற்றிய தகவல்கள், அமர்வில் பங்கேற்றவர்களின் தோராயமாண எண்ணிக்கை ஆகியவற்றை Apple Music செயலி சேகரிக்கும், ஆனால் SharePlay அமர்வின் பங்கேற்பாளர்களை அடையாளப்படுத்தும் எந்தத் தகவல்களையும் தக்கவைக்காது.
Apple Musicஇல் பயன்படுத்தப்படும் மாடல்களை மேம்படுத்துவதற்காக Apple Music தேடல் தரவுகளையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். உதாரணத்திற்கு, தொகுக்கப்பட்ட Apple Music தேடல் வினவல்கள் Apple Music தேடல் மாடலை மேம்படுத்தப் பயன்படுத்தப்படும்.
உங்களுடனான தகவல்தொடர்புகள்
Apple Music மற்றும் நீங்கள் விரும்பக்கூடிய பிற Apple தயாரிப்புகள், சேவைகள் மற்றும் சலுகைகள் (Apple Music Classical மற்றும் Apple One உட்பட) பற்றிய தகவல்களை உங்களுக்கு அனுப்ப, உங்களுக்குச் சொந்தமான Apple தயாரிப்புகள், நீங்கள் பதிவிறக்கும் Apple செயலிகள், Apple சேவைகளுக்கான உங்கள் சந்தாக்கள் போன்ற உங்கள் கணக்கு பற்றிய தகவல்களை Apple பயன்படுத்தக்கூடும். Apple சேவைச் சலுகைகளுக்கான தகுதிநிலையைச் சரிபார்க்க உங்கள் சாதன வரிசை எண், பிற வன்பொருள் அடையாளத் தகவல்கள் அல்லது தொடர்புடைய உங்கள் App Store சந்தாக்கள் பற்றிய விவரங்கள் பயன்படுத்தப்படக்கூடும். நீங்கள் குடும்பப் பகிர்வுக் குழுவில் இருந்தால், குடும்பப் பகிர்வின் வழியாக உங்களுக்குக் கிடைக்கக்கூடிய தயாரிப்புகள், சேவைகள் மற்றும் சலுகைகள் பற்றிய தகவல்களை Apple அனுப்பக்கூடும். நீங்கள் Apple One சந்தாச் செலுத்தியிருந்தால், சந்தாச் செலுத்தியுள்ள சேவைகளின் ஒவ்வொரு அம்சங்களைப் பற்றிய மின்னஞ்சல்களையும் Push அறிவிப்புகளையும் நாங்கள் அனுப்பக்கூடும். Apple Music மற்றும் Apple Music Classicalஇல் கிடைக்கக்கூடிய புதிய அம்சங்கள், உள்ளடக்கம், நிகழ்வுகள் மற்றும் சலுகைகள் பற்றிய மின்னஞ்சல்களையும் Push அறிவிப்புகளையும் உங்களுக்கு அனுப்ப, Apple Music மற்றும் Apple Music Classicalஇல் உள்ள உங்கள் செயல்பாடுகள் மற்றும் தள்ளுபடியில் கிடைக்கக்கூடிய Apple Music சந்தாக்களுக்கு (எ.கா., Apple Music Student) தகுதிபெறுவதைச் சரிபார்க்கப் பயன்படுத்தப்படும் சேவைகளுடனான உங்களது தொடர்புமுறைகள் பற்றிய தகவல்களையும் Apple பயன்படுத்தக்கூடும். சில தகவல்தொடர்புகளுக்கு, நீங்கள் பெறும் அறிவிப்புகளை ஃபில்டர் செய்ய வன்பொருள் அடையாளத் தகவல் பயன்படுத்தப்படுகிறது. account.apple.com இணையதளத்திற்குச் சென்று உங்கள் மின்னஞ்சல் முன்னுரிமைகளை மாற்றலாம் மற்றும் இந்த மின்னஞ்சல்களைப் பெறுவதற்கான ஒப்புதலைத் திரும்பப் பெறலாம். உங்கள் அறிவிப்பு முன்னுரிமைகளை மாற்ற உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில், அமைப்புகள் > அறிவிப்புகள் > இசை என்பதற்குச் செல்லுங்கள். Macஇல், Apple Musicஐத் திறந்து, அமைப்புகள் > பொது அமைப்புகள் > அறிவிப்புகள் என்பதற்குச் செல்லுங்கள். நாங்கள் அனுப்பும் அறிவிப்புகள் போன்றவற்றை நீங்கள் கையாளும் விதம் பற்றிய தகவல்களை எங்கள் சேவைகளை மேம்படுத்துவதற்காக Apple பயன்படுத்துகிறது.
