“இடம் அறி” & தனியுரிமை
“இடம் அறி” அம்சம் உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
![]()
- உங்கள் Apple கணக்கு மூலம் iCloudஇல் உள்நுழைந்தால், இடம் அறி நெட்வொர்க்கில் பங்கேற்பது உட்பட குறிப்பிட்ட இடம் அறி அம்சங்கள் ஆதரிக்கப்படும் சாதனங்களில் செயல்படுத்தப்படும்.
- “இடம் அறி” அம்சம் செயல்படுத்தப்பட்ட சாதனங்கள் மற்றும் ஆதரிக்கப்படும் ஆக்சஸரிகளைக் கண்டறிய உங்களுக்கு உதவுவதற்காக உங்கள் சாதனம் அல்லது ஆக்சஸரியின் இருப்பிடமும், உங்கள் சாதனம் மற்றும் உங்கள் கணக்கு பற்றிய தகவல்களும் பயன்படுத்தப்படக்கூடும்.
- “இடம் அறி” நெட்வொர்க் முழுமையான என்கிரிப்ஷனைப் பயன்படுத்துகிறது, எனவே ஏதேனும் ஆஃப்லைன் சாதனம் அல்லது அறிக்கையளிக்கும் சாதனத்தின் இருப்பிடத்தை Appleஆல் பார்க்க முடியாது.
“இடம் அறி” அம்சம் செயல்படுத்தப்பட்ட உங்கள் iPhone, iPad, iPod touch, Apple Watch, Apple Vision Pro அல்லது Mac சாதனம் தொலைந்துவிட்டாலோ நீங்கள் அதை எங்கேனும் மறந்து வைத்துவிட்டாலோ, மேப்பில் உங்கள் சாதனத்தைக் கண்டறிய “இடம் அறி” அம்சம் உதவுகிறது. அத்துடன், நீங்கள் கண்டறிய முயலும் சாதனத்தில் ஒலியை பிளே செய்ய, தொலைவிலிருந்தே சாதனத்தை லாக் செய்ய, சாதனத்தில் ஒரு மெசேஜைக் காட்ட அல்லது தொலைவிலிருந்தே தரவுகளை அழிக்க “இடம் அறி” அம்சம் உங்களுக்கு உதவுகிறது. ஆதரிக்கப்படும் ஆக்சஸரிகளைக் கண்டறியவும் ஆக்சஸரிகளில் ஒலியை பிளே செய்யவும் “இடம் அறி” அம்சம் உங்களுக்கு உதவலாம்.
உங்கள் சாதனத்தில் நீங்கள் உள்நுழைந்து iCloudஐச் செயல்படுத்தும்போது, “இடம் அறி” செயலியில் குறிப்பிட்ட அம்சங்கள் தானாகவே செயல்படுத்தப்படும். இடம் அறி நெட்வொர்க்கில் பங்கேற்றல் (கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி, தொலைந்த சாதனங்கள் அல்லது இணக்கமான ஐட்டங்களைக் கண்டறிய உதவும் Apple சாதனங்களின் கிரவுடு சோர்ஸ் செய்யப்பட்ட நெட்வொர்க்), உங்கள் சாதனத்தில் ஒலியை பிளே செய்தல், தொலைவிலிருந்தே லாக் செய்தல் அல்லது மெசேஜைக் காட்டுதல், தொலைவிலிருந்தே தரவுகளை அழித்தல் போன்ற அம்சங்கள் இதில் அடங்கும். ஆதரிக்கப்படும் சாதனங்கள் மற்றும் ஐட்டங்களிலிருந்து வெகு தொலைவில் நீங்கள் இருந்தாலும் அறிவிப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் iPhone, iPad, iPod touch, Apple Watch, Apple Vision Pro மற்றும் குறிப்பிட்ட Mac கம்ப்யூட்டர்கள் ஆக்டிவேஷன் லாக்கின் மூலம் பாதுகாக்கப்படும், உங்கள் பாஸ்வேர்டு இல்லாமல் அவற்றின் தரவுகளை அழிக்கவோ மீண்டும் செயல்படுத்தவோ முடியாது. மேலும் தகவல்களுக்கு, support.apple.com/108794 அல்லது support.apple.com/102541 இணையதளத்தைப் பார்வையிடுங்கள். உங்கள் iPhoneஇல் “இடம் அறி” அம்சத்தைச் செயல்படுத்தினால் அதனுடன் இணைக்கப்பட்ட Apple Watch சாதனத்திலும் அது செயல்படுத்தப்படும். நீங்கள் “இடம் அறி” அம்சத்தைத் தனியாக Apple Watchக்கும் செயல்படுத்தலாம், அப்படிச் செய்தால் அதனுடன் இணைக்கப்பட்ட iPhone சாதனத்திலும் அது செயல்படுத்தப்படும்.
