Apple Pay & தனியுரிமை

கார்டு தொடர்பான தகவல்கள், இருப்பிடம், சாதன அமைப்புகள், சாதனத்தைப் பயன்படுத்தும் விதம் போன்ற தகவல்கள் Appleக்கு அனுப்பப்படும். Apple Payஐ அமைக்கவும் மோசடியைத் தடுக்கவும் உங்கள் கார்டு வழங்குநர் அல்லது பேமெண்ட் நெட்வொர்க்கிடம் மதிப்பீட்டுத் தகவல்களை வழங்க, கணக்குத் தகவல்களுடன் சேர்த்து இந்தத் தகவல்களும் பயன்படுத்தப்படலாம்.
 

Apple Pay உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Privacy Icon

  • Apple Payஇல் கார்டு சேர்க்கப்படும்போது, தகுதியைக் கண்டறிவதற்கு கார்டு தொடர்பான தகவல்கள், இருப்பிடம், சாதன அமைப்புகள் மற்றும் சாதனத்தைப் பயன்படுத்தும் விதம் பற்றிய தகவல்கள் Appleக்கு அனுப்பப்படலாம்.
  • தகுதியைத் தீர்மானிக்கவும் மோசடியைத் தடுக்கவும், மேலே உள்ள தகவல்களில் சில, கணக்கு தொடர்பான தகவல்கள், இணைக்கப்பட்ட சாதன விவரங்கள் ஆகியவை உங்கள் கார்டு வழங்குநர் அல்லது வங்கியுடன் பகிரப்படக்கூடும்.
  • நீங்கள் Apple Payஐச் செயலிகளிலும் இணையத்திலும் பயன்படுத்தும்போது, பேமெண்ட்டைச் செயலாக்கத் தேவைப்படும் தகவல்கள் செயலியுடனோ இணையதளத்துடனோ பகிரப்படும். உங்களின் அசல் கார்டு எண் வணிகத்துடன் பகிரப்படாது.
  • Apple Pay மற்றும் பிற Apple தயாரிப்புகளையும் சேவைகளையும் மேம்படுத்த, இனி உங்களுடன் தொடர்புபடுத்தப்படாத Apple Pay தரவுகளை Apple பயன்படுத்தக்கூடும்.
  • Apple Pay என்பது Apple Inc. துணை நிறுவனங்களால் வழங்கப்படும் ஒரு தொழில்நுட்பச் சேவை ஆகும், உங்கள் தனிப்பட்ட தரவிற்கு இந்நிறுவனங்களே பொறுப்பாகும்.

Apple Pay மூலம் ஸ்டோர்கள், செயலிகள் மற்றும் ஆன்லைனில் உங்கள் டெபிட், கிரெடிட் மற்றும் ப்ரீபெய்டு கார்டுகளைப் பயன்படுத்தி நீங்கள் பாதுகாப்பாக வாங்கலாம்.

Apple Pay என்பது உங்கள் தனிப்பட்ட தரவுக்குப் பொறுப்பேற்கக்கூடிய Apple Inc. துணை நிறுவனங்களால் வழங்கப்படும் ஒரு தொழில்நுட்பச் சேவை ஆகும். உங்கள் Apple Pay வழங்குநர் உங்கள் இருப்பிடத்திற்கு ஏற்ப வேறுபடலாம். எ.கா., அமெரிக்காவில் Apple Payments Services LLC நிறுவனம். உங்கள் தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்கான பொறுப்பைக் கொண்ட Appleஇன் துணை நிறுவனங்கள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, Appleஇன் தனியுரிமைக் கொள்கை பக்கத்தை apple.com/privacy தளத்திலும், Appleஇன் துணை நிறுவனங்கள் பக்கத்தை www.apple.com/legal/privacy/en/affiliated-company தளத்திலும் பார்க்கலாம்.

Apple Payஇல் கார்டுகளைச் சேர்த்தல்

Apple Payஇல் ஸ்டோர், கிரெடிட், டெபிட், ப்ரீபெய்டு கார்டுகள் போன்ற பேமெண்ட் கார்டைச் சேர்க்கும்போது Apple Payஐயும் அதன் அம்சங்களையும் செயல்படுத்துவதற்கான தகுதி உங்களுக்கு இருப்பதை நிர்ணயிக்க, உங்கள் கார்டு பற்றி நீங்கள் வழங்கும் தகவல்களும் குறிப்பிட்ட சில சாதன அமைப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளனவா என்ற தகவல்களும் Appleக்கு அனுப்பப்படலாம். உங்கள் சாதனம், மோசடியைத் தடுக்க உதவும் வகையில் அது பயன்படுத்தப்படும் விதத்தையும் (உதாரணத்திற்கு, சாதனம் நகர்வில் உள்ள நேரத்திற்கான சதவீதம், ஒரு வாரத்தில் மேற்கொண்ட அழைப்புகளின் மொத்த எண்ணிக்கை போன்றவை) மதிப்பிடலாம். உங்கள் சாதனத்தால் மதிப்பிடப்பட்ட தகவல்கள் உங்களுடன் தொடர்புபடுத்தப்படாத வகையில் Apple உடன் பகிரப்படும்.