மோசடி மற்றும் பிற தீங்கிழைக்கும் செயல்பாட்டைத் தடுத்தல்
நீங்கள் வாங்க முயலும்போது உங்கள் சாதனத்தை நீங்கள் பயன்படுத்தும் விதத்தின் அடிப்படையில் சாதனத்தின் நம்பகத்தன்மை மதிப்பெண்ணை நாங்கள் கணக்கிடுகிறோம், பயன்படுத்தும் விதம் என்பதில் ஃபோன் அழைப்புகளின் தோராயமான எண்ணிக்கை, நீங்கள் அனுப்பும் அல்லது பெறும் மின்னஞ்சல்களின் தோராயமான எண்ணிக்கை அடங்கும். உங்கள் சாதனத்தில் உள்ள பின்னணி மதிப்புகளை Apple அறிந்துகொள்ளாத வகையில் இந்தக் கணக்கீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண் குறிப்பிட்ட காலத்திற்கு எங்கள் சர்வரில் சேமிக்கப்பட்டிருக்கும். பேமெண்ட் கூட்டாளரிடமிருந்து அங்கீகாரத்தைப் பெறுவதற்கு முன்பாக உங்கள் சந்தாவுக்கான தற்போதைய அணுகலை வழங்குவதா வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பதற்கும் Apple Music சந்தாப் புதுப்பிப்புகளைச் செயலாக்குவதற்கும் Apple உடனான உங்கள் வணிகத் தொடர்புகள் பற்றிய இதுவரையான தகவல்களையும் Apple பயன்படுத்தக்கூடும்.
மூன்றாம் தரப்பினருக்குத் தெரிவித்தல்
ரேடியோ நிலையங்கள்
பிராட்காஸ்ட் ரேடியோவைக் கேட்க நீங்கள் Apple Musicஐப் பயன்படுத்தும்போது, கோரப்பட்ட உள்ளடக்கத்தை உங்களுக்கு வழங்குவதற்காக உங்கள் சாதனம் பிராட்காஸ்ட் ரேடியோ ஸ்டேஷனுடன் நேரடியாக இணையும். அவ்வாறு இணையும்போது, உங்கள் சாதனத்தின் IP முகவரி பிராட்காஸ்ட் ரேடியோ ஸ்டேஷனுக்குக் காட்டப்படும். பிராட்காஸ்ட் ரேடியோ ஸ்டேஷன் உங்கள் IP முகவரியைக் கையாளுவதை பிராட்காஸ்ட் ரேடியோ ஸ்டேஷன் அல்லது அதன் வழங்குநரின் தனியுரிமைக் கொள்கைகள் நிர்வகிக்கும்.
