Apple News செய்திமடல்களும் தனியுரிமையும்
பிரத்தியேகமாக்கப்பட்ட செய்திமடல்களைப் பெறுவதற்கான விருப்பத்தை வழங்கும் அதேவேளையில் உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும் Apple News செய்திமடல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
![]()
- உங்கள் மின்னஞ்சல் முகவரியை எங்களுக்கு வழங்குவதன் மூலம், எங்கள் எடிட்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கட்டுரைகளுடன் கூடிய Apple News செய்திமடல்களைப் பெறத் தேர்வுசெய்யலாம்.
- சில நாடுகளில், உங்கள் ஆர்வங்களுடன் பொருந்தும் கட்டுரைகளுடன் கூடிய பிரத்தியேகமாக்கப்பட்ட Apple News செய்திமடல்களின் பதிப்பைப் பெறுவதற்கும் நீங்கள் தேர்வுசெய்யலாம்.
- பிரத்தியேகமாக்கப்பட்ட செய்திமாடல்களுக்கான, Newsஇல் நீங்கள் இதுவரை வாசித்தவை குறித்த விவரங்கள் உங்கள் சாதனத்திலேயே தக்கவைக்கப்படும். Appleக்கு அனுப்பப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட தகவல்களில் நீங்கள் எவற்றையெல்லாம் வாசித்தீர்கள் என்ற தகவல் இருக்காது என்பதால், இதுவரை நீங்கள் வாசித்தவை குறித்து Appleக்குத் தெரியாது.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, யுனைடெட் கிங்டம் ஆகிய நாடுகளில் Apple News செய்திமடல்கள் கிடைக்கின்றன. சில நாடுகளில், பிரத்தியேகமாக்கப்பட்ட செய்திமடல்களும் கிடைக்கின்றன.
Apple News செய்திமடல்கள்
உங்கள் மின்னஞ்சல் முகவரியை Appleக்கு வழங்கினால் Apple News எடிட்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கட்டுரைகளுடன் கூடிய செய்திமடல்களை உங்களுக்கு அனுப்புவோம். உங்கள் செய்திமடல்களில் உள்ளூர்ச் செய்திகளைச் சேர்ப்பதற்காக, பில்லிங் ஜிப் குறியீடு போன்ற உங்கள் Apple கணக்குத் தகவல்களை Apple பயன்படுத்தக்கூடும். News செயலியில், Apple Newsஇல் இருந்து மின்னஞ்சல்களைப் பெறத் தேர்வுசெய்யலாம் அல்லது அதிலிருந்து விலகிக்கொள்ளலாம், மேலும் உங்கள் செய்திமடல் முன்னுரிமைகளை நிர்வகிக்கலாம். iOS அல்லது iPadOS சாதனத்தில், உங்கள் “பின்தொடர்தல்” பட்டியலின் கீழ்ப்பகுதி வரை ஸ்க்ரால் செய்து, “நிர்வகியுங்கள்” என்பதற்குக் கீழே உள்ள “அறிவிப்புகள் மற்றும் மின்னஞ்சல்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். Macஇல், கோப்பு > “அறிவிப்புகள் & மின்னஞ்சல்களை நிர்வகியுங்கள்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் Apple கணக்கு அமைப்புகளை நிர்வகிக்கும் இடத்தில் இருந்தும் செய்திமடல்களைப் பெறத் தேர்வுசெய்யலாம். iOS அல்லது iPadOS சாதனத்தில் அமைப்புகளுக்குச் செல்வதன் மூலமாகவும், Macஇல் சிஸ்டம் அமைப்புகளுக்குச் செல்வதன் மூலமாகவும், account.apple.com என்ற தளத்திற்குச் செல்வதன் மூலமாகவும் உங்கள் Apple கணக்கு அமைப்புகளை நிர்வகிக்கலாம்.
Apple Newsஇன் பிரத்தியேகமாக்கப்பட்ட செய்திமடல்கள்
சில நாடுகளில், பிரத்தியேகமாக்கப்பட்ட Apple News செய்திமடல்களின் பதிப்புகளைப் பெறுவதற்கும் நீங்கள் தேர்வுசெய்யலாம். Apple News எடிட்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கட்டுரைகளும், உங்கள் ஆர்வங்களுடன் பொருந்தும் வகையில் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளும் பிரத்தியேகமாக்கப்பட்ட செய்திமடல்களில் இருக்கும்.
பிரத்தியேகமாக்கப்பட்ட செய்திமடல்களைப் பெற நீங்கள் தேர்வுசெய்தால், உங்களைப் போலவே ஆர்வங்களைக் கொண்ட ஆயிரக்கணக்கான பயனர்களுடன் உங்களை ஒன்றிணைப்பதற்காக, சாதனத்தில் உள்ள செயற்கை நுண்ணறிவு உங்கள் வாசிப்பைப் பகுப்பாய்வு செய்யும். உங்கள் செய்திமடல்களைப் பிரத்தியேகமாக்குவதற்காக அந்த ஆர்வங்கள் குறித்த தகவல்கள் Appleக்கு அனுப்பப்படும்.
