FaceTime & தனியுரிமை

நீங்கள் FaceTime அழைப்புகளைச் செய்ய உங்கள் ஃபோன் எண் அல்லது Apple கணக்கைப் பதிவுசெய்யலாம். FaceTime பயன்பாடு பற்றிய குறிப்பிட்ட தகவல்களை 30 நாட்கள் வரை Apple தக்கவைக்கும். நீங்கள் FaceTime அழைப்பைச் செய்ய முயன்ற நேரமும் இதில் அடங்கும்.
 

FaceTime உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Privacy Icon

  • FaceTime முழுமையாக என்கிரிப்ட் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் தொடர்புகொள்ளும் நபர்களுக்கு நீங்கள் பயன்படுத்தும் ஃபோன் எண் அல்லது மின்னஞ்சல் முகவரி காட்டப்படும். விரும்பினால், உங்கள் பெயரையும் புகைப்படத்தையும் கூட நீங்கள் பகிரலாம்.
  • FaceTime பயன்பாடு பற்றிய குறிப்பிட்ட தகவல்களை 30 நாட்கள் வரை Apple தக்கவைக்கும். நீங்கள் FaceTime அழைப்பைச் செய்ய முயன்ற நேரமும் இதில் அடங்கும்.
  • குறிப்பிட்ட வட்டாரங்களில் உள்ள இணையப் பயனர்கள் இணையம் வழியாக FaceTime அழைப்புகளில் இணைய FaceTime அனுமதிக்கிறது.

FaceTime என்பது iOS, iPadOS, visionOS அல்லது Mac சாதனத்தைப் பயன்படுத்துபவருக்கு வீடியோ அல்லது ஆடியோ அழைப்புகளைச் செய்வதற்கும், Apple Watchஐப் பயன்படுத்தி அல்லது இணையம் வழியாக ஆடியோ அழைப்புகளைச் செய்வதற்கும் பயன்படும் Apple சேவையாகும். இந்த அழைப்புகள் உங்கள் மொபைல் சேவைத் திட்டத்தில் கணக்கிடப்படாது.

முழுமையான என்கிரிப்ஷனைப் பயன்படுத்தும் வகையில் FaceTimeஐ நாங்கள் வடிவமைத்துள்ளோம். FaceTime அழைப்புகளின் உள்ளடக்கத்தை நாங்கள் ஒருபோதும் சேமிப்பதில்லை.

உங்கள் Apple கணக்கு அல்லது ஃபோன் எண் மூலம் FaceTimeஇல் உள்நுழையலாம். உங்கள் சாதனத்தில் Apple கணக்கு மூலம் நீங்கள் உள்நுழைந்தால், FaceTimeஇல் தானாகவே உள்நுழைவீர்கள். நீங்கள் தொடர்புகொள்ளும் நபர்களுக்கு உங்கள் Apple கணக்கு அல்லது ஃபோன் எண்கள் காட்டப்படும், உங்கள் Apple கணக்கு மற்றும் கணக்கில் உள்ள மின்னஞ்சல் முகவரிகள் அல்லது ஃபோன் எண்களைப் பயன்படுத்தி அவர்கள் உங்களைத் தொடர்புகொள்ள முடியும். FaceTime அழைப்புகளுக்கு நீங்கள் பயன்படுத்த விரும்பும் ஃபோன் எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரிகளைப் FaceTime அமைப்புகளில் தேர்ந்தெடுக்கலாம். account.apple.com இணையதளத்தில் உள்ள உங்கள் Apple கணக்குப் பக்கத்தில் கூடுதல் தொடர்பு விவரங்களைச் சேர்க்கலாம் மற்றும் சரிபார்க்கலாம்.

FaceTime அழைப்புகளில் Apple அல்லது மூன்றாம் தரப்புச் செயலிகளின் அனுபவங்களைப் பகிர SharePlay உங்களுக்கு உதவுகிறது. SharePlay மூலம் பகிரப்படும் தகவல்கள் முழுமையாக என்கிரிப்ட் செய்யப்பட்டுள்ளன. செயலி டெவலப்பர்களுக்கு அவர்களின் செயலிகளை நீங்கள் பயன்படுத்துவது குறித்த தகவல்களுக்கான அணுகல் இருக்கலாம்.

பின்னர் அழைப்பதற்காக ஓர் அழைப்பைத் திட்டமிடுவதற்கும், Windows அல்லது Androidஐப் பயன்படுத்தும் பங்கேற்பாளர்களை இணையத்தின் வழியாக அழைப்பில் பங்கேற்க அழைப்பதற்கும் FaceTime இணைப்புகள் பயனர்களுக்கு உதவுகின்றன. இணையம் வழியாகப் பங்கேற்கும் பயனர்கள் தங்களை அடையாளம் காட்டுவதற்காகத் தங்களின் பெயரைக் குறிப்பிட்டு FaceTime அழைப்புக்கு அணுகல் கோர வேண்டும். இணையம் வழியாகப் பங்கேற்கும் பயனர் அழைப்பில் இணைந்த முதல் 30 விநாடிகளுக்குள் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட பயனரும் அவரை அழைப்பில் இருந்து அகற்றலாம்.

