வீட்டு மின்சாரம் மற்றும் தனியுரிமை
வீட்டு மின்சாரம் உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உங்கள் யுட்டிலிட்டி வழங்குநருடன் இணைந்து உருவாக்கப்பட்ட ஹோம் செயலி, வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவை எளிதாக அணுகவும், புரிந்துகொள்ளவும், சரியான முடிவுகளை எடுக்கவும் உதவுகிறது. உங்கள் யுட்டிலிட்டி கணக்கை ஹோம் செயலியுடன் இணைப்பதன் மூலம், குறைந்த மற்றும் அதிகமாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் காலங்கள் உட்பட காலப்போக்கில் உங்கள் வீட்டில் எவ்வளவு மின்சாரத்தை உபயோகிக்கிறீர்கள் என்பதையும் நீங்கள் பார்க்கலாம். உங்கள் வீட்டில் மேற்கூரை சோலாரைப் பயன்படுத்தினால், கிரிட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட உபரி ஆற்றல் குறித்த தகவல்களையும் ஹோம் செயலி வழங்கும்.
வீட்டு மின்சாரத்தை நீங்கள் அமைக்கும்போது யுட்டிலிட்டி கணக்கின் உள்நுழைவு விவரங்கள் மூலம் உள்நுழையலாம் அல்லது உங்கள் யுட்டிலிட்டி கணக்கை இணைக்க உங்கள் பெயர், தொடர்புத் தகவல்கள் போன்ற தகவல்களை வழங்கலாம். உங்கள் கணக்கு யுட்டிலிட்டி வழங்குநரால் அடையாளம் காணப்பட்டுச் சரிபார்க்கப்பட்டால், உங்கள் கணக்கு ID, சேவை இருப்பிட முகவரி, ஆற்றல் உபயோகத்திற்கான தொடக்கத் தேதி, ஆற்றல் மீட்டர் தொடர்பான தகவல்கள், நீங்கள் பயன்படுத்தும் யுட்டிலிட்டி திட்டங்கள் குறித்த தகவல்கள் போன்ற உங்கள் கணக்கு குறித்த தரவுகளை யுட்டிலிட்டி வழங்குநர் உங்கள் சாதனத்திற்கு அனுப்புவார். இந்தக் கணக்கிற்கான அமைவுத் தகவல்களை Appleஆல் அணுக முடியாது.
ஹோம் செயலியில் மின்சார உபயோகத்தைக் காட்ட, உங்கள் உபயோகத்தின் தொடக்க மற்றும் முடிவுத் தேதி, நீங்கள் உபயோகித்த மொத்த மின்சாரம், உங்கள் மீட்டருக்குத் தனிப்பட்ட முறையில் உருவாக்கப்பட்ட அடையாளத் தகவல், உங்கள் கடைசி பில்லிங் காலத்தில் மின்சாரத்திற்காக நீங்கள் செலவிட்ட மொத்தத் தொகை போன்ற உங்கள் மின்சார உபயோகம் மற்றும் பில்லிங் குறித்த தகவல்களை யுட்டிலிட்டி வழங்குநர் Appleக்கு அனுப்பும். இந்தத் தகவல்கள் Apple சர்வர்களில் தற்காலிகமாகச் சேமிக்கப்படும். இதன்மூலம் உங்களை அடையாளம் காணவோ உங்கள் தரவுகளை Apple கணக்குடன் இணைக்கவோ Appleஐ அனுமதிக்காது. ஹோம் செயலியில் காட்ட, உங்கள் மின்சார உபயோகத்தையும் பில்லிங் தகவல்களையும் உங்கள் சாதனம் அவ்வப்போது பதிவிறக்கும். உங்கள் மின்சார உபயோகமும் பில்லிங் தகவல்களும் உங்கள் சாதனத்தில் பாதுகாப்பாகச் சேமிக்கப்பட்டு இயக்கப்பட்டால், iCloudஇல் என்கிரிப்ட் செய்யப்படும்.
வீட்டு மின்சாரத்தை உபயோகிப்பதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம். அதைச் செய்ய, ஹோம் செயலியில் உள்ள “மேலும்” பட்டனைத் தட்டவும், பிறகு வீட்டு அமைப்புகள் > ஆற்றல் என்பதற்குச் சென்று, உங்கள் செயலிலுள்ள வழங்குநரைத் தட்டி பிறகு “கணக்கை இணைப்பு நீக்கு” என்பதைத் தட்டவும். உங்கள் கணக்கை அகற்றுவதன் மூலம், அந்தக் கணக்குடன் தொடர்புடைய பதிவுகள் உங்கள் சாதனங்களில் இருந்தும் Apple சர்வர்களில் இருந்தும் அக்கற்றப்படும்.
Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Apple இன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும், அதை www.apple.com/in/privacy தளத்தில் பார்க்கலாம்.
2025-12-12