சில Apple Pay அம்சங்களுக்கு கார்டு தகுதிபெறுகிறதா என்பதைத் தீர்மானிக்க, உங்கள் கார்டு வழங்குநர், பேமெண்ட் நெட்வொர்க் அல்லது உங்கள் கார்டு வழங்குநரால் அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்குநர்கள் Apple உடன் கார்டின் அம்சங்கள் மற்றும் பலன்கள் பற்றிய தகவல்களை (வெகுமதிகள் வழங்குதல் அல்லது தவணைத் திட்ட வசதி உள்ளதா போன்ற தகவல்கள்) பகிரலாம். மேலும், Apple Payஐச் செயல்படுத்த, கார்டின் தகுதியைத் தீர்மானிக்க, Apple Payஇல் உங்கள் கார்டை அமைக்க மற்றும் மோசடியைத் தடுக்க, அந்த நிறுவனங்களுக்குத் தகவல்களை Apple வழங்கக்கூடும், இதில் பின்வருவன அடங்கும்:

  • உங்கள் கிரெடிட், டெபிட் அல்லது ப்ரீபெய்டு கார்டு எண்
  • உங்கள் Apple கணக்குடன் தொடர்புடைய பெயர் மற்றும் பில்லிங் முகவரி
  • உங்கள் Apple கணக்கின் செயல்பாடு பற்றிய பொதுவான தகவல்கள் (எடுத்துக்காட்டாக, iTunesஇல் நீண்டகாலத்திற்குப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளீர்களா என்ற விவரம்)
  • உங்கள் சாதனம் பற்றிய தகவல்கள், Apple Watchஐப் பயன்படுத்தினால் இணைக்கப்பட்ட iOS சாதனத் தகவல் (எ.கா., சாதன அடையாளத் தகவல், ஃபோன் எண், உங்கள் Apple Watch, இணைக்கப்பட்ட iOS சாதனம் ஆகிய இரண்டுக்குமான பெயர், மாடல் போன்றவை)
  • கார்டைச் சேர்க்கும்போது நீங்கள் இருக்கும் இருப்பிடம் (இருப்பிடச் சேவைகள் செயல்படுத்தப்பட்டிருந்தால்)
  • கணக்கு அல்லது சாதனத்தில் இதுவரை சேர்த்த பேமெண்ட் கார்டுகள்
  • Apple Payஇல் நீங்கள் சேர்த்துள்ள அல்லது சேர்க்க முயன்ற பேமெண்ட் கார்டுகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் தொடர்பான தொகுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள்

வங்கியின் செயலி போன்ற மூன்றாம் தரப்புச் செயலியைப் பயன்படுத்தி நீங்கள் Apple Payஇல் கார்டைச் சேர்த்தால், உங்கள் சாதனத்திற்கு ஒரு கணக்கு அல்லது கார்டு அடையாளத் தகவலைச் செயலி அனுப்பும். உங்கள் கார்டு வழங்குநரின் தகுதியைத் தீர்மானிக்க, Apple Payஇல் உங்கள் கார்டை அமைக்க மற்றும் மோசடியைத் தடுக்க இந்தத் தகவல்களை Apple பயன்படுத்தும்.

உங்களிடம் உள்ள அல்லது சமீபத்தில் வைத்திருந்த Apple Pay கார்டுகளைப் பிற சாதனங்களில் அமைக்க, அந்த Apple Pay கார்டுகளுக்கான குறிப்பு ஒன்றை உங்கள் Apple கணக்கில் Apple சேமிக்கும். கார்டு வழங்குநர் அல்லது பேமெண்ட் நெட்வொர்க்கிடம் அதை நீங்கள் பயன்படுத்தி, பாதுகாப்புக் குறியீட்டை உள்ளிட்ட பிறகு கார்டை மீண்டும் சேர்க்கலாம். அசல் கிரெடிட், டெபிட் அல்லது பிரீபெய்டு கார்டு எண்ணை Apple Pay சேமிக்காது. புதிய சாதனத்திற்கு மாறும்போது, மோசடியைத் தடுப்பதற்கு உதவ உங்கள் அருகிலுள்ள iCloud செயல்படுத்தப்பட்டுள்ள சாதனங்களைப் பற்றிய தகவல்களை Apple சேகரிக்கும். உங்கள் Apple கணக்குடன் தொடர்புடைய, iCloud செயல்படுத்தப்பட்டுள்ள சாதனங்களைப் பற்றி Apple சேமித்துள்ள தகவல்களின் விவரங்களுக்கு, www.apple.com/legal/privacy/data/en/apple-id தளத்தில் Apple கணக்கு & தனியுரிமை என்ற பக்கத்தைப் பாருங்கள்.

அமைப்புகள் > வாலெட் & Apple Pay என்பதற்குச் சென்று “Apple Pay மூலம் கார்டைப் பயன்படுத்துதல்” என்பதைச் செயல்படுத்துவதன் மூலம் உங்கள் iCloud கீசெயினில் சேமித்துள்ள “தானாக நிரப்புதல் கார்டுகளை” Apple Payஇல் சேர்க்கலாம். இதைச் செயல்படுத்தினால், Apple Payக்கான தகுதிநிலையைத் தீர்மானிப்பதற்காக iCloud கீசெயினில் இருந்து தானாக நிரப்புதல் கார்டு எண்களை உங்கள் கார்டின் பேமெண்ட் நெட்வொர்க்குடன் சாதனம் பகிரும். தகுதிபெற்றால், உங்கள் தானாக நிரப்புதல் கார்டுகளை Apple Payஇல் சேர்த்து இன்னும் பாதுகாப்பான பரிவர்த்தனைகளைச் செய்யலாம். தகவலை வழங்கிய பிறகு, சேமிக்கப்பட்டுள்ள தானாக நிரப்புதல் கார்டின் எண்கள் நீங்கள் எளிதாகக் கண்டறிவதற்காக அதற்குரிய Apple Pay பாஸ்களின் பின்புறம் காட்டப்படும். உங்கள் iCloud கீசெயினில் நீங்கள் சேமித்துள்ள தானாக நிரப்புதல் கார்டு எண்களை Apple அணுக முடியாது மேலும் அவை Apple Pay பரிவர்த்தனைகளுக்காகப் பயன்படுத்தப்படாது.

