Apple News & தனியுரிமை

Apple News செயலியை மேம்படுத்தி பிரத்தியேகமாக்குவதற்காக News செயலியில் உங்கள் செயல்பாடு பற்றிய தகவல்களை Apple சேகரிக்கிறது, இது உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்படாது. சேனலுக்கான அறிவிப்புகளை ஆன் செய்யும்போது, அந்தச் சேனல் உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்படலாம். சேவைச் சலுகைகளுக்கான தகுதியைச் சரிபார்க்க உங்கள் சாதன வரிசை எண் பயன்படுத்தப்படலாம்.
 

Apple News+ உட்பட, Apple News உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Privacy Icon

  • News மற்றும் பங்குகள் செயலியில் நீங்கள் செய்யும் வாசிப்பு மற்றும் கேட்டல் செயல்பாடுகள் ஆகியவை News மற்றும் பங்குகள் செயலிகளுக்கான ஓர் அடையாளத் தகவலுடன் இணைக்கப்படும், இது உங்கள் Apple கணக்குடனோ பிற Apple சேவைகளுடனோ இணைக்கப்படாது.
  • உங்களின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப அம்சங்களை வடிவமைப்பதற்காக, Apple Newsஐ நீங்கள் பயன்படுத்தும் விதம் குறித்த தகவல்களைப் பயன்படுத்துகிறோம். இந்தத் தகவல் உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்படாது.
  • News மற்றும் பங்குகள் செயலியில் காட்டப்படும் விளம்பரங்கள் உங்களுக்குத் தொடர்புடையதாக இருப்பதை உறுதிப்படுத்த உங்கள் கணக்கு, நீங்கள் வாசித்த கட்டுரைகளின் தலைப்புகள் மற்றும் வகைகள், நீங்கள் பின்தொடர்கின்ற அல்லது சந்தா சேர்ந்துள்ள அல்லது அறிவிப்புகளை ஆன் செய்துள்ள வெளியீடுகள் ஆகியவை பற்றிய தகவல்களை நாங்கள் பயன்படுத்தக்கூடும். App Storeஇல் காட்டப்படும் விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்குவதற்காக உங்கள் சந்தாக்கள் பற்றிய தகவல்களையும் பயன்படுத்தலாம். இந்த விளம்பரப்படுத்தல் தொடர்பாக கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி தேர்வுகளைக் கொண்டுள்ளீர்கள்.
  • Apple Newsஇல் பயன்படுத்தக்கூடிய சந்தாக்கள் ஏதேனும் உங்கள் Apple கணக்கில் உள்ளனவா என்று சரிபார்க்கிறோம்.
  • சேனலுக்கான அறிவிப்புகளை ஆன் செய்யும்போது, அந்தச் சேனலை உங்கள் Apple கணக்குடன் எங்களால் இணைக்க முடியும்.

உங்கள் தகவலின் தனியுரிமையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது Appleஇல் உள்ள அனைவரின் முன்னுரிமையாகும். உங்கள் அனுபவத்தைச் சிறப்பாக்கத் தேவைப்படும் தரவை மட்டும் சேகரிக்க நாங்கள் கடினமாக முயல்கிறோம். நாங்கள் தரவைச் சேகரிக்கும்போது எதைச் சேகரிக்கிறோம், அது எங்களுக்கு ஏன் தேவைப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்வது முக்கியம் என நினைக்கிறோம், இதன்மூலம் தகவலறிந்த முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். அனைத்து Apple தயாரிப்புகளையும் சேவைகளையும் போல இந்தக் கொள்கைகளைக் கருத்தில் கொண்டு Apple News வடிவமைக்கப்பட்டுள்ளது.

Apple News செயலியில் சேவைகளை வழங்குதல்

நீங்கள் வாசிக்கும் மற்றும் கேட்கும் செய்திக் கட்டுரைகள் உங்களின் தனிப்பட்டவை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எனவேதான் உங்களின் வாசித்தல் மற்றும் கேட்டல் செயல்பாடு, நீங்கள் Apple Newsஐப் பயன்படுத்தும் விதம் ஆகியவை உங்கள் Apple கணக்குடனோ பிற Apple சேவைகளுடனோ இணைக்கப்படாத வகையில் News மற்றும் பங்குகள் செயலிகளை வடிவமைத்துள்ளோம். நாங்கள் சேகரிக்கும் தரவானது News மற்றும் பங்குகள் செயலிகளுக்கான ஓர் அடையாளத் தகவலுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

உங்களின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப அம்சங்களை வடிவமைப்பதற்காக, Apple Newsஐ நீங்கள் பயன்படுத்தும் விதம் குறித்த தகவல்களை Apple சேகரிக்கும். உதாரணமாக, உங்களுக்குப் பிடித்த சேனல்கள் மற்றும் தலைப்புகளில் இருந்து சிறந்த செய்திக் கட்டுரைகளை உங்களுக்கென்ற தனிப்பட்ட செய்தி ஊட்டத்தில் முன்னிலைப்படுத்திக் காட்டும்படி “இன்று” அம்சம் அமைக்கப்பட்டுள்ளது. Apple News மூலம் நீங்கள் வாசித்த, சேமித்த அல்லது பகிர்ந்த செய்திக் கட்டுரைகள் மற்றும் பின்தொடரும் தலைப்புகள், சேனல்கள் உள்ளிட்ட உங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களைச் சேகரிப்பதன் மூலம் Apple இந்த அம்சங்களை வழங்குகிறது.