நீங்கள் இருப்பிடச் சேவைகளைச் செயல்படுத்தியிருந்தால், “எனது இருப்பிடத்தைப் பகிர்” அம்சத்தைப் பயன்படுத்தி உங்கள் சாதனத்தின் தற்போதைய இருப்பிடத்தை நீங்கள் பகிரலாம். நீங்களும், உங்கள் நண்பரும் iOS 17 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் எனில், உங்கள் இருப்பிடத் தகவலை Apple அணுக முடியாது. iOS 17 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பைப் பயன்படுத்தாத நண்பருடன் இதற்கு முன்பு இருப்பிடத்தைப் பகிர்ந்துள்ளீர்கள் எனில், நீங்கள் இருப்பிடத்தைப் பகிரும் நண்பர் தற்போது உங்கள் இருப்பிடத் தகவலைக் கோரினால், Apple உங்கள் இருப்பிடத்தைத் தகவலை அணுகக்கூடும். சேவையை வழங்குவதற்காக உங்கள் இருப்பிடம் 24 மணிநேரத்திற்குத் தக்கவைக்கப்பட்டு, பின்னர் நீக்கப்படும்.
நீங்கள் இருப்பிடச் சேவைகளைச் செயல்படுத்தியிருந்தால் மேப்பில் உங்கள் சாதனங்களைக் கண்டறிய “இடம் அறி” அம்சம் உங்களுக்கு உதவலாம். “கடைசி இருப்பிடத்தை அனுப்பு” அம்சத்தை நீங்கள் செயல்படுத்தினால், உங்கள் சாதனத்தின் பேட்டரி மிகக் குறைந்த அளவை எட்டும்போது உங்கள் சாதனம் கடைசியாக இருந்த இருப்பிடம் தானாகவே Appleக்கு அனுப்பப்படும்.
இடம் அறி அம்சம் “இடம் அறி” நெட்வொர்க்கைப் பயன்படுத்தி சாதனங்கள் இணையத்துடன் இணைக்கப்படாவிட்டாலும் அவற்றைக் கண்டறிய உங்களுக்கு உதவுகிறது, ஆதரிக்கப்படும் குறிப்பிட்ட சாதனங்கள் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும் அல்லது அதிலுள்ள தரவுகள் அழிக்கப்பட்டிருந்தாலும் கூட இந்த அம்சத்தின் மூலம் அவற்றைக் கண்டறியலாம். “இடம் அறி” நெட்வொர்க்கில் உள்ள சாதனங்கள் Bluetooth வயர்லெஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொலைந்துபோன சாதனங்கள் அல்லது அருகிலுள்ள இணக்கமான ஐட்டங்களை (AirTagகள் மற்றும் Apple கணக்கில் பதிவுசெய்யப்பட்ட இணக்கமான மூன்றாம் தரப்புத் தயாரிப்புகள் உட்பட) கண்டறிந்து, அவற்றின் தோராயமான இருப்பிடத்தை உரிமையாளர்களுக்குத் தெரிவிக்கிறது. சாதனம் ஆஃப் செய்யப்பட்டால் அல்லது அதிலுள்ள தரவுகள் அழிக்கப்பட்டால், அந்த இருப்பிடம் உரிமையாளரின் குடும்பப் பகிர்வுக் குழு