Apple Pay மூலம் பணம் செலுத்துதல்

ஒரு பேமெண்ட்டைத் தொடங்கும்போது, வரி மற்றும் ஷிப்பிங் கட்டணத்தைக் கணக்கிடுவதைச் செயலாக்க உங்கள் ஜிப் குறியீடு, அஞ்சல் குறியீடு அல்லது பிற இணையான தகவல்கள் செயலி, இணையதளம் அல்லது வணிகத்திற்கு வழங்கப்படலாம். மூன்றாம் தரப்பு உலாவியில் நீங்கள் ஒரு பேமெண்ட்டைத் தொடங்கினால், Apple Payஐ ஆதரிக்கும் சாதனம் மூலம் ஸ்கேன் செய்ய ஒரு QR குறியீடு அல்லது செயலி கிளிப் குறியீட்டை உலாவி உருவாக்கும். ஸ்கேன் செய்ததும், உலாவிக்கும் Apple Payஐ ஆதரிக்கும் சாதனத்திற்கும் இடையே ஒரு தகவல்தொடர்புத் தடத்தை Apple தொடங்கும். அதன் மூலம் தொடர்புடைய பரிவர்த்தனை, பில்லிங் மற்றும்/அல்லது ஷிப்பிங் தகவல்கள் போன்று பரிவர்த்தனையைச் செயலாக்கத் தேவையான தகவல்களை உலாவியும் சாதனமும் பகிரும்.

Apple Payஇல் வாங்குவதைத் தொடங்கிய பிறகு, தவணை முறையில் பணம் செலுத்தும் வசதி அல்லது வெகுமதிகள் போன்ற மேம்பட்ட Apple Pay பேமெண்ட் அம்சங்கள் செயல்படுத்தப்பட்டிருந்தால், உங்கள் வாலெட்டில் என்னென்ன கார்டுகளை வைத்துள்ளீர்கள், அந்த கார்டுகளின் பலன்கள் மற்றும் அம்சங்கள் என்னென்ன போன்று Appleக்கு கார்டு வழங்குநர்கள் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய பேமெண்ட் விருப்பங்களை Apple அடையாளம் காணும். உங்களுக்குக் கிடைக்கக்கூடியவை என்றாலும் உங்கள் வாலெட்டில் இன்னும் சேர்க்கப்படாத கூடுதல் பேமெண்ட் விருப்பங்களை Apple அடையாளம் காணவும் நீங்கள் தேர்வுசெய்யலாம். அவ்வாறு செய்ய, உங்கள் பரிவர்த்தனைக்குக் கூடுதல் பேமெண்ட் முறைகள் கிடைக்கின்றனவா என்பதைத் தீர்மானிக்க, வணிகம், தொகை போன்று அந்தப் பரிவர்த்தனை பற்றிய தகவல்களை Apple பயன்படுத்தும். உங்களுடன் தொடர்புபடுத்தும் வகையில் பரிவர்த்தனை மற்றும் பேமெண்ட் முறையின் தகுதிச் சரிபார்ப்பு பற்றிய தகவல்களை Apple தக்கவைக்காது. புதிய பேமெண்ட் முறையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க நீங்கள் தேர்வுசெய்தால், உங்கள் விண்ணப்பத் தகவல்கள் வழங்குநருடன் நேரடியாகப் பகிரப்படும், அவற்றை Appleஆல் பார்க்கவோ சேமிக்கவோ முடியாது. வெகுமதிகள் மூலம் நீங்கள் பணம் செலுத்தத் தேர்வுசெய்தால் தகவல்களின் அடிப்படையில் நிதி சார்ந்த முடிவுகளை நீங்கள் எடுக்க உதவும் வகையில் உங்கள் கார்டு, கார்டு அம்சங்கள், பலன்கள், பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ள வணிகம் மற்றும் தொகை ஆகியவை பற்றிய தகவல்களையும், உங்கள் தற்போதைய வெகுமதிகளுக்கான பேலன்ஸைப் பெறவும் காட்டவும், பரிவர்த்தனைக்குப் பிறகு விதிக்கப்படக்கூடிய வெகுமதிப் புள்ளிகள் (அல்லது அதற்கு நிகரானவை), பரிவர்த்தனைக்குப் பிறகு உள்ள உங்களுடைய வெகுமதி பேலன்ஸ் போன்றவை பற்றிய தகவல்களையும் Apple பயன்படுத்தலாம். உங்கள் நிதி நிலவரத்திற்கு ஏற்ற சரியான தவணைத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்க உதவும் வகையில், பங்கேற்கும் கார்டு வழங்குநர்களுக்கு, வணிகம் மற்றும் செலுத்தப்படும் தொகை குறித்த தகவல்களை Apple நிறுவனம் வழங்கும். தகுதி நிலையை மதிப்பிடவும் தவணை விருப்பங்களுக்கான பட்டியலைக் காட்சிப்படுத்துவதற்காக Appleக்கு வழங்கவும் இந்தத் தகவல்கள் வழங்குநர்களால் பயன்படுத்தப்படும். உங்களுடன் தொடர்புபடுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்ட Apple Pay அம்சங்களை வழங்குவதற்காக, செயலாக்கப்பட்ட இந்தத் தகவல்களை Apple தக்கவைக்காது.

