செக்-இன் & தனியுரிமை

சேருமிடத்தை நோக்கிய உங்கள் நகர்வு குறித்த தகவல்களை நண்பருடன் பகிர செக்-இன் உங்களுக்கு உதவுகிறது. குறிப்பிட்ட நேரஅளவுக்கும் இதை நீங்கள் அமைக்கலாம்.
 

செக்-இன் அம்சம் உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும், உங்களுக்கு உதவி தேவைப்படும்போது மட்டுமே பகிரும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Privacy Icon

  • எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட்டால் உங்கள் சாதனத்தின் பேட்டரி அளவு, மொபைல் சேவை நிலை, கடைசி இருப்பிடம் போன்ற உங்கள் சாதனம் பற்றிய தகவல்கள் உங்கள் நண்பருடன் பகிரப்படலாம்.
  • உங்கள் செக்-இன் அமர்வில் இருந்து உங்கள் நண்பருடன் பகிரப்படும் தகவல்களின் உள்ளடக்கங்கள் முழுமையாக என்கிரிப்ஷன் செய்யப்பட்டிருக்கும்.
  • செக்-இன் அமர்வில் தற்போது பங்கேற்றுள்ளீர்களா, அந்த செக்-இன் அமர்வின் வகை போன்ற செக்-இன் அம்சத்தை நீங்கள் பயன்படுத்துவது பற்றிய குறிப்பிட்ட தனிப்பட்ட தரவுகளை அந்த செக்-இன் அமர்வு நீடிக்கும் வரையும் அதற்குப் பிறகு 24 மணிநேரத்திற்கும் Apple தக்கவைக்கும்.
  • ஒரு சேருமிட அமர்வைத் தொடங்கும்போது உங்கள் சேருமிடமும் தோராயமான வருகை நேரமும் நண்பருடன் பகிரப்படும்.

நீங்கள் நண்பருடன் உரையாடுவதற்கும் உங்கள் பயணத்தைப் பகிர்வதற்கும் செக்-இன்னைப் பயன்படுத்தலாம். iOS 17 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளில் இயங்கும் iPhone மூலம் செக்-இன் அமர்வைத் தொடங்கலாம். நீங்களும் உங்கள் செக்-இன் நண்பரும் iMessageஐச் செயல்படுத்தியிருக்க வேண்டும், உங்களுக்குச் சொந்தமான Apple கணக்கு மூலம் உள்நுழைந்து இரு காரணி அங்கீகாரத்தைச் செயல்படுத்தியிருக்க வேண்டும். உங்கள் செக்-இன் அமர்வைச் செயல்படுத்துவதற்காக, உங்கள் அமர்வைப் பற்றிய தனிப்பட்ட தரவுகளை Apple தக்கவைக்கிறது, இதில் உங்கள் செக்-இன் அமர்வின் வகை, அமர்வில் தற்போது பங்கேற்றுள்ளீர்களா என்ற விவரம் போன்றவை அடங்கும். இந்தத் தனிப்பட்ட தரவுகளை உங்கள் செக்-இன் அமர்வு நீடிக்கும் வரையும் அதற்குப் பிறகு 24 மணிநேரத்திற்கு மட்டுமே Apple தக்கவைக்கும்.

ஒரு சேருமிட அமர்வைத் தொடங்கும்போது உங்கள் சேருமிடமும் தோராயமான வருகை நேரமும் உங்கள் நண்பருடன் பகிரப்படும். சேருமிடத்திற்கு உங்கள் சாதனம் வந்தடையும்போது அல்லது நேரஅளவு முடிவடைந்து நீங்கள் நன்றாக இருப்பதை உறுதிசெய்யும்போது அதனைத் தெரிவிக்க உங்கள் நண்பருக்குத் தானியங்கு அறிவிப்பு அனுப்பப்படும். “செக்-இன்னை நிறைவுசெய்” அல்லது “பகிர்வதை நிறுத்து” என்பதைத் தட்டி எப்போது வேண்டுமானாலும் செக்-இன்னை நீங்கள் ரத்துசெய்யலாம். ஒரு செக்-இன் அமர்வு முடிந்ததும், உங்கள் நண்பருக்குத் தானாகவே அறிவிப்பு அனுப்பப்படும் மற்றும் உங்கள் செக்-அமர்வைப் பற்றிய தகவல்கள் நீக்கப்படும்.

