இணைக்கப்பட்ட கார்டுகள் & தனியுரிமை

முற்றிலும் Appleக்குச் சொந்தமான துணைநிறுவனத்தின் மூலம் உங்கள் சாதனம் உங்கள் நிதி நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, இது உங்கள் கணக்குத் தகவல்களைப் பெற்று, வகைப்படுத்தி மற்றும் தரநிலைப்படுத்தி உங்கள் சாதனத்தில் காட்டுகிறது. உங்கள் கணக்குத் தகவல்கள் சேமிக்கப்படாது.
 

உங்கள் கார்டை இணைக்கும்போது, உங்கள் பேலன்ஸ், சமீபத்திய பரிவர்த்தனைகள் போன்ற சமீபத்திய கணக்குத் தகவல்களை நீங்கள் பார்க்கலாம், இது உங்கள் நிதியை இன்னும் சிறப்பாக நிர்வகிக்க உங்களுக்கு உதவுகிறது.


Privacy Icon

  • Apple பின்வரும் தரவுகளை உங்கள் இணைக்கப்பட்ட கார்டில் இருந்து பெற்று, வகைப்படுத்தி மற்றும் தரநிலைப்படுத்தி உங்கள் சாதனத்தில் காட்டுகிறது. பரிவர்த்தனைகள், பேலன்ஸ், திட்டமிடப்பட்ட அல்லது நிலுவை பேமெண்ட்கள் குறித்த தகவல்கள், கணக்கு எண் போன்ற கணக்கு விவரங்கள் இதில் அடங்கும்.
  • முற்றிலும் Appleக்குச் சொந்தமான துணை நிறுவனம் உங்கள் கணக்குத் தகவல்களைப் பார்க்கும், ஆனால் சேமிக்காது.
  • Apple தயாரிப்புகளையும் சேவைகளையும் மேம்படுத்த, இனி உங்களுடன் தொடர்புபடுத்தப்படாத உங்கள் இணைக்கப்பட்ட கார்டுகளின் தரவுகளை Apple பயன்படுத்தக்கூடும்.

உங்கள் கார்டை இணைப்பதன் மூலம் உங்கள் பேலன்ஸ், சமீபத்திய பரிவர்த்தனைகள் போன்ற சமீபத்திய கணக்குத் தகவல்களை நீங்கள் பார்க்கலாம், இது உங்கள் நிதியை இன்னும் சிறப்பாக நிர்வகிக்க உங்களுக்கு உதவுகிறது.

உங்கள் கார்டை இணைத்தல்

வாலெட்டில் உள்ள ஒரு கார்டை நீங்கள் தட்டினால், அதன் நாடு, வழங்குநர் ஆகியவற்றைப் பார்த்து உங்கள் நிதி நிறுவனத்துடன் இணைக்க அந்த கார்டு தகுதிபெறுகிறதா என்பதை Apple மதிப்பாய்வு செய்யும். செயல்திறன் காரணங்களுக்காக இந்த அம்சத்தில் பங்கேற்பதற்கு Apple வரம்புகளை விதிக்கக்கூடும்; அதுபோன்ற வரம்புகள் சமவாய்ப்பு முறையில் பகிரப்படும், இது Apple உடனான உங்கள் உறவுநிலையின் அடிப்படையில் அமையாது.