ரெக்கார்டு லேபிள்கள், கலைஞர்கள் மற்றும் பட்டியல் தொகுப்பாளர்கள்
ரெக்கார்டு லேபிள்களுடன் வெளியீட்டாளார்களும் கலைஞர்களும் தங்களது படைப்புக்குக் கிடைக்கும் வரவேற்பைக் கணக்கிடுவதற்கும், உரிமைத் தொகையைப் பெறுவதற்கும், கணக்கியல் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கும் உதவியாக, Apple Music மற்றும் Apple Music Classicalஇன் பயன்பாடு பற்றித் தனிப்பட்டவையாக இல்லாத தொகுக்கப்பட்ட தரவுகள் சிலவற்றையும், வயதுப் பிரிவு, பாலினம் (உங்கள் பெயர், Apple கணக்கில் உள்ள உங்களுக்கான மரியாதை அடைமொழி போன்றவற்றில் இருந்து பெறப்பட்ட தகவல்) போன்ற தொகுக்கப்பட்ட பயனர் புள்ளிவிவரங்களையும் அவர்களுக்கு வழங்குவது எங்கள் பொறுப்பாகும். கூடுதலாக, உலகமெங்கும் இசைப் பட்டியல்களுக்கான பட்டியல் தொகுப்பாளர்களுடனும், ஈடுபாட்டை (நிகழ் நேரம் உட்பட) அளவிடுவதற்காக லேபிள்கள் மற்றும் கலைஞர்களுடனும், லேபிள்களும் கலைஞர்களும் ரசிகர்களைச் சென்றடைய உதவும் வகையில் இசைக்கான மார்க்கெட்டிங் தளங்களுடனும் நாங்கள் கேட்டல் செயல்பாடு குறித்த தொகுக்கப்பட்ட தகவல்களைப் பகிர்வோம். மூன்றாம் தரப்புக் கூட்டாளர் (மொபைல் நெட்வொர்க் வழங்குநர்) மூலம் Apple Musicஇல் சந்தா சேர்ந்தால் சந்தா சேர்வதற்கு நீங்கள் தகுதிபெறுகிறீர்களா என்பதைத் தீர்மானிப்பதற்கோ உங்கள் வாங்குதல்களை நிறைவுசெய்வதற்கோ, தனிப்பட்ட முறையில் அடையாளப்படுத்தக்கூடிய குறிப்பிட்ட தகவல்களை அந்தக் கூட்டாளாருடன் நாங்கள் பகிர்வோம்.
Apple Musicஐப் பிற செயலிகளுடன் இணைத்தல்
iOS, iPadOS மற்றும் visionOS செயலிகளுடன் Apple பிளாட்ஃபார்ம்களைச் சேராத செயலிகளும் Apple Music மற்றும் உங்கள் கிளவுடு லைப்ரரிக்கான அணுகலைக் கோரலாம். நீங்கள் ஒரு செயலிக்கு அனுமதி வழங்கினால், சாதனத்தில் உள்ள கிளவுடு லைப்ரரி, நீங்கள் ஒரு Apple Music சந்தாதாரரா இல்லையா என்ற விவரம், உங்கள் இசை & வீடியோ பிளே செயல்பாடு, Apple Musicஇல் உள்ள உங்களுக்கான பரிந்துரைகள் போன்ற தகவல்களை அந்தச் செயலியால் அணுக முடியும். அனுமதிக்கப்பட்ட செயலியால் உங்கள் கணக்குடன் தொடர்புடைய தகவல்களையும் (உங்கள் லைப்ரரியில் எந்தெந்த பாடல்கள் உள்ளன, பிளேலிஸ்ட்கள் போன்றவை) மாற்ற முடியும். Apple Musicஐ அணுகுவதற்கான அனுமதியை நீங்கள் ஃபோட்டோஸ் செயலிக்கு வழங்கினால், நினைவுத் திரைப்படங்களுடன் பிளே செய்ய Apple Musicஇல் உள்ள பாடல்களை ஃபோட்டோஸ் பயன்படுத்தும். நீங்கள் ஃபோட்டோஸில் பிரத்தியேக நினைவுத் திரைப்படத்தை உருவாக்கினால் திரைப்படத்துடன் பிளே செய்வதற்கான இசையைத் தேர்ந்தெடுப்பதற்காக, நினைவை உருவாக்க நீங்கள் உள்ளிடும் வினவல் பற்றிய தகவல் Apple Musicக்கு அனுப்பப்படும். Apple Music செயலி மற்றும் ஆதரிக்கப்படும் உள்ளடக்கத்தைப் பயன்படுத்தத் தொடங்கும்போது ரிமோட் போன்ற ஆதரிக்கப்படும் உள்ளடக்கத்தைக் கொண்ட Apple செயலிகளும் தானாக இணைக்கப்படும். உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில், அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > மீடியா & Apple Music என்பதற்குச் சென்று செயலியின் அணுகலை நீங்கள் முடக்கலாம். Macஇல், சிஸ்டம் அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > தனியுரிமை > மீடியா & Apple Music என்பதற்குச் செல்லுங்கள். நீங்கள் செயலியை அகற்றியிருந்தாலோ iOS அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளான iOS 11 அல்லது iPadOSஐப் பயன்படுத்தி செயலிக்கான அணுகலை வழங்கியிருந்தாலோ, அதற்கான அணுகலை நீங்கள் Apple Music கணக்கு அமைப்புகளில் முடக்கலாம்.
