Freeform & தனியுரிமை
Freeform உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
![]()
- நீங்கள் Freeform செயலியைத் திறக்கும்போது செயல்திறன் குறித்த மொத்த அளவீடுகளைப் புரிந்துகொள்ளவும் வழங்கவும், அமர்வு நீளம், செயலிப் பதிப்பு, சாதன வகை, நாட்டுக் குறியீடு, சீரற்ற அடையாளத் தகவல்கள், ஆபரேட்டிங் சிஸ்டம், சந்தா குறித்த தகவல் ஆகியவற்றைப் பற்றிய புள்ளிவிவரங்களை Apple சேகரிக்கும்.
- Freeformஐ நீங்கள் பயன்படுத்துவது தொடர்பான தரவுகள் Freeform மற்றும் Apple Creator Studioஐ உருவாக்கவும், வழங்கவும், மேம்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. அவை உங்கள் Apple கணக்குடன் தொடர்புபடுத்தப்படாது. கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி இந்த நோக்கங்களுக்காக குறிப்பிட்ட பகுப்பாய்வுத் தரவு பயன்படுத்தப்படுவதில் இருந்து நீங்கள் விலகிக் கொள்ளலாம்.
- நீங்கள் Apple Creator Studioக்குச் சந்தா சேர்ந்தால், உங்களுக்குச் சேவையை வழங்கவும் சந்தைப்படுத்தல் தகவல்தொடர்புகளையும் புஷ் அறிவிப்புகளையும் அனுப்பவும் உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்ட உங்கள் சந்தா நிலை குறித்த தகவல்களைப் பயன்படுத்துவோம்.
Freeformஐத் திறத்தல்
Freeformஐத் திறந்து, Apple Creator Studio சேவைகளை ஆராயலாம் மற்றும் Freeform அம்சங்களைப் பார்க்கலாம். அமர்வு நீளம், செயலிப் பதிப்பு, சாதன வகை, நாட்டுக் குறியீடு, சீரற்ற அடையாளத் தகவல்கள், ஆபரேட்டிங் சிஸ்டம், சந்தா குறித்த தகவல் ஆகியவற்றைப் பற்றிய புள்ளிவிவரங்களை Apple சேகரிக்கும். இந்தத் தகவல்கள், சீரற்ற அடையாளத் தகவலுடன் சேமிக்கப்படும் மற்றும் உங்கள் Apple கணக்குடன் தொடர்புபடுத்தப்படாது. Freeformஇன் செயல்திறனைப் புரிந்துகொண்டு அளவிட அறிக்கைகளை வழங்குவதற்காக இது தொகுக்கப்படுகிறது.
பகுப்பாய்வுச் சேகரிப்பு
நீங்கள் உருவாக்கும் போர்டுகளின் எண்ணிக்கை மற்றும் வகைகள் குறித்த சுருக்கத் தகவல், வன்பொருள் மற்றும் ஆபரேட்டிங் சிஸ்ட விவரக்குறிப்புகள் குறித்த விவரங்கள், செயல்திறன் புள்ளிவிவரங்கள், உங்கள் சாதனங்கள் மற்றும் செயலிகளை நீங்கள் பயன்படுத்தும் விதம் குறித்த தரவு, வெளிப்புற இணைப்பைப் பின்தொடர்வது அல்லது வேறு Apple தயாரிப்புக்கான இணைப்பு மூலம் செயலியில் இருந்து வெளியேறுவது போன்ற செயல்கள் மூலம் நீங்கள் சந்தா பெறுவதற்கான காரணங்கள், Freeformஇல் நீங்கள் பார்க்கும் அல்லது பயன்படுத்தும் அம்சங்கள் மற்றும் உள்ளடக்கம், அறிவிப்புகளை நீங்கள் பயன்படுத்தும் விதம், உங்கள் மொழி அமைப்புகள் மற்றும் பிற பழுதறிதல் மற்றும் செயல்பாடு சார்ந்த தரவு உள்ளிட்ட Freeformஐ நீங்கள் பயன்படுத்துவது குறித்த பகுப்பாய்வுத் தகவல்களை Apple சேகரிக்கிறது. மின்னஞ்சல் அல்லது டிஜிட்டல் விளம்பரம் போன்ற மார்க்கெட்டிங் பிரச்சாரத்தின் இணைப்பின் மூலம் Apple Creator Studioஐ நீங்கள் அணுகினால், மார்க்கெட்டிங் பிரச்சாரம் குறித்த தகவல்களை Apple பதிவுசெய்யும்.
