iCloud கீசெயின் & தனியுரிமை

iCloud கீசெயின் உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


iCloudஇல் நீங்கள் சேமிக்கும் இணையதளப் பயனர் பெயர்கள், பாஸ்வேர்டுகள், கிரெடிட் கார்டு எண்கள் மற்றும் காலாவதித் தேதிகளை iCloud கீசெயின் சேமிக்கிறது. iOS 7 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளில் இயங்கும் உங்கள் சாதனங்கள், OS X Mavericks (10.9) அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளில் இயங்கும் நீங்கள் அங்கீகரித்த உங்கள் Mac கம்ப்யூட்டர்கள் போன்றவற்றில் இந்தத் தகவல்களைப் புதுப்பித்த நிலையில் வைக்கிறது.

iCloud கீசெயினை ஆன் செய்திருக்கும்போது உங்கள் பயனர்பெயர், பாஸ்வேர்டு அல்லது கிரெடிட் கார்டு தகவலை உள்ளிட்டால் அவற்றைச் சேமித்து வைக்கவா என Safari தன்னிரப்பி அம்சம் உங்களைக் கேட்கும். சேமிக்கப்பட்ட பிறகு பயனர்பெயர், பாஸ்வேர்டு அல்லது கிரெடிட் கார்டு தகவல் தானாகவே நிரப்பப்படும் எனவே அவற்றை நீங்கள் மீண்டும் உள்ளிட வேண்டியதில்லை. Safari தன்னிரப்பி மற்றும் iCloud கீசெயின் உங்கள் கிரெடிட் கார்டு பாதுகாப்புக் குறியீட்டைச் சேமிக்காது. எடுத்துக்காட்டாக, Safariஇல் ஏதேனும் வாங்கும்போது நீங்கள் பயன்படுத்த விரும்பும் கிரெடிட் கார்டைத் தேர்ந்தெடுத்ததும் கிரெடிட் கார்டு எண் மற்றும் காலாவதித் தேதியை Safari தானாகவே நிரப்பும். இருப்பினும் வாங்குதலை முடிக்க நீங்கள் உங்கள் பாதுகாப்புக் குறியீட்டை உள்ளிட வேண்டும். Safariஇன் பாஸ்வேர்டு ஜெனரேட்டர் உங்கள் ஆன்லைன் கணக்குகளுக்குத் தனித்துவமான, எளிதில் கணிக்க முடியாத பாஸ்வேர்டுகளைப் பரிந்துரைத்து, இந்த பாஸ்வேர்டுகளைச் சேமிப்பதற்காக iCloud கீசெயினைப் பயன்படுத்தும். பேக்-அப்பிலிருந்து உங்கள் சாதனத்தை மீட்டெடுக்கிறீர்கள் எனில், iCloud கீசெயினைப் பயன்படுத்தி உங்கள் சேமிக்கப்பட்ட கணக்குகளில் தானாகவே உள்நுழையலாம். iCloud கீசெயினை அமைத்தல் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, support.apple.com/109016 தளத்திற்குச் செல்லுங்கள்.

உங்கள் சாதனங்களுக்கு அனுப்பப்படும்போதும் iCloudஇல் சேமிக்கப்படும்போதும் iCloud கீசெயின் என்கிரிப்ட் செய்யப்படுவதால் Appleஆல் அதைப் படிக்க முடியாது.

2025-12-12