Game Center & தனியுரிமை
Game Center உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
![]()
- லீடர்போர்டுகளில் பங்கேற்றல்; மல்டிபிளேயர் கேம்கள்; நண்பர்களைக் கண்டறிதல், பார்த்தல், சவால் விடுதல்; சாதனைகளைக் கண்காணித்தல் போன்ற கேம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட Game Center உங்களுக்கு உதவுகிறது.
- Game Centerஇல் உள்நுழைந்திருக்கும்போது Game Center வசதியுள்ள கேம்களை நீங்கள் விளையாடினால், நீங்கள் விளையாடும் கேம்கள், உங்கள் கேம் செயல்பாடு போன்ற தகவல்களை Apple சேகரிக்கும். உங்கள் அதிகபட்ச ஸ்கோர்கள், சாதனைகள், சவால்கள் போன்றவற்றைக் கண்காணிப்பதற்காகவும் உங்களுக்கும் பிறருக்கும் Game Centerஐ மேம்படுத்துவதற்காகவும் இந்தத் தகவல்கள் பயன்படுத்தப்படும்.
- உங்கள் Game Center நண்பர்களின் பட்டியல், நீங்கள் இணைந்து விளையாடும் பிளேயர்கள், எப்போது இணைந்து விளையாடுகிறீர்கள் என்பன போன்ற தகவல்களையும் Apple சேகரிக்கும். மல்டிபிளேயர் கேம்களில் நீங்கள் எளிதாக மீண்டும் இணைய உதவுவதற்காக, ஒவ்வொருவரும் மற்றவரின் அதிகபட்ச ஸ்கோர்களை விரைவாகப் பார்ப்பதற்காக, உங்களுக்கும் பிறருக்கும் Game Centerஐ மேம்படுத்துவதற்காக இந்தத் தகவல்கள் பயன்படுத்தப்படும்.
- உங்கள் Game Center புனைபெயர், அவதார், ஸ்கோர்கள், Arcade சந்தா நிலை ஆகியவற்றை Game Center பயனர்கள் அனைவராலும் பார்க்க முடியும். உங்கள் Game Center நண்பர்களுடன் அல்லது Game Center பயனர்கள் அனைவருடன் பிற Game Center செயல்பாட்டுத் தகவல்களையும் நீங்கள் பகிரலாம். இதில் நீங்கள் விளையாடிய கேம்கள், அடைந்த சாதனைகள் போன்றவை அடங்கும். இந்தத் தகவல்கள் Game Centerஇல் நீங்கள் பகிரும் நபர்களுக்கும் App Store, Apple Games, Apple Arcade போன்ற பிற Apple சேவைகளிலும் காட்டப்படும். உங்கள் Game Center நண்பர்களுக்கு உங்கள் பெயரும் காட்டப்படலாம்.
- தங்கள் Game Center புனைபெயரைத் தங்கள் தொடர்பு கார்டுடன் இணைத்துள்ள உங்கள் தொடர்புகளைப் பற்றிய அடையாளம் காண முடியாத தகவல்களை உங்களுக்கு நட்புப் பரிந்துரைகளை வழங்குவதற்காக Apple பயன்படுத்தும். இந்தப் பரிந்துரைகளுக்கு உதவுவதற்காகச் சாதனத்திலேயே செய்யப்படும் செயலாக்கத்தை Game Center பயன்படுத்துகிறது.
உங்கள் தகவலின் தனியுரிமையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது Appleஇல் உள்ள அனைவரின் முன்னுரிமையாகும். உங்கள் அனுபவத்தைச் சிறப்பாக்குவதற்காக எங்களுக்குத் தேவைப்படும் தரவை மட்டுமே நாங்கள் சேகரிக்க முயல்கிறோம் மற்றும் தரவைச் சேகரிக்கும்போது எதைச் சேகரிக்கிறோம், அது எங்களுக்கு ஏன் தேவைப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்வது முக்கியம் என நினைக்கிறோம், இதன்மூலம் தகவலறிந்த முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். அனைத்து Apple தயாரிப்புகளையும் சேவைகளையும் போல இந்தக் கொள்கைகளைக் கருத்தில் கொண்டு Game Center வடிவமைக்கப்பட்டுள்ளது.
