ClassKit & தனியுரிமை
மாணவர்களின் தனியுரிமையைக் கருத்தில் கொண்டு ClassKit வடிவமைக்கப்பட்டுள்ளது.
உங்கள் பள்ளி அல்லது கல்வி நிறுவனம் (“நிறுவனம்”) மாணவர் செயல்பாட்டு அறிக்கை அம்சத்தைச் செயல்படுத்தினால், புத்தகத்தில் ஓர் அத்தியாயத்தை வாசித்தல், கணிதச் சமன்பாடுகளைத் தீர்த்தல் அல்லது தேர்வு எழுதுதல் போன்ற உங்களுக்கு ஒதுக்கப்படும் செயல்பாடுகளில் உங்கள் நிலை பற்றிய தரவுகளை செயல்பாட்டு அறிக்கை வழங்கும் செயலிகள் அறிக்கையளிக்கும். தொடங்கிய மற்றும் முடித்த நேரத்தின் அடிப்படையில் ஒதுக்கப்படும் செயல்பாடுகளில் செலவிட்ட நேரம்; நிறைவுசெய்த சதவீதம்; ஆம்/இல்லை, சரி/தவறு, நிறைவடைந்தது/நிறைவடையவில்லை போன்ற இரும மதிப்புகள்; சொற்களின் எண்ணிக்கை, பெற்ற புள்ளிகள் போன்ற எண் மதிப்புகள்; தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவை செயல்பாட்டு அறிக்கைத் தரவுகளில் அடங்கும். செயல்பாட்டு அறிக்கை அம்சத்தை ஆதரிக்கும் ஒவ்வொரு செயல்பாடும் குறைந்தபட்சம் செலவிட்ட நேரம் பற்றிய தரவுகளையாவது அனுப்பும். செயல்பாட்டு அறிக்கை வழங்கும் செயலிகள் இந்தத் தரவுகளை Appleக்கு அனுப்பும் மற்றும் உங்கள் கல்வி நிறுவனத்துடன் பகிரும், இதன்மூலம் ஒதுக்கப்படும் செயல்பாடுகளில் உங்கள் கற்றல் நிலை குறித்து ஆசிரியர்கள் நன்கு புரிந்துகொள்ள முடியும்.
உங்கள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு உங்களுக்கு ஒதுக்கப்படும் “நிர்வகிக்கப்பட்ட Apple கணக்கில்” நீங்கள் உள்நுழைந்திருக்கும்போது, உங்கள் நிறுவனம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, செயல்பாட்டு அறிக்கை வழங்கும் செயலிகளில் உங்கள் ஆசிரியர் வெளிப்படையாக ஒதுக்கீடு செய்யும் செயல்பாடுகளுக்கு மட்டுமே செயல்பாட்டுத் தரவுகள் அறிக்கையளிக்கப்படும். “நிர்வகிக்கப்பட்ட Apple கணக்கு” மூலம் ஒரு iPadஇல் (பகிரப்பட்ட iPad அல்லது உங்கள் வீட்டில் உள்ள iPad உட்பட) நீங்கள் உள்நுழைந்திருக்கும்போது செயல்பாட்டு அறிக்கை வழங்கும் செயலியை முதல்முறையாகத் திறந்தால் மாணவரின் கற்றல் நிலையை அறிக்கையளித்தல் தொடர்பான அறிவிப்பு திரையில் காட்டப்படும். செயல்பாட்டு அறிக்கை வழங்கும் செயலியில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட செயல்பாடுகளை நீங்கள் செய்யும்போது, மாணவர் கற்றல் நிலையை அறிக்கையளிப்பது தொடர்பான அறிவிப்பு பேனர் தற்காலிகமாகத் திரையில் காட்டப்படும்.
பள்ளிப்பாடம் செயலியை மேம்படுத்துதல்
பள்ளிப்பாடம் செயலியை மேம்படுத்தும் நோக்கத்திற்காக அந்தச் செயலியை நீங்கள் பயன்படுத்துவது தொடர்பான தரவுகளைச் செயலாக்க Appleஐ உங்கள் நிறுவனம் அனுமதிக்கக்கூடும். இதில் உங்கள் செயல்பாட்டுத் தரவுகள், இயந்திரக் கற்றல் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும். தரவுகளைச் செயலாக்குவதற்கு முன்பாக, வகையீட்டுத் தனியுரிமை போன்ற தனியுரிமையைப் பாதுகாக்கும் செயல்முறைக்கு அவை உட்படுத்தப்படும், இதனால் அவற்றை உங்களுடன் இணைக்க முடியாது. எடுத்துக்காட்டாக, பயன்பாட்டு நிலவரங்களைப் புரிந்துகொள்வதற்கும், பயனர் அனுபவத்தைப் பிரத்தியேகமாக்குவதற்கும் பள்ளிப்பாடம் செயலிக்கான புதிய கல்வி அம்சங்களை உருவாக்குவதற்கும் அடையாளம் நீக்கப்பட்ட அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட பள்ளிப்பாடம் செயலித் தரவுகளை Apple செயலாக்கக்கூடும். உங்கள் நிறுவனம் இந்த அம்சத்தைச் செயலாக்கிய பிறகு உங்கள் “நிர்வகிக்கப்பட்ட Apple கணக்கு” மூலம் உள்நுழைந்து பள்ளிப்பாடம் செயலியை முதல்முறையாகத் திறக்கும்போது திரையில் உங்களுக்கு அறிவிப்பு காட்டப்படும். குறிப்பிட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த அம்சத்தில் இருந்து உங்கள் நிறுவனம் விலக்களிக்கலாம். விலக்குப் பெற, உங்கள் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளுங்கள்.