சேவையை உருவாக்குவதற்கும் வழங்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் இந்தத் தகவல்களை Apple பயன்படுத்துகிறது. மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்குப் பண்புக்கூறுகளை வழங்கவும், எங்கள் மார்க்கெட்டிங் பிரச்சாரங்களை மேம்படுத்தவும் மார்க்கெட்டிங் பிரச்சாரங்கள் குறித்த தகவல்களையும் Apple பயன்படுத்துகிறது. இந்தப் பகுப்பாய்வுத் தகவல் இந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதில் இருந்து நீங்கள் விலகிக் கொள்ளலாம். உங்கள் iOS மற்றும் iPadOS சாதனங்களில் இதைச் செய்ய, அமைப்புகள் > செயலிகள் > Freeform என்பதற்குச் சென்று “பகுப்பாய்வுத் தரவைப் பகிர்” என்பதைத் தட்டவும். உங்கள் Macஇல் உள்ள Freeformஇல், Freeform > தனியுரிமை & பகுப்பாய்வுகள் என்பதற்குச் சென்று “பகுப்பாய்வுத் தரவைப் பகிர்” என்பதைத் தேர்வுநீக்கவும்.
உங்கள் அடையாளத் தகவலை மீட்டமைத்தல்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் Apple Creator Studioக்கு மட்டுமேயான, மாறக்கூடிய, சீரற்ற அடையாளத் தகவல்களுடன் சேமிக்கப்படும். அவை உங்கள் Apple கணக்குடன் தொடர்புபடுத்தப்படாது. உங்கள் iOS மற்றும் iPadOS சாதனங்களில், அமைப்புகள் > செயலிகள் > Freeform என்பதற்குச் சென்று “அடையாளத் தகவலை மீட்டமை” என்பதைத் தட்டி அடையாளத் தகவல்களை மீட்டமைக்கலாம். உங்கள் Macஇல் உள்ள Freeformஇல், Freeform > தனியுரிமை & பகுப்பாய்வு என்பதற்குச் சென்று “அடையாளத் தகவலை மீட்டமை” என்பதை கிளிக் செய்யவும்.
Apple Creator Studio சந்தா
Apple Creator Studio சந்தாவை நீங்கள் வாங்கினால், அமைப்புகளில் அணுகி மாற்றக்கூடிய கணக்கு மற்றும் பேமெண்ட் தகவல்கள், இதுவரை நீங்கள் வாங்கியவை போன்ற உங்கள் வாங்குதல் பரிவர்த்தனைகளைச் செயலாக்கத் தேவையான தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துவோம். Apple கட்டணமில்லாப் பயன்பாடு அல்லது சிறப்புச் சலுகைக்கு நீங்கள் தகுதியானவரா என்பதைப் பார்க்க உங்கள் தனிப்பட்ட தரவையும் நாங்கள் பயன்படுத்தக்கூடும்.
Apple Creator Studioஇல் சந்தா சேர்ந்து பார்க்கக்கூடிய கூடுதல் உள்ளடக்கத்தை அணுகுவதற்கு உங்களுக்கு உரிமை உள்ளதா என்று பார்க்க, App Store மூலம் வாங்கிய Apple சேவைகளுக்கான செயலில் உள்ள சந்தாக்கள் குறித்த தகவல்களைப் பயன்படுத்துவோம்.
உங்கள் நிறுவனம் அல்லது கல்வி நிறுவனம் நிர்வகிக்கும் Apple கணக்கில் உள்நுழைந்திருக்கும்போது Freeform செயலியை அணுகினால், Apple Creator Studio சந்தா மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகள் கிடைக்காது. Apple சேகரிக்கும் தகவல்கள் மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி சீரற்ற அடையாளத் தகவல்களுடன் இணைக்கப்பட்டுச் சேமிக்கப்படும், உங்கள் நிர்வகிக்கப்படும் Apple கணக்குடன் இணைக்கப்படாது.
