உடல்நலப் பதிவுகள் & தனியுரிமை
உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் உடல்நலப் பதிவுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவச் சேவை வழங்குநருடன் உங்களை நேரடியாக இணைப்பதன் மூலம் iPhone அல்லது iPadஇல் உடல்நலப் பதிவுகளைத் தானாகப் பதிவிறக்க “உடல்நலப் பதிவுகள்” உங்களுக்கு உதவுகிறது. இந்த அம்சம் தொடர்பாக நீங்கள் பெறும் அனைத்து உடல்நலப் பதிவுகளும் என்கிரிப்ட் செய்யப்பட்ட வடிவத்தில் சேமிக்கப்பட்டு, உங்கள் சாதனத்தில் பாஸ்கோடு மூலம் பாதுகாக்கப்படும்.
உடல்நலப் பதிவுகளை ஆதரிக்கும் உங்கள் மருத்துவச் சேவை வழங்குநர்களைக் கண்டறிவதற்கு உங்களுக்கு உதவ, பெயரின் அடிப்படையில் உங்கள் வழங்குநர்களை Apple தேடலாம். உங்கள் ஒப்புதலுடன், புவியியல்ரீதியாகத் தொடர்புடைய முடிவுகளை வழங்க, உங்கள் சாதனத்தின் இருப்பிடமும் பயன்படுத்தப்படும். உங்கள் மருத்துவச் சேவை வழங்குநரை நீங்கள் கண்டறிந்ததும், நோயாளியின் உள்நுழைவு தகவல்கள் மூலம் அங்கீகாரம் வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படும். உங்கள் iPhone அல்லது iPadஇல் உடல்நலப் பதிவுகள் தானாகவே பதிவிறக்கப்படும். உடல்நலப் பதிவுகளைப் பெற, உங்கள் சாதனம் பாதுகாப்பு டோக்கனைப் பயன்படுத்தும். உங்கள் நோயாளியின் உள்நுழைவுத் தகவல்களை “உடல்நலம்” செயலி சேமிக்காது.
உடல்நலப் பதிவுகள் உட்பட உங்கள் “உடல்நலம்” செயலியில் உள்ள தரவுகள், iCloudஐப் பயன்படுத்தி தானாகவே உங்கள் அனைத்துச் சாதனங்களிலும் சமீபத்திய நிலையில் வைக்கப்படும், அவை பகிரப்படும்போதும் அப்படியே சேமித்து வைக்கப்பட்டிருக்கும்போதும் என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும். இந்த அம்சத்தை முடக்க, அமைப்புகள் > [உங்கள் பெயர்] > iCloud என்பதற்கு சென்று, “உடல்நலம்” என்பதைத் தட்டி அதை ஆஃப் செய்யவும்.
உங்கள் கணக்கை அகற்றுவதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் உடல்நலப் பதிவுகளைப் பெறுவதை நீங்கள் நிறுத்தலாம். அதைச் செய்ய, “உடல்நலம்” செயலியைத் திறந்து உலாவிப் பிரிவைத் தட்டி, உங்கள் சுயவிவரத்தைத் தட்டி, உடல்நலப் பதிவுகளைத் தட்டி, நீங்கள் அகற்ற விரும்பும் கணக்கைத் தேர்ந்தெடுத்து பிறகு “கணக்கை அகற்று” என்பதைத் தட்டவும். உங்கள் கணக்கை அகற்றினால், அந்தக் கணக்குடன் தொடர்புடைய பதிவுகள் உங்கள் சாதனத்தில் இருந்து நீக்கப்படும்.
நோயாளியின் உள்நுழைவுத் தகவல்கள் அல்லது உங்கள் உடல்நலப் பதிவுகளின் உள்ளடக்கத்தில் ஏதேனும் சிக்கல்களை எதிர்கொண்டால், உங்கள் மருத்துவச் சேவை வழங்குநரைத் தொடர்புகொள்ளவும்.
உங்கள் iPhone அல்லது iPadஇல் நீங்கள் பதிவிறக்கும் உடல்நலப் பதிவுகள் முழுமையான மருத்துவ வரலாற்றைப் பிரதிபலிக்காது. மேலும் அதிகாரப்பூர்வ உடல்நலப் பதிவுகளுக்கோ நிபுணர்களின் மருத்துவரீதியான முடிவுகளுக்கோ மாற்றாகப் பயன்படுத்தப்படாது. உங்கள் உடல்நலம் தொடர்பாக எந்த முடிவுகளையும் எடுப்பதற்கு முன்பு, மருத்துவச் சேவை வழங்குநருடன் நீங்கள் கலந்தாலோசிக்க வேண்டும்.
Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும், இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.
2025-12-12