உங்கள் சாதனத்தில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் Apple Newsஇல் காட்டப்படும் பரிந்துரைகள் உருவாக்கப்பட்டுள்ளன. உங்கள் iOS சாதனத்தில் உள்ள இதுவரையான உங்கள் வாசித்தல் மற்றும் கேட்டல் தரவுகளை அழிக்க, பின்தொடர்பவை > வரலாறு என்பதற்குச் சென்று, “அழி” என்பதைத் தட்டவும். உங்கள் iPadOS சாதனத்தில், வரலாறு என்பதற்குச் சென்று, “அழி” என்பதைத் தட்டவும். Mac சாதனத்தில், News > “இதுவரையான செயல்பாடுகளை அழி” என்பதற்குச் சென்று “இதுவரையான செயல்பாடுகளை அழி” என்பதைக் கிளிக் செய்யவும். News மற்றும் பங்குகள் செயலிகள் பயன்படுத்தும் அடையாளத் தகவலையும் இது மீட்டமைக்கும். உங்கள் iOS, iPadOS மற்றும் visionOS சாதனத்தில் அமைப்புகள் > செயலிகள் > News என்பதற்குச் சென்று “அடையாளத் தகவலை மீட்டமை” என்பதைத் தட்டுவதன் மூலம், நீங்கள் இதுவரை வாசித்தவை மற்றும் கேட்டவை தொடர்பான தரவுகளை அழிக்காமலேயே அடையாளத் தகவலை மீட்டமைக்கலாம். Mac சாதனத்தில், News செயலியைத் திறந்து, News > “இதுவரையான செயல்பாடுகளை அழி” என்பதற்குச் சென்று “அடையாளத் தகவலை மீட்டமை” என்பதை கிளிக் செய்யவும்.

Apple Newsஇல் ஒரு சேனலில் இருந்து அறிவிப்புகளைப் பெறுவதை ஆன் செய்தால், அந்தச் சேனலில் வெளியிடப்படும் புதிய வெளியீடுகளையும் முக்கியமான செய்திக்கட்டுரைகளையும் குறித்து உங்களுக்குத் தெரிவிப்பதற்காக அந்தத் தகவலை நாங்கள் சேமிப்போம். அத்துடன் அந்தத் தகவல் உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்படும். (புதிய வெளியீடுகள் குறித்த அறிவிப்புகள் Apple News+ சந்தாதாரர்களுக்கு iOS மற்றும் iPadOS சாதனங்களில் மட்டுமே கிடைக்கும்.) “நேரலை செயல்பாடு” அம்சத்தின் மூலம் ஒரு நிகழ்வை நீங்கள் பின்தொடரும்போது, அந்த நிகழ்வின் காலஅளவு மற்றும் அதுகுறித்த அறிவிப்புகளை உங்களுக்கு அனுப்புவதற்காக Apple கணக்குடன் அதை நாங்கள் இணைப்போம்.

சந்தாக்கள் உள்ளிட்ட தகவல்களை Apple Newsஇல் நீங்கள் தேடும்போது, தொடர்புடைய தேடல் முடிவுகளை வழங்கவும், தேடல் அம்சத்தை மேம்படுத்தவும் அந்தத் தகவல்கள் உங்கள் தேடல் வினவலுடன் சேர்த்து Appleக்கு அனுப்பப்படும். இந்தத் தகவல் உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்படாது.

Apple News செயலிக்கு உங்கள் இருப்பிட அணுகலை வழங்கினால், உள்ளூர்ச் செய்திகள், வானிலை, தேடல் முடிவுகள் மற்றும் விளம்பரங்கள் போன்ற உள்ளூர் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக உங்கள் தோராயமான இருப்பிடம் பயன்படுத்தப்படலாம். மேலும், உங்கள் இருப்பிடம் மற்றும் Apple Newsஇல் உங்களின் செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் சேனல்களும் தலைப்புகளும் பரிந்துரைக்கப்படலாம். உள்ளூர்த் தொடர்புடைய மேலும் தகவல்களைக் கண்டறிய ஓர் இருப்பிடம் அல்லது அஞ்சல் குறியீட்டை கைமுறையாகயும் உள்ளிடலாம். இந்தத் தகவல் உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்படாது.

