உதவிகரமான குரல் கட்டுப்பாட்டு அம்சங்களை மேம்படுத்துதல் & தனியுரிமை குறித்த அறிமுகம்…
அனைத்து Apple தயாரிப்புகளிலும் அணுகல்தன்மை அம்சங்களை உருவாக்கவும் மேம்படுத்தவும் “குரல்வழிச் சுருக்கவழிகள்”, “குரல் கட்டுப்பாடு” போன்ற உதவிகரமான குரல் அம்சங்களுடனான தொடர்புமுறைகளில் இருந்து ஆடியோ உள்ளீட்டையும் டிரான்ஸ்கிரிப்ட்களையும் சேமித்து மதிப்பாய்வு செய்ய, உதவிகரமான குரல் கட்டுபாட்டு அம்சங்கள் Appleஐ அனுமதிக்கிறது.
நீங்கள் உதவிகரமான குரல் கட்டுப்பாட்டு அம்சங்களை மேம்படுத்த தேர்வுசெய்தால், குரல்வழிச் சுருக்கவழிகள், குரல் கட்டுப்பாடு போன்ற உதவிகரமான குரல் கத்துப்பாட்டு அம்சங்களுடன் ஆடியோவையும் உங்கள் தொடர்புமுறைகளின் டிரான்ஸ்கிரிப்ட்களையும் Apple சேகரிக்கும். ஆடியோ உள்ளீடு, நீங்கள் பயன்படுத்தும் அம்சங்கள், சாதனம் மற்றும் ஆபரேட்டிங் சிஸ்டத்திற்கான விவரக்குறிப்புகள் ஆகியவற்றுக்கு AirPods அல்லது iPhoneஐப் பயன்படுத்துகிறீர்களா என்பது உள்ளிட்ட கூடுதல் தகவலை Apple சேகரிக்கும்.
சேகரிக்கப்பட்ட தரவுகள் உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்படவில்லை, அதற்குப் பதிலாக, இது ரேண்டமாக சுழலும் சாதனத்தால் உருவாக்கப்பட்ட அடையாளங்காட்டிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. உதவிகரமான பேச்சுக் கட்டுப்பாட்டு அம்சங்களின் செயல்திறனையும் துல்லியத்தன்மையையும் பகுப்பாய்வு செய்யவும் மேம்படுத்தவும் உங்கள் தொடர்புமுறைகளின் சிறு பகுதி மதிப்பீட்டாளர்களால் மதிப்பாய்வு செய்யப்படலாம். தீவிரமான இரகசியப் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்கும் Apple பணியாளர்களால் மட்டுமே ஆடியோ உரையாடல்களை அணுக முடியும்.
குரல்வழிச் சுருக்கவழிகள், குரல் கட்டுப்பாடு மற்றும் பிற அணுகல்தன்மை அம்சங்களை உருவாக்கவும் மேம்படுத்தவும், அத்துடன் Siri உட்பட பிற Apple அம்சங்களிலம் அணுகல்தன்மையை மேம்படுத்தவும், சேகரிக்கப்பட்ட தகவலை Apple பயன்படுத்தும். உங்கள் தொடர்புமுறைகள் இரண்டு ஆண்டுகள் வரை தக்கவைக்கப்பட்டு பயன்படுத்தப்படலாம். மதிப்பாய்வு செய்யப்ட்ட தொடர்புமுறை தரவுகளின் சிறு பகுதி இந்தத் தயாரிப்புகளையும் அம்சங்களையும் தொடர்ந்து மேம்படுத்துவதற்காக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் தக்கவைக்கப்படக்கூடும்.
உதவிகரமான குரல் கட்டுப்பாட்டு அம்சங்களை மேம்படுத்துவதற்கான உங்கள் அமைப்பை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் மாற்றலாம். உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில் அதைச் செய்ய, அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > பகுப்பாய்வுகள் & மேம்பாடுகள் என்பதற்குச் சென்று “உதவிகரமான குரல் கட்டுப்பாட்டு அம்சங்களை மேம்படுத்து” என்பதைத் தட்டி ஆஃப் செய்யவும். Macஇல், சிஸ்டம் அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > பகுப்பாய்வுகள் & மேம்பாடுகள் என்பதற்குச் சென்று “உதவிகரமான குரல் கட்டுப்பாட்டு அம்சங்களை மேம்படுத்து” என்பதைக் கிளிக் செய்து இதை ஆஃப் செய்யலாம்.
2025-12-12