Apple கூட்டாளர்கள் வழங்கும் Apple Music சந்தாக்கள்
உங்கள் மொபைல் நெட்வொர்க் வழங்குநர் Apple Music சந்தாக்கள் மற்றும் கட்டணமில்லாப் பயன்பாடுகளை வழங்கினால், மொபைல் நெட்வொர்க் வழங்குநர் கூட்டாளர் மூலமாக அதற்கு நீங்கள் தகுதி பெறுகிறீர்களா என்பதைத் தீர்மானிக்க Apple உங்கள் ஃபோன் எண்ணைச் சரிபார்க்கலாம். உங்கள் மொபைல் நெட்வொர்க் வழங்குநர் அல்லது மற்றொரு Apple கூட்டாளர் மூலமாக Apple Music சந்தா அல்லது இலவச டிரையலுக்கு நீங்கள் பதிவுசெய்தால், உங்கள் கணக்கை அடையாளம் காண்பதற்கும் நீங்கள் சந்தாவைச் செயல்படுத்தியதை உங்கள் மொபைல் நெட்வொர்க் வழங்குநருக்கோ பிற கூட்டாளருக்கோ தெரிவிப்பதற்கும் உங்கள் ஃபோன் எண் அல்லது கூட்டாளரால் பகிரப்பட்ட தனித்துவமான கணக்கு அடையாளத் தகவலை Apple பயன்படுத்தும். உள்நுழைவின்போது உங்கள் கணக்கைச் சரிபார்ப்பதற்காகவும் கணக்குடன் உங்கள் Apple Music செயல்பாட்டை இணைப்பதற்காகவும் உங்கள் சந்தாவுடன் தொடர்புடைய ஃபோன் எண்ணையோ தனித்துவமான அடையாளத் தகவலையோ நாங்கள் பயன்படுத்துவோம். உங்கள் கோரிக்கையின் பேரில் உங்கள் மொபைல் நெட்வொர்க் வழங்குநர் மூலம் நீங்கள் செலுத்திய சந்தாவை ரத்துசெய்ய கோரிக்கை விடுப்பதற்கும் உங்கள் ஃபோன் எண்ணைப் பயன்படுத்துவோம்.
தக்கவைத்தல்
வணிகத் தேவை, ஒப்பந்தக் கடமைகள் மற்றும் சட்டப்பூர்வத் தேவைகளைப் பொறுத்து, Apple Music, Apple Music Classical ஆகிய செயலிகளை நீங்கள் பயன்படுத்தும் விதம், அவற்றில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகள் ஆகியவை தொடர்பான தனிப்பட்ட தரவை வெவ்வேறு கால அளவிற்குத் தக்கவைக்கிறோம்.