இணைப்பதற்கு ஒரு கார்டை நீங்கள் தட்டினால், அதை வழங்கிய நிதி நிறுவனத்தை அடையாளம் காண்பதற்காக உங்கள் கார்டு மற்றும் பின்னணிக் கணக்கு (பகுதியளவு கணக்கு எண் போன்றவை) பற்றிய தகவல்களை Apple பயன்படுத்துகிறது. கிடைக்கக்கூடிய நிதி சார்ந்த தகவல்களின் வகைகள் போன்ற இணைப்பு வகைகளை உங்களுக்கு வழங்கவும், இணைப்பின் நேரஅளவு போன்று உங்களுக்கு இருக்கக்கூடிய விருப்பங்களை வழங்கவும் Apple இந்தத் தகவல்களைப் பயன்படுத்துகிறது. நீங்கள் தேர்வுசெய்த பின்னர், அமைக்கப்படும் இணைப்பு வகை பற்றிய தகவல்களை அந்த நிதி நிறுவனத்திற்கு Apple அனுப்புகிறது. இதில் இணைப்பு தொடங்கும் நேரம், கோரப்படும் தகவல்களின் வகை (எ.கா. பரிவர்த்தனை, பேலன்ஸ் தரவுகள்), கணக்கு அடையாளத் தகவல் போன்றவையும் அடங்கும். ஒப்புதலளிக்கப்பட்டால், ஓர் அடையாளத் தகவலை வங்கி Appleக்கு அனுப்பும், இதைப் பயன்படுத்தி இணைக்கப்பட்ட கார்டை உங்கள் சாதனம் அமைக்கலாம்.

நிதி நிறுவனத்தின் செயலி அல்லது இணையதளத்துடன் இணைப்பதற்காக அடையாளத் தகவலையும் பாதுகாப்பான இணைப்பையும் உங்கள் சாதனம் பயன்படுத்துகிறது. இணைத்த பின்பு, நிதி நிறுவனத்தின் தளத்தில் நீங்கள் உங்கள் அங்கீகாரத்தை உறுதிப்படுத்தி, உங்கள் சாதனத்துடன் இணைக்க விரும்பும் கணக்குகளைத் தேர்வுசெய்யலாம். உங்கள் கணக்கு பற்றிய தகவல்களையும் இணைப்பின் விவரங்களையும் பயன்படுத்தி நிதி நிறுவனம் ஒரு கன்சென்ட் டோக்கனை உருவாக்கும். உங்கள் சாதனம் இதைப் பயன்படுத்தி உங்கள் கணக்கை அணுகலாம், புதுப்பிக்கப்பட்ட தரவுகளைப் பெறலாம். கன்சென்ட் டோக்கனை என்கிரிப்ட் செய்து, உங்கள் சாதனத்தில் சேமிப்பதற்காக Apple அனுப்பும்; Apple இந்த கன்சென்ட் டோக்கனைச் சேமிக்காது.

உங்கள் கணக்குத் தகவல்களைப் புதுப்பித்தல் மற்றும் பார்த்தல்

வாலெட்டில் உள்ள கார்டைத் தட்டி உங்கள் கணக்கைப் பார்வையிடும்போதெல்லாம் உங்கள் கணக்குத் தகவல்கள் புதுப்பிக்கப்படும், ஆன்லைனில் அல்லது செயலியில் இணைக்கப்பட்ட கார்டு மூலம் Apple Pay பரிவர்த்தனையை நீங்கள் தொடங்கும்போது உங்கள் பேலன்ஸ் தகவல்கள் புதுப்பிக்கப்படும். வாலெட்டில் உள்ள கணக்கு மற்றும் பேலன்ஸ் தகவல்களைத் தானாகவே புதுப்பிக்கும் திறனும் இணைக்கப்பட்ட குறிப்பிட்ட கார்டுகளுக்கு இருக்கலாம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும், வாலெட்டிற்குச் சென்று, உங்கள் இணைக்கப்பட்ட கார்டைத் தட்டி அல்லது அமைப்புகள் > வாலெட் & Apple Pay என்பதற்குச் சென்று, இணைக்கப்பட்ட கணக்கின் அமைப்புகளை நிர்வகிக்கலாம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கணக்குத் தகவல்களைப் பார்க்கலாம்.

உங்கள் கணக்குத் தகவல்களை அகற்றுதல்

அமைப்புகள் > வாலெட் & Apple Pay > [உங்கள் நிதி நிறுவனம்] என்பதற்குச் சென்று, “தரவைப் பெறு” என்பதைத் தட்டி அதை ஆஃப் செய்வதன் மூலம் புதுப்பிக்கப்பட்ட கணக்குத் தகவல்களைப் பெறுவதை நீங்கள் நிறுத்தலாம். இதை முடக்கிய பிறகு, “கணக்குச் செயல்பாட்டை நீக்கு” என்பதைத் தட்டி ஏற்கெனவே உள்ள கணக்குத் தகவல்களை நீங்கள் நீக்கலாம்.