நீங்கள் எப்போது வேண்டுமானாலும் iOS அல்லது iPadOS சாதனத்தின் அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > இருப்பிடச் சேவைகள் என்பதற்குச் சென்று, News என்பதைத் தட்டி “வேண்டாம்” என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இருப்பிடம் அடிப்படையிலான செயல்பாடுகளைத் தவிர்க்கலாம். Mac சாதனத்தில் அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > இருப்பிடச் சேவைகள் என்பதற்குச் சென்று, News என்பதைத் தேர்வுநீக்கவும்.

நீங்கள் Safari மூலம் பார்வையிட்ட இணையதளங்கள், பயன்படுத்தும் செயலிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் குறித்து சாதனத்திலேயே செய்யப்படும் செயலாக்கத்தின் அடிப்படையில் நீங்கள் விரும்பக்கூடிய செய்திக்கட்டுரைகள், சேனல்கள் மற்றும் தலைப்புகளை Siri பரிந்துரைக்கக்கூடும். இந்தத் தகவல் Apple உடன் பகிரப்படாது. உங்கள் iOS அல்லது iPadOS சாதனத்தில், அமைப்புகள் > செயலிகள் > News > Siri & தேடல் என்பதற்குச் சென்று “செயலியில் காட்டு” என்பதைத் தட்டி ஆஃப் செய்து நீங்கள் இதை எப்போது வேண்டுமானாலும் முடக்கலாம். உங்கள் visionOS சாதனத்தில், அமைப்புகள் > செயலிகள் > News என்பதற்குச் சென்று “செயலியில் காட்டு” என்பதைத் தட்டி ஆஃப் செய்யலாம். Mac சாதனத்தில், சிஸ்டம் அமைப்புகள் > Siri & Spotlight என்பதற்குச் சென்று, Siri பரிந்துரைகள் & தனியுரிமை என்பதை கிளிக் செய்து, News என்பதை கிளிக் செய்து, “செயலியில் Siri பரிந்துரைகளைக் காட்டு” என்பதைத் தேர்வுநீக்கவும்.

உங்கள் வசதிக்காக, உங்கள் சாதனங்கள் அனைத்திலும் பயன்படுத்தும் அம்சங்களைச் சமீபத்திய நிலையில் வைத்திருக்க iCloudஐ Apple News பயன்படுத்துகிறது. உதாரணமாக, நீங்கள் பின்தொடரும் சேனல்கள் மற்றும் தலைப்புகள், இதுவரை நீங்கள் வாசித்தவை மற்றும் கேட்டவை, வாசித்தல் மற்றும் கேட்டல் செயல்பாடுகளுக்கான முன்னுரிமைகள், ரெசிபிகளுக்கு நீங்கள் வழங்கிய மதிப்பீடுகள் மற்றும் குறிப்புகள் ஆகியவற்றை iCloudஐப் பயன்படுத்தி Apple News நினைவில் வைத்துக்கொள்ளும் என்பதால் அனைத்துச் சாதனங்களிலும் ஒரே விதமான Apple News பயன்பாட்டு அனுபவத்தை நீங்கள் பெறலாம். நீங்கள் இதுவரை வாசித்தவை மற்றும் கேட்டவை தொடர்பான தரவுகள் மூன்று மாதங்கள் வரை சேமித்து வைக்கப்படும். ஒரு சேனல் அல்லது தலைப்பைப் பின்தொடர்வதை நிறுத்தினால், “சேமித்த செய்திகள்” பிரிவில் இருந்து ஒரு செய்திக்கட்டுரையை அகற்றினால் அல்லது இதுவரையான வாசிப்பில் இருந்து ஒரு செய்திக்கட்டுரையை நீக்கினால் அந்தத் தகவல் Appleஇன் சர்வர்களில் இருந்து உடனுக்குடன் நீக்கப்படும். Apple Newsக்கான iCloudஐ ஆஃப் செய்வதன் மூலம் எப்போது வேண்டுமானலும் இதை நீங்கள் முடக்கலாம். உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில் இதைச் செய்ய, அமைப்புகள் > [உங்கள் பெயர்] > iCloud என்பதற்குச் சென்ற News மீது தட்டி அதை ஆஃப் செய்யுங்கள். Mac சாதனத்தில், சிஸ்டம் அமைப்புகள் > [உங்கள் பெயர்] > iCloud என்பதற்குச் சென்று News என்பதைத் தேர்வுநீக்குங்கள். இந்த அம்சத்தை நீங்கள் முடக்கினாலும், iCloud பேக்-அப் செயல்படுத்தப்பட்டிருந்தால் நீங்கள் பின்தொடரும் சேனல்கள் மற்றும் தலைப்புகள், உங்களின் இதுவரையான வாசித்தல் மற்றும் கேட்டல் செயல்பாடுகள், வாசித்தல் மற்றும் கேட்டல் செயல்பாடுகளுக்கான முன்னுரிமைகள் ஆகியவை iCloudக்கு பேக்-அப் செய்யப்பட்டிருக்கும்.