நீங்கள் பேமெண்ட்டை அங்கீகரித்த பிறகு, சாதனம், வணிகம் சார்ந்த கணக்கு எண், உங்கள் ஷிப்பிங் முகவரி, மின்னஞ்சல் முகவரி போன்று வணிகத்தால் கோரப்பட்ட மற்ற தகவல்களும் வழங்கப்படும். வணிகருக்குப் பணம் செலுத்த நீங்கள் சமூக ஊடகம், ஜெனரேட்டிவ் AI செயலி போன்ற மூன்றாம் தரப்புச் செயலி அல்லது இணையதளத்தைப் பயன்படுத்தினால், அந்த மூன்றாம் தரப்புச் செயலி அல்லது இணையதளத்தால் வணிகர் கோரியுள்ள பிற தகவல்களையும் அணுக முடியும். Apple Pay பரிவர்த்தனையைச் செயல்படுத்தும் நோக்கத்திற்கு மட்டுமே இந்தத் தகவல்களைப் பயன்படுத்துவதற்கு Apple கோருகிறது. நீங்கள் Apple Payஐப் பயன்படுத்தும்போது, உங்கள் கிரெடிட், டெபிட் அல்லது ப்ரீபெய்டு கார்டில் உள்ள கார்டு எண் வழங்கப்படாது.

சந்தாக்கள் போன்ற தொடர் கட்டணங்கள் அல்லது வணிகத்தால் தொடங்கப்படும் பிற கட்டணங்கள் உங்களால்தான் அங்கீகரிக்கப்படுகின்றன என்பதை உறுதி செய்ய, தொடர் கட்டணங்கள் அல்லது வணிகத்தால் தொடங்கப்படும் கட்டணங்களைச் செலுத்த நீங்கள் தகுதிபெறும் Apple Pay பேமெண்ட் முறைகளைப் பங்குபெறும் வணிகங்களுக்கு வழங்கத் தேர்வுசெய்யும்போது, அத்தகைய கட்டணங்களுக்காகப் பயன்படுத்த வேண்டிய வணிகம் சார்ந்த கணக்கு எண்ணை உங்கள் வழங்குநர் மற்றும்/அல்லது பேமெண்ட் நெட்வொர்க் அங்கீகரிக்கும் மற்றும் உருவாக்கும். நீங்கள் குறிப்பிட்ட நடவடிக்கை எதையும் எடுக்காமல் பரிவர்த்தனைகள் அங்கீகரிக்கப்பட வேண்டுமெனில், வணிகம் சார்ந்த அந்தக் குறிப்பிட்ட கணக்கு எண்ணை மட்டுமே பங்குபெறும் வணிகம் பயன்படுத்த வேண்டும். உங்கள் வணிகம் சார்ந்த கணக்கு எண்களுடன் எந்த வணிகங்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பது Appleக்குத் தெரிந்தாலும் நீங்கள் எதை வாங்கினீர்கள், அதற்கு எவ்வளவு செலவழித்தீர்கள் என்பது தெரியாது. கார்டு விவரங்களைப் பார்க்க, வாலெட்டில் கார்டைத் தட்டி, “மேலும்” பட்டனைத் தட்டுவதன் மூலம் உங்கள் வணிகம் சார்ந்த கணக்கு எண்களை நீங்கள் நிர்வகிக்கலாம்.

மேம்பட்ட முறையில் மோசடியைத் தவிர்க்கும் அமைப்புகள் சிலவற்றைக் கொண்ட கார்டுகள் மூலம் நீங்கள் ஆன்லைன் அல்லது செயலியில் பரிவர்த்தனையைச் செய்ய முயலும்போது, சாதனத்திலேயே மோசடித் தடுப்பு மதிப்பீடுகள் உருவாக்கப்பட்டு, வாலெட்டில் “இருப்பிடச் சேவைகள்” அம்சம் செயல்படுத்தப்பட்டிருந்தால், உங்கள் Apple கணக்கு, சாதனம் மற்றும் இருப்பிடத்தை உங்கள் சாதனம் மதிப்பிடும். சாதனத்திலேயே உள்ள மோசடித் தடுப்பு மதிப்பீடுகளின் முடிவுகள் (அடிப்படைத் தகவல்கள் இதில் அடங்காது) Appleக்கு அனுப்பப்படும். Apple Pay பரிவர்த்தனை மோசடித் தடுப்பு மதிப்பீடுகளை உருவாக்க, உங்கள் சாதனம் மற்றும் கணக்கைப் பற்றி Appleக்குத் தெரிந்த தகவல்களுடன் அவை இணைக்கப்படும். பரிவர்த்தனை செய்யும் சமயத்தில் மோசடியைத் தடுக்க, ஷிப்பிங் முகவரி அடையாளத் தகவல்களும் IP முகவரியும் இருந்தால் அவற்றுடன் சேர்த்து இந்தப் பரிவர்த்தனை மோசடித் தடுப்பு மதிப்பீடுகளும் உங்கள் பேமெண்ட் நெட்வொர்க்குடன் பகிரப்படலாம். உங்கள் சாதனத்தில் உள்ள குறிப்பிட்ட கார்டைப் பயன்படுத்தும் வெவ்வேறு பரிவர்த்தனைகளுக்கான ஷிப்பிங் முகவரிகள், அடிப்படை முகவரியை வெளிப்படுத்தாத வகையில் உள்ளனவா என்பதை உறுதிசெய்ய, ஒவ்வொரு பேமெண்ட் நெட்வொர்க்கிற்கும் ஏற்ப வேறுபடும் ஷிப்பிங் முகவரி அடையாளத் தகவலை நீங்கள் பயன்படுத்தலாம். வாலெட்டில் உங்கள் பேமெண்ட் உள்நுழைவு விவரங்களுக்குப் பின்புறம் சென்று, கார்டில் இந்த மேம்படுத்தப்பட்ட மோசடித் தடுப்பு உள்ளதா என்பதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். உங்கள் பேமெண்ட் நெர்வொர்க்குடன் மோசடித் தடுப்பு மதிப்பீடுகள் பகிரப்படுவதைத் தடுப்பதற்கு நீங்கள் வேறொரு கார்டை தேர்ந்தெடுக்கலாம்.

