Apple Pay & தனியுரிமையை மேம்படுத்துதல்
Apple Pay மற்றும் தொடர்புடைய அம்சங்களை உருவாக்கவும் மேம்படுத்தவும் Appleக்கு உதவ, Apple Pay மற்றும் உங்கள் நிதிக் கணக்குகளுடன் இணைத்துள்ள கார்டுகளின் பரிவர்த்தனை விவரங்களைச் சேமிக்க, Appleஐ Apple Pay அனுமதிக்கிறது.
நீங்கள் Apple Payஐ மேம்படுத்தத் தேர்வுசெய்தால், Apple Pay மற்றும் தொடர்புடைய அம்சங்களை உருவாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் உதவ, கீழே கொடுக்கப்பட்டுள்ள உங்கள் நிதிக் கணக்கு மற்றும் வாலெட்டில் உள்ள Apple பிராண்டட் கார்டுகளுடன் இணைக்கப்பட்ட கார்டுகளின் பரிவர்த்தனை மற்றும் கணக்கு விவரங்களை Apple பயன்படுத்தலாம். உதாரணமாக, Apple வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள வகையில் வணிகங்கள் சரியாக வகைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதைத் தீர்மானிக்க உதவ, வணிகர் பெயரையும் வகையையும் Apple மறுஆய்வு செய்யலாம்.
பரிவர்த்தனை மற்றும் கணக்கு விவரங்கள் உங்கள் சாதனத்தில் இருந்து நேரடியாக Appleக்கு அனுப்பப்பட்டது. Apple கணக்கு அடையாளங்காட்டி எதுவும் தகவலுடன் அனுப்பப்படவில்லை. உங்களை அடையாளங்காண பரிவர்த்தனை மற்றும் கணக்கு விவரங்கள் பயன்படுத்தப்படாது என்பதை உறுதிசெய்ய, Apple கூடுதல் பாதுகாப்புகளை அமைத்துள்ளது. உதரணமாக, பரிவர்த்தனை செய்யப்படும் துல்ல்லியமான நேரத்தை Apple கண்காணிக்காது. எனவே அடையாளாங்காணக்கூடிய நிகழநேர பரிவர்த்தனையுடன் மீண்டும் சேர்க்க அந்தத் துல்லியமான நேரத்தைப் பயன்படுத்த முடியாது. மேலும், வணிகங்கள் அல்லது நிதி நிறவனங்களால் சேர்க்கப்பட்ட வேறு ஏதெனும் அடையாளங்காட்டிகள் (உதாரணமாக, மின்னஞ்சல், ஃபோன்) பரிவர்த்தனை விவரங்களில் இருந்து அகற்றப்படுவதை உறுதிசெய்ய, கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
பின்வரும் விவரங்கள் Apple உடன் பகிரப்பட்டு சேமிக்கப்படுகின்றன:
- ரேண்டம் அடையாளங்காட்டி
- என்கோடு செய்யப்பட்ட அடையாளங்காட்டிகள் (உதாரணமாக, பரிவர்த்தனை எண்)
- பரிவர்த்தனை வகை (உதாரணமாக, டெபிட்/கிரெடிட், பரிமாற்றம்)
- பரிவர்த்தனை தொகை மற்றும் நாணயம்
- பரிவர்த்தனை தேதி
- பரிவர்த்தனை விளக்கம்
- பரிவர்த்தனை மற்றும்/அல்லது கணக்கு நிலை
- வணிகம் குறித்த தகவல (உதாரணமாக, பெயர், வகை)
- கணக்கு வகை மற்றும் நிலை
- கணக்கு இருப்புத் தொகை
- கணக்கு தொடர்பான விதிமுறைகள் (உதாரணமாக, வட்டி விகிதம்)
- நிதி நிறுவனம்
Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும், இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.
2025-12-12