உங்கள் கேட்டல் செயல்பாடுகள், லைப்ரரி உள்ளடக்கம், பிளேலிஸ்ட்கள், உங்கள் தேடல்கள் ஆகியவை பற்றிய தகவல்களை உங்கள் சந்தா செயலில் இருக்கும் வரையும், கணக்கை ரத்துசெய்த பிறகு மீண்டும் செயல்படுத்த உதவுவதற்காகவும் உங்களுக்குப் பிடித்த இசை, நீங்கள் தகுதிபெறக்கூடிய சலுகைகள் பற்றி உங்களுக்குத் தெரிவிப்பதற்காகவும் இரண்டு ஆண்டுகள் வரையும் தக்கவைப்போம். மேலும் நிதி அறிக்கையிடல் கடமைகளுக்கு இணங்கத் தேவைப்படும்போது, பொருந்தும் சட்டங்களில் குறிப்பிட்டுள்ள காலஅளவிற்கு இந்தத் தகவல்களை நாங்கள் தக்கவைப்போம், பெரும்பாலும் இந்தத் தக்கவைத்தல் காலம் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் இருக்கும், ஆனால் சில பகுதிகளில் (உதாரணமாக, சீனா) இது 30 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்.
உங்கள் சந்தா முடிவடைந்தால், உள்ளடக்கத்தை அழிக்காமல் கணக்கை மீண்டும் செயல்படுத்த உதவும் வகையில், Apple Music கேட்டலாகில் இருந்து நீங்கள் நீங்கள் சேர்த்த அல்லது உருவாக்கிய இசை மற்றும் பிளேலிஸ்ட்களை Apple Music குறிப்பிட்ட காலத்திற்குத் தக்கவைக்கும். இந்தக் காலத்திற்குப் பிறகு, Apple Music கேட்டலாகில் உள்ள உள்ளடக்கத்தை அணுக முடியாமல் போகலாம்.
நீங்கள் உங்கள் Apple கணக்கை நீக்கினால், சட்டப்படி தேவைப்படும் இடங்களிலும், மோசடியில் இருந்து பாதுகாப்பதற்காகவும், Apple மீடியா சேவைகளின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அமல்படுத்துவதற்காகவும், Apple சேவைகளின் பாதுகாப்பைப் பராமரிப்பதற்காகவும் சில தரவுகள் தக்கவைக்கப்படலாம்.
தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்குப் பொருந்தக்கூடிய அடிப்படைச் சட்டங்கள்
பொதுவாக Apple உடனான உங்கள் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்காகவும், சேவைகளை வழங்கத் தேவைப்படும் அளவிற்கும், எங்கள் சட்டரீதியான கடமைகளுக்கு இணங்குவதற்காகவும் Apple Musicஇல் உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்குகிறோம். ஒப்புதல் என்பது சட்டரீதியான அடிப்படையாக அமையும் இடங்களில், பொருந்தும் உள்ளூர் சட்டங்களின் அடிப்படையில் அதைப் பெற முயல்கிறோம்.
