“உடல்நலம்” செயலி & தனியுரிமை

“உடல்நலம்” செயலி உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


உங்கள் iPhone, iPad, Apple Vision Pro, Apple Watch மற்றும் பிற சாதனங்கள், உடல்நலப் பதிவுகள், நீங்கள் பயன்படுத்தும் செயலிகள் ஆகியவற்றில் இருந்து தரவுகளைப் பெற்று உடல்நலம் செயலி அவற்றை ஒருங்கிணைக்கலாம், இதன்மூலம் உங்கள் உடல்நலத் தகவல்கள் பற்றிய இன்னும் விரிவான கண்ணோட்டத்தை வசதியாக ஒரே இடத்தில் நீங்கள் பெற முடியும். உடல்நலம் செயலியில் எந்தெந்தத் தரவுகள் சேமிக்கப்பட வேண்டும் என்பதையும் உங்கள் நம்பிக்கைக்குரிய மூன்றாம் தரப்புச் செயலிகள் மற்றும் நபர்களுடன் எந்தெந்தத் தரவுகள் பகிரப்பட வேண்டும் என்பதையும் நீங்களே கட்டுப்படுத்தலாம்.

உடல்நலப் பதிவுகள், சுழற்சிக் கண்காணிப்பு, மருந்துகள், மனநலம், உறக்கம் போன்று நீங்கள் பயன்படுத்தும் “உடல்நலம்” செயலியின் அம்சங்களுக்கான கட்டுப்பாடு உங்களிடமே இருக்கும். சில iOS மற்றும் watchOS அம்சங்கள் (இதயத்துடிப்பு, இரைச்சல் குறித்த அறிவிப்புகள் போன்றவை) இயல்பாகவே இயக்கப்பட்டிருக்கக்கூடும். எப்போது வேண்டுமானாலும் உலாவிப் பிரிவையோ உங்கள் சுயவிவரத்தையோ தட்டி, நீங்கள் இயக்க அல்லது முடக்க விரும்பும் உடல்நல வகையையோ அம்சத்தையோ தட்டுவதன் மூலம், “உடல்நலம்” செயலியில் கிடைக்கும் அம்சங்களை நீங்கள் இயக்கலாம் அல்லது முடக்கலாம். அம்சத்தின் கிடைக்கும்தன்மையைக் கண்டறிய, சில உடல்நல அம்சங்கள் உங்கள் இருப்பிடத்தைப் பயன்படுத்தக்கூடும்.

உங்கள் சாதனம் பாஸ்கோடு, Touch ID அல்லது Face ID மூலம் லாக் செய்யப்பட்டிருக்கும்போது, “உடல்நலம்” செயலியில் உள்ள உங்கள் உடல்நலம் மற்றும் ஃபிட்னஸ் தரவுகள் அனைத்தும் (உங்கள் மருத்துவ IDஐத் தவிர) என்கிரிப்ட் செய்யப்பட்டு இயல்பாக அணுக முடியாத வகையில் இருக்கும். சில உடற்பயிற்சி தொடர்பான அம்சங்களுக்கு, பயனரால் வழங்கப்பட்ட உடல்நலம் செயலித் தரவுக்கான அணுகலைக் கொண்ட செயலியால், உடற்பயிற்சி தொடர்பான தரவைத் தற்காலிகமாகப் பூட்டுத் திரையில் காட்ட முடியும். ஒரு செயலி உடற்பயிற்சி அமர்வில் இயங்கும்போது, இந்த அனுபவத்தை வழங்குவதற்காகச் சாதனம் லாக் செய்யப்பட்டிருக்கும்போதும் உடற்பயிற்சி அமர்வின் நேரஅளவிற்கு உடல்நலம் செயலியின் தரவை அதனால் அணுக முடியும். அமைப்புகள் > Face ID & பாஸ்கோடு > உடற்பயிற்சி நலத் தரவு என்பதற்குச் சென்று உடற்பயிற்சி தொடர்பான தரவுகள் பூட்டுத் திரையில் காட்டப்படுவதைப் பயனர்கள் நிர்வகிக்கலாம்.

உங்கள் சாதனங்கள் முழுவதும் தரவுகளைச் சமீபத்திய நிலையில் வைத்திருக்க iCloudஐப் பயன்படுத்தவும், உங்கள் கம்ப்யூட்டரில் iTunes என்கிரிப்ட் செய்யப்பட்ட பேக்-அப்புக்கு உங்கள் தரவுகளை பேக்-அப் எடுக்கவும் அல்லது உங்கள் தரவுகளைப் பகிரவும் நீங்கள் தேர்வுசெய்யலாம். உங்கள் சாதனத்தில் கிடைக்கக்கூடிய “உடல்நலம்” செயலியின் நகலை எக்ஸ்போர்ட் செய்வதற்கான திறனை “உடல்நலம்” செயலி உங்களுக்கு வழங்குகிறது. அதைச் செய்ய, மேல் வலது மூலையில் உள்ள உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டி, பிறகு “அனைத்து உடல்நலத் தரவையும் எக்ஸ்போர்ட் செய்” என்பதைத் தட்டவும்.