உறுப்பினர்களுக்கும் காட்டப்படும் (இருப்பிடத்தைப் பகிரத் தேர்வுசெய்துள்ள உறுப்பினர்களுக்கு மட்டும்). இது முழுமையாக என்கிரிப்ட் செய்யப்பட்டுள்ளது, எனவே ஏதேனும் ஆஃப்லைன் சாதனம் அல்லது அறிக்கையளிக்கும் சாதனத்தின் இருப்பிடத்தை Appleஆல் பார்க்க முடியாது. உங்கள் சாதனம் “இடம் அறி” நெட்வொர்க்கில் பங்கேற்கும்போது, அதன் இருப்பிடத்தை நெட்வொர்க் கண்டறியலாம், தவறவிட்ட பிற சாதனங்களைக் கண்டறிய அடையாளத்தை வெளிப்படுத்தாமலே உங்கள் சாதனம் உதவலாம். உங்கள் iOS அல்லது iPadOS சாதனம் “இடம் அறி” நெட்வொர்க்கில் பங்கேற்க வேண்டாம் என நீங்கள் நினைத்தால், அமைப்புகள் > [உங்கள் பெயர்] > இடம் அறி > “எனது [சாதனம்]ஐக் கண்டறி” என்பதற்குச் சென்று “இடம் அறி நெட்வொர்க்” என்பதைத் தட்டி அதை முடக்கலாம். “இடம் அறி” நெட்வொர்க்கில் உங்கள் Mac பங்கேற்க வேண்டாம் என நீங்கள் நினைத்தால், சிஸ்டம் அமைப்புகள் > [உங்கள் பெயர்] > iCloud என்பதற்குச் சென்று, “iCloudஇல் சேமிக்கப்பட்டவை” என்பதற்குக் கீழே உள்ள “அனைத்தையும் காட்டு” > “எனது Macஐக் கண்டறி” என்பதை கிளிக் செய்து, “இடம் அறி நெட்வொர்க்” என்பதற்கு அடுத்துள்ள “ஆஃப்” என்பதை கிளிக் செய்து அதை ஆஃப் செய்யலாம். AirTagகள் மற்றும் இணக்கமான மூன்றாம் தரப்புத் தயாரிப்புகள் குறித்த (அந்தத் தயாரிப்புகளை “இடம் அறி” நெட்வொர்க்கில் சேர்த்தல், உங்கள் Apple கணக்கில் பதிவுசெய்தல் போன்றவை உள்ளிட்ட) கூடுதல் தகவல்களுக்கு, support.apple.com/101602 இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.
“இடம் அறி” மற்றும் “ஆக்டிவேஷன் லாக்” அம்சங்களை நீங்கள் ஆஃப் செய்ய, உங்கள் iOS அல்லது iPadOS சாதனத்தில், அமைப்புகள் > [உங்கள் பெயர்] > இடம் அறி > “எனது [சாதனம்]ஐக் கண்டறி” என்பதற்குச் சென்று, “எனது iPhoneஐக் கண்டறி” அல்லது “எனது iPadஐக் கண்டறி” என்பதைத் தட்டலாம் அல்லது Mac சாதனம் எனில் சிஸ்டம் அமைப்புகள் > [உங்கள் பெயர்] > iCloud என்பதற்குச் சென்று “iCloudஇல் சேமிக்கப்பட்டுள்ளவை” என்ற பிரிவில் அனைத்தையும் காட்டு > எனது Macஐக் கண்டறி என்பதை கிளிக் செய்து “எனது Macஐக் கண்டறி” விருப்பத்திற்கு அருகிலுள்ள “ஆஃப் செய்” என்பதை கிளிக் செய்யலாம்.
