Siri, டிக்டேஷன் & தனியுரிமை
Siri உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Siri மற்றும் டிக்டேஷன் இயல்பாகச் செயல்படும் விதம் குறித்து Siri, டிக்டேஷன் & தனியுரிமை விவரிக்கிறது. Siri மற்றும் டிக்டேஷனை மேம்படுத்துதலை இயக்கியிருந்தால், கூடுதல் தரவுகள் சேகரிக்கப்பட்டு, சேமிக்கப்பட்டு, மறுஆய்வு செய்யப்படும். கூடுதல் தகவல்களுக்கு, www.apple.com/legal/privacy/data/en/improve-siri-dictation இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.
Siri மற்றும் டிக்டேஷன்
நீங்கள் Siriஐப் பயன்படுத்தும்போது, நீங்கள் சொல்லும் விஷயங்கள் உங்கள் சாதனத்தில் செயலாக்கப்படுகிறதா என்பதை உங்கள் சாதனம் Siri அமைப்புகளில் குறிப்பிட்டுக் காட்டும். இவை Apple சர்வர்களுக்கு அனுப்பப்படாது. இல்லையெனில், உங்கள் ஆடியோ Apple சர்வர்களுக்கு அனுப்பப்பட்டு செயலாக்கப்படும். Siri மற்றும் டிக்டேஷனை மேம்படுத்தலை இயக்கியிருந்தால் மட்டுமே, உங்கள் ஆடியோ தரவை Apple சேமிக்கும்.
நீங்கள் டிக்டேஷன் அம்சத்தைப் பயன்படுத்தும்போது, உங்கள் ஆடியோவும் டிரான்ஸ்கிரிப்ட்களும் உங்கள் சாதனத்தில் செயலாக்கப்படுவதை உங்கள் சாதனம் “கீபோர்டு” அமைப்புகளில் குறிப்பிட்டுக் காட்டும். இவை Apple சர்வர்களுக்கு அனுப்பப்படாது. இல்லையெனில், நீங்கள் டிக்டேட் செய்யும் விஷயங்கள் சர்வருக்கு அனுப்பப்பட்டு அதிலேயே செயலாக்கப்படும் என்றாலும் Siri மற்றும் டிக்டேஷனை மேம்படுத்துதல் விருப்பத்தை நீங்கள் இயக்கியிருந்தால் மட்டுமே அவை சர்வரில் சேமிக்கப்படும்.
எழுப்பப்பட்ட கோரிக்கையின் வகை, அது நிறைவுசெய்யப்பட்டதா இல்லையா என்ற விவரம், சாதனத்தின் விவரக்குறிப்புகள், சாதன உள்ளமைவு, செயல்திறன் புள்ளிவிவரங்கள் போன்ற தகவல்களையும், Siriக்காக இருப்பிடச் சேவைகளை ஆன் செய்திருந்தால், கோரிக்கை எழுப்பப்பட்ட நேரத்தில் உங்கள் சாதனத்தின் தோராயமான இருப்பிடம் போன்ற தொடர்புடைய கோரிக்கைத் தரவுகளையும் Apple சேமிக்கும்.
டிரான்ஸ்கிரிப்ட்கள், அனைத்துத் தொடர்புடைய கோரிக்கைத் தரவுகள் உள்ளடங்கிய இதுவரையான கோரிக்கைகள் ஒரு மணிநேரத்தில் பல முறை மாறக்கூடிய, சாதனத்தால் உருவாக்கப்படும் சீரற்ற அடையாளத் தகவலுடன் இணைக்கப்பட்டிருக்கும் என்றாலும் உங்கள் Apple கணக்கு அல்லது மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்புபடுத்தப்படாது. Siri, டிக்டேஷன், தேடல் மற்றும் வேறு சில குறிப்பிட்ட மொழிச் செயலாக்கங்களை Apple தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் உருவாக்கவும் மேம்படுத்தவும் இந்தத் தரவை Apple இரண்டு ஆண்டுகள் வரை தக்கவைத்துப் பயன்படுத்தக்கூடும். உதாரணத்திற்கு, Siri, தேடல், குரல் கட்டுப்பாடு, மொழிபெயர்ப்பு, தானியங்குப் பேச்சறிதல் மாடல்கள் போன்றவற்றை மேம்படுத்த டிரான்ஸ்கிரிப்ட்கள் பயன்படுத்தப்படக்கூடும். Siri உடனான உங்கள் உரையாடல்களுக்கான டிரான்ஸ்கிரிப்ட்களின் ஒரு பகுதியையும் Apple மதிப்பாய்வு செய்யக்கூடும். மதிப்பாய்வு செய்யப்பட்ட இந்தச் சிறிய டிரான்ஸ்கிரிப்ட் பகுதி, இந்தத் தயாரிப்புகளையும் சேவைகளையும் தொடர்ந்து மேம்படுத்துவதற்காக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் தக்கவைக்கப்படலாம்.
