சாதனப் பகுப்பாய்வுகள் & தனியுரிமை
“பகுப்பாய்வுகள்” அம்சம் உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
iOS சாதனப் பகுப்பாய்வுகள்
iPhone பகுப்பாய்வுகளில் வன்பொருள் மற்றும் ஆபரேட்டிங் சிஸ்டம் தொடர்பான விவரக்குறிப்புகள், செயல்திறன் புள்ளிவிவரங்கள், உங்கள் சாதனம் மற்றும் செயலிகளை நீங்கள் பயன்படுத்தும் விதம் குறித்த தரவுகள் போன்றவை இருக்கலாம். Apple அதன் தயாரிப்புகளையும் சேவைகளையும் மேம்படுத்த இந்தத் தகவல்கள் உதவும். சேகரிக்கப்படும் தகவல்கள் எதுவும் உங்களைத் தனிப்பட்ட முறையில் அடையாளப்படுத்தாது. தனிப்பட்ட தரவுகள் ஒருபோதும் பதிவுசெய்யப்படுவதில்லை, வகையீட்டுத் தனியுரிமை போன்ற தனியுரிமையைப் பாதுகாக்கும் செயல்முறைகளுக்கு அவை உட்படுத்தப்படும் அல்லது Appleக்கு அனுப்பப்படும் முன் அறிக்கைகளில் இருந்து நீக்கப்படும். உங்கள் iOS சாதனத்தில் அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > பகுப்பாய்வுகள் & மேம்பாடுகள் என்பதற்குச் சென்று “பகுப்பாய்வுத் தரவுகள்” என்பதைத் தட்டி இந்தத் தகவல்களை நீங்கள் பார்க்கலாம்.
இந்தத் தகவல்களை Appleக்கு வழங்க நீங்கள் ஒப்புதலளித்து இருப்பிடச் சேவைகளை ஆன் செய்திருந்தால், செயல்திறன் சிக்கல்களைப் பகுப்பாய்வு செய்வதற்காக (எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட இருப்பிடத்தில் மொபைல் அல்லது Wi-Fi சிக்னலின் வலிமை அல்லது வலிமையின்மை) உங்கள் சாதனங்களின் இருப்பிடத்தகவலும் Appleக்கு அனுப்பப்படலாம். ஃபோன் அழைப்பு முடிவடையும்போதான இருப்பிடம் அல்லது ஸ்டோரில் செய்யும் பரிவர்த்தனை தோல்வியடையும்போதான இருப்பிடம் போன்றவை பகுப்பாய்வு செய்தவற்கான இந்த இருப்பிடத் தரவுகளில் இருக்கக்கூடும். பகுப்பாய்வுக்கான இருப்பிடச் சேவைகளை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் முடக்கலாம். அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > இருப்பிடச் சேவைகள் > சிஸ்டம் சேவைகள் என்பதற்குச் சென்று “iPhone பகுப்பாய்வுகள்” என்பதைத் தட்டி இதை ஆஃப் செய்யுங்கள்.
ஒரே iCloud கணக்கைப் பயன்படுத்தும் பல்வேறு சாதனங்களில் இருந்து பகுப்பாய்வுத் தகவல்களை Appleக்கு அனுப்ப நீங்கள் ஒப்புக்கொண்டால், அந்தச் சாதனங்கள் அனைத்திலும் முழுமையான என்கிரிப்ஷனைப் பயன்படுத்தி ஒத்திசைப்பதன் மூலம் பயன்பாட்டுத் தரவுகளில் சிலவற்றை நாங்கள் தொடர்புபடுத்தலாம். Appleக்கு உங்களை அடையாளம் காட்டாத வகையில் நாங்கள் இதைச் செய்கிறோம்.
சாதனப் பகுப்பாய்வுகள் பகிர்வை நீங்கள் ஒட்டுமொத்தமாகவும் முடக்கலாம். அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > பகுப்பாய்வுகள் & மேம்பாடுகள் என்பதற்குச் சென்று “iPhone பகுப்பாய்வுகளைப் பகிர்” என்பதைத் தட்டி இதை ஆஃப் செய்யுங்கள். உங்கள் iPhone உடன் Apple Watchஐ இணைத்திருந்தால்,“iPhone & Watch பகுப்பாய்வுகளைப் பகிர்” என்பதைத் தட்டி இதை ஆஃப் செய்யுங்கள்.
இந்த அம்சங்களைப் பயன்படுத்துவதன் மூலம், Apple மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் இந்தத் தகவல்களைப் பரிமாற, சேகரிக்க, பராமரிக்க, செயலாக்க மற்றும் மேலே விவரிக்கப்பட்டுள்ளவாறு பயன்படுத்த ஒப்புதல் வழங்குகிறீர்கள்.
Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.
2025-12-12