கைகழுவுதல் செயல்பாட்டை மேம்படுத்துதல் & தனியுரிமை
கைகழுவுதல் செயல்பாட்டை மேம்படுத்துதல் அம்சம் உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கைகழுவுதல் அம்சத்தைப் பயன்படுத்துவதன் ஒரு பகுதியாக உங்கள் Apple Watch மூலம் சேகரிக்கப்பட்ட குறிப்பிட்ட தகவல்களைக் “கைகழுவுதல் செயல்பாட்டை மேம்படுத்துதல்” அம்சம் அனுப்பும். சேகரிக்கப்பட்ட தகவல்களில், குறிப்பிட்ட நகர்வுத் தரவுகள், நீங்கள் வழங்கும் கருத்து, செயலாக்கப்பட்ட சில ஆடியோ தரவுகள் ஆகியவை அடங்கும். இந்தத் தகவல்களைப் பகிர நீங்கள் தேர்வுசெய்தால், இவை Apple பணியாளர்களால் மட்டுமே மதிப்பாய்வு செய்யப்படும். மேலும் கைகழுவுதல் அம்சத்தை உருவாக்கவும், மேம்படுத்தவும், அதன் செயல்திறனைப் புரிந்துகொள்ளவும் பயன்படுத்தப்படும். வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படாது. இந்தத் தகவல்கள் உங்கள் Apple கணக்குடனோ பிற Apple சேவைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட வேறு எந்தத் தரவுகளுடனோ இணைக்கப்படாது.
கைகழுவுதல் செயல்பாட்டை மேம்படுத்துதல் அம்சத்தின் ஒரு பகுதியாகச் சேகரிக்கப்படும் தகவல்களில், குறிப்பிட்ட அசல் நகர்வுத் தரவுகள் (அக்சிலரோமீட்டர் தரவுகள் போன்றவை), அம்சத்தை நீங்கள் பயன்படுத்தும் விதம் (கைகழுவுதல் தொடர்பான அறிவிப்புகளுக்கு உங்கள் பதில் போன்றவை), அடையாளம் காணக்கூடிய பேச்சின் பெரும்பாலான தரவுகளை அகற்ற இந்த அம்சம் இயக்கப்பட்டு, சாதனத்தில் செயலாக்கப்படும்போது உங்கள் Apple Watch மூலம் சேகரிக்கப்படும் சில செயலாக்கப்பட்ட ஆடியோ தரவுகள் ஆகியவை அடங்கும்.
கைகழுவுதல் செயல்பாட்டை உங்கள் Apple Watch கண்டறியும்போது சேகரிக்கப்படும் ஆடியோ கோப்புகள் 60 விநாடிகளுக்குள் இருக்கும். அடையாளம் காணக்கூடிய பேச்சைக் கொண்டிருக்கும் ஆடியோவை Apple கண்டறிந்தால் அதை உடனடியாக நீக்கிவிடும்.
கைகழுவுதல் செயல்பாட்டை மேம்படுத்துதல் அம்சத்தின் ஒரு பகுதியாக வழங்கப்பட்ட அனைத்துத் தகவல்களும் பகிரப்படும்போதும் உங்கள் சாதனத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்போதும் என்கிரிப்ட் செய்யப்படும்.
கைகழுவுதல் செயல்பாட்டை மேம்படுத்துதல் அம்சத்தை இயக்குவதன் மூலம், Apple மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் மேலே விவரிக்கப்பட்டுள்ளவாறு இந்தத் தகவல்களைப் பரிமாற்றம் செய்வது, சேகரிப்பது, பராமரிப்பது, செயலாக்குவது மற்றும் பயன்படுத்துவதை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வழங்குகிறீர்கள். இந்தத் தகவல்களை நம்பகமான மூன்றாம் தரப்புச் சேவை வழங்குநர்கள் மூலம் Apple சேமிக்கக்கூடும். Apple உடன் தரவைப் பகிர்வதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம். அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > பகுப்பாய்வுகள் & மேம்பாடுகள் என்பதற்குச் சென்று “கைகழுவுதல் செயல்பாட்டை மேம்படுத்துதல்” என்பதைத் தட்டி இதை ஆஃப் செய்யுங்கள்.
Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும், இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.
2025-12-12