தகவல்தொடர்புப் பாதுகாப்பை மேம்படுத்துதல் & தனியுரிமை
உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் “தகவல்தொடர்புப் பாதுகாப்பு” அம்சத்தை மேம்படுத்துதல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நீங்கள் தகவல்தொடர்புப் பாதுகாப்பை மேம்படுத்தத் தேர்வுசெய்தால், அம்சத்தின் செயல்திறனை மேம்படுத்தவும் புரிந்துகொள்ளவும் தகவல்தொடர்புப் பாதுகாப்பு எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்த தரவுகளை Apple சேகரிக்கும். இந்தத் தகவல் ஒருங்கிணைக்கப்பட்டு, வகையீட்டுத் தனியுரிமை போன்ற தனியுரிமையைப் பாதுகாக்கும் வழிமுறைகளுக்கு உட்பட்டது. இது உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்படவில்லை அல்லது நீங்கள் பயன்படுத்தும் பிற சேவைகளில் இருந்து Apple வைத்திருக்கும் தரவுகள் எதுவும் இல்லை.
சேகரிக்கப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட தரவுகளின் உதாரணங்கள்:
- அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட அனைத்து புகைப்படங்கள் அல்லது வீடியோக்களின் சதவீதம் வெளிப்படையானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது
- “உதவி பெறுவதற்கான வழிகள்” என்பதில் உள்ள தட்டல்கள் அல்லது கிளிக்குகளின் எண்ணிக்கை
- தகவல்தொடர்புப் பாதுகாப்பு விருபங்களில் உள்ள தட்டல்கள் அல்லது கிளிக்குகளின் சதவீதம்
உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில் அமைப்புகள் > ஸ்கிரீன் டைம் > தகவல்தொடர்புப் பாதுகாப்பு என்பதற்குச் சென்றோ Macஇல் சிஸ்டம் அமைப்புகள் > ஸ்கிரீன் டைம் > தகவல்தொடர்புப் பாதுகாப்பு என்பதற்குச் சென்றோ எப்போது வேண்டுமானாலும் “தகவல்தொடர்புப் பாதுகாப்பு” அம்சத்தை மேம்படுத்துதலை ஆஃப் செய்யலாம்.
Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும், இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.
2025-12-12