சந்தாக்கள்

Apple News+ சந்தாவை வாங்கினால், பல்வேறு செய்தி வெளியீட்டாளர்களின் சந்தா செலுத்திப் பெறக்கூடிய உள்ளடக்கங்களை உங்களால் அணுக முடியும். இதற்குப் பதிலாக, செய்தி வெளியீட்டாளர்களின் சந்தா செலுத்தி பெறத்தக்க உள்ளடக்கங்களை வேறு வகையிலும் அணுகலாம்.

முதலில், Apple Newsஇல் பயன்படுத்தக்கூடிய சந்தாக்கள் ஏதேனும் App Storeஇல் உள்ளனவா என்பதை Apple News அறிந்துகொள்ள உங்கள் Apple கணக்கைச் சரிபார்க்கும். சந்தா ஏதேனும் இருந்தால், உங்கள் சந்தாவைத் தானாகவே Apple News அன்லாக் செய்வதுடன், அந்தச் செய்தி வெளியீட்டாளரின் பணம் செலுத்திப் படிக்கும் செய்திக் கட்டுரைகளுக்கான அணுகலை உங்களுக்கு வழங்கும். இரண்டாவதாக, News செயலி மூலம் ஒரு தனிப்பட்டச் செய்தி வெளியீட்டாளரின் சந்தாவைப் பெறமுடியும். அதில் உங்கள் தனிப்பட்ட தகவலைச் செய்தி வெளியீட்டாளருடன பகிர்வதைத் தேர்வுசெய்துகொள்ளலாம். மூன்றாவதாக, ஏற்கெனவே அந்தச் செய்தி வெளியீட்டாளரின் சந்தாவை நேரடியாக வாங்கியிருந்தால் (அந்தச் செய்தி வெளியீட்டாளரின் இணையதளத்தில்), அத்தகைய சந்தா கணக்கை Apple Newsஇல் உள்நுழைந்து பயன்படுத்துவதற்குச் செய்தி வெளியீட்டாளரின் நிறுவனம் உங்களை அனுமதிக்கலாம். செய்தி வெளியீட்டாளரின் நிறுவனம் உங்கள் சந்தா கணக்கைச் சரிபார்த்தபிறகு சந்தா செலுத்தி பெறத்தக்க அவர்களின் உள்ளடக்கங்களை Apple News மூலம் அணுகுவதற்கான அனுமதியை உங்களுக்கு வழங்கும்.

Apple News+ கணக்கிற்குள் இருக்கும் ஒரு செய்தி வெளியீட்டாளரின் தனிப்பட்ட சந்தா உங்களிடம் இருப்பதால், Apple News+ சந்தா உங்களிடம் இல்லையென்றாலும்கூட அதன் கட்டண உள்ளடக்கத்தை நீங்கள் அணுக முடியும்.

சில நாடுகளில், Apple News எடிட்டர்கள் வழங்கும் அந்த நாளுக்கான சிறந்த கட்டுரைகளின் ஆடியோ சுருக்கம் மற்றும் தேர்ந்தெடுத்த செய்திக்கட்டுரைகளின் ஆடியோக்களை நீங்கள் கேட்கலாம். iPhone, iPod touch, CarPlay ஆகியவற்றில் ஆடியோவைக் கேட்கலாம். செய்திக் கட்டுரைகளின் முழுமையான ஆடியோ வடிவம் Apple News+ சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. சந்தா பெறாதவர்கள் குறுகிய வடிவிலான முன்னோட்டத்தை மட்டும் கேட்கலாம். ஆடியோ சுருக்கத்தை அனைவரும் கேட்கலாம்.

செய்திக் கட்டுரைகள் மற்றும் செய்திச் சுருக்கங்களின் ஆடியோ பதிப்புகள், டிஜிட்டல் உள்ளடத்தின் என்கிரிப்ஷன் மற்றும் அணுகல் கட்டுப்பாட்டுக்கான Appleஇன் FairPlay ஸ்ட்ரீமிங் டிஜிட்டல் உரிம மேலாண்மை (DRM) ஃபிரேம்வொர்க் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளன. கோரிக்கைகளுக்கு உங்கள் சாதனம் பயன்படுத்தும் கீக்களில் இருந்து நீங்கள் இதுவரை கேட்டவற்றை Apple பெறாமல் இருப்பதை உறுதிசெய்ய, பல்வேறு உள்ளடக்க கோப்புகளில் டீகிரிப்ஷன் கீக்களை Apple News பகிர்கிறது.