FaceTime ஆடியோ மற்றும் ஃபோன் அழைப்புகளுக்கு, உங்கள் கான்டாக்ட் போஸ்டர் உள்வரும் அழைப்புத் திரையில் காட்டப்படும். உங்கள் கான்டாக்ட் போஸ்டரை உங்கள் தொடர்புகளுடன் தானாகப் பகிரும் வகையில் அல்லது ஒவ்வொரு முறையும் பகிர்வதற்கு நினைவூட்டும் வகையில் அமைக்கலாம், பகிரப்படும் தரவுகள் அவர்களின் சாதனங்களில் சேமிக்கப்படும். நீங்கள் குழு FaceTime ஆடியோ அல்லது ஃபோன் உரையாடலில் பல நபர்களுடன் உங்கள் கான்டாக்ட் போஸ்டரைப் பகிர்ந்தால், அந்த உரையாடலில் உள்ள அனைத்து நபர்களுக்கும் உங்கள் கான்டாக்ட் போஸ்டர் அனுப்பப்படும். உங்கள் கான்டாக்ட் போஸ்டரை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் தானாகப் பகிரும் வகையில் அமைத்திருந்தால், அடுத்த முறை நீங்கள் FaceTime ஆடியோ அல்லது ஃபோன் அழைப்புகளைச் செய்யும்போது நீங்கள் செய்த மாற்றங்களுடன் அனுப்பப்படும். நீங்கள் உங்கள் கான்டாக்ட் போஸ்டரைப் பகிர்ந்து பின்னர் பகிர்தலை ஆஃப் செய்திருந்தால், முன்பு உங்கள் கான்டாக்ட் போஸ்டரைப் பெற்றவர்களின் சாதனங்களில் உங்கள் தகவல்கள் இப்போதும் இருக்கக்கூடும். அழைப்புகளுக்காக நீங்கள் தேர்ந்தெடுக்கும் கான்டாக்ட் போஸ்டர் Appleக்கு அனுப்பப்பட்டு, Appleஆல் பார்க்க முடியாத வகையில் என்கிரிப்ட் செய்யப்பட்டு Appleஇன் சர்வர்களில் சேமிக்கப்படும்.

உங்கள் visionOS சாதனத்தில் FaceTime அழைப்புகளைச் செய்யும்போது, உங்கள் Personaஐக் காட்டுவதற்காக அழைப்பில் உள்ள அனைவருக்கும் உங்கள் Persona பாதுகாப்பாக அனுப்பப்படும். அழைப்பு நிறைவடைந்ததும், அழைப்பில் இருந்த பிற பங்கேற்பாளர்களின் சாதனங்களில் 30 நாட்கள் வரை உங்கள் Persona என்கிரிப்ட் செய்யப்பட்டு சேமிக்கப்பட்டிருக்கலாம். அழைப்பின் பிற பங்கேற்பாளர்கள் உங்களுடன் அழைப்பில் இருக்கும்போது மட்டுமே அவர்களால் உங்கள் Personaஐ அணுக முடியும்.

Appleஇன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்காக நீங்கள் FaceTime பயன்படுத்துவது தொடர்பான சில தகவல்களை Apple பதிவுசெய்து சேமிக்கக்கூடும்

  • நீங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் விதம் பற்றிய தகவல்களை உங்களை அடையாளப்படுத்தாத வகையில் Apple பதிவுசெய்து சேமிக்கக்கூடும்.
  • FaceTime அழைப்புகள் பற்றிய தகவல்களை Apple பதிவுசெய்து சேமிக்கக்கூடும். அழைக்கப்பட்டவர்களின் விவரங்கள், உங்கள் சாதனத்தின் நெட்வொர்க் உள்ளமைவுகள் போன்றவையும் இதில் அடங்கும். இந்தத் தகவல்கள் 30 நாட்கள் வரை சேமிக்கப்பட்டிருக்கும். உங்கள் அழைப்பிற்குப் பதிலளிக்கப்பட்டதா இல்லையா என்ற தகவலை Apple பதிவுசெய்யாது, உங்கள் அழைப்பின் உள்ளடக்கத்தையும் அணுகாது.
  • ஸ்பேம் அல்லது ஜங்க் FaceTime அழைப்புகள் குறித்து புகாரளிக்கும்போது நீங்கள் அல்லது வேறொருவர் Appleக்கு அனுப்பும் தகவலை Apple சேமிக்கக்கூடும்.
  • FaceTime மூலம் பிறரைத் தொடர்புகொள்ள முடியுமா என்பதைக் கண்டறிய, உங்கள் சாதனத்தில் உள்ள சில செயலிகள் (FaceTime உட்பட) Apple சர்வர்களைத் தொடர்புகொள்ளக்கூடும். இது நடக்கும்போது, உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள இந்த ஃபோன் எண்களையும் மின்னஞ்சல் முகவரிகளையும் 30 நாட்கள் வரை Apple சேமிக்கக்கூடும்.

இந்த அம்சங்களைப் பயன்படுத்துவதன் மூலம், Apple மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் மேலே விவரிக்கப்பட்டுள்ளவாறு இந்தத் தகவல்களைப் பரிமாற்றம் செய்வது, சேகரிப்பது, பராமரிப்பது, செயலாக்குவது மற்றும் பயன்படுத்துவதை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வழங்குகிறீர்கள்.

Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும், இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.

2025-12-12