Game Center சேவையை வழங்குதல் மற்றும் மேம்படுத்துதல்
Game Centerஇல் உள்நுழைந்ததும், லீடர்போர்டுகளில் பங்கேற்றல், மல்டிபிளேயர் கேம்கள், நண்பர்களைக் கண்டறிதல், பார்த்தல், சவால் விடுதல், சாதனைகளைக் கண்காணித்தல் போன்ற கேம் தொடர்பான செயல்பாடுகளில் நீங்கள் ஈடுபடலாம். நீங்கள் Game Centerஐப் பயன்படுத்தும்போது, நீங்கள் விளையாடும் கேம்கள், அவற்றை எப்போது விளையாடுகிறீர்கள், யாருடன் விளையாடுகிறீர்கள், உங்கள் ஸ்கோர்கள் மற்றும் சாதனைகள், நீங்கள் அனுப்பும் மற்றும் பெறும் சவால்கள் தொடர்பான தகவல்கள் போன்றவற்றை Apple சேகரிக்கும். மல்டிபிளேயர் கேம்களில் எளிதாக மீண்டும் இணையவும், ஒருவர் மற்றொருவரின் அதிகபட்ச ஸ்கோர்களை விரைவாகப் பார்க்கவும் உங்களுக்கு உதவ, உங்கள் Game Center நண்பர்களின் பட்டியல், நீங்கள் இணைந்து விளையாடும் பிளேயர்கள், எப்போது இணைந்து விளையாடுகிறீர்கள் என்பன போன்ற தகவல்களையும் Apple சேகரிக்கும். இந்தத் தகவல் உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது.
நீங்கள் பார்ப்பது, கிளிக் செய்வது உள்ளிட்ட Game Center அம்சங்களை நீங்கள் பயன்படுத்தும் விதம், கேம் கன்ட்ரோலரைப் பயன்படுத்துகிறீர்களா என்ற விவரம், கன்ட்ரோலர் பற்றிய விவரங்கள், அமைப்புகளில் இருந்து நீங்கள் அணுகும் அம்சங்கள் (உங்கள் நட்புக் கோரிக்கைகள் போன்றவை) பற்றிய தகவல்கள் போன்றவற்றை Apple சேகரிக்கிறது. நீங்கள் Game Centerஇல் உள்நுழைந்து, கட்டுப்பாட்டு மையம் வழியாக கேம் ஓவர்லே மற்றும் கேம் கட்டுப்பாடுகளை அணுகும்போது, ஓவர்லே மற்றும் கட்டுப்பாடுகளுடனான உங்கள் பயன்பாடுகளை Apple சேகரிக்கும். இந்தத் தகவல்கள் ரேண்டம் அடையாளத் தகவலுடன் இணைக்கப்பட்டுச் சேமிக்கப்படும், உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்படாது. இந்த அடையாளத் தகவலை மீட்டமைக்க உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில், அமைப்புகள் > Game Center > “அடையாளத் தகவலை மீட்டமை” என்பதைத் தட்டவும். Mac சாதனத்தில், சிஸ்டம் அமைப்புகள் > Game Center > “அடையாளத் தகவலை மீட்டமை” என்பதற்குச் செல்லவும்.
உங்களுக்கும் பிறருக்கும் ஏற்ற வகையில் Game Centerஐ மேம்படுத்தி உகந்ததாக்குவதற்காகவும், Game Center அம்சங்களைப் பயன்படுத்தும் பிற Apple சேவைகளுக்காகவும் இந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ள தகவல்களை நீங்கள் பயன்படுத்தலாம்.
