அவசரகால SOS & தனியுரிமை

உங்கள் சாதனம் அவசரகாலச் சேவைகளை அழைக்கும்போது அவசரகால SOS உங்கள் இருப்பிடத்தைப் பகிரும். உங்கள் இருப்பிடம் உங்கள் அவசரகாலத் தொடர்புகளுக்கும் தெரிவிக்கப்படலாம். நீங்கள் இருப்பிடச் சேவைகளைச் செயல்படுத்தாவிட்டாலும் இருப்பிடம் பகிரப்படும்.
 

அவசரகால SOS உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Privacy Icon

  • அவசரகால SOS அம்சத்தைப் பயன்படுத்தி அவசரகாலச் சேவைகளை அழைக்கும்போது, டிஸ்பாட்சர் உங்களுக்கு உதவ வழிசெய்வதற்காக அந்த அழைப்புடன் உங்கள் இருப்பிடம் (நீங்கள் இருப்பிடச் சேவைகளைச் செயல்படுத்தியிருந்தாலும் செயல்படுத்தாவிட்டாலும்) பகிரப்படப்படக்கூடும்.
  • நீங்கள் மெசேஜஸ் செயலியை நிறுவல் நீக்கவில்லை என்றால் அழைப்பு முடிவடையும்போது, உங்கள் இருப்பிடம் மற்றும் நீங்கள் அவசரகாலச் சேவைகளை அழைத்தீர்கள் என்ற அறிவிப்புடன் உங்கள் அவசரகாலத் தொடர்புகளுக்கு மெசேஜ் அனுப்பத் தேர்வுசெய்யலாம்.

அவசரகால SOS மூலம், நீங்கள் விரைவாகவும் எளிதாகவும் உதவியை அழைக்கலாம், அவசரகாலத் தொடர்புகளுக்குத் தகவல் தெரிவிக்கலாம். அவசரகால SOS மூலம் அழைத்தால், உங்கள் சாதனம் தானாகவே உள்ளூர் அவசரகால எண்ணை அழைக்கும். சில நாடுகள் அல்லது வட்டாரங்களில், உங்கள் அவசரகாலச் சேவையாக எதை அமைக்க விரும்புகிறீர்கள் என்று நீங்கள் தேர்வுசெய்ய வேண்டியிருக்கலாம். டிஸ்பாட்சர் உங்களுக்கு உதவ வழிசெய்வதற்காக இந்த அழைப்புடன் உங்கள் இருப்பிடம் (நீங்கள் இருப்பிடச் சேவைகளைச் செயல்படுத்தியிருந்தாலும் செயல்படுத்தாவிட்டாலும்) பகிரப்படப்படக்கூடும். அழைப்பு முடிந்ததும், நீங்கள் அவசரகாலச் சேவைகளை அழைத்தீர்கள் என்ற மெசேஜை உங்கள் அவசரகாலத் தொடர்புகளுக்கு அனுப்புவதா வேண்டாமா என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம். இந்த மெசேஜ் உடன் உங்கள் தற்போதைய இருப்பிடமும் பகிரப்படும். iPhoneஇல் உடல்நலம் செயலியில் உள்ள உங்கள் மருத்துவ ஐடியைத் திருத்துவதன் மூலம் உங்கள் அவசரகாலத் தொடர்புகளை நிர்வகிக்கலாம்.

குறிப்பிட்ட காலத்திற்கு, உங்கள் இருப்பிடம் மாறினால் அது குறித்த அறிவிப்புகளை உங்கள் அவசரகாலத் தொடர்புகளுக்கு மெசேஜஸ் செயலியைப் பயன்படுத்தி உங்கள் சாதனம் அனுப்பும். இதை அனுப்பும்போது உங்களுக்குத் தெரிவிக்கப்படும். உங்கள் Apple Watchஇல் அவசரகால SOS அம்சத்தைப் பயன்படுத்தினால், உங்கள் Apple Watchஇல் காட்டப்படும் அறிவிப்பில் “பகிர்வதை நிறுத்து” என்பதைத் தட்டி நீங்கள் இதை நிறுத்தலாம். உங்கள் iPhoneஇல் அவசரகால SOS அம்சத்தைப் பயன்படுத்தினால், உங்கள் iPhone ஸ்டேட்டஸ் பாரைத் தட்டி “அவசரகால இருப்பிடத்தைப் பகிர்வதை நிறுத்து” என்பதைத் தேர்ந்தெடுத்து நீங்கள் இதை நிறுத்தலாம்.

இருப்பிடச் சேவைகள் முடக்கப்பட்டிருந்தால், உங்கள் அவசரகாலத் தொடர்புகளுக்கு உங்கள் இருப்பிடத்தைத் தெரிவிப்பதற்காக அது தற்காலிகமாகச் செயல்படுத்தப்படும். உங்கள் இருப்பிடம் பகிரப்படும்போது, ஒவ்வொரு நான்கு மணிநேரத்திற்கு ஒருமுறை என அடுத்த 24 மணிநேரம் வரை அதை நிறுத்துவதற்கான நினைவூட்டல்களைப் பெறுவீர்கள். உங்கள் அவசரகாலத் தொடர்புகளுக்கு உங்கள் இருப்பிடத்தை அனுப்ப வேண்டாம் என நீங்கள் நினைத்தால், உங்கள் iPhoneஇல் அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > இருப்பிடச் சேவைகள் > சிஸ்டம் சேவைகள் என்பதற்குச் சென்று “அவசரகால அழைப்புகள் & SOS” என்பதைத் தட்டி அதை ஆஃப் செய்யுங்கள்.

2025-12-12