iCloud பேக்-அப் மற்றும் ஒத்திசைவு

உங்கள் உடல்நலத் தரவுகளை iCloudஇல் காப்புப்பிரதி எடுக்க நீங்கள் தேர்வுசெய்யலாம், அங்கு பகிரப்படும்போதும் அப்படியே இருக்கும்போதும் அவை என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும். சாதனங்கள் முழுவதிலும் உங்கள் உடல்நலத் தரவுகளைச் சமீபத்திய நிலையில் வைத்திருக்க, iCloud ஒத்திசைவு உங்களை அனுமதிக்கிறது. iOS 12 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பைப் பயன்படுத்தும் நீங்கள் இரு காரணி அங்கீகாரத்தை ஆன் செய்திருந்தால், iCloudஇல் ஒத்திசைக்கப்பட்ட உங்கள் உடல்நலம் மற்றும் செயல்பாட்டுத் தரவுகளை Appleஆல் படிக்க முடியாது. கூடுதலாக, iCloud ஒத்திசைவு மூலம், உங்கள் நம்பிக்கைக்குரிய பிற மூன்றாம் தரப்புச் செயலிகளுடன் “உடல்நலம்” செயலியின் தரவுகளைப் பகிர்வது போன்ற “உடல்நலம்” செயலியின் பகிர்வு அம்சங்களை நீங்கள் பயன்படுத்தலாம். நீங்கள் iCloudஐ இயக்கினால், உங்கள் “உடல்நலம்” செயலியின் தரவுவுகள் இயல்பாகவே பேக்-அப் செய்யப்படும். அமைப்புகள் > [உங்கள் பெயர்] > iCloud > அனைத்தையும் காட்டு என்பதற்குச் சென்று “உடல்நலம்” செயலியைத் தட்டி அதை ஆஃப் செய்வதன் மூலம் iCloud பேக்-அப்பை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் முடக்கலாம்.

பகிர்தல்

மூன்றாம் தரப்புச் செயலிகளுடன் “உடல்நலம்” செயலியின் தரவுகளைப் பகிர்தல்
உங்கள் நம்பிக்கைக்குரிய மூன்றாம் தரப்புச் செயலிகளுடன் உங்கள் “உடல்நலம்” செயலியின் தரவுகளை நீங்கள் பகிரலாம். உங்கள் “உடல்நலம்” செயலியில் உள்ள தரவுகளைப் படிக்கவும், அதில் தரவுகளைச் சேமிக்கவும் செயலிகள் அனுமதி பெற வேண்டும். உங்கள் “உடல்நலம்” செயலியின் தரவுகளுக்கான அணுகலை மூன்றாம் தரப்புச் செயலிகள் ஏன் கோருகின்றன என்பதை அவை விளக்க வேண்டும். ஒவ்வொரு செயலியும் உடல்நலத் தரவுகளைப் பயன்படுத்துவதை விவரிக்கும் தனியுரிமைக் கொள்கையையும் கொண்டிருக்க வேண்டும். எனவே உங்கள் உடல்நலத் தரவுகளை அணுக செயலிகளை அனுமதிக்கும் முன் இந்தக் கொள்கைகளை நீங்கள் மதிப்பாய்வு செய்ய முடியும். இந்த மூன்றாம் தரப்புச் செயலிகளுடன் நீங்கள் பகிரும் இந்தத் தரவுகளுக்கான கட்டுப்பாடு உங்களிடமே இருப்பதால் என்னென்ன தரவுகள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம். உங்கள் “உடல்நலம்” செயலியின் தரவுகளை அணுக நீங்கள் அனுமதி வழங்கியுள்ள மூன்றாம் தரப்புச் செயலிகளை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் பார்க்கலாம். மேலும் இந்த மூன்றாம் தரப்புச் செயலிகளுடன் எந்தெந்தத் தரவுகளைப் பகிரலாம் மற்றும் பெறலாம் என்பதை நீங்கள் நிர்வகிக்கலாம். சில “உடல்நலம்” செயலியின் தரவு வகைகளை மூன்றாம் தரப்புச் செயலிகளால் அணுக முடியாது. மூன்றாம் தரப்புச் செயலிகளுடன் நீங்கள் பகிரும் மற்றும் பெறும் தரவுகளை எப்படி நிர்வகிப்பது என்பது குறித்து மேலும் அறிய support.apple.com/108779 இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.