இதுவரையிலான உங்கள் Siri மற்றும் டிக்டேஷன் உரையாடல்கள் உங்கள் சாதனத்தில் சேமிக்கப்பட்டு, உங்கள் Siri அனுபவத்தைத் தனிப்பயனாக்கப் பயன்படுத்தப்படலாம்.
நீங்கள் Siri மற்றும் டிக்டேஷன் அம்சத்தைப் பயன்படுத்தும்போது உங்கள் சாதனம் மற்ற சூழல் தரவுகளை Appleக்கு அனுப்பலாம். இதில் “Siri கோரிக்கைகளுடன் பயன்படுத்துதல்” விருப்பத்துடன் ஒருங்கிணைக்க நீங்கள் அனுமதிக்கும் மூன்றாம் தரப்புச் செயலிகளில் இருந்து பெறும் தரவுகளும் அடங்கும். அவற்றுள் சில:
- உங்கள் தொடர்புகளில் இவை அமைக்கப்பட்டிருந்தால், தொடர்புப் பெயர்கள், புனைபெயர்கள், உறவுமுறைகள் (எ.கா., “எனது தந்தை”)
- மொழி மற்றும் வட்டார அமைப்புகளில் அமைக்கப்பட்டிருந்தால், முகவரி வடிவம்
- நீங்கள் ரசிக்கும் இசை மற்றும் பாட்காஸ்ட்கள்
- உங்களுடைய மற்றும் உங்கள் குடும்பப் பகிர்வு உறுப்பினர்களின் சாதனங்களின் பெயர்கள்
- ஆக்சஸரிகளின் பெயர்கள், வீடுகள், காட்சிகள், ஹோம் செயலியில் உள்ள பகிர்ந்த வீட்டு உறுப்பினர்கள் மற்றும் Apple TV பயனர் சுயவிவரங்கள்
- ஃபோட்டோஸில் உள்ள நபர்களின் பெயர்கள், அலாரங்களின் பெயர்கள், நினைவூட்டல் பட்டியல்களின் பெயர்கள் போன்றவற்றுக்கான லேபில்கள்
- உங்கள் சாதனத்தில் நிறுவப்பட்ட செயலிகளின் பெயர்கள் மற்றும் Siri மூலம் நீங்கள் சேர்த்த சுருக்கவழிகள்
இந்தத் தரவு உங்கள் Apple கணக்கு அல்லது மின்னஞ்சல் முகவரியுடன் இணைக்கப்படாத ரேண்டமான, சாதனத்தால் உருவாக்கப்பட்ட அடையாளத் தகவலுடன் இணைக்கப்பட்டிருக்கும். உங்கள் கோரிக்கையை Siri புரிந்துகொண்டதா இல்லையா என்பதைக் கண்டறிவதற்கும், உங்களை நன்கு புரிந்துகொள்ள மற்றும் நீங்கள் சொல்வதை அடையாளம் காண உங்கள் iOS சாதனம், உங்கள் Apple Watch, HomePod போன்ற இணைக்கப்பட்ட ஏதேனும் ஒரு Apple சாதனம் அல்லது ஆதரிக்கப்படும் HomeKit ஆக்சஸரிக்கு உதவுவதற்கும் மட்டுமே இதை Apple பயன்படுத்தும்.
இந்தச் சூழல் தரவுகள், உங்கள் Siri டிரான்ஸ்கிரிப்ட்கள், தொடர்புடைய கோரிக்கைத் தரவுகள் ஆகியவை சந்தைப்படுத்தல் சுயவிவரத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படவோ, ஒருபோதும் எவருக்கும் விற்பனை செய்யப்படவோ மாட்டாது.