மூன்றாம் தரப்பினருக்கு உள்ளடக்கத்தை அனுப்புதல்
கிடைக்கும் இடங்களில் Apple Creator Studioஇல் OpenAI மூலம் இயங்கும் அம்சங்களைப் பயன்படுத்த நீங்கள் தேர்வுசெய்யலாம். இந்த அம்சங்கள் ஒவ்வொன்றும் அவை OpenAI மூலம் வழங்கப்படுகின்றன என்பதைக் காட்டும். இந்த அம்சங்களை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம். அவற்றைப் பயன்படுத்த OpenAI கணக்கு தேவையில்லை.
OpenAI மூலம் இயங்கும் அம்சத்தைப் பயன்படுத்தும்போது, OpenAIக்கு அனுப்ப வேண்டிய உள்ளடக்கத்தைத் தேர்ந்தெடுக்கலாம். உங்கள் கோரிக்கை மற்றும் போர்டின் உள்ளடக்கங்கள் போன்ற இணைப்புகள், கோரிக்கையுடன் தொடர்புடைய குறிப்பிட்ட சில தரவுகள் (உதாரணமாக, தற்போதைய நேர மண்டலம், நாடு, சாதன வகை, மொழி, கோரிக்கை அனுப்பும்போது பயன்படுத்தப்பட்ட அம்சம்) போன்றவை உங்கள் கோரிக்கைக்குப் பதிலளிக்கவும், துல்லியமான மற்றும் பொருத்தமான முடிவுகளை வழங்க OpenAIஐச் செயல்படுத்தவும் OpenAIக்கு அனுப்பப்படும்.
OpenAI மூலம் இயக்கப்படும் அம்சத்தைப் பயன்படுத்தும்போது, உங்கள் IP முகவரி OpenAIக்குக் காட்டப்படாது. உங்கள் இணைய இணைப்பின் IP முகவரியைப் புவியியல் வட்டாரத்துடன் பொருத்துவதன் மூலம் தோராயமாகக் கணிக்கப்படும் உங்களின் பொதுவான இருப்பிடம், மோசடியைத் தடுப்பதற்காகவும் பொருந்தக்கூடிய சட்டத்துடன் இணங்குவதற்காகவும் OpenAIஐச் செயல்படுத்துவது போன்ற நோக்கங்களுக்காக OpenAIக்கு வழங்கப்படும்.
உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள எந்தத் தகவலையும் OpenAI பெறாது. உங்கள் கோரிக்கையைப் பூர்த்திசெய்யும் நோக்கத்திற்காக மட்டுமே OpenAI உங்கள் தகவல்களைச் செயலாக்க வேண்டும். உங்கள் தகவல் அல்லது அது வழங்கக்கூடிய ஏதேனும் ஒரு பதில் சேமிக்கப்படக்கூடாது. பொருந்தக்கூடிய சட்டத்தின் தேவைக்கு ஏற்ப மட்டுமே தகவல் சேமிக்கப்படக்கூடும். OpenAI நிறுவனமும் அதன் மாடல்களுக்குப் பயிற்சி அளிக்க உங்கள் தகவல்களைப் பயன்படுத்தாது.
உங்களுடனான தகவல்தொடர்புகள்
Freeform மற்றும் நீங்கள் விரும்பக்கூடிய தொடர்புடைய பிற Apple தயாரிப்புகள், சேவைகள் மற்றும் சலுகைகள் பற்றிய தகவல்களை உங்களுக்கு அனுப்ப, உங்களுக்குச் சொந்தமான Apple தயாரிப்புகள், உங்கள் கணக்கில் பதிவுசெய்துள்ள சாதனங்கள், Apple சேவைகளுக்கான உங்கள் சந்தாக்கள் போன்ற உங்கள் கணக்கு பற்றிய தகவல்களை Apple பயன்படுத்தக்கூடும். சேவைச் சலுகைகளுக்கான தகுதியைச் சரிபார்க்க உங்கள் சாதன வரிசை எண் பயன்படுத்தப்படலாம். நீங்கள் குடும்பப் பகிர்வுக் குழுவில் இருந்தால், குடும்பப் பகிர்வின் வழியாக உங்களுக்குக் கிடைக்கக்கூடிய தயாரிப்புகள், சேவைகள் மற்றும் சலுகைகள் பற்றிய தகவல்களை Apple அனுப்பக்கூடும். நீங்கள் Apple Creator Studio சந்தாவை வாங்கினால், Apple Creator Studioஇல் கிடைக்கும் புதிய அம்சங்கள், உள்ளடக்கம், சலுகைகள் குறித்து மின்னஞ்சல்களையும் புஷ் அறிவிப்புகளையும் உங்களுக்கு