iOS, watchOS அல்லது macOSஇல் Apple Payஐப் பயன்படுத்தும் ஒரு செயலியைப் பயன்படுத்தும்போதோ Safari மூலம் இணையதளத்திற்குச் செல்லும்போதோ, அந்தச் சாதனத்தில் Apple Pay செயல்படுத்தப்பட்டுள்ளதைச் செயலியாலோ இணையதளத்தாலோ சரிபார்க்க முடியும். iOS சாதனம் அல்லது Macஇல் உள்ள Safariஇல், கார்டைச் சேர்க்கும் வசதி இல்லாத இணையதளத்திற்குச் செல்லும்போது iPhone அல்லது Apple Watchஇல் அதே Apple கணக்கைப் பயன்படுத்தி Apple Pay அமைக்கப்பட்டுள்ளதா என்பதை இணையதளத்தால் சரிபார்க்க முடியும். நீங்கள் Apple Payஐச் செயல்படுத்தியுள்ளீர்களா என நீங்கள் பார்வையிடும் இணையதளங்கள் சரிபார்ப்பதைத் தடுக்க விரும்பினால், அமைப்புகளை மாற்றி விருப்பத்தை முடக்கலாம். iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில், அமைப்புகள் > செயலிகள் > Safari > மேம்பட்ட அமைப்புகள் என்பதற்குச் சென்று “Apple Pay உள்ளதா என்று பார்” என்பதைத் தட்டி, ஆஃப் செய்யுங்கள். உங்கள் Macஇல், Safari > அமைப்புகள் > மேம்பட்ட அமைப்புகள் என்பதற்குச் சென்று “Apple Pay மற்றும் Apple Card உள்ளனவா என்று பார்க்க இணையதளங்களை அனுமதி” என்பதைத் தேர்வுநீக்கவும்.

Apple கணக்கு பேமெண்ட் முறைகளைப் பாதுகாத்தல்

Apple சூழலமைப்பில் உள்ள உங்கள் பேமெண்ட் முறைகளை நீங்கள் நிர்வகிக்க, உங்கள் Apple கணக்கில் பதிவுசெய்துள்ள Apple Pay பேமெண்ட் முறைகள் ஏதேனும் பேமெண்ட் முறையாகச் சேர்ப்பதற்குத் தகுதிபெறுகிறதா என்பதையும் Apple மதிப்பாய்வு செய்யலாம். அந்தப் பேமெண்ட் முறைகள், அமைப்புகள் > [உங்கள் பெயர்] > பேமெண்ட் & ஷிப்பிங் > பேமெண்ட் முறையைச் சேர் > பேமெண்ட் முறைகள் என்பதில் காட்டப்படும். உங்கள் Apple கணக்கைப் பயன்படுத்தி ஒரு பரிவர்த்தனையை மேற்கொள்ளும்போது, பதிவுசெய்துள்ள Apple கணக்கு பேமெண்ட் முறைகள் ஏதேனும் Apple Pay உடன் பயன்படுத்தத் தகுதிபெறுகிறதா என்பதையும் Apple மதிப்பாய்வு செய்யும். தகுதிபெறும் பட்சத்தில், உங்கள் பேமெண்ட் தகவல்களைப் பாதுகாக்கும் வகையில் Apple அந்த பேமெண்ட் முறைக்கு Apple Payஐச் செயல்படுத்தலாம். உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில் அமைப்புகள் > [உங்கள் பெயர்] > பேமெண்ட் & ஷிப்பிங் என்பதற்குச் சென்று உங்கள் Apple கணக்கு பேமெண்ட் முறைகளை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். Macஇல், சிஸ்டம் அமைப்புகள் > [உங்கள் பெயர்] > பேமெண்ட் & ஷிப்பிங் என்பதற்குச் செல்லுங்கள்.