நீங்கள் அமைப்புகள் > வாலெட் & Apple Pay என்பதற்குச் சென்று, [உங்கள் நிதி நிறுவனம்] என்பதைத் தட்டி, “இணைப்புநீக்கு” என்பதைத் தட்டுவதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் உங்கள் கணக்கை இணைப்புநீக்கலாம். உங்கள் நிதி நிறுவனத்தை இணைப்புநீக்குவது, உங்கள் கணக்குத் தகவல்களைப் பெறுவதற்கு Appleக்கு நீங்கள் வழங்கிய ஒப்புதலைத் திரும்பப் பெறும், அந்த நிதி நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்துக் கணக்குகளையும் இணைப்புநீக்கும், இதற்கு முன்பு பெறப்பட்ட கணக்குத் தகவல்கள் அனைத்தையும் நீக்கும்.

பகுப்பாய்வுகள்

இந்த அம்சத்தை மேம்படுத்துவதற்காக, இணைப்புச் செயல்முறை மற்றும் வாலெட் செயலி மற்றும் அமைப்புகள் செயலியில் உங்கள் இணைக்கப்பட்ட கார்டுகளை நீங்கள் பயன்படுத்துவது தொடர்பான தகவல்களை Apple சேகரித்து, அந்தத் தகவல்கள் உங்களைத் தனிப்பட்ட முறையில் அடையாளப்படுத்தாத வகையில் சேமிக்கும். இந்தத் தகவல்களில் இணைப்புச் செயல்முறையை நிறைவுசெய்ய ஆகும் நேரம், அடிக்கடி பயன்படுத்தப்படும் இணைக்கப்பட்ட கார்டு அம்சங்கள் ஆகியவை அடங்கும். Apple தயாரிப்புகளையும் சேவைகளையும் மேம்படுத்துவதற்காகவும் மார்க்கெட்டிங்கிற்காகவும் மோசடித் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காகவும் இந்தத் தகவல்களை Apple பயன்படுத்தக்கூடும்.

தகவல்தொடர்புகள்

ஒரு மெசேஜ் (மார்க்கெட்டிங் மெசேஜ் உட்பட) உங்களுக்குப் பொருத்தமானதா என்பதைத் தீர்மானிப்பதற்காக நீங்கள் கார்டை இணைத்த தகவலை Apple பயன்படுத்தக்கூடும். உங்களுடன் தொடர்புபடுத்த முடியாத, அடையாளம் தெரியாத மற்றும் தொகுக்கப்பட்ட தகவல்கள் மார்க்கெட்டிங் மற்றும் பிற மெசேஜ்களை அனுப்புவதற்காகப் பயன்படுத்தப்படலாம். நீங்கள் மார்க்கெட்டிங் மின்னஞ்சலில் உள்ள சந்தா விலகல் இணைப்பை கிளிக் செய்து அல்லது வாலெட்டில் அறிவிப்புகளை ஆஃப் செய்து மார்க்கெட்டிங் மெசேஜ்களுக்கான ஒப்புதலைத் திரும்பப் பெறலாம்.

உதவி

இணைக்கப்பட்ட கார்டுகள் பற்றி உங்களுக்குக் கேள்விகள் இருந்தால், நீங்கள் Apple உதவியைத் தொடர்புகொள்ளலாம். உங்கள் கோரிக்கையைச் செயலாக்குவதற்காக நீங்கள் பகிரும் தகவல்களை Apple பயன்படுத்தும், இதில் உங்கள் தனிப்பட்ட தரவும் அடங்கும்.