நாங்கள் அனுப்பக்கூடும். account.apple.com இணையதளத்திற்குச் சென்று உங்கள் மின்னஞ்சல் முன்னுரிமைகளை மாற்றலாம் மற்றும் இந்த மின்னஞ்சல்களைப் பெறுவதற்கான ஒப்புதலைத் திரும்பப் பெறலாம். அறிவிப்பு முன்னுரிமைகளை மாற்ற உங்கள் iOS, iPadOS மற்றும் visionOS சாதனங்களில், அமைப்புகள் > அறிவிப்புகள் என்பதற்குச் செல்லவும். உங்கள் Macஇல், சிஸ்டம் அமைப்புகள் > அறிவிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்குப் பொருந்தக்கூடிய அடிப்படைச் சட்டங்கள்
Freeform மற்றும் உங்கள் Apple Creator Studio சந்தா தொடர்பான உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் பொதுவாக பொதுவாக Apple உடனான உங்கள் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்காகவும், சேவைகளை வழங்கத் தேவைப்படும் அளவிற்கும், எங்கள் சட்டரீதியான கடமைகளுக்கு இணங்குவதற்காகவும் செயலாக்குகிறோம். ஒப்புதல் என்பது சட்டரீதியான அடிப்படையாக அமையும் இடங்களில், பொருந்தும் உள்ளூர் சட்டங்களின் அடிப்படையில் அதைப் பெற முயல்கிறோம்.
பொருந்தும் உள்ளூர் சட்டங்கள் குறிப்பிடும் இடங்களில், பின்வரும் காரணங்களுக்காக எங்களின் அல்லது மூன்றாம் தரப்புகளின் நியாயமான நலன்களின் நோக்கத்திற்காகத் தேவைப்படும் அளவிற்குத் தனிப்பட்ட தரவைச் செயலாக்குகிறோம்:
- உங்களுக்கு Apple Creator Studioஐ வழங்குதல்
- சலுகைகளுக்கான தகுதிநிலையைச் சரிபார்த்தல், Apple Creator Studio மற்றும் நீங்கள் விரும்பக்கூடிய தொடர்புடைய பிற Apple தயாரிப்புகள், சேவைகள் மற்றும் சலுகைகள் பற்றிய தகவல்களை உங்களுக்கு அனுப்புதல்
- மோசடி மற்றும் பிற தீங்கிழைக்கும் செயல்பாட்டைத் தடுத்தல்
பயன்படுத்தப்படும் தரவில் இவையும் அடங்கும்:
- உங்கள் கணக்கு மற்றும் பேமெண்ட் தகவல் போன்ற, உங்கள் வாங்குதல் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தத் தேவையான தனிப்பட்ட தரவு
- App Store மூலம் வாங்கப்பட்ட Apple சேவைகளுக்கான உங்கள் செயலில் உள்ள சந்தாக்கள் பற்றிய தகவல்கள்
தக்கவைத்தல்
Freeform மற்றும் உங்கள் Apple Creator Studio சந்தா தொடர்பான தனிப்பட்ட தரவை வணிகத் தேவை, ஒப்பந்தக் கடமை அல்லது சட்டபூர்வத் தேவை உள்ளவரை மட்டுமே நாங்கள் தக்கவைப்போம். நீங்கள் உங்கள் கணக்கை மூடிய பின்னர் அல்லது Apple Creator Studioஇல் இருந்து சந்தா விலகிய பின்னரும் இதுவரையில் வாங்கிய சந்தாக்கள் போன்ற சில தகவல்கள் (உங்கள் சேமிக்கப்பட்ட கார்டு விவரங்கள் இல்லை) வணிகப் பதிவுகளாகச் சேமிக்கப்பட்டிருக்கக்கூடும். தக்கவைத்தல் காலத்தை மதிப்பிடும்போது, சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவைத் தக்கவைப்பது தேவையா என்று முதலில் கவனமாக ஆராய்கிறோம். தக்கவைத்தல் தேவை எனில், முடிந்த வரை சட்டப்படி அனுமதிக்கப்பட்ட குறுகிய காலத்திற்கு மட்டுமே தனிப்பட்ட தரவைத் தக்கவைக்க முயல்கிறோம்.
Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.
2026-03-30