மூன்றாம் தரப்புச் செயலிகள்
உங்களுக்காக Siri மூன்றாம் தரப்புச் செயலிகள் அல்லது சேவைகளுடன் இணைந்து செயல்பட்டால், நீங்கள் அந்தச் செயலி அல்லது சேவையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், தனியுரிமைக் கொள்கை ஆகியவற்றுக்கும் உட்படுவீர்கள். கூடுதலாக, டிரான்ஸ்கிரிப்ஷனுக்காகப் “பேச்சறிதல்” அம்சத்தைப் பயன்படுத்த செயலிகளை நீங்கள் அனுமதித்தால், டிரான்ஸ்கிரைப் செய்யப்பட வேண்டிய ஆடியோ தரவுகள் Appleக்கு அனுப்பப்படலாம்.
Siri பரிந்துரைகள்
உங்கள் அனுபவத்தைப் பிரத்தியேகமாக்குவதற்காக நீங்கள் உங்கள் சாதனங்களையும் செயலிகளையும் பயன்படுத்தும் விதத்தை அறிந்துகொள்வதற்காக உள்ளகத்தில், சாதனத்திலேயே செய்யப்படும் செயலாக்கத்தை “Siri பரிந்துரைகள்” பயன்படுத்துகின்றன. Safariஇல் இதுவரை உலாவியவை, மின்னஞ்சல்கள், மெசேஜ்கள், படங்கள், அறிவிப்புகள், தொடர்புகள் போன்ற உங்கள் சாதனத்தில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் பிற நிறுவப்பட்ட செயலிகளால் வழங்கப்பட்ட அல்லது பகிரப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி சுருக்கவழிகளை Siri பரிந்துரைக்கலாம். தேடல்கள், பகிர்வுத் தாள், கேலண்டர், “கண்டுபிடித்தல்”, “விஷுவலாகக் கண்டுபிடித்தல்”, Safari, செயலிகள் மற்றும் பலவற்றில் Siri பரிந்துரைகளை வழங்கலாம். எடுத்துக்காட்டாக, புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள நபரைப் பொறுத்து பகிர்வுத் தாளில் யாருடன் புகைப்படத்தைப் பகிர்வது எனப் பரிந்துரைக்க சாதனத்தின் நுண்ணறிவை Siri பயன்படுத்தக்கூடும். Apple சேவைகளைப் பிரத்தியேகமாக்க பரிந்துரைகள் பயன்படுத்தப்படலாம், ஆனால் அவை Apple சர்வர்களில் சேமிக்கப்படாது மற்றும் மூன்றாம் தரப்புச் செயலிகளுடன் பகிரப்படாது. Siri பரிந்துரைத்த சுருக்கவழியை நீங்கள் பயன்படுத்தினால் அந்தச் செயலியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், தனியுரிமைக் கொள்கை ஆகியவற்றுக்கு உட்படுகிறீர்கள்.
இருப்பிடச் சேவைகள்
Siriக்கு “இருப்பிடச் சேவைகள்” அம்சத்தை ஆன் செய்திருந்தால், நீங்கள் கோரிக்கை விடுக்கும் நேரத்தில் உங்கள் சாதனம் இருக்கும் இடம் குறித்த தகவல் Appleக்கு அனுப்பப்படும். இது உங்கள் கோரிக்கைகளுக்கு Siri, டிக்டேஷன் வழங்கும் பதிலின் துல்லியத்தை மேம்படுத்த அவற்றுக்கு உதவும். ஒரு புவியியல் பகுதியுடன் உங்கள் தோராயமான இருப்பிடத்தைப் பொருத்தித் தொடர்புடைய பதில்கள் மற்றும் பரிந்துரைகளை வழங்க, உங்கள் இணைய இணைப்பின் IP முகவரியை Apple பயன்படுத்தக்கூடும்.
