குடும்பப் பகிர்வு & தனியுரிமை

நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் சந்தாக்கள், வாங்குதல்கள், இருப்பிடங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்வதற்காகவும்; சிறார் கணக்கை உருவாக்குவதற்காகவும்; பெற்றோர் கட்டுப்பாடுகளை அமைத்திடுவதற்காகவும் உங்கள் Apple கணக்கு, பேமெண்ட் விவரங்கள் மற்றும் உங்கள் குடும்பக் குழு பற்றிய தகவல்களை Apple பயன்படுத்துகிறது. தொடர்புடைய தகவல்களை உங்களுக்கு அனுப்புவதற்காக உங்கள் குடும்பக் குழு பற்றிய விவரங்களை Apple பயன்படுத்தக்கூடும்.
 

“குடும்பப் பகிர்வு” உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Privacy Icon

  • நீங்கள் வயது வந்தவரா, சிறாரா, பதின்ம வயதினரா என்பதை உறுதிசெய்ய உங்கள் Apple கணக்கில் உள்ள உங்கள் வயது, நாடு, வட்டாரம் போன்றவை பயன்படுத்தப்படும்.
  • நீங்கள் ஒரு குடும்பக் குழுவைத் தொடங்கும்போது அல்லது குடும்பக் குழுவில் இணையும்போது, நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் சந்தாக்கள், வாங்குதல்கள் மற்றும் இருப்பிடங்களைப் பகிர்ந்துகொள்ள உதவுவதற்காக Apple கணக்கு மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் பயன்படுத்தப்படலாம்.
  • நீங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் எனில், உங்கள் குடும்பக் குழுவில் உள்ள குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கான பெற்றோர் கட்டுப்பாடுகளை அமைக்க உங்களுக்கு உதவுவதற்காக உங்களுடைய மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடைய Apple கணக்குகள் பயன்படுத்தப்படலாம்.
  • குடும்பப் பகிர்வின் வழியாகக் கிடைக்கக்கூடிய தயாரிப்புகள், சேவைகள், சலுகைகள் மற்றும் பிற நன்மைகள் பற்றிய தகவல்களை உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் அனுப்புவதற்காக உங்கள் குடும்பக் குழு பற்றிய விவரங்கள் பயன்படுத்தப்படலாம்.

உங்கள் தகவலின் தனியுரிமையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது Appleஇல் உள்ள அனைவரின் முன்னுரிமையாகும். உங்கள் அனுபவத்தைச் சிறப்பாக்குவதற்காக எங்களுக்குத் தேவைப்படும் தரவை மட்டுமே நாங்கள் சேகரிக்க முயல்கிறோம் மற்றும் தரவைச் சேகரிக்கும்போது எதைச் சேகரிக்கிறோம், அது எங்களுக்கு ஏன் தேவைப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்வது முக்கியம் என நினைக்கிறோம், இதன்மூலம் தகவலறிந்த முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். அனைத்து Apple தயாரிப்புகளையும் சேவைகளையும் போல இந்தக் கொள்கைகளைக் கருத்தில் கொண்டு “குடும்பப் பகிர்வு” வடிவமைக்கப்பட்டுள்ளது.

குடும்பப் பகிர்வை அமைத்தல்

குடும்ப அமைவைப் பயனர் தொடங்கும்போது, அவர் வயது வந்தவரா, குடும்பக் குழுவை அமைக்கத் தகுதிபெற்றுள்ளாரா என்பதை உறுதிசெய்வதற்காக அவரின் Apple கணக்கில் உள்ள வயது, நாடு, வட்டாரம் போன்றவற்றை Apple பயன்படுத்தும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள வயது வரம்புகள் பயனரின் Apple கணக்கு இணைக்கப்பட்டுள்ள நாடு அல்லது வட்டாரத்தைப் பொறுத்து மாறுபடலாம். வயது வரம்புகள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு, support.apple.com/102617 இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.