உங்கள் பேமெண்ட் தகவல்களை Apple பரிமாறும், ஆனால் சேமிக்காது

செயலிகள், இணையதளங்கள், வணிக உரையாடல் ஆகியவற்றுடன் உங்கள் பேமெண்ட் தகவலைப் பாதுகாப்பாகப் பரிமாற, தகவல் என்கிரிப்ட் செய்யப்பட்டு Appleக்கு அனுப்பப்படும். சிறிது நேரத்திற்கு டிகிரிப்ட் செய்யப்பட்ட வடிவில் வைக்கப்பட்ட பிறகு அது வணிகம் சார்ந்த கீ மூலம் மீண்டும் என்கிரிப்ட் செய்யப்படும். இந்தச் செயல்பாட்டின் மூலம் உங்கள் பேமெண்ட் தகவல்களை வணிகம், டெவலப்பர் அல்லது பேமெண்ட்டைச் செயலாக்குபவர் மட்டுமே டிகிரிப்ட் செய்ய முடியும். கார்டைச் சேர்க்கும் வசதியில்லாத Macஇன் மூலம் பேமெண்ட் செய்யப்படும்போது, Apple சர்வர்களில் உள்ள என்கிரிப்ட் செய்யப்பட்ட சேனல் வழியாக Mac மற்றும் அங்கீகரிக்கும் சாதனம் தகவல்தொடர்பை மேற்கொள்ளும். உங்களைத் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணும் வகையில் Apple இந்தத் தகவல்கள் எதையும் தக்கவைக்காது.

மேலும், நீங்கள் மூன்றாம் தரப்பு உலாவிகளில் பேமெண்ட்களைச் செலுத்தவும் பரிவர்த்தனையை அங்கீகரிக்க Apple Payஐ ஆதரிக்கும் சாதனங்களைப் பயன்படுத்தவும் Apple Pay அனுமதிக்கும். இந்த அம்சத்தைப் பயன்படுத்தும்போது நீங்கள் ஷிப்பிங் மற்றும் பேமண்ட் விவரங்களைப் புதுப்பிக்கவும், உங்கள் அங்கீகாரத்தை வழங்கவும், மூன்றாம் தரப்பு உலாவி மற்றும் உங்கள் அங்கீகரிப்புச் சாதனத்திற்கும் இடையே Apple சர்வர்கள் மூலம் தகவல்தொடர்பு சேனலை Apple உருவாக்கும். உங்கள் ஷிப்பிங் மற்றும் பில்லிங் தகவல்கள், உங்கள் வாங்குதல்களுடன் தொடர்புடைய வரி அல்லது ஷிப்பிங் கட்டணங்கள் போன்ற வணிகக் கட்டணங்கள் பற்றிய தகவல்கள் ஆகியவை சுருக்கமாக Appleக்குக் காட்டப்படும். உங்களைத் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணும் வகையில் Apple இந்தத் தகவல்கள் எதையும் தக்கவைக்காது.

Apple Pay ஆர்டர் டிராக்கிங்

நீங்கள் Apple Pay மூலம் வாங்கும்போது ஆர்டரை டிராக் செய்ய, ஆர்டர் சார்ந்த குறிப்பிட்ட தகவல்களைப் பயன்படுத்தி உங்கள் ஆர்டரைச் சாதனம் டிராக் செய்வதற்குப் பங்குபெறும் வணிகம் உங்கள் சாதனத்திற்கு இந்தத் தகவல்களை அனுப்பும். கூடுதலாக, ஆர்டர் குறித்த அறிவிப்புகளைச் சாதனத்திற்கு வழங்குவதற்காக வணிகம் பயன்படுத்தக்கூடிய வணிகம் சார்ந்த சாதன அடையாளத் தகவல் மற்றும் Push டோக்கனை வணிகத்திற்கு Apple வழங்கும். அறிவிப்புகளை வணிகம் அனுப்ப Apple வழிவகுக்கும் என்றாலும் அது தகவல்களைச் சேமிக்காது மற்றும் அனுப்பப்பட்டுள்ள ஆர்டர் அறிவிப்புகளின் எண்ணிக்கை, அவற்றின் கால இடைவெளி, அனுப்பிய வணிகம் போன்றவற்றை டிராக் செய்யாது. ஆர்டர் டிராக்கிங் தகவல்கள் உங்கள் சாதனத்திலேயே சேமிக்கப்படும். என்கிரிப்ட் செய்யப்பட்ட ஒரு நகலுடன் ஒத்திசைக்கப்பட்டு அனைத்துச் சாதனங்களிலும் புதுப்பித்த நிலையில் வைக்கப்படும் இவற்றை Appleஆல் அணுக முடியாது. வாலெட்டில் “மேலும்” பட்டனைத் தட்டி, “ஆர்டர்கள்” என்பதைத் தட்டி, குறிப்பிட்ட ஆர்டரைத் தட்டி, “ஆர்டரை நிர்வகிக்கவும்” என்பதைத் தட்டி உங்கள் Apple Pay ஆர்டர்களை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் நிர்வகிக்கலாம். வாலெட்டில் “மேலும்” பட்டனைத் தட்டி, “ஆர்டர்கள்” என்பதைத் தட்டி, குறிப்பிட்ட ஆர்டரைத் தட்டி, “மேலும்” பட்டனைத் தட்டி, “அறிவிப்புகளை ஒலிமுடக்கு” என்பதைத் தட்டுவதன் மூலம் ஆர்டர்கள் குறித்த அறிவிப்புகளையும் நீங்கள் நிர்வகிக்கலாம்.

கணக்கில் இருந்து நீங்கள் வெளியேறினால், சாதனம் பெறக்கூடிய அறிவிப்புகளுக்கான ஆர்டர்கள் பற்றிய குறிப்பிட்ட சில தகவல்களை உங்கள் சாதனம் தொடர்ந்து தக்கவைக்கும். சாதனப் பயனர்களுக்குக் காட்டப்படாத இந்தத் தகவல்கள் சிறிது நேரத்திற்கே தக்கவைக்கப்படும். அங்கீகாரம் இல்லாமல் உங்கள் ஆர்டர் தகவல்கள் அணுகப்படுவதைத் தடுக்க, கணக்கில் இருந்து வெளியேறிய பிறகு உங்கள் சாதனத்திற்கு அனுப்பப்படும் அறிவிப்புகளை நிறுத்த மட்டுமே இந்தத் தகவல்களை உங்கள் சாதனம் பயன்படுத்தும்.