குடும்பங்களுடனும் நண்பர்களுடனும் “உடல்நலம்” செயலியின் தரவுகளைப் பகிர்தல்
உங்கள் நம்பிக்கைக்குரிய நபர்களுடனும் “உடல்நலம்” செயலியின் தரவுகளைப் பகிரலாம். உங்கள் குடும்பங்கள், நண்பர்கள் போன்ற உங்கள் தொடர்புகளில் உள்ள பிற “உடல்நலம்” செயலி பயனர்களுடன் “உடல்நலம்” செயலியின் தரவுகளை நீங்கள் தேர்ந்தெடுத்துப் பகிரலாம்.

பிற “உடல்நலம்” செயலி பயனர்களுடன் எந்தெந்தத் தரவுகள் பகிரப்படலாம் என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம். உங்கள் உடல்நலத் தரவுகளைப் பகிர நீங்கள் தேர்வுசெய்த நபர் உங்கள் அழைப்பை ஏற்றுகொண்ட பிறகு, “உடல்நலம்” செயலியில் நீங்கள் பகிரும் தரவுகளின் சுருக்கவிவரத்தை அவர்கள் பார்க்க முடியும். இவற்றில் இதுவரையிலான உடல்நலத் தரவுகளின் சிறு பகுதியும் நீங்கள் பகிரும் தரவுகள் தொடர்பான எதிர்கால அறிவிப்புகளும் அடங்கும் (பகிர்வதை நீங்கள் நிறுத்தும் வரை). நீங்கள் பகிரும் தரவுகள் தொடர்பான விழிப்பூட்டல்கள், நிலவர அறிக்கைகள், பிற அறிவிப்புகள் ஆகியவற்றையும் அவர்கள் பெறலாம். பிற “உடல்நலம்” செயலி பயனர்களுடன் நீங்கள் பகிர்ந்த எந்தத் தரவுகளையும் Appleஆல் அணுகவோ பார்க்கவோ முடியாது.

பிற “உடல்நலம்” செயலி பயனருடன் பகிர்வதற்கு நீங்கள் தேர்வுசெய்த உடல்நலத் தரவுகளின் வகைகளை நீங்கள் பார்க்கலாம். “உடல்நலம்” செயலியில், பகிர்தல் பிரிவைத் தட்டி பிறகு நீங்கள் தரவுகளைப் பகிரும் நபரைத் தட்டவும். பிறகு, அந்த நபருடன் பகிரப்படும் உடல்நலத் தலைப்புகளை நீங்கள் சேர்க்கலாம் மற்றும் அகற்றலாம், மேலும் தற்போது அவர்களுடன் பகிரும் தரவுகளின் முன்னோட்டத்தையும் பார்க்கலாம்.

உங்கள் “உடல்நலம்” செயலியின் தரவுகள் பகிரப்படுவதை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் நிறுத்தலாம். அதைச் செய்ய, “உடல்நலம்” செயலியைத் திறந்து, பகிர்தல் பிரிவைத் தட்டி, பகிர்வதை நிறுத்த விரும்பும் நபரைத் தட்டி, பிறகு “பகிர்வதை நிறுத்து” என்பதைத் தட்டவும். பகிர்வதை நிறுத்த முடிவு செய்தால், பிற பயனரின் சாதனம் அவர்களுடன் இதுவரையில் நீங்கள் பகிர்ந்த தரவுகளை அவர்களின் “உடல்நலம்” செயலியில் இருந்து நீக்கும்.

மருத்துவச் சேவை வழங்குநர்களுடன் “உடல்நலம்” செயலியின் தரவுகளைப் பகிர்தல்
ஹெல்த்கேர் நிறுவனத்துக்கான உங்கள் கணக்கின் உள்நுழைவு விவரங்களைப் பயன்படுத்தி நீங்கள் உள்நுழையும்போது, உங்கள் iPhone அல்லது iPadஇல் இருந்து பெறப்பட்ட செயல்பாட்டுத் தரவுகள், இதயத்துடிப்பு தரவு, ஆய்வக முடிவுகள் போன்ற “உடல்நலம்” செயலியின் சில தரவுகளைப் பங்கேற்கும் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் நீங்கள் தேர்ந்தெடுத்துப் பகிரலாம். Apple மற்றும் உங்கள் சாதனம், உங்கள் கணக்கின் உள்நுழைவு விவரங்களைச் சேமிக்கவோ அணுகவோ இல்லை. ஹெல்த்கேர் நிறுவனத்துடன் நீங்கள் பகிரும் இந்தத் தரவுகளுக்கான கட்டுப்பாடு உங்களிடமே இருப்பதால் என்னென்ன தரவுகள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம். உங்கள் “உடல்நலம்” செயலியின் தரவுகளை எந்தெந்த ஹெல்த்கேர் நிறுவனத்துடன் பகிர்கிறீர்கள் என்பதை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் பார்க்கலாம். உங்கள் உடல்நலத் தரவுகளை ஹெல்த்கேர் நிறுவனத்துடன் பகிர்வதைப் பார்க்கவும் நிர்வகிக்கவும், “உடல்நலம்” செயலியைத் திறந்து, பகிர்தல் பிரிவைத் தட்டி பிறகு நீங்கள் நிர்வகிக்க விரும்பும் ஹெல்த்கேர் நிறுவனத்தைத் தட்டவும். ஹெல்த்கேர் நிறுவனத்தில் உங்கள் நோயாளியின் வரைபடத்தை அணுகக்கூடிய எந்த மருத்துவச் சேவை வழங்குநரும், அந்த ஹெல்த்கேர் நிறுவனத்துடன் பகிர நீங்கள் தேர்வுசெய்யும் உடல்நலத் தரவுகளை அணுகலாம்.

