Fitness+ சேவையை மேம்படுத்துதல் & தனியுரிமை

“Fitness+ சேவையை மேம்படுத்துதல்” உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Apple Fitness+ அம்சங்கள் மற்றும் உடற்பயிற்சிகளின் செயல்திறனை உருவாக்குவதற்கும், மேம்படுத்துவதற்கும், புரிந்துகொள்வதற்கும் உடற்பயிற்சி தலைப்புகள் மற்றும் பயிற்சியாளர்கள் உட்பட உங்கள் உடற்பயிற்சி குறித்த கூடுதல் தகவல்களை Appleக்கு “Fitness+ சேவையை மேம்படுத்துதல்” அம்சம் அனுப்பும். உங்கள் தரவுகள் வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படாது. பெயர் அல்லது பயிற்சியாளர் போன்ற உடற்பயிற்சி விவரங்கள் உங்கள் உடற்பயிற்சி பற்றிய அதிமுக்கியத் தகவல்களை வெளிப்படுத்தக்கூடும், அதாவது நீங்கள் செய்வது கர்ப்பகால உடற்பயிற்சி என்பது போன்ற தகவல்கள். உடல்நலம் மற்றும் செயல்பாடு தொடர்பான சென்சார்களின் தரவுகள் (உங்கள் இதயத்துடிப்பு, கலோரிகள் அல்லது கிலோஜூல்கள்) இந்தத் தகவல்களில் சேர்க்கப்படவில்லை. உங்களின் Apple கணக்குடன் இணைக்கப்படாத Apple Fitness+க்கான ரேண்டம் அடையாளத் தகவலைப் பயன்படுத்தி, உங்கள் “Fitness+ சேவையை மேம்படுத்துதல்” அம்சத்தின் தரவுகள் உங்களின் பிற Fitness+ தரவுகளுடன் சேர்க்கப்படும்.

Fitness+ சேவையை மேம்படுத்துதல் அம்சத்தை எப்போது வேண்டுமானாலும் முடக்கலாம். அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > பகுப்பாய்வுகள் & மேம்பாடுகள் என்பதற்குச் சென்று “Fitness+ சேவையை மேம்படுத்துதல்” என்பதைத் தட்டி இதை ஆஃப் செய்யுங்கள்.

“Fitness+ சேவையை மேம்படுத்துதல்” அம்சத்தை இயக்குவதன் மூலம் Apple, அதன் துணை நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் மேலே விவரிக்கப்பட்டுள்ளவாறு இந்தத் தகவல்களைப் பரிமாற்றம் செய்வது, சேகரிப்பது, பராமரிப்பது, செயலாக்குவது, பயன்படுத்துவது மற்றும் வெளியிடுவதை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வழங்குகிறீர்கள். இந்தத் தகவல்களை நம்பகமான சேவை வழங்குநர்கள் மூலம் Apple சேமிக்கக்கூடும்.

Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும், இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.

2025-12-12