வயது வந்தவர் என்பது உறுதிசெய்யப்பட்டதும், தொடங்கிய பயனர் குடும்ப ஒருங்கிணைப்பாளராக மாறுவார். AirDrop, மெசேஜஸ், Mail போன்ற செயலிகளைப் பயன்படுத்தி அல்லது குடும்ப அமைப்புகளில் உள்ள “நேரில் அழை” விருப்பத்தைத் தட்டி குடும்பக் குழுவில் இணைவதற்குத் தனித்தனி Apple கணக்குகளைக் கொண்ட மேலும் ஐந்து பயனர்களை அவரால் அழைக்க முடியும். அழைப்பு அனுப்பப்படும் விதத்தைப் பொறுத்து ஒருங்கிணைப்பாளரின் பெயர், Apple கணக்கு, அழைப்பாளருக்குக் கிடைக்கும் சந்தாக்களுக்கான அணுகல்கள், ஒருங்கிணைப்பாளரின் தொடர்புத் தகவல்கள் போன்றவற்றை அந்த அழைப்பில் Apple காட்டும். ஒருங்கிணைப்பாளர் அல்லது குடும்பக் குழு பற்றிய வேறு எந்தத் தகவலையும் (எடுத்துக்காட்டாக, ஏற்கெனவே உள்ள குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் போன்றவை) Apple காட்டாது. “நேரில் அழை” விருப்பத்தை ஒருங்கிணைப்பாளர் தட்டும்போது, அழைக்கப்படுபவர் 13 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர் எனில் அழைக்கப்படுபவரை அங்கீகரித்து அழைப்பை அவர் ஏற்றுக்கொள்வதை உறுதிசெய்வதற்காக ஒருங்கிணைப்பாளரின் சாதனத்தில் உள்ளிடப்பட்ட அழைக்கப்படுபவரின் Apple கணக்கு மற்றும் பாஸ்வேர்டை Apple பயன்படுத்தும். ஒருங்கிணைப்பாளரின் சாதனத்தில் Apple இந்தத் தகவல்களைச் சேமிக்காது. அழைக்கப்படுபவர் 13 வயதிற்குட்பட்டவர் எனில், கீழே “குடும்பப் பகிர்வுக் குழுவில் இருந்து வெளியேறுதல்” மற்றும் “பிள்ளையின் கணக்கை இடமாற்றுதல்” பிரிவில் விவரிக்கப்பட்ட பிள்ளையின் கணக்கு இடமாற்றச் செயல்முறையை Apple தொடங்கும்.

அழைப்புகளை நிர்வகிக்க ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அழைக்கப்படுபவர்களுக்கு உதவுவதற்காகவும் நினைவூட்டல்களை அனுப்புவதற்காகவும், சாதன அமைப்புகளில் அவர்களின் பெயர், சுயவிவரப் புகைப்படம், அழைப்பு நிலை ஆகியவற்றை (கிடைக்கும்பட்சத்தில்) Apple காட்டும். அழைக்கப்படுபவர் பதிலளிக்கும் வரை அழைப்புகள் தொடர்பான பதிவை Apple பராமரிக்கிறது, பதிலளிக்கவில்லை எனில் 15 நாட்களுக்குப் பிறகு அழைப்பு காலாவதியாகும். அழைப்பை ஏற்றுக்கொண்டால், அழைக்கப்படுபவரின் Apple கணக்கைக் குடும்பக் குழுவில் Apple இணைக்கும். காலாவதியான அழைப்புகளின் பதிவை Apple பராமரிக்காது. மெசேஜஸ் மூலம் அனுப்பப்படும் அழைப்புகள் நிராகரிக்கப்பட்டால், நிராகரிக்கப்பட்ட தகவலை ஒருங்கிணைப்பாளர் மற்றும் அழைக்கப்படுபவருக்கு மெசேஜஸில் காட்டுவதற்காக அந்தப் பதிவை 30 நாட்கள் வரை Apple தக்கவைக்கும்.

