உடல்நலப் பதிவுகளை மேம்படுத்துதல் & தனியுரிமை
“உடல்நலப் பதிவுகளை மேம்படுத்துதல்” அம்சம் உடல்நலப் பதிவுகளையும் அது தொடர்பான அம்சங்களையும் உருவாக்குவதற்கும், மேம்படுத்துவதற்கும், புரிந்துகொள்வதற்கும் Appleக்கு உதவ, உடல்நலப் பதிவுகள், அது தொடர்பான அம்சங்களுடனான உங்கள் உபயோகம் மற்றும் ஈடுபாடு குறித்த சில தகவல்களை உங்கள் iPhone மற்றும் iPadஇல் இருந்து தானாகவே Appleக்கு அனுப்புகிறது. உங்கள் தரவுகள் வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படாது.
“உடல்நலப் பதிவுகளை மேம்படுத்துதல்” அம்சத்தின் ஒரு பகுதியாகப் பெறப்பட்ட தகவல்களில், உங்கள் உடல்நலப் பதிவுகளில் உள்ள குறிப்பிட்ட தகவல்கள் (உங்கள் நிலைமைகள், மருந்துகள், உயிர்க்கூறு அளவீடுகள், நோய்த்தடுப்பு மருந்துகள், ஆய்வக முடிவுகள், செயல்முறைகள், சரிபார்க்கக்கூடிய உடல்நலப் பதிவுகளின் தரவுகள் உட்பட உடல்நலம் செயலியில் உள்ள உடல்நலப் பிரிவுக்குக் கீழே பதிவிறக்கப்பட்டுச் சேமிக்கப்பட்ட பிற உடல்நலப் பதிவுகள் போன்றவை), நீங்கள் இயக்கியுள்ள உடல்நலப் பதிவுகள் அம்சங்கள் மற்றும் அவற்றுடனான உங்களின் ஈடுபாடு பற்றிய தகவல்கள் (உங்கள் உடல்நலப் பதிவுகளின் பரிமாற்றம் தொடர்பான பகுப்பாய்வுகள் தரவுகள், அதன் ஆதாரத்தையும் சேர்த்து) ஆகியவை அடங்கும். பகுப்பாய்வுகளுக்காக Appleக்கு உங்கள் தகவல்களை அனுப்புவதற்கு முன்பு, உங்கள் பெயர் அல்லது ஃபோன் எண் போன்ற உங்களைத் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணும் தரவுகளை அகற்ற அவை செயலாக்கப்படும். உங்களைத் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய அனைத்துத் தகவல்களையும் அகற்றும் நோக்கத்தில் இந்தச் செயல்முறை மேற்கொள்ளப்படுவதால் Apple உங்களை அடையாளம் காணக்கூடிய தகவல்களைப் பெற வாய்ப்புள்ளது. தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தரவு ஏதேனும் கண்டறியப்பட்டால், அதை உடனடியாக நீக்கிவிடும்.
பகிரப்படும்போதும் அப்படியே இருக்கும்போதும் Appleக்கு அனுப்பப்படும் அனைத்துத் தகவல்களும் என்கிரிப்ட் செய்யப்படும்.
“உடல்நலப் பதிவுகளை மேம்படுத்துதல்” அம்சத்தை இயக்குவதன் மூலம், Apple, அதன் துணை நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் மேலே விவரிக்கப்பட்டுள்ளவாறு இந்தத் தகவல்களைப் பரிமாற்றம் செய்வது, சேகரிப்பது, பராமரிப்பது, செயலாக்குவது மற்றும் பயன்படுத்துவதை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வழங்குகிறீர்கள். இந்தத் தகவல்களை நம்பகமான மூன்றாம் தரப்புச் சேவை வழங்குநர்கள் மூலம் Apple சேமிக்கக்கூடும். உடல்நலத் தரவுகளைப் பகிர்வதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம். அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > பகுப்பாய்வுகள் & மேம்பாடுகள் என்பதற்குச் சென்று “உடல்நலப் பதிவுகளை மேம்படுத்துதல்” என்பதைத் தட்டி இதை ஆஃப் செய்யலாம்.
Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும், இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.
2025-12-12