கேமரா மற்றும் ARKit & தனியுரிமை

Apple உங்கள் தனியுரிமையைக் கருத்தில் கொண்டு கேமராக்களை வடிவமைத்துள்ளது, மூன்றாம் தரப்புச் செயலிகள் கேமராவை அணுகுவதற்கு முன் உங்கள் ஒப்புதலைக் கண்டிப்பாகப் பெற வேண்டும்.


iOS சாதனத்தில், நீங்கள் கேமரா அணுகல் வழங்கியுள்ள செயலிகளால் முன்புற மற்றும் பின்புற கேமராக்களில் இருந்து நிகழ்நேரப் படங்களை அணுக முடியும். கேமரா பயன்படுத்தப்படுகிறது என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்காமல் கேமராவைப் பயன்படுத்த செயலிகள் அனுமதிக்கப்படுவதில்லை.

இந்த கேமராவைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் அவை எங்கே, எப்போது எடுக்கப்பட்டன, அவற்றின் புல ஆழம், ஓவர்கேப்சர் போன்ற பிற தகவல்களும் இருக்கக்கூடும். கேமரா செயலி மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் இருப்பிடத் தகவல்களைச் சேர்க்க வேண்டாம் என நீங்கள் நினைத்தால், அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > இருப்பிடச் சேவைகள் > கேமரா என்பதற்குச் சென்று இதை நீங்கள் கட்டுப்படுத்தலாம். புகைப்படங்கள் மற்றும் வீடியோவைப் பகிரும்போது இருப்பிடத் தகவல்களைச் சேர்க்க வேண்டாம் என நீங்கள் நினைத்தால், பகிர்தல் பக்கத்தில் விருப்பங்கள் மெனுவில் இருப்பிடத்தை ஆஃப் செய்யலாம்.

உங்கள் iPhone அல்லது iPadஐ மற்றொரு சாதனத்திற்கான வெப்கேமாகப் பயன்படுத்த கன்டினியுட்டி கேமரா உதவுகிறது. இரண்டு சாதனங்களும் அருகில் இருந்து ஒரே Apple கணக்கில் உள்நுழைந்திருந்தால் Mac உடன் உங்கள் iPhone இயல்பாகவே இணையும். இரண்டு சாதனங்களும் ஒன்றுக்கொன்று அருகில் இருந்தால் Apple TV உடன் iPhone அல்லது iPadஐ நீங்கள் நேரடியாக இணைக்கலாம். இடைநிறுத்து பட்டனை அழுத்தி அல்லது iPhoneஇல் திரையின் கீழ் விளிம்பில் இருந்து மேல் நோக்கி ஸ்வைப் செய்து அல்லது முகப்பு பட்டனை அழுத்தி கேமராவின் செயலில் உள்ள ஸ்ட்ரீமை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இடைநிறுத்தலாம். iPhone அல்லது iPadஐ இடைநிறுத்தி Mac அல்லது Apple TVஇன் கேமரா பட்டியலில் இருந்து தற்காலிகமாக அகற்ற, உங்கள் சாதனத்தில் “இணைப்புநீக்கு” என்பதைத் தட்டுங்கள். iOS அல்லது iPadOS சாதனத்தில், அமைப்புகள் > பொது அமைப்புகள் > AirPlay & கன்டினியுட்டி என்பதற்குச் சென்று Mac அல்லது Apple TVக்கான வெப்கேமாக உங்கள் iPhone அல்லது iPad பயன்படுத்தப்படுவதை நீங்கள் முடக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட iPhone மாடல்களில் கன்டினியுட்டி கேமராவைப் பயன்படுத்தும்போது, செயல்படுத்தப்பட்ட செயலிகளில் சென்டர் ஸ்டேஜ் தானாகவே முன்புற கேமராவை நகர்த்தி ஜூம் செய்து உங்களை ஃபிரேமுக்குள் வைக்கும். ஃபிரேமுக்குள் நுழையும் நபர்களை உள்ளடக்குவதற்காக கேமரா மென்மையாக ஜூம் செய்யும். உங்கள் திரையின் மேல்-வலப்புற விளிம்பில் இருந்து கீழ்நோக்கி ஸ்வைப் செய்து கட்டுப்பாட்டு மையத்தைத் திறந்து, வீடியோ எஃபெக்ட்கள் பட்டனைத் தட்டி, பின்னர் சென்டர் ஸ்டேஜ் பட்டனைத் தட்டி வீடியோ அழைப்பின்போது சென்டர் ஸ்டேஜ் அம்சத்தை முடக்கலாம். சென்டர் ஸ்டேஜ் அம்சத்தை ஆதரிக்கும் செயலிகள் அந்த அம்சத்தைப் பயன்படுத்த வேண்டுமா இல்லையா என்பதைக் கட்டுப்பாட்டு மைய விருப்பங்கள் மூலம் அல்லது அந்தச் செயலியில் இருந்தே எப்போது வேண்டுமானாலும் நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

நீங்கள் கேமரா அணுகல் வழங்கியுள்ள செயலிகள், ஆக்யுமென்டெட் ரியாலிட்டி (AR) அனுபவத்தை வழங்குவதற்கு ARKitஐப் பயன்படுத்தலாம். செயலிகள் ARKitஇல் இருந்து பெறும் தரவுகளை கேமராவில் இருந்து பெறும் தரவுகளுடன் (எடுத்துக்காட்டாக, ஒரு புகைப்படத்துடன் இணைக்கப்பட்டுள்ள இருப்பிடம்) ஒன்றிணைக்கலாம், பயன்படுத்தலாம், சேமிக்கலாம். இந்தச் செயலிகள் கேமராவைப் பயன்படுத்தி வேர்ல்டு டிராக்கிங் அல்லது முக பாவனைகளைக் கண்டறிதல் மூலம் உங்கள் AR அனுபவத்தை நிலைப்படுத்தலாம். ஓர் இடத்தின் அடிப்படையில் பயனரின் நிலையைத் தீர்மானிப்பதற்காக இந்த சென்சார்களில் இருந்து பெற்ற தகவல்களைச் செயலாக்குவதற்கு உங்கள் சாதனத்தில் உள்ள அல்காரிதங்களை வேர்ல்டு டிராக்கிங் பயன்படுத்துகிறது. மேப்ஸில் ஆப்டிகல் ஹெட்டிங் போன்ற அம்சங்களைச் செயல்படுத்த வேர்ல்டு டிராக்கிங் உதவுகிறது.

2025-12-12