பொருந்தும் உள்ளூர் சட்டங்கள் குறிப்பிடும் இடங்களில், பின்வரும் காரணங்களுக்காக எங்களின் அல்லது மூன்றாம் தரப்புகளின் நியாயமான நலன்களின் நோக்கத்திற்காகத் தேவைப்படும் அளவிற்குத் தனிப்பட்ட தரவைச் செயலாக்குகிறோம்:
- Apple Music மற்றும் Apple Music Classicalஇல் நீங்கள் கேட்கும், லைப்ரரியில் சேர்க்கும் அல்லது பதிவிறக்கும் உள்ளடக்கத்திற்கான அணுகலை வழங்குதல்
- Apple Music மற்றும் Apple Music Classicalஇல் உங்கள் அனுபவத்தைப் பிரத்தியேகப்படுத்துதல்
- Apple Music மூலமும் கிடைக்கக்கூடிய உங்கள் பாடல்களின் நகல்களைக் கண்டறிந்து அன்லாக் செய்தல்
- உங்கள் வட்டாரத்தில் உள்ளடக்கத்தின் கிடைக்கும்தன்மை, சலுகைகள் மற்றும் சந்தாக்களுக்கான உங்கள் தகுதிநிலை ஆகியவற்றைத் தீர்மானித்தல்
- உங்களுக்கும் பிறருக்கும் Apple Music மற்றும் Apple Music Classical சேவையை மேம்படுத்தி உகந்ததாக்குதல், Apple Music மற்றும் Apple Music Classical செயலிகள், நீங்கள் விரும்பக்கூடிய பிற Apple தயாரிப்புகள், சேவைகள், சலுகைகள் பற்றிய தகவல்களை உங்களுக்கு அனுப்புதல்
- உங்கள் Apple Music சுயவிவரம் மற்றும் பிளேலிஸ்ட்களை உருவாக்குதல் மற்றும் நிர்வகித்தல்
- ராயல்டிகளைச் செலுத்துதல் மற்றும் வெளியீட்டாளர்கள், லேபிள்கள், கலைஞர்கள், பட்டியல் தொகுப்பாளர்களுக்கு அறிக்கை வழங்குதல்
- மோசடி மற்றும் பிற தீங்கிழைக்கும் செயல்பாட்டைத் தடுத்தல்
பயன்படுத்தப்படும் தரவில் இவையும் அடங்கும்:
- Apple Music மற்றும் Apple Music Classical செயலிகளை நீங்கள் பயன்படுத்துவது குறித்த தரவுகள். இதில் அம்சங்கள், செயலி அறிவிப்புகள் மற்றும் மெசேஜ்களை நீங்கள் கையாளும் விதம், Apple Music மற்றும் Apple Music Classical செயலிகளில் நீங்கள் கேட்கும், தேடும், பார்வையிடும், உங்கள் லைப்ரரியில் சேர்க்கும் மற்றும் பதிவிறக்கும் உள்ளடக்கம் ஆகியவை அடங்கும்
- உங்கள் சாதனம் மற்றும் கணக்கு பற்றிய விவரங்கள்
- உங்கள் IP முகவரி
- உங்கள் Apple Music சுயவிவரம் மற்றும் பிளேலிஸ்ட்கள்
- சாதனத்தின் நம்பகத்தன்மை மதிப்பெண்
தனிப்பட்டவையாக இல்லாத தரவுகள்
நாங்கள் தனிப்பட்டவையாக இல்லாத தரவுகளை எந்த நோக்கத்திற்காகவும் சேகரிக்கலாம், பரிமாற்றம் செய்யலாம் மற்றும் பிறருடன் பகிரலாம். உதாரணத்திற்கு, சேவையை மேம்படுத்த உங்களுக்குத் தனிப்பட்டவையாக இல்லாத தரவுகளை நாங்கள் பிற Apple Music பயனர்களுடைய தரவுகளுடன் ஒருங்கிணைக்கலாம். நீங்கள் Apple Musicஐப் பயன்படுத்தும்போது உங்கள் சாதனத்தில் இருந்து ரேடியோ அலைவரிசையின் வலிமை, நாட்டின் குறியீடு, நெட்வொர்க் குறியீடு, மொபைல் ரேடியோ அணுகலுக்கான தொழில்நுட்பம் போன்ற சில செயல்திறன் அளவீடுகளையும் நாங்கள் சேகரிக்கக்கூடும்.
Apple Music பற்றி மேலும் அறிக
அம்சங்கள், கட்டணம் போன்ற பலவற்றைப் பற்றிய கூடுதல் விவரங்களைப் பெற, www.apple.com/in/apple-music தளத்திற்குச் செல்லுங்கள்.
Apple Music வெப் பிளேயர் & தனியுரிமை பற்றிய தகவல்களுக்கு, www.apple.com/in/legal/privacy/data/en/apple-music-web தளத்திற்குச் செல்லுங்கள்.
Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.
2026-03-30