செக்-இன் அமர்வில் இருக்கும்போது உங்கள் சாதனங்களைப் பற்றிய தகவல்கள் தற்காலிகமாகச் சேமிக்கப்படும். செக்-இன் அம்சம் iMessageஐப் பயன்படுத்துவதால், இந்தத் தகவல்கள் முழுமையாக என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும். உங்கள் சாதனம் சேருமிடத்தைச் சென்றடையவில்லை அல்லது இணைப்பு துண்டிக்கப்படுதல்; அல்லது விபத்துக் கண்டறிதல், கீழே விழுதலைக் கண்டறிதல் போன்ற அவசரகால நிகழ்வுகள்; அல்லது ஏதேனும் அவசரகால SOS அம்சங்களை நீங்கள் பயன்படுத்துவது மற்றும் உங்கள் சாதனத்தில் காட்டப்படும் அறிவிப்புக்கு நீங்கள் பதிலளிக்காமல் இருப்பது போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்படும்போது, அதனைத் தெரிவிப்பதற்காக உங்கள் நண்பருக்குத் தானாக ஓர் iMessage அனுப்பப்படும். உங்கள் சாதனத்தைப் பற்றிய செக்-இன் தகவல்களைப் பதிவிறக்குவதற்கான விருப்பமும் அவர்களுக்கு அனுப்பப்படும், இதில் கடைசியாகத் தெரிந்த பேட்டரி அளவு, மொபைல் சேவை நிலை, இருப்பிடம் ஆகியவையும் அடங்கும். உங்கள் தொடக்கப் புள்ளியில் இருந்து உங்கள் சாதனம் கடைசியாக இருந்த இருப்பிடம் வரை உங்கள் சாதனம் பயணித்த வழித்தடத்தையும் பகிர நீங்கள் தேர்வுசெய்யலாம். நிகழ்வு முடிந்த பின் 24 மணிநேரம் வரை உங்கள் சாதனம்(சாதனங்கள்) உங்கள் செயல்பாட்டைத் தொடர்ந்து கண்காணித்து, உங்கள் சாதன நிலையை உங்கள் நண்பருக்குத் தெரிவிக்கும். உங்கள் சாதனமும் உங்கள் நண்பரின் சாதனமும் உங்கள் செக்-இன் தகவல்களைப் பதிவிறக்கம் செய்து ஏழு நாட்கள் வரை சேமித்து வைக்கும். உங்கள் நண்பருக்குப் பிழையாகத் தகவல் தெரிவிக்கப்பட்டால், நீங்கள் “செக்-இன்னை நிறைவுசெய்” என்பதைத் தட்டி உங்கள் அமர்வை முடித்து, மெசேஜஸ் அல்லது ஃபோன் செயலிகள் மூலம் அவர்களைத் தொடர்புகொண்டு உண்மையான நிலவரத்தைத் தெரிவிக்கலாம்.

தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்குப் பொருந்தக்கூடிய சட்டரீதியான அடிப்படை

நீங்கள் செக்-இன் அம்சத்தைப் பயன்படுத்தினால், சேவைகளை வழங்கத் தேவைப்படும் அளவிற்கும், எங்கள் சட்டரீதியான கடமைகளுக்கு இணங்குவதற்காகவும் உங்கள் தனிப்பட்ட தரவை Apple செயலாக்குகிறது. ஒப்புதல் என்பது சட்டரீதியான அடிப்படையாக அமையும் இடங்களில், பொருந்தும் உள்ளூர் சட்டங்களின் அடிப்படையில் அதைப் பெற முயல்கிறோம்.

பொருந்தும் உள்ளூர் சட்டங்கள் அனுமதிக்கும் இடங்களில், தனிப்பட்ட தரவின் பின்வரும் வகைகளை எங்களின் அல்லது மூன்றாம் தரப்புகளின் நியாயமான நலன்களின் நோக்கத்திற்காகத் தேவைப்படும் அளவிற்குச் செயலாக்குகிறோம், மற்றொரு நபருடன் செக்-இன் அமர்வில் தற்போது பங்கேற்றுள்ளீர்களா, அந்த நபர் யார், தற்போதைய அமர்வில் தற்காலிகச் சேமிப்பு வெளியிடப்பட்டதா என்பன பற்றிய தகவல்களும் இதில் அடங்கும். நியாயமான நலன்கள் என்பதில் இவையும் அடங்கும்:

  • சிக்கல்களைக் கண்டறிந்து சரிசெய்தல், மோசடி அல்லது குற்றச் செயல்பாட்டைத் தடுத்தல்
  • உங்கள் அமர்வுத் தகவல்கள் சரியான தொடர்புக்கு அனுப்பப்படுவதை உறுதிசெய்து செக்-இன் கட்டமைப்பைப் பராமரிக்க உதவுதல்

தக்கவைத்தல்

Appleஇன் தனியுரிமைக் கொள்கை அல்லது எங்கள் சேவை தொடர்பான தனியுரிமை அறிக்கையில் விவரிக்கப்பட்டபடி சேகரிக்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றத் தேவைப்படும் காலம் வரை அல்லது சட்டப்படி தேவைப்படும் காலம் வரை மட்டுமே Apple தனிப்பட்ட தரவைத் தக்கவைக்கும். தக்கவைத்தல் காலத்தை மதிப்பிடும்போது, சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவைத் தக்கவைப்பது தேவையா என்று முதலில் கவனமாக ஆராய்கிறோம். தக்கவைத்தல் தேவை எனில், முடிந்த வரை சட்டப்படி அனுமதிக்கப்பட்ட குறுகிய காலத்திற்கு மட்டுமே தனிப்பட்ட தரவைத் தக்கவைக்க முயல்கிறோம். செக்-இன் அமர்வில் இப்போது பங்கேற்றுக் கொண்டிருக்கிறீர்களா, அமர்வில் உங்களுடன் உள்ள நபர்கள், அமர்வில் எவ்வளவு நேரமாக உள்ளீர்கள் போன்று செக்-இன் அம்சத்தை நீங்கள் பயன்படுத்துவது குறித்த தனிப்பட்ட தரவுகள் சிலவற்றை செக்-இன் அமர்வு நீடிக்கும் வரையும் அதற்குப் பிறகு 24 மணிநேரம் வரையும் Apple தக்கவைக்கும்.

Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Apple இன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும், அதை www.apple.com/in/privacy தளத்தில் பார்க்கலாம்.

2025-12-12