உங்கள் சிறார்களுக்கான Apple Watch மற்றும் தனியுரிமை
உங்கள் சிறார்களுக்கான Apple Watch, உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
![]()
- ஒரு குடும்ப உறுப்பினரின் Apple Watchஐ உங்கள் iPhone உடன் இணைக்க “உங்கள் சிறார்களுக்கான Apple Watch” அம்சம் உங்களுக்கு உதவுகிறது.
- “உங்கள் சிறார்களுக்கான Apple Watch” அம்சத்தில் உள்ள சில watchOS அம்சங்கள் தனிப்பட்ட தரவுகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம்.
- உங்கள் குடும்ப உறுப்பினரின் Apple Watchஇல் இருந்து குறிப்பிட்ட அம்சங்கள் தொடர்பான குறிப்பிட்ட தரவுகளைக் கோரிக்கையின் பேரில் பெறும் திறன் அல்லது தொடர்புடைய செயல்பாட்டின் பதிவுகளைப் பார்க்கும் திறன் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும். இதில் குடும்ப உறுப்பினரின் உடல்நலத் தரவுகள், பள்ளிநேரத்தில் அன்லாக் செய்தது குறித்த விவரங்கள், இருப்பிடம், தொடர்புத் தரவுகள் போன்றவையும் அடங்கும். உடல்நலத் தரவுகள் மற்றும் பள்ளிநேரத்தில் செய்த அன்லாக்குகளுக்கு, தொடர்புடைய தகவல்கள் மற்றும் பதிவுகளைப் பகிர்வதற்காக மட்டும் இந்தத் தகவல்கள் முழுமையாக என்கிரிப்ட் செய்யப்பட்டு Appleக்கு அனுப்பப்படும்.
ஒரு குடும்ப உறுப்பினரின் Apple Watchஐ உங்கள் iPhone உடன் இணைக்க “உங்கள் சிறார்களுக்கான Apple Watch” அம்சம் உங்களுக்கு உதவுகிறது. “உங்கள் சிறார்களுக்கான Apple Watch” அம்சத்தைச் செயல்படுத்த வேண்டுமெனில் நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினரும் ஒரே குடும்பப் பகிர்வில் இருக்க வேண்டும், நீங்கள் உங்கள் குடும்பக் குழுவின் குடும்ப ஒருங்கிணைப்பாளராக அல்லது பெற்றோர்/பாதுகாவலராக இருக்க வேண்டும். உங்களிடம் குடும்பப் பகிர்வு இல்லையெனில், அதை நீங்கள் அமைக்க வேண்டும். உங்கள் குடும்ப உறுப்பினரிடம் Apple கணக்கு இல்லையெனில், அதை நீங்கள் உருவாக்க வேண்டும்.
குடும்ப உறுப்பினரின் Apple Watch உங்கள் iPhoneக்கு அருகில் இல்லாவிட்டாலும், “உங்கள் சிறார்களுக்கான Apple Watch” அம்சம் மூலம் குறிப்பிட்ட watchOS அம்சங்களை நீங்கள் பயன்படுத்த முடியும். சில watchOS அம்சங்கள் உங்கள் சிறார்களுக்கான Apple Watchஇல் கிடைக்காது. Apple Watchஇல் மொபைல் சேவைத் திட்டம் இல்லையெனில் அல்லது குடும்ப உறுப்பினரின் வயதைப் பொறுத்து, கூடுதல் watchOS அம்சங்கள் கிடைக்காமல் போகலாம், எடுத்துக்காட்டாக அழைப்புகளைச் செய்யும் திறன் போன்றவை. மொபைல் சேவை வசதியைக் கொண்ட Apple Watchஐ, “உங்கள் சிறார்களுக்கான Apple Watch” அம்சத்தில் நீங்கள் சேர்க்கும்போது, மொபைல் சேவைத் திட்டத்தை உள்ளமைப்பதற்காக Apple Watch வரிசை எண் மற்றும் மொபைல் சேவை வன்பொருள் அடையாளத் தகவல்கள் Appleக்கு அனுப்பப்படும்.