டிரான்ஸ்பெரன்சி மற்றும் கட்டுப்பாடு
அமைப்புகள் > “வகுப்பு முன்னேற்றம்” என்பதற்குச் சென்று செயல்பாட்டு அறிக்கை வழங்கும் செயலிகளால் Appleக்கு அனுப்பப்படும் மற்றும் உங்கள் நிறுவனத்துடன் பகிரப்படும் தரவுகளை நீங்கள் பார்க்கலாம். பள்ளிப்பாடம் செயலி உங்கள் சாதனத்தில் நிறுவப்பட்டிருந்தால் உங்கள் முழுமையான செயல்பாட்டுத் தரவுகளைச் செயலியில் இருந்தே பார்க்கலாம்.
Apple School Manager ஒப்பந்தத்தின் கீழ் உங்கள் செயல்பாட்டுத் தரவுகளுக்கு உங்கள் நிறுவனம் பொறுப்பாகும். மாணவர் செயல்பாட்டு அறிக்கை அம்சத்தைச் செயல்படுத்துவதா வேண்டாமா என்பதை உங்கள் நிறுவனம் கட்டுப்படுத்துகிறது மற்றும் மாணவர்களின் கோரிக்கையின் பேரில் செயல்பாட்டைப் பகிர்வதில் இருந்து அவர்களுக்கு விலக்களிக்கும் உரிமையையும் கொண்டுள்ளது. உங்கள் நிறுவனத்துடன் உங்கள் செயல்பாட்டைப் பகிர்வதை நிறுத்த விரும்பினால் அல்லது உங்கள் செயல்பாட்டுத் தரவை நீக்க விரும்பினால், உங்கள் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளுங்கள்.
Apple உங்கள் செயல்பாட்டுத் தரவுகளைச் சேமிக்கும்போதும் அனுப்பும்போதும் என்கிரிப்ட் செய்யப்பட்ட வடிவில் வைத்திருக்கும். உங்கள் தரவுகள் சேமிக்கப்படும் விதம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு, support.apple.com/102651 இணையதளத்தில் எங்கள் iCloud பாதுகாப்புக் கண்ணோட்டத்தைப் பார்வையிடுங்கள்.
தக்கவைத்தல்
உங்கள் நிறுவனத்தின் வழிகாட்டுதல்களின்படி செயல்பாட்டுத் தரவுகளை Apple தக்கவைக்கிறது. உங்கள் தரவுகளை நீக்குவதற்கு அல்லது உங்கள் நிர்வகிக்கப்பட்ட Apple கணக்கை நீக்குவதற்கு நீங்கள் உங்கள் நிறுவனத்திற்குக் கோரிக்கை விடுத்து, அதைச் செய்யுமாறு உங்கள் நிறுவனம் Appleக்குத் தெரிவித்தால், Apple தனது சர்வர்களில் உள்ள தரவுகளை 30 நாட்களுக்குள் நீக்கும்.
Apple School Managerஇல் உள்ள ஒரு வகுப்பில் இருந்து உங்கள் நிறுவனம் உங்களை நீக்கினால், அந்த வகுப்பிற்கான உங்கள் செயல்பாட்டுத் தரவுகளும் நீக்கப்படும். Apple School Managerஇல் உள்ள ஒரு வகுப்பை உங்கள் நிறுவனம் நீக்கினால், அந்த வகுப்புடன் இணைக்கப்பட்ட அனைத்துத் தரவுகளும் நீக்கப்படும்.
டெவலப்பர்கள்
ClassKitஐப் பயன்படுத்தும் அனைத்து டெவலப்பர்களும் பின்பற்ற வேண்டிய கூடுதல் கடமைகளை நாங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளோம். App Storeஇல் செயலியை வெளியிடுவதற்கான எங்கள் வழக்கமான தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன் கூடுதலாக, ClassKitஐப் பயன்படுத்தும் டெவலப்பர்கள் கல்விச் சேவைகளை வழங்குவதற்காக அதைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும். தரவுகள் பயன்படுத்தப்படும் அனைத்துச் சூழல்களுக்கும் பொருத்தமான மற்றும் விரிவான தனியுரிமைக் கொள்கையையும் அவர்கள் வழங்க வேண்டும்.
Apple School Manager ஒப்பந்தத்தின் கீழ் “நிர்வகிக்கப்பட்ட Apple கணக்கு” மூலம் தனது சேவைகளை வழங்குவது தொடர்பாக Appleஆல் சேகரிக்கப்படும் தகவல்கள் www.apple.com/in/privacy இணையதளத்தில் உள்ள Appleஇன் தனியுரிமைக் கொள்கை, school.apple.com இணையதளத்தில் உள்ள Apple School Manager ஒப்பந்தத்தின் பிரிவு 3 மற்றும் ஆவணம் A ஆகியவற்றின்படி கையாளப்படும். Appleஇன் தனியுரிமைக் கொள்கை மற்றும் Apple School Manager ஒப்பந்தத்தின் பிரிவு 3 மற்றும் ஆவணம் A ஆகியவற்றிற்கிடையே முரண்பாடு ஏற்பட்டால், Apple School Manager ஒப்பந்தத்தின் பிரிவு 3 மற்றும் ஆவணம் A மேலோங்கும்.
2025-12-12