iCloud ஒத்திசைவு
நீங்கள் iCloudஐப் பயன்படுத்தினால், உங்கள் Siri அமைப்புகள் மற்றும் Siri பரிந்துரைகளின் பிரத்தியேகமாக்கல், முழுமையான என்கிரிப்ஷனைப் பயன்படுத்தி உங்கள் அனைத்து Apple சாதனங்களிலும் ஒத்திசைக்கப்படும். நீங்கள் Siriஐ அமைத்திருந்தால், ஒவ்வொரு சாதனத்திலும் பிரத்தியேக Siri அடையாளங்காணுதல் அம்சத்தை மேம்படுத்த, முழுமையான என்கிரிப்ஷனைப் பயன்படுத்தி உங்கள் கோரிக்கைகளின் சிறிய சாம்பிளும் ஒத்திசைக்கப்படும். துல்லியத்தன்மையையும் மாடலின் செயல்திறனையும் மேம்படுத்துவதற்காக, பிரத்தியேகப் பேச்சறிதல் மாடல்களும் உங்கள் சாதனத்தில் மேற்கொள்ளப்படும் Siri மற்றும் டிக்டேஷன் அம்சத்துடன் உங்கள் உரையாடல்களும் உங்கள் சாதனத்தில் உள்ள தகவல்களைப் பயன்படுத்தக்கூடும். அருகிலுள்ள உங்கள் டைமர்கள், அலாரங்கள், பகிர்ந்த மீடியா ஆகியவற்றின் நிலை மற்றும் HomePodஇல் நீங்கள் “தனிப்பட்ட கோரிக்கைகள்” என்பதைத் தேர்வுசெய்திருந்தால், உங்கள் சாதனத்தில் உள்ள ஃபோன் அழைப்பு நிலை மற்றும் அத்தகைய சாதனம் அருகில் இருப்பது குறித்த தகவல் ஆகியவை Siri செயல்படுத்தப்பட்டுள்ள உங்கள் அருகிலுள்ள சாதனங்களில் இருந்து பிறர் கட்டுப்படுத்தும் வகையில் உங்கள் அருகிலுள்ள Apple சாதனங்களுடன் உள்ளகத்திலேயே பகிரப்படக்கூடும்.
நீங்களே இதைத் தேர்வுசெய்யலாம் மற்றும் கட்டுப்படுத்தலாம்
நீங்கள் Siri அல்லது டிக்டேஷன் அம்சத்தை எப்போது வேண்டுமானாலும் முடக்கலாம். Siriஐ ஆஃப் செய்ய, அமைப்புகள் > Siri > “Siri உடன் பேசுதல்” என்பதற்குச் சென்று ஆஃப் என்பதைத் தட்டவும். அமைப்புகள் > Siri > “Siri உடன் பேசுதல்” என்பதற்குச் சென்று “Siriஐ இயக்க முகப்பை அழுத்துதல்” அல்லது “Siriஐ இயக்க பக்கவாட்டு பட்டனை அழுத்துதல்” விருப்பத்தை ஆஃப் செய்யத் தட்டவும். டிக்டேஷன் அம்சத்தை ஆஃப் செய்ய, அமைப்புகள் > பொது அமைப்புகள் > கீபோர்டு என்பதற்குச் சென்று “டிக்டேஷனைச் செயல்படுத்து” என்பதை ஆஃப் செய்யத் தட்டவும். Siri, டிக்டேஷன் ஆகிய இரண்டையும் நீங்கள் ஆஃப் செய்தால், உங்கள் சாதனத்தில் சேமிக்கப்பட்டு உங்கள் அனுபவத்தைத் தனிப்பயனாக்கப் பயன்படுத்தப்படும் Siri மற்றும் டிக்டேஷன் கோரிக்கைகளின் டிரான்ஸ்கிரிப்ட்கள் நீக்கப்படும்.
அமைப்புகள் > Siri > “Siri & டிக்டேஷன் வரலாறு” என்பதற்குச் சென்று “Siri & டிக்டேஷன் வரலாற்றை நீக்கு” என்பதைத் தட்டுவதன் மூலம் உங்கள் சாதனத்தில் சேமிக்கப்பட்டுள்ள Siri மற்றும் டிக்டேஷன் கோரிக்கைகளின் டிரான்ஸ்கிரிப்ட்களை நீக்கலாம்.
Siri கோரிக்கைகளை அனுமதி விருப்பத்துடன் எந்தெந்தச் செயலிகளை ஒருங்கிணைக்கலாம் என்பதை அமைப்புகள் > Siri > செயலிகள் > [செயலியின் பெயர்] > Siri கோரிக்கைகளுடன் பயன்படுத்துதல் என்பதற்குச் சென்று நீங்கள் எந்த நேரத்திலும் கட்டுப்படுத்தலாம்.
செயலிகளிலோ பகிர்தல், தேடல் அல்லது கேட்டலின்போதோ Siri எதையும் பரிந்துரைக்க வேண்டாம் என நீங்கள் நினைத்தால், அமைப்புகள் > Siri என்பதற்குச் சென்று “செயலி லைப்ரரியில் காட்டு”, “Spotlightஇல் காட்டு”, “பகிரும்போது காட்டு”, “கேட்கும்போது காட்டு” ஆகியவற்றைத் தட்டி ஆஃப் செய்து Siri பரிந்துரைகளை முடக்கலாம்.