உங்கள் குடும்ப உறுப்பினரின் Apple Watchஇல் இருந்து குறிப்பிட்ட அம்சங்கள் தொடர்பான குறிப்பிட்ட தரவுகளைக் கோரிக்கையின் பேரில் பெறும் வசதி உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும். இதில் குடும்ப உறுப்பினரின் உடல்நலம், இருப்பிடம், தொடர்புத் தரவுகள் போன்ற தகவல்களும் அடங்கும். இந்தத் தரவுகளை உங்களுடன் பகிரும் அல்லது பகிர்வதை நிறுத்தும் திறன் உங்கள் குடும்ப உறுப்பினருக்கு இருக்கலாம். உங்கள் குடும்ப உறுப்பினரின் உடல்நலத் தரவுகளை அணுக நீங்கள் அனுமதி கோரினால், அந்த உறுப்பினரின் Watchஇல் அந்தக் கோரிக்கை காட்டப்படும். உங்கள் குடும்ப உறுப்பினர் தனது உடல்நலத் தரவுகளை உங்களுடன் பகிர்வதைத் தேர்வுசெய்தால், இந்தத் தகவல்கள் முழுமையாக என்கிரிப்ட் செய்யப்பட்டு Appleக்கு அனுப்பப்படும். Apple இந்தத் தகவல் பகிர்வைச் செயல்படுத்த உதவுவதற்காக மட்டும் இந்தத் தரவுகள் உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும்.
“பள்ளிநேரம்” அம்சத்தின் மூலம், Apple Watchஇன் குறிப்பிட்ட அம்சங்களைப் பயன்படுத்துவதற்கான நேர வரம்பை நீங்கள் தீர்மானிக்கலாம். பள்ளிநேரத்தின்போது உங்கள் குடும்ப உறுப்பினர் தனது Watchஐ அன்லாக் செய்தால், உங்கள் iPhoneஇல் உள்ள Apple Watch செயலியில் அவர் அன்லாக் செய்தது குறித்த விவரங்களை நீங்கள் பார்க்கலாம். இந்தத் தகவல்கள் முழுமையாக என்கிரிப்ட் செய்யப்பட்டு Appleக்கு அனுப்பப்படும், அன்லாக் பற்றிய தகவல்களை வழங்க Appleக்கு உதவுவதற்காக மட்டும் இந்தத் தரவுகள் உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும்.
“உங்கள் சிறார்களுக்கான Apple Watch” அம்சம் மூலம், உங்கள் குடும்ப உறுப்பினரின் Apple Watchஇல் இருந்து பதிவுகளையும் ஸ்கிரீன்ஷாட்களையும் நீங்கள் உங்கள் iPhoneஇல் பார்க்கலாம்.
உங்கள் iPhoneஇல் உள்ள Apple Watch செயலி மூலம் “உங்கள் சிறார்களுக்கான Apple Watch” அம்சத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் முடக்கலாம், Apple Watchஇல் உள்ள அமைப்புகள் மூலம் “உங்கள் சிறார்களுக்கான Apple Watch” அம்சத்தை உங்கள் குடும்ப உறுப்பினர் முடக்கலாம். Apple Watchஇல் உள்ள அமைப்புகள் மூலம் தங்களின் முன்னுரிமைகளையும் உங்கள் குடும்ப உறுப்பினர் மாற்றிக்கொள்ளலாம், இதில் உங்களுடன் தரவுகளைப் பகிர்வதும் அடங்கும்.
இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டபடி, சேகரிக்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றத் தேவைப்படும் காலம் வரை அல்லது சட்டப்படி தேவைப்படும் காலம் வரை மட்டுமே Apple தனிப்பட்ட தரவைத் தக்கவைக்கும். தக்கவைத்தல் காலத்தை மதிப்பிடும்போது, சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவைத் தக்கவைப்பது தேவையா என்று முதலில் கவனமாக ஆராய்கிறோம். தக்கவைத்தல் தேவை எனில், சட்டப்படி அனுமதிக்கப்பட்ட குறுகிய காலத்திற்கு மட்டுமே தனிப்பட்ட தரவைத் தக்கவைக்க முயல்கிறோம்.
“உங்கள் சிறார்களுக்கான Apple Watch” அம்சத்தின் உங்கள் பயன்பாட்டில் இருந்து அல்லது “உங்கள் சிறார்களுக்கான Apple Watch” மூலம் செயல்படுத்தப்பட்ட அம்சங்களில் இருந்து Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.
2025-12-12