குடும்பத்தில் இணைதல் மற்றும் குடும்பப் பொறுப்புகள்

பயனர்கள் ஒரு குடும்பக் குழுவில் இணையும்போது, குறிப்பிட்ட அம்சங்கள், தகவல்கள் மற்றும் கட்டுப்பாடுகளை Apple அவர்களுக்கு வழங்கும். சந்தாக்கள், வாங்குதல்கள், பேமெண்ட் தகவல்கள், இருப்பிடங்கள் ஆகியவற்றைப் பகிர்வதை நிர்வகிப்பதற்கு அதை அவர்கள் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு, உறுப்பினரின் பெயர், Apple கணக்கு, பொறுப்பு, குடும்பத்தில் உள்ள பிள்ளைகள் மற்றும் பதின்ம வயதினரின் வயது ஆகியவற்றைக் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் குடும்ப அமைப்புகளில் Apple காட்டும். iOS அல்லது iPadOS சாதனத்தைப் பயன்படுத்தும் பிள்ளைகள் மற்றும் பதின்ம வயதினரின் தனியுரிமைகளைப் பாதுகாத்து, பெற்றோர் கட்டுப்பாடுகள் மூலம் அவர்களின் வயதுக்குப் பொருத்தமான தகவல்களை வழங்க வயது தொடர்பான தகவல்களை Apple பயன்படுத்தும். பிரத்தியேகப் பரிந்துரைகளை வழங்குவதற்காகக் குடும்ப உறுப்பினர் பற்றிய விவரங்களையும் Apple செயலாக்கும். உறுப்பினரின் பொறுப்பு, சந்தாக்கள், பயன்படுத்தும் அம்சங்கள், சேவைகள் போன்றவை இதில் அடங்கும். எடுத்துக்காட்டாக, பெற்றோர் கட்டுப்பாடுகளை மதிப்பாய்வு செய்தல், iCloud+ஐக் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்தல், மற்றொரு குடும்ப உறுப்பினரை அவசரகாலத் தொடர்புகளில் ஒருவராக அமைத்தல் போன்ற பரிந்துரைகளைக் குடும்ப உறுப்பினர்களுக்கான பரிந்துரைகள் அம்சம் வழங்கலாம்.

ஒரு வயதுவந்த பயனரை ஒருங்கிணைப்பாளர் குடும்பக் குழுவில் சேர்க்கும்போது, அவரைப் பெற்றோர்/பாதுகாவலராக நியமிக்கலாம். பெற்றோர்/பாதுகாவலர்கள் மற்றும் பெற்றோர்/பாதுகாவலராகச் செயல்படும் ஒருங்கிணைப்பாளர் கீழே விவரிக்கப்பட்டபடி சிறார் மற்றும் பதின்ம வயதினருக்கான Apple கணக்கை உருவாக்கலாம். குடும்பக் குழுவில் உள்ள சிறார் மற்றும் பதின்ம வயதினருக்கு “வாங்க அனுமதி கோருதல்”, “ஸ்கிரீன் டைம்” போன்ற பெற்றோர் கட்டுப்பாடுகளையும் அவர்கள் அமைக்கலாம். குடும்பக் குழுவை அமைத்து அதில் பங்கேற்க பயனர்களை அழைப்பதோடு மட்டுமல்லாது, ஒருங்கிணைப்பாளரால் கீழே விவரிக்கப்பட்டபடி குடும்ப உறுப்பினர்களை அகற்றவும் குழுவைக் கலைக்கவும் முடியும். உங்கள் குடும்பக் குழுவில் உள்ள ஓர் உறுப்பினர் Apple சாதனத்தில் (எ.கா. Apple TV) உள்நுழைந்தால், பிற குடும்ப உறுப்பினர்களின் Apple கணக்குப் பெயரையும் சுயவிவரப் புகைப்படத்தையும் காட்டி அவர்களையும் சேர்க்க அந்தச் சாதனம் பரிந்துரைக்கக்கூடும்.