நீங்கள் பகிர விரும்பும் அனைத்து “உடல்நலம்” செயலி தரவுகளும் என்கிரிப்ட் செய்யப்பட்டு Apple மூலம் பிரத்தியேகச் சர்வரில் சேமிக்கப்படும். எனவே நீங்கள் தேர்வுசெய்த ஹெல்த்கேர் நிறுவனத்துடன் இந்தத் தரவுகளை Apple பாதுகாப்பாகப் பகிர முடியும். சாதனம் அன்லாக் செய்யப்பட்டு, இணையத்துடன் இணைக்கப்படும்போது மட்டுமே உங்கள் தரவுகள் iPhone மற்றும் iPadஇல் இருந்து அனுப்பப்படும். எங்கள் சர்வர்களில் சேமிக்கப்பட்டு உங்கள் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் பகிரப்பட்ட தரவுக்கான என்கிரிப்ட் கீக்களை Apple வைத்திருக்கவோ அணுகவோ இல்லை. அதுமட்டுமல்லாமல் இந்தத் தரவுகளை டீகிரிப்ட் செய்யவோ பார்க்கவோ அல்லது அணுகவோ முடியாது. இந்தப் பகிர்தல் அம்சத்தைப் பயன்படுத்துவதற்கு உதவத் தேவைப்படும் வரை உங்கள் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் நீங்கள் பகிரத் தேர்வுசெய்யும் “உடல்நலம்” செயலியின் தரவுகளை Apple வைத்திருக்கும். இந்தப் பகிர்தல் அம்சத்தைச் செயல்படுத்து மட்டுமே இந்தத் தரவுகள் பயன்படுத்தப்படும். Apple சர்வர்களில் சேமிக்கப்படும்போது, இந்த அம்சம் தொடர்பாக நீங்கள் பகிரும் அனைத்துத் தரவுகளும் பகிரப்படும்போதும் அப்படியே இருக்கும்போதும் என்கிரிப்ட் செய்யப்படும். இந்த அம்சத்தைப் பயன்படுத்தும்போது, Appleஆல் பராமரிக்கப்படும் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் பகிர நீங்கள் தேர்வுசெய்துள்ள அனைத்துத் தரவுகளும் 1996இன் உடல்நலக் காப்பீட்டு கையாளுமை மற்றும் பொறுப்பேற்புச் சட்டத்தின் (HIPAA - Health Insurance Portability and Accountability Act) தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தரநிலைகளுக்கு இணங்க பாதுகாப்பான சிஸ்டத்தில் சேமிக்கப்படும்.

உங்கள் தரவுகள் கிடைக்கும்போது உங்கள் மருத்துவச் சேவை வழங்குநருக்கு எந்தவித அறிவிப்புகளும் அனுப்பப்படாது. மேலும் நீங்கள் பகிரும் தரவுகளை அவர்கள் பார்க்காமல் போகக்கூடும். பகிர்தலை நீங்கள் அங்கீகரித்ததும், நீங்கள் பகிர்வதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ள ஹெல்த்கேர் நிறுவனத்தில் உள்ள உங்கள் உடல்நலப் பதிவுகளும் தானாகவே பதிவிறக்கம் செய்யப்பட்டு “உடல்நலம்” செயலியில் சேமிக்கப்படும். உங்கள் மருத்துவச் சேவை வழங்குநர், மருத்துவப் பதிவில் பகிர்வதற்கு நீங்கள் தேர்வுசெய்யும் தகவல்களைச் சேர்க்கலாம். மேலும் உங்கள் உடல்நலம் குறித்து தனிப்பட்ட முறையில் மதிப்பீடு செய்வதற்கு உதவும் வகையில் அவற்றைப் பயன்படுத்தலாம். உங்கள் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் பகிரத் தேர்வுசெய்யும் அனைத்துத் தரவுகளும், அந்த ஹெல்த்கேர் நிறுவனத்தின் தனியுரிமை நடைமுறைகள் மற்றும் அதன் தனியுரிமை & பாதுகாப்புக் கொள்கைகள் மற்றும் செயல்முறைகள் மூலம் நிர்வகிக்கப்படும்.

