GymKit & தனியுரிமை
GymKit உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இணைக்கப்பட்ட உடற்பயிற்சிக் கூட உபகரணத்தைப் பயன்படுத்தி Apple Watch உடற்பயிற்சிகளை நீங்கள் தொடங்கலாம், நிறுத்தலாம். தூரம், இதயத்துடிப்பு போன்ற உடற்பயிற்சித் தரவுகளைப் பரிமாற்றலாம். உடற்பயிற்சி முடிந்ததும், உங்கள் தரவுகள் உங்கள் Apple Watchஇல் சேமிக்கப்பட்டு, உடற்பயிற்சிக் கூட உபகரணத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும். இருப்பினும், நீங்கள் உடற்பயிற்சிக் கூட உபகரணத்தில் உள்நுழைந்திருந்தால், உங்கள் Apple Watchஇல் இருந்து உபகரணத்தில் ஒத்திசைக்கப்பட்ட உடற்பயிற்சித் தரவுகளை உற்பத்தியாளர் சேகரித்துத் தக்கவைக்கக்கூடும்.
2025-12-12