Apple Podcasts

Apple Newsஇன் ஆடியோ உள்ளடக்கத்தை Apple Podcasts மூலமும் கேட்கலாம். Apple Podcastsஇல் அத்தகைய உள்ளடக்கத்தை நீங்கள் கேட்கும்போது, உங்கள் கேட்டல் செயல்பாடு, www.apple.com/in/legal/privacy/data/en/apple-podcasts தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள Apple Podcasts மற்றும் தனியுரிமைக்கு உட்பட்டது. உதாரணமாக, சாதனங்களுக்கிடையில் ஒத்திசைப்பதற்காக நீங்கள் கேட்கும் பாட்காஸ்ட் எபிசோடுகளின் பிளே ஆகும் நிலையை Apple அறிந்துகொள்ளும்.

Game Center

Game Centerஇல் நீங்கள் உள்நுழைந்தால், புதிர் சார்ந்த உங்கள் செயல்பாட்டை Apple பெறும். அந்தச் செயல்பாட்டில் ஸ்கோர்கள், புதிரைக் கண்டறிந்த நேரங்கள் மற்றும் பிற சாதனைகள் அடங்கும். உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில், அமைப்புகள் > செயலிகள் > News > News+ புதிர்கள் என்பதற்குச் சென்று Game Center என்பதைத் தட்டி ஆஃப் செய்து இதை எப்போது வேண்டுமானாலும் முடக்கலாம். Macஇல், News > அமைப்புகள் என்பதற்குச் சென்று Game Centerஐத் தேர்வுநீக்க கிளிக் செய்யவும். Game Center மற்றும் தனியுரிமை பற்றி மேலும் அறிய www.apple.com/in/legal/privacy/data/en/game-center இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.

Apple News செயலியை மேம்படுத்துதல்

Apple News செயலியை நீங்கள் பயன்படுத்தும் தகவல்களுடன், உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்படாத தகவல்களையும் Apple சேகரிக்கிறது. நீங்கள் பயன்படுத்தும் அம்சங்கள் மற்றும் நீங்கள் வாசிக்கும் அல்லது பார்க்கும் செய்திகள், நேரலைச் செயல்பாடுகளுடனான உங்கள் தொடர்புகள், அத்துடன் செயலியின் செயல்திறன் பற்றிய தகவல்கள் (ஏற்றுவதற்கு எடுக்கும் நேரம், அறிவிப்பு வழங்கல், பிழைகள் மற்றும் செயலிழப்புகள் பற்றிய தகவல்கள்) ஆகியவை அடங்கும். சாதனத்தின் வகை, ஆபரேட்டிங் சிஸ்டத்தின் பதிப்பு போன்ற உங்கள் சாதனம் தொடர்பான தகவல்களும் இதில் அடங்கும். உங்களுக்காகவும் பிறருக்காகவும் Apple News செயலியை மேம்படுத்தவும் உகந்ததாக்கவும் இந்தத் தகவலைப் பயன்படுத்துகிறோம்.

உங்களுடனான தகவல்தொடர்புகள்

Apple News+ மற்றும் நீங்கள் விரும்பக்கூடிய பிற Apple தயாரிப்புகள், சேவைகள் மற்றும் சலுகைகள் (Apple One உட்பட) பற்றிய தகவல்களை உங்களுக்கு அனுப்ப, உங்களுக்குச் சொந்தமான Apple தயாரிப்புகள், Apple சேவைகளுக்கான உங்கள் சந்தாக்கள், நீங்கள் பதிவிறக்கும் Apple செயலிகள் போன்ற உங்கள் கணக்கு பற்றிய தகவல்களை Apple பயன்படுத்தக்கூடும். Apple சலுகைகளுக்கான தகுதிநிலையைச் சரிபார்க்க உங்கள் சாதன வரிசை எண் அல்லது உங்கள் Apple News+ சந்தா குறித்த விவரங்கள் பயன்படுத்தப்படக்கூடும். நீங்கள் குடும்பப் பகிர்வுக் குழுவில் இருந்தால், குடும்பப் பகிர்வின் வழியாக உங்களுக்குக் கிடைக்கக்கூடிய தயாரிப்புகள், சேவைகள் மற்றும் சலுகைகள் பற்றிய தகவல்களை Apple அனுப்பக்கூடும். நீங்கள் Apple One சந்தாச் செலுத்தியிருந்தால், சந்தாச் செலுத்தியுள்ள சேவைகளின் ஒவ்வொரு அம்சங்களைப் பற்றிய மின்னஞ்சல்களையும் Push அறிவிப்புகளையும் நாங்கள் அனுப்பக்கூடும். Apple News செயலியில் கிடைக்கும் புதிய அம்சங்கள், உள்ளடக்கம் மற்றும் சலுகைகள் பற்றிய மின்னஞ்சல்களையும் புஷ் அறிவிப்புகளையும் உங்களுக்கு அனுப்ப Apple News செயலியில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளைப் பற்றிய தகவல்களையும் Apple பயன்படுத்தக்கூடும். account.apple.com இணையதளத்திற்குச் சென்று உங்கள் மின்னஞ்சல் முன்னுரிமைகளை மாற்றலாம் மற்றும் இந்த மின்னஞ்சல்களைப் பெறுவதற்கான ஒப்புதலைத் திரும்பப் பெறலாம். அறிவிப்பு முன்னுரிமைகளை மாற்ற உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில், அமைப்புகள் > அறிவிப்புகள் > News என்பதற்குச் செல்லவும். Macஇல், News செயலியைத் திறந்து கோப்பு > “அறிவிப்புகள் & மின்னஞ்சல்களை நிர்வகியுங்கள்” என்பதற்குச் செல்லவும். நாங்கள் அனுப்பும் அறிவிப்புகள் போன்றவற்றை நீங்கள் கையாளும் விதம் பற்றிய தகவல்களை எங்கள் சேவைகளை மேம்படுத்துவதற்காக Apple பயன்படுத்துகிறது.