சட்ட நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்குப் பொருந்தக்கூடிய சட்டரீதியான அடிப்படை

அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு, இணைக்கப்பட்ட கார்டுகள் சேவை Apple Payments Services LLC நிறுவனத்தால் வழங்கப்படுகிறது; யுனைடெட் கிங்டமில் இருப்பவர்களுக்கு, இணைக்கப்பட்ட கார்டுகள் சேவை Apple Payments Services Ltd நிறுவனத்தால் வழங்கப்படுகிறது (ஒட்டுமொத்தமாக, “Apple” என்று அழைக்கப்படுகிறது). பொதுவாக Apple உடனான உங்கள் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்காகவும், சேவைகளை வழங்கத் தேவைப்படும் அளவிற்கும், எங்கள் சட்டரீதியான கடமைகளுக்கு இணங்குவதற்காகவும் உங்கள் தனிப்பட்ட தரவை Apple செயலாக்குகிறது. சட்டரீதியான அடிப்படையாக அமையும் இடங்களில், பொருந்தும் உள்ளூர்ச் சட்டங்களின் அடிப்படையில் ஒப்புதல் பெற Apple முயல்கிறது.

பொருந்தும் உள்ளூர்ச் சட்டங்கள் குறிப்பிடும் இடங்களில், பின்வரும் காரணங்களுக்காக எங்களின் அல்லது மூன்றாம் தரப்புகளின் நியாயமான நலன்களின் நோக்கத்திற்காகத் தேவைப்படும் அளவிற்குத் தனிப்பட்ட தரவை Apple செயலாக்குகிறது:

  • உங்கள் சாதனத்தில் காட்டுவதற்காகக் கணக்குத் தகவல்களைத் தரநிலைப்படுத்தி மற்றும் வகைப்படுத்தி வடிவமைத்தல்
  • இணைக்கப்பட்ட கார்டுகள், Apple Pay, வாலெட் மற்றும் அமைப்புகளை மேம்படுத்த உதவுதல்
  • மோசடி மற்றும் பிற தீங்கிழைக்கும் செயல்பாட்டைத் தடுத்தல்

பயன்படுத்தப்படும் தரவில் இவையும் அடங்கும்:

  • உங்கள் சாதனம் மற்றும் Apple கணக்கு பற்றிய விவரங்கள்
  • உங்கள் நிதி நிறுவனத்தில் இருந்து பெற்ற கணக்குத் தகவல்கள்

யுனைடெட் கிங்டமில், நீங்கள் உங்கள் நிதி நிறுவனத்துடனான இணைப்பைத் துண்டித்த பிறகு கூட, சட்டத்துக்கு இணங்குவதற்காக அல்லது சட்டரீதியாகச் செல்லுபடியாகும் செயல்முறைக்கு இணங்குவதற்காகத் தேவைப்படும் அளவிற்கு இணைக்கப்பட்ட கார்டுகள் தொடர்பான தகவல்களை Apple Payment Services Ltd பயன்படுத்தலாம்.

மேலும் தகவல்

இணைக்கப்பட்ட கார்டின் உங்கள் பரிவர்த்தனைத் தரவுகள் Appleக்கு அனுப்பப்பட்டு, வாலெட்டில் இதுவரையான கார்டு பரிவர்த்தனைகளில் உள்ள வணிகப் பெயர்களின் துல்லியத்தன்மையை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும். Apple மேப்ஸ், Apple Pay மற்றும் வாலெட்டை மேம்படுத்துவதற்காக இந்தத் தகவல்கள் உங்களுடன் இணைக்கப்படாத வகையில் தொகுக்கப்பட்டுத் தக்கவைக்கப்படலாம்.

இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டபடி மற்றும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி, சேகரிக்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றத் தேவைப்படும் காலம் வரை அல்லது சட்டப்படி தேவைப்படும் காலம் வரை மட்டுமே Apple தனிப்பட்ட தரவைத் தக்கவைக்கும். தக்கவைத்தல் காலத்தை மதிப்பிடும்போது, சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவைத் தக்கவைப்பது தேவையா என்று முதலில் கவனமாக ஆராய்கிறோம். தக்கவைத்தல் தேவை எனில், சட்டப்படி அனுமதிக்கப்பட்ட குறுகிய காலத்திற்கு மட்டுமே தனிப்பட்ட தரவைத் தக்கவைக்க முயல்கிறோம்.

Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.

2025-12-12