சிறார் அல்லது பதின்ம வயதினருக்கான Apple கணக்கை உருவாக்குதல்

Apple கணக்கை உருவாக்கி ஒருங்கிணைப்பாளர் அல்லது பெற்றோர்/பாதுகாவலர், சிறார் மற்றும் பதின்ம வயதினரைத் தங்களின் குடும்பக் குழுவில் சேர்க்கலாம். சில நாடுகள் அல்லது வட்டாரங்களில் சிறார் அல்லது பதின்ம வயதினருக்கான Apple கணக்கை அமைப்பதற்கு முன்பு, ஒருங்கிணைப்பாளர் அல்லது பெற்றோர்/பாதுகாவலர் வயது வந்தவர் என்பதை உறுதிசெய்வதற்குத் தேவையான கூடுதல் படிநிலைகளைச் சட்டத்தேவைகளின்படி Apple அமைக்க வேண்டும். அந்த நாடுகள் அல்லது வட்டாரங்களில் கிரெடிட் கார்டு அல்லது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை போன்ற துணை ஆவணங்களை வழங்குமாறு அவர்களிடம் கேட்கப்படலாம். சிறார் அல்லது பதின்ம வயதினருக்கான Apple கணக்கை உருவாக்க, அந்தச் சிறார் அல்லது பதின்ம வயதினரின் பெயர், பிறந்ததேதி, மின்னஞ்சல் முகவரி, ஃபோன் எண் ஆகியவற்றை ஒருங்கிணைப்பாளர் அல்லது பெற்றோர்/பாதுகாவலர் வழங்க வேண்டும், அந்தச் சிறார் அல்லது பதின்ம வயதினரின் Apple கணக்கை உருவாக்க Apple இந்தத் தகவல்களைப் பயன்படுத்தும். சாதன அமைவின்போது கணக்கு உருவாக்கப்பட்டால், ஒருங்கிணைப்பாளர் அல்லது பெற்றோர்/பாதுகாவலர் அந்தச் சிறார் அல்லது பதின்ம வயதினர் வசிக்கும் நாட்டை அல்லது வட்டாரத்தைத் தெரிவிக்க வேண்டும். தகுதிபெறும் சேவைகளைத் தீர்மானிப்பதற்கும் “வாங்க அனுமதி கோருதல்”, “ஸ்கிரீன் டைம்” போன்ற பெற்றோர் கட்டுப்பாடுகளைப் பரிந்துரைப்பதற்கும் சிறார் அல்லது பதின்ம வயதினரின் பிறந்த தேதியை Apple பயன்படுத்துகிறது. சில நாடுகள் அல்லது வட்டாரங்களில் சிறார் மற்றும் பதின்ம வயதினரின் கணக்குகளுக்காகச் சில பெற்றோர் கட்டுப்பாடுகளைச் சட்டப்படி Apple நிறுவனம் செயல்படுத்த வேண்டும், அத்துடன் பெற்றோர்/பாதுகாவலர் அவற்றை முடக்குவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். பிள்ளையின் தரவுகளைச் செயலாக்க ஒப்புதல் பெறும் முன்பாக ஒருங்கிணைப்பாளர் அல்லது பெற்றோர்/பாதுகாவலரின் பேமெண்ட் விவரங்கள், வாலெட்டில் உள்ள அடையாள கார்டு, Apple கணக்கு அல்லது அதுபோன்ற பிற தகவல்களைப் பயன்படுத்தி அவரது வயதை Apple பிள்ளைக்குச் சரிபார்க்கும். சிறார் கணக்கை உருவாக்குதல் குறித்த கூடுதல் தகவல்களுக்கு, support.apple.com/102617 இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.

வாங்குதல் பகிர்வு

ஒருங்கிணைப்பாளர் “வாங்குதல் பகிர்வு” அம்சத்தைச் செயல்படுத்தினால், App Store, iTunes Store, Apple Books அல்லது Apple TV செயலிகளில் குடும்ப உறுப்பினர்களால் செய்யப்படும் தகுதிபெறும் வாங்குதல்களுக்கு ஒருங்கிணைப்பாளர் சேமித்துள்ள பேமெண்ட் முறையில் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும். பயன்படுத்தப்பட்ட பேமெண்ட் முறை (எ.கா. Apple Pay) பற்றிய விவரத்தைக் குடும்ப உறுப்பினர்களால் பார்க்க முடியும், ஆனால் பேமெண்ட் செய்த கணக்கு எண் போன்ற முழுமையான பேமெண்ட் விவரங்களைப் பார்க்க முடியாது. ஒருங்கிணைப்பாளர் வாங்குபவற்றுக்குக் குடும்ப உறுப்பினர்கள் தானாகவே அணுகல் பெறுவார்கள், தங்களின் வாங்குதல்களைப் பிற குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்வதா வேண்டாமா என்பதை அவர்கள் தேர்வுசெய்யலாம். குடும்ப உறுப்பினர்கள் ஆன்லைன் மற்றும் செயலியில் மேற்கொள்ளும் App Store பரிவர்த்தனைகளின் விவரம், விலை, தேதி, ரீஃபண்டு கோரிக்கை விவரங்கள், அதன் விளைவுகள், புகார்கள் போன்றவற்றை ஒருங்கிணைப்பாளரால் பார்க்க முடியும். ஆன்லைன் அல்லது செயலியில் மேற்கொள்ளும் App Store பரிவர்த்தனை தொடர்பாக குடும்ப உறுப்பினர் புகார் தெரிவித்தால், Apple அதற்குப் பொருத்தமான தீர்வு வழங்குவதற்காக, வாங்கிய குடும்ப உறுப்பினர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் வாங்குதல் பற்றிய தகவல்களைப் பயன்படுத்தும்.