விளம்பரப்படுத்துதல்

முன்னணி வெளியீட்டாளர்களிடம் இருந்து சிறந்த உள்ளடக்கத்தை உங்களுக்கு வழங்க, Apple News செயலியில் விளம்பரங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. “பிரத்தியேக விளம்பரங்கள்” அமைப்பு ஆன் செய்யப்பட்டிருந்தால், உங்களுக்கு மிகவும் தொடர்புடைய விளம்பரங்களை வழங்குவதற்காக உங்கள் கணக்கு, நீங்கள் வாசித்த கட்டுரைகளின் தலைப்புகள் மற்றும் வகைகள், நீங்கள் பின்தொடர்கின்ற அல்லது சந்தா சேர்ந்துள்ள அல்லது அறிவிப்புகளை ஆன் செய்துள்ள வெளியீடுகள் ஆகியவை பற்றிய தகவல்களை Appleஇன் விளம்பரப்படுத்தல் தளம் பயன்படுத்தக்கூடும். App Storeஇல் காட்டப்படும் விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்குவதற்காக உங்கள் சந்தாக்கள் பற்றிய தகவல்களையும் பயன்படுத்தலாம். பிரத்தியேகமாக்கப்பட்ட விளம்பரங்களை ஆஃப் செய்வது விளம்பரங்களை இலக்கிடுவதற்காக இந்தத் தகவல்களைப் பயன்படுத்துவதில் இருந்து Appleஐத் தடுக்கும். இது நீங்கள் பெறும் விளம்பரங்களின் எண்ணிக்கையைக் குறைக்காது, ஆனால் விளம்பரங்கள் உங்களுக்குப் பொருத்தமானதாக இருப்பது குறையக்கூடும். உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில், அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > Apple விளம்பரப்படுத்தல் என்பதற்குச் சென்று “பிரத்தியேக விளம்பரங்கள்” என்பதைத் தட்டி அதை முடக்கலாம். Mac சாதனத்தில், சிஸ்டம் அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > Apple விளம்பரப்படுத்தல் என்பதற்குச் சென்று, பிரத்தியேக விளம்பரங்கள் என்பதைத் தேர்வுநீக்குங்கள். நீங்கள் News அல்லது பங்குகள் செயலிகளுக்குள் இருக்கும்போது விளம்பரங்களைக் காட்டுவதற்காக மட்டுமே Apple News செயலியில் நீங்கள் வாசிக்கும் மற்றும் கேட்கும் செய்திகள் பற்றிய தகவல்கள் பயன்படுத்தப்படும்.