கணக்குச் செயல்பாட்டை மூன்றாம் தரப்புச் செயலிகளுடன் பகிர்தல்

உங்கள் Apple Card, Savings, Apple Cash மற்றும் பிற இணைக்கப்பட்ட கார்டின் கணக்கு விவரங்களையும் இதுவரையான பரிவர்த்தனைகளையும் App Storeஇல் இருந்து பதிவிறக்கப்படும் உங்களுக்கு நம்பகமான பங்குபெறும் நிதி மேலாண்மைச் செயலிகளுடன் நீங்கள் பகிரலாம். வாலெட்டில் Apple Payஇல் உள்ள கணக்குச் செயல்பாட்டைப் படிக்கும் திறனைச் செயலிகள் பெற வேண்டும். இந்தச் செயலிகளுடன் நீங்கள் பகிரும் இந்தத் தரவுகளுக்கான கட்டுப்பாடு உங்களிடமே இருப்பதால் என்னென்ன தரவுகள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம். மூன்றாம் தரப்புச் செயலியுடன் நீங்கள் பகிரும் கணக்குச் செயல்பாடுகள் அந்தச் செயலியின் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். உங்கள் கணக்குச் செயல்பாடுகளைப் பகிரும்போது, உங்கள் கணக்கு விவரங்கள் அல்லது இதுவரையான பரிவர்த்தனைகளை Apple பார்க்காது அல்லது சேமிக்காது.

தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்குப் பொருந்தக்கூடிய சட்டரீதியான அடிப்படை

பொதுவாக Apple உடனான உங்கள் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்காக சேவைகளை வழங்கத் தேவைப்படும் அளவிற்கும், எங்கள் சட்டரீதியான கடமைகளுக்கு இணங்குவதற்காகவும் Apple Payஇல் உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்குகிறோம். ஒப்புதல் என்பது சட்டரீதியான அடிப்படையாக அமையும் இடங்களில், பொருந்தும் உள்ளூர் சட்டங்களின் அடிப்படையில் அதைப் பெற முயல்கிறோம்.

பொருந்தும் உள்ளூர் சட்டங்கள் குறிப்பிடும் இடங்களில், தனிப்பட்ட தரவின் பின்வரும் வகைகளை எங்களின் அல்லது மூன்றாம் தரப்புகளின் நியாயமான நலன்களின் நோக்கத்திற்காகத் தேவைப்படும் அளவிற்குச் செயலாக்குகிறோம், இதில் பின்வருவன பற்றிய தகவல்கள் அடங்கும்:

  • உங்கள் கணக்கு (உங்கள் கணக்கு செயலில் உள்ளதா என்பது போன்ற விவரம்)
  • உங்கள் சாதனம் (சாதனத்தின் வகை, மென்பொருள் பதிப்பு மற்றும் சாதன வரிசை எண் போன்றவை)
  • உங்கள் பாஸ் (பாஸில் காட்டப்படும் தகவல்கள்)
  • உங்கள் பாஸ் வழங்குநர் (பாஸுக்கான புதுப்பிப்புகளை வழங்க அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு போன்ற தகவல்கள்)
  • Apple Payஐ நீங்கள் பயன்படுத்தும் விதம் (எடுத்துக்காட்டாக, நீங்கள் சேர்த்துள்ள Apple Pay பாஸ்களின் எண்ணிக்கை)
  • உங்கள் இருப்பிடம்

நியாயமான நலன்கள் என்பதில் இவையும் அடங்கும்:

  • பாஸைச் சேர்த்தல் மற்றும் நிர்வகித்தல்
  • உங்களுக்காகவும் பிறருக்காகவும் சேவையை மேம்படுத்தி உகந்ததாக்க உதவுதல்
  • உங்களுக்கு மிகவும் பொருத்தமான அம்சங்களைக் கண்டறிய உங்களுக்கு உதவுதல்
  • தகுதியைச் சரிபார்த்தல்
  • நீங்கள் கோரும் சேவைகளை உங்களுக்கு வழங்குதல்
  • Apple Pay மற்றும் நீங்கள் விரும்பக்கூடிய பிற Apple தயாரிப்புகள், சேவைகள் மற்றும் சலுகைகள் பற்றிய தகவல்களை உங்களுக்கு அனுப்புதல்
  • மோசடி மற்றும் பிற தீங்கிழைக்கும் செயல்பாட்டைத் தடுத்தல்

பிற தகவல்கள்

வாலெட்டில் உள்ள ஒரு கார்டை நீங்கள் தட்டும்போது, வாலெட் மற்றும் Apple Pay அம்சங்களுக்கான தகுதியைத் தீர்மானிக்க, கார்டு எந்த நாட்டில் வழங்கப்பட்டது மற்றும் கார்டு வழங்கும் நிறுவனம் இந்த அம்சத்தில் பங்கேற்றுள்ளதா இல்லையா என்பதைக் கருத்தில் எடுத்துக்கொண்டு, அம்சத்தைப் பெற தகுதி உள்ளதா இல்லையா என்பதை Apple சரிபார்க்கும்.