உங்கள் “உடல்நலம்” செயலியின் தரவுகள் பகிரப்படுவதை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் நிறுத்தலாம். அதைச் செய்ய, “உடல்நலம்” செயலியைத் திறந்து, பகிர்தல் பிரிவைத் தட்டி, நீங்கள் நிர்வகிக்க விரும்பும் ஹெல்த்கேர் நிறுவனத்தைத் தட்டி, பிறகு “பகிர்வதை நிறுத்து” என்பதைத் தட்டவும். இந்த அம்சத்தின் மூலம், நீங்கள் பகிர்வதை நிறுத்த விரும்பினால் ஹெல்த்கேர் நிறுவனத்தால் உங்கள் தரவுகளை அணுக முடியாது. அணுகலைத் திரும்பப்பெறுவதற்கு முன்பு, உங்கள் மருத்துவச் சேவை நிறுவனத்துடன் பகிரப்பட்ட அனைத்துத் தகவல்களும் உங்கள் மருத்துவச் சேவை வழங்குநரால் அவர்களின் பதிவுகளில் சேமித்து வைக்கப்படலாம்.

மருத்துவச் சேவை வழங்குநர்களுடன் “உடல்நலம்” செயலியின் தரவுகளைப் பகிர்வதோடு, பங்கேற்கும் மருத்துவச் சேவை நிறுவனங்களில் இருந்து “உடல்நலம்” செயலியில் உங்கள் மருத்துவ உடல்நலப் பதிவுகளைப் பாதுகாப்பாகப் பதிவிறக்க, உடல்நலப் பதிவுகள் அம்சத்தைத் தனியாகவே நீங்கள் பயன்படுத்தலாம். iPhoneஇல் உடல்நலப் பதிவுகள் குறித்து அறிந்துகொள்ள support.apple.com/105016 இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.

மருந்துகள்

“உடல்நலம்” செயலியில் உள்ள மருந்துகள், வைட்டமின்கள், சப்ளிமென்ட்கள் ஆகியவற்றை நீங்கள் நிர்வகிக்கலாம் மற்றும் கண்காணிக்கலாம். மருந்துகள் அம்சம் மூலம் மருந்துகளின் பட்டியலை நீங்கள் உருவாக்கலாம். மேலும் பிரத்தியேக நேர அட்டவணகளையும் நினைவூட்டல்களையும் அமைக்கலாம். சில இடங்களில், உங்கள் மருந்துகள் குறித்த கல்விரீதியான தகவல்களை நீங்கள் பார்க்கலாம். மேலும் மருந்துகள் அம்சத்தில் நீங்கள் சேர்த்த மருந்துகளைச் சேர்த்து சாப்பிடும்போது ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும் என்றால் அதுகுறித்த விழிப்பூட்டல்களும் உங்களுக்கு அனுப்பப்படும். தகவல்களை நேரடியாக உள்ளிடுவதன் மூலமும் கிடைக்கும் இடங்களில், உங்கள் மருந்துகளைச் சேர்க்க “உடல்நலம்” செயலியில் தேடுவதன் மூலமோ iPhone கேமராவைப் பயன்படுத்துவதன் மூலமோ மருந்துகளை நீங்கள் சேர்க்கலாம். மருந்துகள் அம்சத்திற்கான அனைத்துச் செயலாக்கமும் சாதனத்தில் நடைபெறும். உங்கள் குடும்பம், நண்பர்கள், மருத்துவச் சேவை வழங்குநர் ஆகியோருடன் மருந்துகளைப் பகிர, நீங்கள் உடல்நலப் பகிர்வு அம்சங்களைப் பயன்டுத்தலாம்.

மனநலம்

மனநல ஆரோக்கிய வகையின் மூலம் “உடல்நலம்” செயலியில் உங்கள் மனநிலை மற்றும் அதைப் பாதிக்கும் காரணிகளை நீங்கள் பதிவுசெய்யலாம் மற்றும் காலப்போக்கில் இந்தத் தகவல்களைக் கண்காணிக்கலாம். மேலும் இதில் பங்கேற்கும் விளக்க அட்டவணைகளில் உங்கள் மனநிலைத் தரவுகளைப் பார்க்கலாம், உங்கள் மனநிலையைப் பதிவுசெய்ய நினைவூட்டல்களை அமைக்கலாம். கிளினிக்குகளில் அடிக்கடிப் பயன்படுத்தப்படும் வயதுக்கேற்ப தரநிலைப்படுத்தப்பட்ட பதற்றம் மற்றும் மனச்சோர்வுக்கான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கான விருப்பமும் பயனர்களுக்கு வழங்கப்படும். மனநல அம்சங்களுக்கான அனைத்துச் செயலாக்கமும் சாதனத்தில் நடைபெறும். உங்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் மனநிலை குறித்த தரவுகளைப் பகிர, உடல்நலப் பகிர்வு அம்சங்களை நீங்கள் பயன்படுத்தலாம். மருத்துவச் சேவை வழங்குநருடன் உங்கள் மனச்சோர்வு மற்றும் பதற்றத்தின் மதிப்பீட்டுத் தரவுகளைப் பகிர நீங்கள் மனச்சோர்வு அறிகுறி மற்றும் பதற்ற அறிகுறி பிரிவுகளில் உள்ள விருப்பங்களுக்கு ஸ்க்ரால் செய்து, “PDFஐ எக்ஸ்போர்ட் செய்” என்பதைத் தட்டலாம்.