Siri பிரத்தியேகமாக்கும் அம்சங்களின் முழுப் பட்டியலையும் Siri சுருக்கவழிகளைப் பரிந்துரைக்கும் செயலிகளையும் அமைப்புகள் > Siri என்பதற்குச் சென்று நீங்கள் பார்க்கலாம் கட்டுப்படுத்தலாம். Siri தனிப்பயனாக்கத்திற்காகத் தகவல்களைச் செயலிகள் பகிர்வதை நிறுத்த, அமைப்புகள் > Siri > செயலிகள் > [செயலியின் பெயர்] என்பதற்குச் சென்று, “இந்தச் செயலியில் இருந்து கற்றுக்கொள்” என்பதைத் தட்டி அதை ஆஃப் செய்யவும். Siri பிரத்தியேகமாக்கத்திற்காகத் தகவல்களைச் செயலி கிளிப்கள் பகிர்வதை நிறுத்த, அமைப்புகள் > Siri > செயலி கிளிப்கள் என்பதற்குச் சென்று “செயலி கிளிப்களில் இருந்து அறிக” என்பதைத் தட்டி அதை ஆஃப் செய்யுங்கள்.
நீங்கள் “இருப்பிடச் சேவைகள்” அம்சத்தைச் செயல்படுத்தியிருந்தால், அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > இருப்பிடச் சேவைகள் > Siri என்பதற்குச் சென்று “வேண்டாம்” என்பதைத் தட்டி Siriக்கான இருப்பிடச் சேவைகளை நீங்கள் ஆஃப் செய்யலாம்.
நீங்கள் “இருப்பிடச் சேவைகள்” அம்சத்தைச் செயல்படுத்தியிருந்தால், அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > இருப்பிடச் சேவைகள் > சிஸ்டம் சேவைகள் என்பதற்குச் சென்று “பரிந்துரைகள் & தேடல்” என்பதைத் தட்டி ஆஃப் செய்வதன் மூலம் Siri பரிந்துரைகளுக்கு இருப்பிடச் சேவைகளை ஆஃப் செய்யலாம்.
Siri பிரத்தியேகமாக்கல் உங்கள் சாதனங்கள் அனைத்திலும் ஒத்திசைக்கப்பட வேண்டாம் என நீங்கள் நினைத்தால், அமைப்புகள் > [உங்கள் பெயர்] > iCloud > iCloudஇல் சேமிக்கப்பட்டவை > அனைத்தையும் காட்டு என்பதற்குச் சென்று Siri என்பதைத் தட்டி ஆஃப் செய்யலாம்.
அமைப்புகள் > ஸ்கிரீன் டைம் > உள்ளடக்கம் & தனியுரிமைக் கட்டுப்பாடுகள் > “அனுமதிக்கப்படும் செயலிகள் & அம்சங்கள்” என்பதற்குச் சென்று “Siri & டிக்டேஷன்” என்பதைத் தட்டி, Siri மற்றும் டிக்டேஷனைப் பயன்படுத்துவதை ஒட்டுமொத்தமாகவும் நீங்கள் கட்டுப்படுத்தலாம்.
எந்தெந்தச் செயலிகள் டிரான்ஸ்கிரிப்ஷனுக்கு Siriஐப் பயன்படுத்தலாம் என்பதை அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > பேச்சறிதல் என்பதற்குச் சென்று நீங்கள் கட்டுப்படுத்தலாம்.
Siri, டிக்டேஷன் அல்லது Siri பரிந்துரைகளைப் பயன்படுத்துவதன் மூலம், மேலே விவரிக்கப்பட்டுள்ளவாறு Apple தயாரிப்புகளிலும் சேவைகளிலும் Siri, டிக்டேஷன், தேடல் மற்றும் வேறு சில குறிப்பிட்ட மொழிச் செயலாக்கங்களை வழங்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் Apple மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் இந்தத் தகவல்களைப் பரிமாறவும், சேகரிக்கவும், பராமரிக்கவும், செயலாக்கவும், பயன்படுத்தவும் ஒப்புதல் வழங்குகிறீர்கள். இந்தத் தகவல்களை நம்பகமான மூன்றாம் தரப்புச் சேவை வழங்குநர்கள் மூலம் Apple செயலாக்கிச் சேமிக்கக்கூடும். Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.
2026-02-11