iCloud பகுப்பாய்வுகள் & தனியுரிமை
“பகுப்பாய்வுகள்” அம்சம் உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உங்கள் Apple கணக்கின் பயன்பாடு மற்றும் தரவுகளைப் பகுப்பாய்வு செய்ய அனுமதிப்பதன் மூலம் Siri மற்றும் பிற நுண்ணறிவு அம்சங்கள் உள்ளிட்ட அதன் தயாரிப்புகளையும் சேவைகளையும் மேம்படுத்த Appleக்கு உதவுங்கள். உங்கள் Apple கணக்கின் தரவுகள் மீது செய்யப்படும் அனைத்துப் பகுப்பாய்வுகளும் வகையீட்டுத் தனியுரிமை போன்ற உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கும் நுட்பங்களைச் செயல்படுத்திய பின்னர் மட்டுமே மேற்கொள்ளப்படும், இதன்மூலம் அந்தத் தரவுகள் உங்களுடனோ உங்கள் கணக்குடனோ இணைக்கப்படாது, இதில் மின்னஞ்சல் செய்திகளில் இருந்து பெறப்படும் உரைத் துணுக்குகள் அல்லது உங்கள் கணக்கில் உள்ள இதுபோன்ற பிற தரவுகள் அடங்கும்.
iCloud பகுப்பாய்வுகளை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் முடக்கலாம். அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > பகுப்பாய்வுகள் & மேம்பாடுகள் என்பதற்குச் சென்று “iCloud பகுப்பாய்வுகளைப் பகிர்” என்பதைத் தட்டி இதை ஆஃப் செய்யுங்கள்.
Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும், இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.
2025-12-12