iPhoneஇல் மருத்துவ ஐடி

iPhoneஇல் உள்ள “உடல்நலம்” செயலியில், உங்கள் மருத்துவ நிலைகள், ஒவ்வாமைகள், மருந்துகள், சுயவிவரப் புகைப்படம் மற்றும் பலவற்றைப் பதிவேற்றுவதற்கு நீங்கள் தேர்வுசெய்த தகவல்களைக் கொண்ட அவசரகால மருத்துவ ஐடியை நீங்கள் உருவாக்கலாம். “லாக் செய்யப்பட்டிருக்கும்போது காட்டு” அம்சத்தை இயக்கினால், iPhone லாக் செய்யப்பட்டிருக்கும்போது அவசரகால உதவியாளர்களும் பிறரும் உங்கள் மருத்துவ ஐடியைப் பார்க்க முடியும்.

உங்கள் மருத்துவ ஐடியில் அவசரகாலத் தொடர்புகளை நீங்கள் சேர்க்கலாம். அவசரகாலத் தொடர்புகளை நீங்கள் சேர்க்கும்போது, “மெசேஜஸ்” செயலியை நிறுவல் நீக்கியிருந்தால், உங்கள் iPhone அல்லது Apple Watchஇல் இருந்து அவசரகால SOSஐப் பயன்படுத்தும்போது அவர்களுக்குத் தனாகவே விழிப்பூட்டல்கள் அனுப்பப்படும். உங்கள் உள்ளூர் அவசர எண்ணை அழைக்கும்போதோ அதற்கு மெசேஜ் அனுப்பும்போதோ (உதாரணமாக, 112) அல்லது உங்கள் iPhone அல்லது Apple Watchஇல் இருந்து அவசரகால SOSஐப் பயன்படுத்தும்போதோ பாதுகாப்பான மூன்றாம் தரப்புச் சேவையின் மூலம் உங்கள் மருத்துவ ஐடித் தகவல்களை அவசரகாலச் சேவைகளுக்குத் தானாக அனுப்ப அனுமதிக்கும் விருப்பமும் உங்களுக்கு இருக்கக்கூடும். உங்கள் உள்ளூர் அவசர எண்ணை அழைக்கும்போதோ அதற்கு மெசேஜ் அனுப்பும்போதோ அவசரகால SOSஐப் பயன்படுத்தும்போதோ அவசரகாலச் சேவைகளுக்கு உங்கள் மருத்துவ ஐடித் தகவல்களைத் தானாக அனுப்ப, (கிடைக்கும்பட்சத்தில்) “அவசர அழைப்பின்போது பகிர்” என்பதை நீங்கள் ஆன் செய்ய வேண்டும். மருத்துவ ஐடி குறித்து அறிந்துகொள்ள support.apple.com/105072 இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.

iPhoneஇல் “உடல்நலம்” செயலியில் உங்கள் மருத்து ஐடியை நீங்கள் உருவாக்கலாம் அல்லது புதுப்பிக்கலாம். மேல் வலது மூலையில் உள்ள உங்கள் சுயவிவரத்தைத் தட்டி, “மருத்துவ ஐடி” என்பதைத் தட்டி, பிறகு தொடங்கு அல்லது திருத்து என்பதைத் தட்டவும். உங்கள் மருத்துவ ஐடியில் காட்டப்படும் மற்றும் பூட்டுத் திரையில் இருந்து அணுகக்கூடிய தகவல்களை உள்ளிடும் திறன் உங்களுக்கு உள்ளது.