மூன்றாம் தரப்பினருக்குத் தெரிவித்தல்

உங்கள் தனிப்பட்ட தரவு எதையும் மூன்றாம் தரப்பினருடன் பகிரமாட்டோம். எங்கள் தயாரிப்புகளையும் சேவைகளையும் வழங்க Apple உடன் இணைந்து பணியாற்றும், வாடிக்கையாளருக்கான சந்தைப்படுத்தலில் Appleக்கு உதவும், Apple News செயலியில் காட்டுவதற்கான விளம்பரங்களை Appleஇன் சார்பாக விற்பனை செய்யும் உத்திசார் கூட்டாளர்களுக்குத் தனிப்பட்டவை அல்லாத குறிப்பிட்ட சில தரவுகளை வழங்க கடமைப்பட்டுள்ளோம். உதாரணமாக, வெளியீட்டாளர்களுக்குப் பணம் செலுத்துவதற்காக உங்கள் Apple News பயன்பாடு குறித்த தனிப்பட்டவை அல்லாத தரவை Apple பயன்படுத்தக்கூடும், மேலும் Apple News வெளியீட்டாளர்களின் உள்ளடக்கத்தைப் பயனர்கள் படிக்கும் அல்லது பயன்படுத்தும் விதத்தை அவர்கள் புரிந்துகொள்ள உதவும் வகையில் ஒருங்கிணைந்த அறிக்கைகளை அவர்களுடன் பகிரக்கூடும். வயது, பாலினம் (உங்கள் பெயர், Apple கணக்கில் உள்ள உங்களுக்கான மரியாதை அடைமொழி போன்றவற்றில் இருந்து பெறப்படக்கூடிய தகவல்) போன்ற பயனர் புள்ளிவிவரங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைக்கப்பட்ட இந்த அறிக்கைகளில் சில. தகவல் செயலாக்கம், வாடிக்கையாளர் சேவையை வழங்குதல், எங்கள் தயாரிப்புகளிலும் சேவைகளிலும் உங்கள் ஆர்வத்தை மதிப்பாய்வு செய்தல், எங்கள் சார்பாக வாடிக்கையாளர் குறித்த ஆய்வு அல்லது திருப்தி தொடர்பான கருத்துக்கணிப்பை மேற்கொள்ளுதல் போன்ற சேவைகளை வழங்கும் சேவை வழங்குநர்களுடனும் தகவல்களை Apple பகிரக்கூடும். உங்கள் தகவல்களைப் பாதுகாக்க இந்த நிறுவனங்கள் கடமைப்பட்டுள்ளன, மேலும் Apple செயல்படும் இடங்களில் இவை இருக்கக்கூடும்.

Apple News செயலியில் தனிப்பட்ட வெளியீட்டிற்கான சந்தாவை நீங்கள் வாங்கினால், உங்களுக்கும் வெளியீட்டாளருக்கும் தனித்துவமான சந்தாதாரர் IDஐ Apple உருவாக்கும். நீங்கள் வாங்கிய சந்தா, நீங்கள் வசிக்கும் நாடு அல்லது வட்டாரம் ஆகியவை பற்றிய தகவல்களைக் கொண்ட அறிக்கைகளை வெளியீட்டாளருக்கு வழங்குவதற்காக சந்தாதாரர் IDஐப் பயன்படுத்துவோம். இவ்வாறு செய்வதால், வெளியீட்டாளர்கள் சந்தாக்களின் செயல்திறனைப் புரிந்துகொள்ள முடியும். குறிப்பிட்ட வெளியீட்டாளருடனான உங்களின் அனைத்துச் சந்தாக்களையும் ரத்துசெய்வதுடன் மீண்டும் சந்தாதாரர் ஆகவில்லை எனில், 180 நாட்களுக்குப் பிறகு சந்தாதாரர் ID மீட்டமைக்கப்படும்.

பிற இணையதளங்கள் அல்லது சமூக நெட்வொர்க்குகளில் Apple News உள்ளடக்கத்தைப் பகிரவும் Apple News செயலி உங்களை அனுமதிக்கும். இணையதளங்கள், சமூக நெட்வொர்க்குகள் போன்ற பிற இடங்களில் Apple News உள்ளடக்கத்தைப் பகிர்ந்தால், அந்த இணையதளங்கள் அல்லது சமூக நெட்வொர்க்குகளின் தனியுரிமைக் கொள்கைகளால் அந்தத் தகவல்கள் நிர்வகிக்கப்படும். இந்தத் தகவல்கள் மூன்றாம் தரப்பினருடன் பகிரப்பட வேண்டாம் என நீங்கள் விரும்பினால், Apple News உள்ளடக்கத்தை மூன்றாம் தரப்பு இணையதளங்கள் அல்லது சமூக நெட்வொர்க்குகளில் பகிர வேண்டாம்.

நாங்கள் தனிப்பட்டவையாக இல்லாத தரவுகளை எந்த நோக்கத்திற்காகவும் சேகரிக்கலாம், பரிமாற்றம் செய்யலாம் மற்றும் பிறருடன் பகிரலாம். உதாரணமாக, சேவையை மேம்படுத்த உங்களுக்குத் தனிப்பட்டவை அல்லாத தரவுகளை நாங்கள் பிற Apple News பயனர்களுடைய தரவுகளுடன் ஒருங்கிணைக்கலாம்.