குடும்ப உறுப்பினர்கள் தனிப்பட்ட iTunes, Apple Books மற்றும் App Store வாங்குதல்களை மறைக்கலாம் அல்லது குடும்ப அமைப்புகளில் “எனது வாங்குதல்களைப் பகிர்” அம்சத்தை முடக்கலாம்; குடும்ப உறுப்பினர்கள் தங்களின் வாங்குதல்களை மறைத்தாலும் App Store, Apple Books மற்றும் Apple Musicஇல் அவர்கள் வாங்குபவை தொடர்பான ரசீதுகள் குடும்ப ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பப்படும். வாங்குதல் பகிர்வு குறித்த கூடுதல் தகவல்களுக்கு, support.apple.com/102599 இணையதளத்தைப் பார்வையிடுங்கள். App Storeஇல் வாங்குதல்களை மறைப்பது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு, support.apple.com/108091 இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.

சந்தாக்கள்

“குடும்பத்துடன் பகிர்தல்” விருப்பம் செயல்படுத்தப்பட்டிருந்தால், Apple Music குடும்பத் திட்டம், Apple TV, Apple Arcade, Apple News+ போன்ற சேவைகளின் சந்தாக்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பகிரப்படும். குடும்ப உறுப்பினர்கள் தங்களின் சொந்த Apple கணக்குகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு சேவையிலும் உள்நுழையலாம். இதன் மூலம் பகிர்ந்த குடும்பத் திட்டத்தின் பலனை அனைவரும் பெறலாம், மேலும் ஒவ்வொருவரும் தங்களின் உள்ளடக்கம், மீடியா லைப்ரரிகள், பரிந்துரைகள் போன்றவற்றைத் தனிப்பட்ட முறையில் வைத்துக்கொள்ளலாம். இதேபோல, குடும்பத்துடன் iCloud+ திட்டத்தைப் பகிர்வதால் பகிர்ந்த திட்டத்தில் உள்ள சேமிப்பகம் மற்றும் அம்சங்களைக் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பயன்படுத்தலாம், அதேநேரம் ஒவ்வொருவரின் கணக்குகளும் கோப்புகளும் தனிப்பட்ட முறையில் வைக்கப்படும். குடும்ப உறுப்பினர்களுடன் சந்தாக்களைப் பகிர்வது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு, support.apple.com/108107 இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.

இருப்பிடப் பகிர்வு

குடும்பக் குழுவில் ஒரு பயனர் இணையும்போது, அவரின் சாதனப் பெயர்கள் “இடம் அறி” செயலியில் பிற குடும்ப உறுப்பினர்களுக்குக் காட்டப்படும். இடம் அறி செயலியில் பிற குடும்ப உறுப்பினர்களுக்கு அவரின் Apple கணக்கு மட்டுமே காட்டப்படும், குடும்ப அமைப்புகள் வழியாகவோ இடம் அறி செயலி மூலமாகவோ இருப்பிடப் பகிர்வைச் செயல்படுத்தினால் மட்டுமே இடம் அறி செயலியால் அவரது இருப்பிடத் தரவுகள் செயலாக்கப்படும். குடும்ப உறுப்பினர் குழுவில் இருக்கும் காலம் வரை தனது இருப்பிடத்தைக் குடும்பத்தில் உள்ள பிற உறுப்பினர்களுடன் (பின்னர் புதிதாகச் சேர்க்கப்படும் உறுப்பினர்கள் உட்பட) தானாகவே பகிரும் விருப்பத்தையும் குடும்ப அமைப்புகளில் தேர்வுசெய்யலாம். சிறார் அல்லது பதின்ம வயதினரின் கணக்கை உருவாக்குதல் போன்ற குறிப்பிட்ட சூழல்களில் தங்கள் பிள்ளை அல்லது பதின்ம வயதினரின் இருப்பிடத்தைக் குடும்பத்தில் உள்ள பிற உறுப்பினர்களுடன் தானாகவே பகிரும் விருப்பத்தை ஒருங்கிணைப்பாளர், பெற்றோர், பாதுகாவலர் போன்றோர் தேர்வுசெய்யலாம். அமைப்புகள் > [உங்கள் பெயர்] > குடும்பப் பகிர்வு > இருப்பிடப் பகிர்வு என்பதற்குச் சென்று “இருப்பிடத்தைத் தானாகப் பகிர்” அம்சத்தைக் குடும்ப உறுப்பினர்கள் முடக்கலாம். குடும்ப அமைப்புகள் மற்றும் இடம் அறி செயலி மூலம் தங்கள் இருப்பிடத்தைத் தனித்தனி உறுப்பினர்களுடன் பகிரும் விருப்பத்தையும் அவர்கள் தேர்வுசெய்யலாம். குடும்ப உறுப்பினர்களுடனான இருப்பிடப் பகிர்வு பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, support.apple.com/105107 இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.

