EV வழிப் பரிந்துரைகளை மேம்படுத்துதல் & தனியுரிமை

“EV வழிப் பரிந்துரைகளை மேம்படுத்துதல்” அம்சம் உங்கள் தகவலைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


EV வழிப் பரிந்துரை மேம்படுத்துதலை இயக்குவதற்கு நீங்கள் தேர்வுசெய்தால், பின்வரும் தகவலை Apple சேகரிக்கலாம்:

  • உங்கள் வழியில் பேட்டரி சார்ஜ் நிறுத்தம் சேர்க்கப்பட்டிருந்தால்
  • உங்கள் வழியில் எந்த இடத்திலும் பேட்டரி சதவீதம் மொத்தமும் காலியானால்
  • உங்கள் பேட்டரியின் மீதமுள்ள சதவீதம்
  • உங்கள் வாகனத்தின் தற்போதைய பேட்டரி திறன் மற்றும் அதிகபட்ச பேட்டரி திறன்
  • உங்கள் வழியில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி சார்ஜ் நிறுத்தத்தில் வாகனம் சார்ஜ் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்
  • உங்கள் வாகனத்தின் மீதமுள்ள மற்றும் அதிகபட்ச பயண வரம்பு
  • உங்கள் வாகனம் எவ்வளவு ஆற்றலைப் பயன்படுத்துகிறது என்பது குறித்த தரவுகள்
  • நீங்கள் சேரும் இடத்திற்கு எதிர்பார்க்கப்படும் நேரம் உட்பட உங்கள் வழி குறித்த தகவல்

இது எங்கள் பேட்டரி சார்ஜ் மதிப்பீடுகளின் துல்லியத்தன்மையை மதிப்பிடுவதற்கு Appleஐ அனுமதிக்கும். EV வழிப் பரிந்துரைகளையும் Appleஇன் பிற இருப்பிடம் சார்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளையும் மேம்படுத்த, பெயரிடப்படாத வடிவத்தில் மட்டுமே இந்தத் தரவுகளை Apple தக்கவைக்கும். “EV வழிப் பரிந்துரைகளை மேம்படுத்தல்” அம்சத்தை, அமைப்புகள் > செயலிகள் > மேப்ஸ் > “EV வழிப் பரிந்துரைகளை மேம்படுத்துதல்” என்பதற்குச் சென்று எப்போது வேண்டுமானாலும் ஆஃப் செய்யலாம்.

2025-12-12