ஆதரிக்கப்படும் சாதனங்கள் மற்றும் ஐட்டங்களிலிருந்து வெகு தொலைவில் இருக்கும்போது அறிவிப்புகளைப் பெறும் விருப்பத்தை நீங்கள் தேர்வுசெய்தால், உங்கள் வீடு அல்லது பணியிடம் போன்ற உங்களுக்கு அறிவிப்புகள் வழங்கப்படாத இருப்பிடங்களை உங்கள் சாதனம் பரிந்துரைக்கும். இந்த இருப்பிடங்கள் Appleஆல் படிக்க முடியாத வகையில் சேமிக்கப்படும். உங்கள் iOS அல்லது iPadOS சாதனத்தில் உள்ள “இடம் அறி” செயலியில் “சாதனங்கள்” அல்லது “ஐட்டங்கள்” என்பதைத் தட்டி, சாதனம் அல்லது ஐட்டத்தைத் தேர்ந்தெடுத்து, “விட்டுச் சென்றால் தெரிவித்தல்” அம்சத்தைத் தட்டி அதை ஆஃப் செய்வதன் மூலம் சாதனத்தை விட்டுச் செல்லும்போது வழங்கப்படும் அறிவிப்புகளையும் ஆஃப் செய்யலாம். Macஇல் உள்ள “இடம் அறி” செயலியில், “சாதனங்கள்” அல்லது “ஐட்டங்கள்” என்பதை கிளிக் செய்து, சாதனம் அல்லது ஐட்டத்தைத் தேர்ந்தெடுத்து, அந்தச் சாதனம் அல்லது ஐட்டத்தின் தகவல் பட்டனை கிளிக் செய்து, “விட்டுச் சென்றால் தெரிவித்தல்” அம்சத்தை ஆஃப் செய்யலாம்.
தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்குப் பொருந்தக்கூடிய சட்டரீதியான அடிப்படை
நீங்கள் “இடம் அறி” அம்சத்தைப் பயன்படுத்தினால் சேவைகளை வழங்கத் தேவைப்படும் அளவிற்கும், எங்கள் சட்டரீதியான கடமைகளுக்கு இணங்குவதற்காகவும் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்குகிறோம். ஒப்புதல் என்பது சட்டரீதியான அடிப்படையாக அமையும் இடங்களில், பொருந்தும் உள்ளூர் சட்டங்களின் அடிப்படையில் அதைப் பெற முயல்கிறோம்.
பொருந்தும் உள்ளூர் சட்டங்கள் குறிப்பிடும் இடங்களில், பின்வரும் காரணங்களுக்காக எங்களின் அல்லது மூன்றாம் தரப்புகளின் நியாயமான நலன்களின் நோக்கத்திற்காகத் தேவைப்படும் அளவிற்குத் தனிப்பட்ட தரவைச் செயலாக்குகிறோம்:
- உங்களுக்குச் சேவை வழங்குதல்
- உங்களுக்காகவும் பிறருக்காகவும் சேவையை மேம்படுத்தி உகந்ததாக்க உதவுதல்
- மோசடி மற்றும் பிற தீங்கிழைக்கும் செயல்பாட்டைத் தடுத்தல்
பயன்படுத்தப்படும் தரவில் இவையும் அடங்கும்:
- உங்கள் கணக்கு பற்றிய விவரங்கள், உங்கள் Apple கணக்கு உட்பட
- உங்கள் சாதனங்கள் பற்றிய தகவல்கள் (இதில் சாதனப் பதிப்பு, இருப்பிடம் போன்றவையும் அடங்கும்)
- உங்கள் AirTagகள், AirPods, “இடம் அறி” நெட்வொர்க் ஆக்சஸரிகள் பற்றிய தரவுகள் (அவற்றின் வரிசை எண் உட்பட)
- உங்கள் சாதனம் அல்லது தனிப்பட்ட ஐட்டத்தின் இருப்பிடத்தை நீங்கள் பகிர்ந்தால், யாருடன் பகிரப்பட்டது என்ற விவரம் (AirTag, AirPods, “இடம் அறி” நெட்வொர்க் ஆக்சஸரிகள் உட்பட)
- உங்கள் சாதனமோ உங்கள் நண்பரின் சாதனமோ iOS 17க்கு முந்தைய ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கினால், உங்கள் இருப்பிடம்
- “இடம் அறி” அம்சத்தை நீங்கள் பயன்படுத்துவது குறித்த தகவல்கள், இதில் AirTagகள், AirPods மற்றும் “இடம் அறி” நெட்வொர்க் ஆக்சஸரிகளை உங்கள் சாதனத்துடன் எப்போது இணைக்கிறீர்கள் என்ற தகவலும் அடங்கும்
Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.
2025-12-12