பெற்றோர் கட்டுப்பாடுகள்

ஒருங்கிணைப்பாளர் மற்றும் பெற்றோர்/பாதுகாவலர்கள் தங்கள் குடும்பக் குழுவில் உள்ள சிறார் மற்றும் பதின்ம வயதினருக்கான பெற்றோர் கட்டுப்பாடுகளை அமைக்க உதவுவதற்காக, குடும்ப உறுப்பினர்களின் Apple கணக்குகளையும் பொறுப்புகளையும் Apple பயன்படுத்தும். எடுத்துக்காட்டாக, ஒருங்கிணைப்பாளர் மற்றும் பெற்றோர்/பாதுகாவலர்கள் “வாங்க அனுமதி கோருக” விருப்பத்தை ஆன் செய்யலாம், இதனால் App Store, iTunes Store, Apple Books செயலியில் இருந்து (செயலியில் வாங்குதல்கள் மற்றும் இலவசப் பதிவிறக்கங்கள் உட்பட) குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர் ஏதேனும் பதிவிறக்கங்கள் அல்லது வாங்குதல்களைச் செய்வதற்கு முன்பு பெற்றோர் ஒப்புதலைப் பெற வேண்டும். சில நாடுகள் அல்லது வட்டாரங்களில் சிறார்கள் மற்றும் பதின்ம வயதினருக்கான “வாங்க அனுமதி கேள்” அம்சத்தை Apple நிறுவனம் ஆன் செய்ய வேண்டும், அத்துடன் பெற்றோர்/பாதுகாவலர் இந்தக் கட்டுப்பாட்டை முடக்குவதற்குக் கட்டுப்பாடு விதிக்கப்படலாம். ஒருங்கிணைப்பாளர் மற்றும் பெற்றோர்/பாதுகாவலர்கள் ஸ்கிரீன் டைம் விருப்பத்தையும் அமைக்கலாம், இதன்மூலம் தங்கள் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரின் “செயல்படா நேரம்”, செயலி மற்றும் இணையதளப் பயன்பாடு, தொடர்புகள், உள்ளடக்க மதிப்பீடுகள் போன்ற அம்சங்களுக்கான அமைப்புகளை நிர்வகிக்கலாம். App Store, iTunes Store, Apple Books செயலிகளில் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர் செய்யும் பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களைப் பார்த்தல், ஸ்கிரீன் டைம் வழியாக அவர்களின் ஆன்லைன் செயல்பாடுகளைப் பார்த்தல் மற்றும் நிர்வகித்தல், பெற்றோர் கட்டுப்பாடுகளைச் செயல்படுத்துதல் ஆகியவற்றை ஒருங்கிணைப்பாளர் மற்றும் பெற்றோர்/பாதுகாவலர்களால் மட்டுமே செய்ய முடியும். “வாங்க அனுமதி கோருதல்” பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, support.apple.com/105055 இணையதளத்தைப் பார்வையிடுங்கள். பெற்றோர் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்துவது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு, support.apple.com/105121 இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.

குடும்பப் பகிர்வுக் குழுவில் இருந்து வெளியேறுதல் மற்றும் பிள்ளையின் கணக்கை இடமாற்றுதல்

வயதுவந்த குடும்ப உறுப்பினர்கள் எப்போது வேண்டுமானாலும் குடும்பக் குழுவில் இருந்து வெளியேறலாம் அல்லது ஒருங்கிணைப்பாளரால் அகற்றப்படலாம். “ஸ்கிரீன் டைம்” அம்சம் மூலம் ஒருங்கிணைப்பாளர் அல்லது பெற்றோர்/பாதுகாவலர்களால் நிர்வகிக்கப்படும் பிள்ளைக்கான கணக்கைக் கொண்டிருக்காத பட்சத்தில், பதின்ம வயதினர் ஒரு குடும்பக் குழுவில் இருந்து வெளியேறலாம் அல்லது ஒருங்கிணைப்பாளரால் அகற்றப்படலாம். குடும்பப் பகிர்வு அம்சத்தை ஆஃப் செய்வதன் மூலம் குடும்ப ஒருங்கிணைப்பாளர் குடும்பக் குழுவையும் கலைக்கலாம். ஒரு குடும்ப உறுப்பினர் வெளியேறும்போது அல்லது அகற்றப்படும்போது, பகிர்ந்த சந்தாக்கள் மற்றும் பிற உறுப்பினர்கள் வாங்கிய உள்ளடக்கத்திற்கான அணுகலை அவர் உடனடியாக இழந்துவிடுவார், அவரின் உள்ளடக்கமும் பிற உறுப்பினர்களுக்குக் கிடைக்காது.