பிற பிளேயர்கள் மற்றும் நண்பர்களுடன் விளையாடுதல்
உலகளாவிய லீடர்போர்டுகளைக் கொண்ட கேம்களை விளையாடும்போது உங்கள் Game Center புனைபெயர், அவதார், ஸ்கோர்கள், Arcade சந்தா நிலை ஆகியவற்றை Game Center பயனர்கள் அனைவராலும் பார்க்க முடியும். உங்கள் Game Center நண்பர்களுடன் அல்லது Game Center பயனர்கள் அனைவருடன் பிற Game Center செயல்பாட்டுத் தகவல்களையும் நீங்கள் பகிரலாம். இந்தத் தகவல்களில் நீங்கள் விளையாடிய கேம்கள், உங்கள் சாதனைகள் போன்றவையும் அடங்கும். இது Game Centerஇல் நீங்கள் பகிரும் நபர்களுக்கும் App Store, Apple Arcade போன்ற பிற Apple சேவைகளிலும் காட்டப்படும். பிள்ளைகளின் Game Center செயல்பாட்டுத் தகவல்களை அவர்களது Game Center நண்பர்களுடன் மட்டுமே பகிர முடியும். உங்கள் செயல்பாட்டுப் பகிர்வு நிலையை, iOS, iPadOS அல்லது visionOS சாதனங்களில் அமைப்புகள் > Game Center > செயல்பாட்டுப் பகிர்வு என்பதற்குச் சென்றும், Mac சாதனத்தில் சிஸ்டம் அமைப்புகள் > Game Center > செயல்பாட்டுப் பகிர்வு என்பதற்குச் சென்றும் நீங்கள் பார்க்கலாம் மற்றும் மாற்றலாம்.
உங்கள் Game Center புனைபெயர் உங்கள் தொடர்பு கார்டுடன் இணைக்கப்படும்போது, உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியையும் ஃபோன் எண்ணையும் Game Center பயன்படுத்தும். இதன்மூலம் உங்கள் Game Center நண்பர்கள் தங்கள் தொடர்புகள் செயலியில் சேமித்துள்ள பெயரின் அடிப்படையில் உங்களை எளிதில் கண்டறிய முடியும். உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில் அமைப்புகள் > Game Center > “நண்பர்கள் கண்டறிய அனுமதித்தல்” என்பதற்குச் சென்றும், Mac சாதனத்தில் சிஸ்டம் அமைப்புகள் > Game Center > “நண்பர்கள் கண்டறிய அனுமதித்தல்” என்பதற்குச் சென்றும் இந்த அமைப்பை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.
மல்டிபிளேயர் செயல்பாட்டை ஆதரிக்கும் கேமை நீங்கள் விளையாடும்போது, ஒரே Wi-Fi நெட்வொர்க் அல்லது லோக்கல் ஏரியா நெட்வொர்க்கில் இருந்து அல்லது Bluetooth வரம்புக்குள் இருந்து அதே கேமை விளையாடும் பிற Game Center பயனர்களால் நீங்கள் அருகிலுள்ளீர்கள் என்பதையும் உங்கள் புனைபெயர் மற்றும் அவதாரையும் பார்க்க முடியும். உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில், அமைப்புகள் > Game Center என்பதற்குச் சென்று “அருகிலுள்ள பிளேயர்கள்” என்பதைத் தட்டி ஆஃப் செய்து இந்த அம்சத்தை நீங்கள் முடக்கலாம். Mac சாதனத்தில், சிஸ்டம் அமைப்புகள் > Game Center என்பதற்குச் சென்று “அருகிலுள்ள பிளேயர்கள்” என்பதை கிளிக் செய்து ஆஃப் செய்யலாம். tvOSஇல், அமைப்புகள் > சுயவிவரங்கள் மற்றும் கணக்குகள் > [பயனர் பெயர்] > Game Center என்பதற்குச் சென்று, “அருகிலுள்ள பிளேயர்கள்” என்பதை ஆஃப் செய்யுங்கள்.
தங்கள் Game Center புனைபெயரைத் தங்கள் தொடர்பு கார்டுடன் இணைத்துள்ள உங்கள் தொடர்புகளைப் பற்றிய அடையாளம் காண முடியாத தகவல்களை Apple பெறுகிறது. இந்தத் தகவல்கள் Game Centerஇல் உங்களுக்குக் காட்டப்படும் நட்புப் பரிந்துரைகளை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும், இந்தத் தகவல்களை Apple சேமிக்காது. இந்தப் பரிந்துரைகளுக்கு உதவுவதற்காகச் சாதனத்திலேயே செய்யப்படும் செயலாக்கத்தை Game Center பயன்படுத்துகிறது.
நீங்கள் iOS 10 பதிப்பை நிறுவுவதற்கு முன்பு நண்பராகியிருந்தால், அந்த நண்பர்களால் உங்களின் உண்மையான பெயரைப் பார்க்க முடியும். நீங்கள் iOS 10 பதிப்பை நிறுவிய பிறகு நண்பராகியிருந்தால், அந்த நண்பர்களுக்கு உங்கள் புனைபெயர் மட்டுமே காட்டப்படும். பிள்ளையின் கணக்குகள் நண்பர்களுக்குத் தங்களின் உண்மையான பெயர்களை ஒருபோதும் காட்டாது, இது iOS 10க்கு முந்தைய பதிப்புகளுக்கும் பொருந்தும்.