தடுப்பூசிப் பதிவு

“உடல்நலம்” செயலியில், உங்கள் COVID-19 தடுப்பூசிப் பதிவு போன்ற உங்கள் சரிபார்க்கக்கூடிய டிஜிட்டல் தடுப்பூசிப் பதிவைப் பாதுகாப்பாகப் பதிவிறக்கவும் சேமிக்கவும் நீங்கள் தேர்வுசெய்யலாம். உங்கள் தடுப்பூசிப் பதிவில் உங்கள் பெயர், பிறந்த தேதி, தடுப்பூசி வகை, தடுப்பூசி போடப்பட்ட தேதி(கள்) போன்ற தகவல்கள் இருக்கும். நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட பகுதியில் உள்ள நிர்வாக நிறுவனம் அல்லது தடுப்பூசிப் பதிவு மையத்தில் இருந்து உங்கள் தடுப்பூசிப் பதிவை QR குறியீடு அல்லது டிஜிட்டல் கோப்பாகப் பெறுவதன் மூலம், உங்கள் சரிபார்க்கக்கூடிய டிஜிட்டல் தடுப்பூசிப் பதிவையும் “உடல்நலம்” செயலியில் சேர்க்கலாம். நீங்கள் QR குறியீட்டை ஸ்கேன் செய்யும்போதோ கோப்பைத் தட்டும்போதோ, “உடல்நலம்” செயலியில் பதிவைத் திறப்பதற்கான விருப்பம் உங்களுக்கு வழங்கப்படும். பங்கேற்கும் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் உங்கள் கணக்கைச் சேர்த்தால், உடல்நலப் பதிவுகள் அம்சத்தின் மூலம் “உடல்நலம்” செயலியில் சரிபார்க்கக்கூடிய உங்கள் டிஜிட்டல் தடுப்பூசிப் பதிவும் இம்போர்ட் செய்யப்படக்கூடும் மற்றும் சேமிக்கப்படக்கூடும்.

உங்கள் தடுப்பூசிப் பதிவை iPhoneஇல் உள்ள “உடல்நலம்” செயலில் சேர்க்க, QR குறியீட்டையோ பதிவிறக்க இணைப்பையோ நீங்கள் பயன்படுத்தும்போது வாலெட் செயலியில் இருந்து உங்கள் தடுப்பூசிப் பதிவை விரைவாக அணுக அனுமதிக்கும் உங்கள் தடுப்பூசிப் பதிவை நீங்கள் வாலெட்டில் சேர்க்கலாம். வாலெட்டில் தடுப்பூசி அட்டையைச் சேர்க்கும்போது நீங்கள் சேர்த்த தடுப்பூசி அட்டையில் உள்ள தடுப்பூசிப் பதிவுகளின் நகலை iOS சாதனத்தில் வாலெட் செயலி சேமித்து வைக்கும். வாலெட்டில் சேமிக்கப்பட்ட தடுப்பூசி அட்டை உங்கள் பிற சாதனங்களுடன் ஒத்திசைக்கப்படாது, iCloudஇல் பேக்-அப் செய்யப்படாது. Face ID, Touch ID அல்லது பாஸ்கோடு மூலம் நீங்கள் அங்கீகரிக்கும் வரை உங்கள் தடுப்பூசி அட்டையின் முழு விவரங்கள் iPhone பூட்டுத் திரையில் காட்டப்படாது. உங்கள் தடுப்பூசி அட்டை விவரங்களைக் காட்ட நீங்கள் முதலில் அங்கீகரிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்டதும், உங்கள் சாதனத்தின் திரையில் காட்டப்படும் தடுப்பூசி அட்டையை உங்கள் சாதனத்தை அணுகக்கூடிய அனைவராலும் பார்க்க முடியும் என்பதால் உங்கள் சாதனத்தைப் பாதுகாக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நீங்கள் உங்கள் தடுப்பூசி அட்டையை வாலெட்டில் இருந்து எப்போது வேண்டுமானாலும் அகற்றலாம். வாலெட்டில் இருந்து தடுப்பூசி அட்டையை அகற்றுவது உடல்நலம் செயலியில் சேமிக்கப்பட்டுள்ள உங்கள் தடுப்பூசிப் பதிவின் நகலை நீக்காது. நீங்கள் “உடல்நலம்” செயலியில் இருந்து உங்கள் தடுப்பூசிப் பதிவை எப்போது வேண்டுமானாலும் நீக்கலாம். “உடல்நலம்” செயலியில் இருந்து உங்கள் தடுப்பூசிப் பதிவை நீங்கள் நீக்கினால், வாலெட்டில் இருந்து தொடர்புடைய தடுப்பூசி அட்டையும் நீக்கப்படும். சரிபார்க்கக்கூடிய உடல்நலப் பதிவுகள் குறித்து மேலும் அறிந்துகொள்ள support.apple.com/102467 இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.

Siriஐப் பயன்படுத்தி உங்கள் உடல்நலத் தரவுகளை அணுகுதல்

“உடல்நலம்” செயலியில் சில உடல்நலத் தரவு வகைகளைப் பதிவு செய்யுமாறு அல்லது “உடல்நலம்” செயலியில் உள்ள உங்கள் தகவல்களைப் படிக்குமாறு நீங்கள் Siriஇடம் கேட்கலாம். Siriஇடம் கேட்கப்படும், அங்கீகரிக்கப்பட்ட “உடல்நலம்” செயலியின் தரவுக் கோரிக்கைகளின் அனைத்துச் செயலாக்கமும் சாதனத்தில் நடைபெறும். “உடல்நலம்” செயலியின் தரவுக் கோரிக்கையாக உங்கள் கோரிக்கையை Siri அடையாளம் காணவில்லை எனில், கோரிக்கையில் நீங்கள் சேர்க்கும் அனைத்து உடல்நலத் தகவல்களும் Siri சர்வருக்கு அனுப்பப்படும். அமைப்புகள் > செயலிகள் > உடல்நலம் > தரவு அணுகல் & சாதனங்கள் > Siri என்பதற்குச் சென்று “உடல்நலத் தரவுகளுக்கான அணுகல்” என்பதைத் தட்டி ஆஃப் செய்வதன் மூலம் உங்கள் “உடல்நலம்” செயலியின் தரவுகளுக்கான Siriஇன் அணுகலை எப்போது வேண்டுமானாலும் ஆஃப் செய்யலாம்.