சிறார்களும் பதின்ம வயதினர்களும் (சில நாடுகள் அல்லது வட்டாரங்களில்) ஒரு குடும்பக் குழுவின் அங்கமாக இருப்பார்கள். குடும்பக் குழுவில் இருந்து ஒரு பிள்ளையை நீக்க, மற்றொரு குடும்பக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் குடும்ப அமைப்புகளில் உள்ள “நேரில் அழை” மூலம் தனது குடும்பக் குழுவில் இணைய அந்தப் பிள்ளையை அழைக்க வேண்டும். சில சமயங்களில் சிறாரைத் தங்கள் குடும்பக் குழுவில் சேர அழைக்கும் ஒருங்கிணைப்பாளர், கூடுதல் வயது உறுதிப்படுத்தல் தகவல்கள் மூலம் தான் ஒரு வயது வந்தவர் என்பதையும், சிறார் மாற்றப்படுவதற்கு முன், சிறார் சார்பாகச் செயல்பட தனக்கு அதிகாரம் உள்ளது என்பதையும் உறுதிசெய்ய வேண்டும். பிள்ளையின் நடப்புக் குடும்ப ஒருங்கிணைப்பாளர் இந்த மாற்றத்திற்கு ஒப்புதலளிக்க வேண்டும். இந்தச் செயல்முறை நிறைவடைந்ததும், மாற்றப்பட்ட பிள்ளை இதற்கு முன்பு வேறொரு குடும்பக் குழுவில் இருந்தார் என்ற தகவலை Apple பராமரிக்காது. மாற்றாக, குடும்ப ஒருங்கிணைப்பாளர் அந்தப் பிள்ளையின் Apple கணக்கை நீக்கலாம். பிள்ளையை மற்றொரு குடும்பக் குழுவிற்கு மாற்றுதல் மற்றும் பிள்ளையின் கணக்கை நீக்குதல் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, support.apple.com/102634 இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.

உங்களுடனான தகவல்தொடர்புகள்

குடும்பப் பகிர்வின் வழியாக கிடைக்கக்கூடிய தயாரிப்புகள், சேவைகள், சலுகைகள் மற்றும் பிற நன்மைகள் பற்றிய தகவல்களைப் பயனருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் அனுப்புவதற்காகப் பயனரின் குடும்பக் குழு பற்றிய விவரங்களை Apple பயன்படுத்தக்கூடும், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, குழுவில் இணைவதற்கான அழைப்பு நிலுவையில் உள்ளதா என்ற விவரம் போன்றவையும் இதில் அடங்கும்.

குடும்ப உறுப்பினர்கள் மார்க்கெட்டிங் மின்னஞ்சல்களைப் பெற ஒப்புதலளித்தால், இந்தத் தகவல்கள் மின்னஞ்சல் வழியாக அவர்களுக்கு அனுப்பப்படலாம். account.apple.com இணையதளத்திற்குச் சென்று அல்லது தங்கள் iOS அல்லது iPadOS சாதனத்தில் அமைப்புகள் > [உங்கள் பெயர்] > தனிப்பட்ட தகவல்கள் > “தகவல்தொடர்பு முன்னுரிமைகள்” என்பதற்குச் சென்று தங்களின் மின்னஞ்சல் முன்னுரிமைகளை அவர்கள் மாற்றிக்கொள்ளலாம் மற்றும் இந்த மின்னஞ்சல்களைப் பெறுவதற்கான ஒப்புதலைத் திரும்பப் பெறலாம். இந்தத் தகவல்களைத் தொடர்புடைய Apple தயாரிப்பு அல்லது சேவையில் இருந்து Push அறிவிப்புகளாகவும் குடும்ப உறுப்பினர்கள் பெறலாம். அறிவிப்பு முன்னுரிமைகளை மாற்ற அல்லது அறிவிப்புகளைப் பெறுவதற்கான ஒப்புதலைத் திரும்பப் பெற உங்கள் iOS அல்லது iPadOS சாதனத்தில், அமைப்புகள் > அறிவிப்புகள் என்பதற்குச் செல்லுங்கள்.