Game Center மற்றும் Apple Games
Apple Games அனுபவத்தில் Game Center ஒரு முக்கியமான பகுதியாகும். Apple Games செயலியைப் பயன்படுத்த நீங்கள் Game Centerஇல் உள்நுழைந்திருக்க வேண்டும். கேம்ஸ் செயலியை நீங்கள் பயன்படுத்தாத போதும் உங்கள் புனைபெயர், அவதார், உங்கள் Game Center செயல்பாடுகள் ஆகியவற்றைக் கொண்ட உங்கள் Game Center சுயவிவரம் (இதைப் பகிர நீங்கள் தேர்வுசெய்திருக்கும்பட்சத்தில்) Apple Games செயலியில் கிடைக்கும். நீங்கள் Apple Games செயலியைப் பயன்படுத்தும்போது, மேலேயுள்ள “Game Center சேவையை வழங்குதல் மற்றும் மேம்படுத்துதல்” மற்றும் “பிற பிளேயர்கள் மற்றும் நண்பர்களுடன் விளையாடுதல்” பிரிவுகளில் குறிப்பிட்டுள்ளபடி உங்கள் கேமிங் செயல்பாடுகள், நண்பர்கள், சவால்கள், சாதனைகள் ஆகியவை Apple Games செயலியை வழங்கவும் தனிப்பயனாக்கவும், கேம்ஸ் மற்றும் நண்பர்களை நீங்கள் கண்டறியவும், Game Center மற்றும் Apple Gamesஐ உகந்ததாக்கவும் மேம்படுத்தவும் மற்றும் உங்களுக்கு அறிவிப்புகளை அனுப்பவும் Apple Games செயலியால் பயன்படுத்தப்படும். Apple Gamesஐப் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு www.apple.com/legal/privacy/data/en/apple-games தளத்தைப் பார்வையிடுங்கள்.
உங்களுடனான தகவல்தொடர்புகள்
Game Center மற்றும் நீங்கள் விரும்பக்கூடிய பிற Apple தயாரிப்புகள், சேவைகள் மற்றும் சலுகைகள் பற்றிய தகவல்களை உங்களுக்கு அனுப்ப, உங்களுக்குச் சொந்தமான Apple தயாரிப்புகள், Apple சேவைகளுக்கான உங்கள் சந்தாக்கள் போன்ற உங்கள் கணக்கு பற்றிய தகவல்களை Apple பயன்படுத்தக்கூடும். Game Centerஇல் கிடைக்கும் புதிய அம்சங்கள், உள்ளடக்கம் மற்றும் சலுகைகள் பற்றிய மின்னஞ்சல்களையும் அறிவிப்புகளையும் உங்களுக்கு அனுப்ப Game Centerஇல் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளைப் பற்றிய தகவல்களையும் Apple பயன்படுத்தக்கூடும். account.apple.com இணையதளத்திற்குச் சென்று உங்கள் மின்னஞ்சல் முன்னுரிமைகளை மாற்றலாம் மற்றும் இந்த மின்னஞ்சல்களைப் பெறுவதற்கான ஒப்புதலைத் திரும்பப் பெறலாம். உங்கள் அறிவிப்பு முன்னுரிமைகளை மாற்ற உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில், அமைப்புகள் > அறிவிப்புகள் > Game Center என்பதற்குச் செல்லுங்கள். Mac சாதனத்தில், சிஸ்டம் அமைப்புகள் > அறிவிப்புகள் > Game Center என்பதற்குச் செல்லவும். நாங்கள் அனுப்பும் அறிவிப்புகள் போன்றவற்றை நீங்கள் கையாளும் விதம் பற்றிய தகவல்களை எங்கள் சேவைகளை மேம்படுத்துவதற்காக Apple பயன்படுத்துகிறது.