“உடல்நலம்” செயலியை அகற்றுதல்

“உடல்நலம்” செயலியை இனி நீங்கள் பயன்படுத்த விரும்பவில்லை எனில், முகப்புத் திரையில் உள்ள “உடல்நலம்” செயலியைத் தொட்டுப் பிடித்து பிறகு “செயலியை அகற்று” என்பதைத் தட்டுவதன் மூலம் அதை உங்கள் iPhone அல்லது iPadஇல் இருந்து அகற்றலாம். iPhone அல்லது iPadஇல் “உடல்நலம்” செயலியை நீங்கள் நீக்கினாலும், உங்கள் உடல்நலத் தரவுகள் சாதனத்தில் அப்படியே இருக்கும். உங்கள் உடல்நலத் தகவல்களை நீங்கள் பகிர்ந்துள்ள அனைத்துச் செயலிகளுக்கும் உடல்நலப் பகிர்வு பெறுநர்களுக்கும் நீங்கள் பகிரத் தேர்வுசெய்துள்ள உடல்நலத் தரவுகளுக்கான அணுகல் தொடர்ந்து இருக்கும். கூடுதலாக, சில சென்சார் அடிப்படையிலான உடல்நல அம்சங்களிலிருந்து (இதயத்துடிப்பு, இரத்த ஆக்சிஜன் செயலி போன்றவை) தரவுகள் தொடர்ந்து பெறப்பட்டு உங்கள் சாதனத்தில் சேமிக்கப்படும். உடல்நலத் தரவுகளை நீக்குதல், மூன்றாம் தரப்புச் செயலிகள் மற்றும் உடல்நலப் பகிர்வு பெறுநர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகளைத் திரும்பப்பெறுதல் உட்பட, அமைப்புகள் செயலியில், அமைப்புகள் > உடல்நலம் என்பதற்குச் சென்று உங்கள் உடல்நலத் தரவுகளை நிர்வகிக்கலாம். நீங்கள் மனதை மாற்றினால், App Storeஇல் இருந்து “உடல்நலம்” செயலியை மீண்டும் பதிவிறக்கலாம்.

தக்கவைத்தல்

“உடல்நலம்” செயலியில் எந்தெந்தத் தகவல்கள் சேமிக்கப்படலாம் என்பதையும், அவற்றைச் சேமிக்க எவ்வளவு நேரம் தேவைப்படுகிறது என்பதையும் நீங்கள் கட்டுப்படுத்தலாம். உங்கள் உடல்நலத் தரவுகளை iCloudஇல் பேக்-அப் செய்ய நீங்கள் தேர்வுசெய்தால் (“உடல்நலம்” செயலியில் உங்கள் தகவல்களைச் சேமித்து வைத்திருக்கும் வரை), உங்கள் உடல்நலத் தரவுகள் “உடல்நலம்” செயலி மற்றும் iCloudஇல் சேமிக்கப்படும். உங்கள் “உடல்நலம்” செயலியின் தரவுகளை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மறுஆய்வு செய்யலாம், திருத்தலாம் மற்றும் நீக்கலாம். உடல்நலம் செயலியின் தரவுகளை நீங்கள் நீக்கினால் உங்கள் சாதனங்களிலும், தரவுகளை அணுக நீங்கள் அனுமதி வழங்கியுள்ள மூன்றாம் தரப்புச் செயலிகளிலும் அதை ஒத்திசைக்க, நீக்கப்பட்ட மாதிரியுடன் தொடர்புடைய நேரமுத்திரை போன்ற சில தகவல்கள் உங்கள் சாதனத்தில் தற்காலிகமாகச் சேமித்து வைக்கப்படலாம். “உடல்நலம்” செயலியில் உடல்நலத் தகவல்களை நிர்வகிப்பது குறித்து மேலும் அறிந்துகொள்ள support.apple.com/guide/iphone/view-your-health-data-iphe3d379c32/ios இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.

பிற தகவல்கள்

Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.

குறிப்பு: குறிப்பிட்ட சாதனங்கள் அல்லது சில பகுதிகள்/மொழிகளில் சில அம்சங்கள் கிடைக்காமல் போகக்கூடும்.

2026-02-11