Apple Newsஇல் நீங்கள் இதுவரை வாசித்தவை குறித்த விவரங்கள் உங்கள் சாதனத்திலேயே தக்கவைக்கப்படும். Appleக்கு அனுப்பப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட தகவல்களில் நீங்கள் எவற்றையெல்லாம் வாசித்தீர்கள் என்ற தகவல் இருக்காது என்பதால், இதுவரை நீங்கள் வாசித்தவை குறித்து Appleக்குத் தெரியாது. Apple News+ சந்தாவை வாங்கினால், மின்னஞ்சல் செய்திமடல்களில் நீங்கள் பின்தொடரும் பத்திரிகைகளின் புதிய பதிப்புகளையும் பெறுவீர்கள். நீங்கள் பின்தொடரும் Apple News+ சேனல்களின் பட்டியல் Appleக்கு அனுப்பப்படுவதுடன் உங்கள் Apple கணக்குடனும் இணைக்கப்படும்.
பிரத்தியேகமாக்கப்பட்ட செய்திமடல்களை நீங்கள் பெற விரும்பவில்லை எனில் News செயலியில் அதில் இருந்து விலகிக்கொள்ளலாம். iOS அல்லது iPadOS சாதனத்தில், உங்கள் “பின்தொடர்தல்” பட்டியலின் கீழ்ப்பகுதி வரை ஸ்க்ரால் செய்து, “நிர்வகியுங்கள்” என்பதற்குக் கீழே உள்ள “அறிவிப்புகள் மற்றும் மின்னஞ்சல்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். Macஇல், கோப்பு > “அறிவிப்புகள் & மின்னஞ்சல்களை நிர்வகியுங்கள்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் Apple கணக்கு அமைப்புகளை நிர்வகிக்கும் இடத்தில் இருந்தும் செய்திமடல்களைப் பெறுவதில் இருந்து விலகிக் கொள்ளலாம். iOS அல்லது iPadOS சாதனத்தில் அமைப்புகளுக்குச் சென்றும், Macஇல் சிஸ்டம் அமைப்புகளுக்குச் சென்றும், account.apple.com என்ற தளத்திற்குச் சென்றும் உங்கள் Apple கணக்கு அமைப்புகளை நிர்வகிக்கலாம்.
பிரத்தியேகமாக்கப்பட்ட செய்திமடல்கள் கிடைக்கக்கூடிய நாடுகளில் அவற்றைப் பெற நீங்கள் விரும்பினால் News செயலியில் நீங்கள் அதைத் தேர்வுசெய்யவேண்டும். இல்லையெனில் அமைப்புகள், சிஸ்டம் அமைப்புகள் அல்லது account.apple.com என்ற தளத்திற்குச் சென்று நீங்கள் தேர்வுசெய்தால் பிரத்தியேகமாக்கப்படாத செய்திமடல்களைப் பெறுவீர்கள்.
தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்குப் பொருந்தக்கூடிய சட்டரீதியான அடிப்படை
உங்கள் ஒப்புதலின் அடிப்படையிலும், எங்கள் நியாயமான நலன்களின் நோக்கங்களுக்குத் தேவைப்படுவதாலும் Apple News செய்திமடல்களுக்காக உங்கள் தனிப்பட்ட தரவைச் செயலாக்குக்கிறோம். பொருந்தும் உள்ளூர் சட்டங்கள் குறிப்பிடும் இடங்களில், எங்களின் நியாயமான நலன்களின் நோக்கத்திற்காகத் தேவைப்படுவதால் தனிப்பட்ட தரவின் பின்வரும் வகைகளை நாங்கள் செயலாக்குகிறோம்:
- மின்னஞ்சல் முகவரி, Apple சேவைகளுக்கான சந்தாக்கள், பில்லிங் ஜிப் குறியீடு போன்ற உங்கள் கணக்குத் தகவல்கள்
- நீங்கள் பின்தொடரும் சேனல்கள்
இந்த நியாயமான நலன்களில், பிரத்தியேகமாக்கப்பட்ட Apple News செய்திமடல்களை உங்களுக்கு அனுப்புவதும் அடங்கும்.
தக்கவைத்தல்
வணிகத் தேவை, ஒப்பந்தக் கடமை அல்லது சட்டப்பூர்வத் தேவை உள்ள வரை மட்டுமே Apple News செயலி தொடர்பான தனிப்பட்ட தரவை நாங்கள் தக்கவைக்கிறோம். நீங்கள் உங்கள் கணக்கை மூடிய பின்னர் அல்லது Apple News+இல் இருந்து சந்தா விலகிய பின்னரும் இதுவரையில் வாங்கிய சந்தாக்கள் போன்ற சில தகவல்கள் (உங்கள் சேமிக்கப்பட்ட கார்டு விவரங்கள் இல்லை) வணிகப் பதிவுகளாகச் சேமிக்கப்பட்டிருக்கக்கூடும். தக்கவைத்தல் காலத்தை மதிப்பிடும்போது, சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவைத் தக்கவைப்பது தேவையா என்று முதலில் கவனமாக ஆராய்கிறோம். தக்கவைத்தல் தேவை எனில், முடிந்த வரை சட்டப்படி அனுமதிக்கப்பட்ட குறுகிய காலத்திற்கு மட்டுமே தனிப்பட்ட தரவைத் தக்கவைக்க முயல்கிறோம்.
Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும், இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.
2025-12-12