மூன்றாம் தரப்பு டெவலப்பர்கள்
Game Centerஇல் நீங்கள் உள்நுழைந்திருக்கும்போது, நீங்கள் விளையாடும் கேம்களின் டெவலப்பர்களால் உங்களைப் பற்றிய தகவல்களைக் கோர முடியும், இதில் உங்கள் புனைபெயர், அவதார், பிற தனித்துவமான Game Center அடையாளத் தகவல்கள் போன்றவை அடங்கும். டெவலப்பரால் தொடர்புடைய பிளேயர்களின் பட்டியலையும் கோர முடியும். இதில் உங்கள் நண்பர்கள், நீங்கள் சமீபத்தில் இணைந்து விளையாடிய பிளேயர்கள் அடங்குவர். அந்தப் பட்டியலில் பிளேயர்களின் புனைபெயர்கள் மற்றும் அவதார்கள் இருக்கும். உங்கள் நண்பர்களுடன் உங்களை இணைக்க செயலியை நீங்கள் அனுமதித்தால், இந்த கேமை விளையாடும் உங்கள் நண்பர்களின் பட்டியலையும் அந்தச் செயலியால் அணுக முடியும். தங்கள் நண்பர்களுடன் இணைக்க இந்தச் செயலிக்கு அனுமதி வழங்கி ஒப்புக்கொண்ட நண்பர்கள் மட்டுமே உங்கள் நண்பர்களாக செயலிக்குக் காட்டப்படுவார்கள். நண்பர்களுடன் உங்களை இணைப்பதற்குச் செயலிக்கு வழங்கிய அனுமதியை எப்போது வேண்டுமானாலும் திரும்பப்பெறலாம். உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில் இதைச் செய்ய, அமைப்புகள் > Game Center என்பதற்குச் சென்று “நண்பர்கள் பட்டியலைப் பகிர்” என்பதைத் தட்டி ஆஃப் செய்யலாம். Mac சாதனத்தில், சிஸ்டம் அமைப்புகள் > Game Center என்பதற்குச் சென்று “நண்பர்கள் பட்டியலைப் பகிர்” என்பதை கிளிக் செய்து ஆஃப் செய்யலாம். இது Game Center நண்பர்களுடன் உங்களை இணைக்கவா வேண்டாமா என்று அனுமதி கேட்பதிலிருந்து செயலிகளைத் தடுக்கும் மற்றும் இதற்கு முன்பு அனுமதிக்கப்பட்ட செயலிகளுடன் உங்கள் நண்பர்கள் பட்டியலைப் பகிர்வதை நிறுத்தும். நீங்கள் மூன்றாம் தரப்புச் செயலியைப் பயன்படுத்தும்போதெல்லாம், உங்கள் தரவுகளை அவர்கள் சேகரிக்கும் மற்றும் பயன்படுத்தும் விதத்தைப் புரிந்துகொள்ள டெவலப்பரின் விதிமுறைகள், தனியுரிமைக் கொள்கைகள், நடைமுறைகள் ஆகியவற்றை நீங்கள் மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
Game Centerஐப் பயன்படுத்தும் பிள்ளைகள்
உங்கள் குடும்பத்தில் உள்ள Game Centerஐப் பயன்படுத்தும் பிள்ளைகள், தங்கள் சாதனத்தில் குறிப்பிட்ட செயலிகளில் செலவிடும் நேரத்தை வரம்பிடுவதற்கும், Game Center அம்சங்களைத் தடுப்பதற்கும், ஸ்கிரீன் டைம் அமைப்புகளில் உள்ள “உள்ளடக்கம் & தனியுரிமைக் கட்டுப்பாடுகள்” அமைப்பை நீங்கள் பயன்படுத்தலாம். இதன்மூலம் மல்டிபிளேயர் செயல்பாடு, நண்பர்களைச் சேர்த்தல், ஒரே கேமை விளையாடும் நண்பர்களைத் தொடர்புகொள்ளும் திறன் போன்றவற்றை நீங்கள் கட்டுப்படுத்தலாம். இதைச் செய்ய, உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில், அமைப்புகள் > ஸ்கிரீன் டைம் > உள்ளடக்கம் & தனியுரிமைக் கட்டுப்பாடுகள் > App Store, மீடியா, இணையம் & கேம்ஸ் என்பதற்குச் சென்று, “Game Center” பிரிவிற்குச் செல்லவும். Macஇல், சிஸ்டம் அமைப்புகள் > ஸ்கிரீன் டைம் > “உள்ளடக்கம் & தனியுரிமை” என்பதற்குச் செல்லுங்கள். tvOSஇல், அமைப்புகள் > பொது அமைப்புகள் > கட்டுப்பாடுகள் என்பதற்குச் செல்லுங்கள். மேலும், Game Centerஇல் பிற பிளேயர்களுடன் உரையாடும்போது, பயனர் உள்ளீடு செய்த உரையைப் பிள்ளைகளால் அனுப்பவோ பெறவோ முடியாது. முன்னமைத்த மெசேஜ்களை மட்டுமே அவர்களால் பெறவும் அனுப்பவும் முடியும். கேமிற்குள் உள்ள “குரல் உரையாடல்” அம்சமும் பிள்ளைகளுக்கு முடக்கப்பட்டிருக்கும்.
தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்குப் பொருந்தக்கூடிய அடிப்படைச் சட்டங்கள்
உங்கள் ஒப்புதலின் அடிப்படையிலும், எங்கள் நியாயமான நலன்களின் நோக்கங்களுக்குத் தேவைப்படுவதாலும் Game Centerஇல் உங்கள் தனிப்பட்ட தரவைச் செயலாக்குக்கிறோம். பொருந்தும் உள்ளூர்ச் சட்டங்கள் குறிப்பிடும் இடங்களில், எங்களின் நியாயமான நலன்களின் நோக்கத்திற்காகத் தேவைப்படுவதால் தனிப்பட்ட தரவின் பின்வரும் வகைகளை நாங்கள் செயலாக்குகிறோம்:
- Game Centerஐ நீங்கள் பயன்படுத்துவது தொடர்பான தகவல்கள், இதில் நீங்கள் விளையாடும் கேம்கள், உங்கள் கேம் செயல்பாடு போன்றவையும் அடங்கும்
- உங்கள் புனைபெயர், அவதார், Arcade சந்தா நிலை, புள்ளிகள் மற்றும் பிற செயல்பாட்டுத் தகவல்கள்
- உங்கள் Game Center நண்பர்களின் பட்டியல், உங்களுடன் இணைந்து விளையாடும் பிளேயர்கள், எப்போது இணைந்து விளையாடுகிறீர்கள் என்பன போன்ற தகவல்கள்
நியாயமான நலன்கள் என்பதில் இவையும் அடங்கும்:
- உங்களுக்கும் பிறருக்கும் ஏற்ற வகையில் Game Centerஐப் பயன்படுத்தும் பிற Apple சேவைகள் மற்றும் Game Centerஐ மேம்படுத்துதல் மற்றும் உகந்ததாக்குதல்
- Game Center மற்றும் நீங்கள் விரும்பக்கூடிய தொடர்புடைய பிற Apple தயாரிப்புகள், சேவைகள் மற்றும் சலுகைகள் பற்றிய தகவல்களை உங்களுக்கு அனுப்புதல்
- மோசடி மற்றும் பிற தீங்கிழைக்கும் செயல்பாட்டைத் தடுத்தல்
தக்கவைத்தல்
உங்கள் Game Center கணக்குடன் இணைக்கப்பட்ட Apple கணக்கை நீங்கள் பராமரிக்கும் காலம் வரை உங்களைப் பற்றி சேகரிக்கப்பட்ட தகவல்களை Game Center தக்கவைக்கும்.
மோசடி மற்றும் பிற தீங்கிழைக்கும் செயல்பாட்டைத் தடுத்தல்
Game Center மற்றும் பிற Apple செயலிகள் மற்றும் சேவைகளில் மோசடி மற்றும் பிற தீங்கிழைக்கும் செயல்பாட்டைத் தடுப்பதற்காகத் தனிப்பட்ட தரவைச் சேகரிக்கிறோம். இந்தத் தகவல்களில் சாதன வகை, மென்பொருள் பதிப்பு போன்ற சாதனத் தகவல்கள், இருப்பிடத் தகவல்கள் (உங்கள் இணைய இணைப்பின் IP முகவரியை உங்கள் புவியியல் வட்டாரத்துடன் பொருத்துவதன் மூலம் கிடைக்கும் தோராயமான இருப்பிடம்), இதுவரையான பதிவிறக்கங்களும் வாங்குதல்களும், Game Center மற்றும் பிற செயலிகள் மற்றும் சேவைகளுடனான பிற செயல்பாடுகள் ஆகியவை அடங்கும்.
Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.
2026-03-30