மோசடி மற்றும் பிற தீங்கிழைக்கும் செயல்பாட்டைத் தடுத்தல்

நீங்கள் வாங்க முயலும்போது உங்கள் சாதனத்தை நீங்கள் பயன்படுத்தும் விதத்தின் அடிப்படையில் சாதனத்தின் நம்பகத்தன்மை மதிப்பெண்ணை நாங்கள் கணக்கிடுகிறோம், பயன்படுத்தும் விதம் என்பதில் ஃபோன் அழைப்புகளின் தோராயமான எண்ணிக்கை, நீங்கள் அனுப்பும் அல்லது பெறும் மின்னஞ்சல்கள் தோராயமான எண்ணிக்கை அடங்கும். உங்கள் சாதனத்தில் உள்ள பின்னணி மதிப்புகளை Apple அறிந்துகொள்ளாத வகையில் இந்தக் கணக்கீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண் குறிப்பிட்ட காலத்திற்கு எங்கள் சர்வரில் சேமிக்கப்பட்டிருக்கும். பேமெண்ட் கூட்டாளரிடமிருந்து அங்கீகாரத்தைப் பெறுவதற்கு முன்பாக உங்கள் சந்தாவிற்கான தற்போதைய அணுகலை வழங்குவதா வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பதற்கும் Apple News+ சந்தா புதுப்பிப்புகளைச் செயலாக்குவதற்கும் Apple உடனான உங்கள் வணிகத் தொடர்புகள் பற்றிய இதுவரையான தகவல்களையும் நாங்கள் பயன்படுத்தக்கூடும்.

தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்குப் பொருந்தக்கூடிய அடிப்படைச் சட்டங்கள்

பொதுவாக Apple உடனான உங்கள் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்காக சேவைகளை வழங்கத் தேவைப்படும் அளவிற்கும், எங்கள் சட்டரீதியான கடமைகளுக்கு இணங்குவதற்காகவும் Apple Newsஇல் உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்குகிறோம். ஒப்புதல் என்பது சட்டரீதியான அடிப்படையாக அமையும் இடங்களில், பொருந்தும் உள்ளூர் சட்டங்களின் அடிப்படையில் அதைப் பெற முயல்கிறோம்.

பொருந்தும் உள்ளூர் சட்டங்கள் குறிப்பிடும் இடங்களில், பின்வரும் காரணங்களுக்காக எங்களின் அல்லது மூன்றாம் தரப்புகளின் நியாயமான நலன்களின் நோக்கத்திற்காகத் தேவைப்படும் அளவிற்குத் தனிப்பட்ட தரவைச் செயலாக்குகிறோம்:

  • உங்களுக்குக் கிடைக்கும் உள்ளடக்கதைக் காட்டுதல்
  • சலுகைகளுக்கான தகுதிநிலையைச் சரிபார்த்தல், சேவையை உங்களுக்கும் பிறருக்கும் உகந்ததாக்கி மேம்படுத்துதல், Apple News மற்றும் நீங்கள் விரும்பக்கூடிய பிற தொடர்புடைய Apple தயாரிப்புகள், சேவைகள் மற்றும் சலுகைகள் (எ.கா. Apple One) பற்றிய தகவல்தொடர்புகளை உங்களுக்கு அனுப்புதல்
  • மோசடி மற்றும் பிற தீங்கிழைக்கும் செயல்பாட்டைத் தடுத்தல்

பயன்படுத்தப்படும் தரவில் இவையும் அடங்கும்:

  • உங்கள் சாதனம் மற்றும் கணக்கு பற்றிய விவரங்கள், வெளியீடுகள் மற்றும் Apple சேவைகளுக்கான சந்தாக்கள், உங்களுக்குச் சொந்தமான Apple தயாரிப்புகள், நீங்கள் பதிவிறக்கும் Apple செயலிகள், நீங்கள் குடும்பப் பகிர்வுக் குழுவில் உள்ளீர்களா என்ற தகவல்
  • அறிவிப்புகளை நீங்கள் இயக்கிய சேனல்கள்
  • சாதனத்தின் நம்பகத்தன்மை மதிப்பெண்

தக்கவைத்தல்

வணிகத் தேவை, ஒப்பந்தக் கடமை அல்லது சட்டப்பூர்வத் தேவை உள்ள வரை மட்டுமே Apple News செயலி தொடர்பான தனிப்பட்ட தரவை நாங்கள் தக்கவைக்கிறோம். நீங்கள் உங்கள் கணக்கை மூடிய பின்னர் அல்லது Apple News+இல் இருந்து சந்தா விலகிய பின்னரும் இதுவரையில் வாங்கிய சந்தாக்கள் போன்ற சில தகவல்கள் (உங்கள் சேமிக்கப்பட்ட கார்டு விவரங்கள் இல்லை) வணிகப் பதிவுகளாகச் சேமிக்கப்பட்டிருக்கக்கூடும். தக்கவைத்தல் காலத்தை மதிப்பிடும்போது, சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவைத் தக்கவைப்பது தேவையா என்று முதலில் கவனமாக ஆராய்கிறோம். தக்கவைத்தல் தேவை எனில், முடிந்த வரை சட்டப்படி அனுமதிக்கப்பட்ட குறுகிய காலத்திற்கு மட்டுமே தனிப்பட்ட தரவைத் தக்கவைக்க முயல்கிறோம்.

Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.

2026-03-30