இருப்பிடச் சேவைகள் அம்சத்தை ஆன் செய்திருந்தால், சாதனத்தைப் பயன்படுத்தி நீங்கள் ஸ்டோரில் இருந்து வாங்கும்போது உங்கள் சாதனம் இருந்த இடம் குறித்த தகவல் அடையாளம் நீக்கப்பட்டு Appleக்கு அனுப்பப்படும். வாலெட்டில் இதுவரையான கார்டு பரிவர்த்தனைகளில் உள்ள வணிகப் பெயர்களின் துல்லியத்தன்மையை Apple Pay மேம்படுத்தவும் இது உதவும். மேலும் Apple மேப்ஸ், Apple Pay, வாலெட் ஆகியவற்றை மேம்படுத்த தொகுக்கப்பட்ட தகவல்கள் தக்கவைக்கப்படலாம். உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில் அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > இருப்பிடச் சேவைகள் > சிஸ்டம் சேவைகள் என்பதற்குச் சென்று “Apple Pay வணிகம் அடையாளங்காணுதல்” என்பதைத் தட்டி ஆஃப் செய்து, Apple Payஇன் இந்த இருப்பிடம் சார்ந்த செயல்பாட்டை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் முடக்கலாம். உங்கள் Macஇல், அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > இருப்பிடச் சேவைகள் என்பதற்குச் சென்று, வாலெட்டை கிளிக் செய்து ஆஃப் செய்யலாம்.

Apple Payஐ மேம்படுத்த, நீங்கள் Apple Payஐப் பயன்படுத்தும் விதம் பற்றிய தகவல்களை Apple சேகரிக்கும் மற்றும் உங்களைத் தனிப்பட்ட முறையில் அடையாளங்காணாத வகையில் அந்தத் தகவல்களைச் சேமிக்கும். ஒரு கார்டைச் சேர்க்க ஆகும் நேரம் அல்லது Apple Payஐப் பயன்படுத்தி பரிவர்த்தனையை நிறைவுசெய்ய ஆகும் நேரத்தை இந்தத் தகவல் கொண்டிருக்கும். கடந்த வாரத்தில் நீங்கள் Apple Pay மூலம் பர்ச்சேஸ் செய்தீர்களா என்பது போன்று, பரிவர்த்தனை செய்ய நீங்கள் Apple Payஐத் தொடர்ந்து பயன்படுத்துகிறீர்களா என்பதைக் குறிப்பிடும் சிக்னல்களையும் Apple பராமரிக்கிறது. பர்ச்சேஸ் அல்லது செயல்பாடு தொடர்பான அடிப்படைத் தகவல்கள் எதுவும் Apple உடன் பகிரப்படாமல் உங்கள் சாதனத்திலேயே இந்த சிக்னல்கள் கணக்கிடப்படுகின்றன. பிற Apple தயாரிப்புகளையும் சேவைகளையும் மேம்படுத்துவதற்காகவும் மார்க்கெட்டிங்கிற்காகவும் மோசடித் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காகவும் இந்தத் தகவல்களை Apple பயன்படுத்தக்கூடும்.

கார்டு வைத்திருப்பவர், பயனர் அல்லது வணிக ஒப்பந்தத்தின் விதிமுறைகள் அல்லது Apple Pay அம்சங்களின் பயன்பாட்டுடன் பொருந்தக்கூடிய பிற விதிமுறைகள் & நிபந்தனைகள், நீங்கள் கார்டுகளைப் பயன்படுத்தும் விதத்தையும் அவற்றை Apple Pay உடன் இணைத்துப் பயன்படுத்தும் விதத்தையும் தொடர்ந்து நிர்வகிக்கும். அத்தகைய விதிமுறைகளில் கூடுதல் தனியுரிமைக் கொள்கைகளும் இருக்கக்கூடும். Apple Payஐ வழங்கும் Apple நிறுவனமோ அதன் துணைநிறுவனங்களோ வங்கி கிடையாது. உங்கள் வங்கியில் இருந்து பெறக்கூடிய அறிக்கைகளுடன் சேர்த்து கூடுதல் இணைப்பாக நீங்கள் இந்த அறிக்கையைப் பெறுகிறீர்கள். Apple Payஇன் பயன்பாட்டுடன் தொடர்புடைய வகையில் மோசடி ஏதேனும் நிகழ்ந்துள்ளதா என Apple சந்தேகப்பட்டால், மோசடி செய்திருக்கக்கூடிய Apple கணக்கு மற்றும் பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்கள், மோசடியைத் தடுப்பதற்காக உங்கள் கார்டு வழங்குநர் அல்லது பேமெண்ட் நெட்வொர்க் வழங்குநருடன் பகிரப்படக்கூடும்.

இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டபடி, சேகரிக்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றத் தேவைப்படும் காலம் வரை அல்லது சட்டப்படி தேவைப்படும் காலம் வரை மட்டுமே Apple தனிப்பட்ட தரவைத் தக்கவைக்கும். தக்கவைத்தல் காலத்தை மதிப்பிடும்போது, சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவைத் தக்கவைப்பது தேவையா என்று முதலில் கவனமாக ஆராய்கிறோம். தக்கவைத்தல் தேவை எனில், சட்டப்படி அனுமதிக்கப்பட்ட குறுகிய காலத்திற்கு மட்டுமே தனிப்பட்ட தரவைத் தக்கவைக்க முயல்கிறோம்.

Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.

2025-12-12