குடும்ப உறுப்பினர் நிலை மற்றும் பொறுப்பு, பகிர்ந்த வாங்குதல்கள் மற்றும் சந்தாக்களை அணுகும் திறன், பெற்றோர் கட்டுப்பாடுகள் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி மின்னஞ்சல் அல்லது Push அறிவிப்பு மூலம் தகவல்களை அனுப்புவதற்காகப் பயனர் மற்றும் அவரது குடும்பக் குழு பற்றிய விவரங்களையும் Apple பயன்படுத்தக்கூடும். இதில் அவரது பெயர், வயது, பொறுப்பு, வாங்குதல்கள், சந்தாக்கள் போன்றவையும் அடங்கும். எடுத்துக்காட்டாக, குடும்பக் குழுவில் பயனர் இணையும்போது, புதிய உறுப்பினரால் பகிரப்படும் வாங்குதல்கள் மற்றும் சந்தாக்களை அணுகும் திறன் பற்றி ஏற்கெனவே உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்படும். வயதுவந்த குடும்ப உறுப்பினரைப் பெற்றோர்/பாதுகாவலராக ஒருங்கிணைப்பாளர் நியமித்தால், அந்த வயதுவந்த பயனரால் பெற்றோர் கட்டுப்பாடுகளை நிர்வகிக்க முடியும் என்ற தகவல் குடும்பக் குழுவில் உள்ள குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்குத் தெரிவிக்கப்படும்.

தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்குப் பொருந்தக்கூடிய அடிப்படைச் சட்டங்கள்

பொதுவாக Apple உடனான குடும்ப உறுப்பினர்களின் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்காகவும், சேவைகளை வழங்கத் தேவைப்படும் அளவிற்கும், எங்கள் சட்டரீதியான கடமைகளுக்கு இணங்குவதற்காகவும் மேலே விவரிக்கப்பட்டபடி குடும்பப் பகிர்வில் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்குகிறோம். ஒப்புதல் என்பது சட்டரீதியான அடிப்படையாக அமையும் இடங்களில், பொருந்தும் உள்ளூர் சட்டங்களின் அடிப்படையில் அதைப் பெற முயல்கிறோம்.

பொருந்தும் உள்ளூர்ச் சட்டங்கள் குறிப்பிடும் இடங்களில் எங்களின் உண்மையான நோக்கங்கள் அல்லது மூன்றாம் தரப்பினரின் நோக்கங்களுக்காகத் தேவைப்படும்போது தனிப்பட்ட தரவின் பின்வரும் வகைகளை நாங்கள் செயலாக்குகிறோம், இதில் பின்வருவன பற்றிய தகவல்கள் அடங்கும்:

  • பயனர்களின் Apple கணக்குத் தகவல்கள் (அவர்களது பெயர், அனைத்து Apple சேவைகளிலும் உள்நுழைவதற்குப் பயன்படுத்தும் தகவல்களுடன் அனைத்துத் தொடர்புகள், பேமெண்ட்கள், நம்பகமான ஃபோன் எண்கள் மற்றும் பாதுகாப்புக் கேள்விகள் போன்ற பாதுகாப்பு விவரங்களும் இதில் அடங்கும்)
  • குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான Apple தயாரிப்புகள், Apple சேவைகளுக்கான குடும்ப உறுப்பினர்களின் சந்தாக்கள், அவர்களின் வாங்குதல்கள் மற்றும் பதிவிறக்கங்கள்
  • பயனர்களின் குடும்பக் குழு, அவர்களது குடும்பக் குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை உட்பட
  • பயனர்களின் சாதனங்கள், அவர்களது சாதனங்களின் பெயர், வரிசை எண் மற்றும் பிற வன்பொருள் அடையாளத் தகவல்களும் இதில் அடங்கும்
  • பேமெண்ட் விவரங்கள் (கணக்கு எண்கள் மற்றும் காலாவதித் தேதிகள், பில்லிங் மற்றும் ஷிப்பிங் முகவரிகள் மற்றும் கிஃப்ட் கார்டை ரிடீம் செய்வது குறித்த தகவல்களும் இதில் அடங்கும்)

நியாயமான நலன்கள் என்பதில் இவையும் அடங்கும்:

  • குடும்ப உறுப்பினர்களுக்குச் சிறந்த சேவையையும் உதவிகளையும் வழங்குதல்
  • குடும்பப் பகிர்வு மற்றும் அவர்கள் விரும்பக்கூடிய தொடர்புடைய பிற Apple தயாரிப்புகள், சேவைகள் மற்றும் சலுகைகள் தொடர்பான தகவல்களை அனுப்புதல்
  • மோசடி மற்றும் பிற தீங்கிழைக்கும் செயல்பாட்டைத் தடுத்தல்

Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.

2026-05-11