பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துதல் & தனியுரிமை
பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துதல் உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துதல், ஆதரிக்கப்படும் அல்காரிதங்கள் உட்பட பாதுகாப்பு அம்சங்களை உருவாக்குவதற்கும், மேம்படுத்துவதற்கும், செயல்திறனைப் புரிந்துகொள்வதற்கும் உங்கள் iOS சாதனம் மற்றும் Apple Watchஇல் இருந்து பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் மூலம் பெறப்பட்ட தகவல்களை Appleக்கு அனுப்பும். இதில் அசல் சென்சார் தரவுகள், பாதுகாப்பு தொடர்பான சென்சார்களில் இருந்து பெறப்பட்ட தகவல்கள், இந்த அம்சங்களின் உங்கள் உபயோகம் குறித்த தகவல்கள் ஆகியவை அடங்கும். உங்கள் தரவுகள் வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படாது, இதில் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்கள் இருக்காது.
பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதன் ஒரு பகுதியாக சேகரிக்கப்படும் தகவல்களில், உங்கள் இருப்பிடம் தொடர்பான தகவல்கள், பாதுகாப்பு விழிப்பூட்டல்கள், இந்த அம்சங்களுடன் உங்கள் தொடர்புமுறைகள் போன்ற எங்கள் பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் மற்றும் சென்சார்களில் இருந்து பெறப்பட்ட குறிப்பிட்ட தரவுகளும் இதிலடங்கும். உதாரணமாக, விபத்துக் கண்டறிதல் அம்சத்திற்கு, மோசமான விபத்து நிகழ்ந்துள்ளதா என்பதைக் கண்டறிய பயன்படுத்தப்படும் தரவுகளில் இயக்கத் தரவுகள் (ஆக்சலரோமீட்டர், கைரோஸ்கோப், பாரோமெட்ரிக் அழுத்தம் மற்றும் மேக்னோமீட்டர சென்சார் தரவுகள் போன்றவை), டிரைவிங் தகவல் மற்றும் செயல்பாடு (பொதுவான பயண திசை, டிரைவிங் செய்த நேரம் மற்றும் வேகம் தொடர்பான தகவல்கள் போன்றவை) மற்றும் கண்டறியப்பட்ட விபத்துடன் தொடர்புடைய, முந்தைய மற்றும் பெறப்பட்ட பிற தகவல்கள் (விபத்து நடந்த தோராயமான இருப்பிடம் மற்றும் நேரம், சூரியத் திசை மற்றும் சுற்றுப்புற ஒலி வெளிப்பாடு நிலைகள் போன்றவை) ஆகியவை அடங்கக்கூடும்.
உங்கள் தோராயமான வயது மற்றும் பாலினம் போன்ற நீங்கள் உள்ளிடும் சில தகவல்களையும், நிகழ்வின்போது உங்கள் சாதனத்தின் நிலை பற்றிய தகவல்களையும் Apple சேகரிக்கலாம், அதாவது Wi-Fi அல்லது மொபைல் சேவையின் சிக்னல், பதிப்பு, மென்பொருள் பதிப்பு மற்றும் உங்கள் Watch போன்ற மற்றொரு Apple சாதனத்துடன் இந்தச் சாதனம் இணைக்கப்பட்டுள்ளதா என்ற தகவல்களும் இதில் அடங்கும்.
மூன்றாம் தரப்பு இயக்கம், குறிப்பிட்ட பாதுகாப்பு அம்சத்தைப் பயன்படுத்தியதின் முடிவாக அவசர அழைப்பு மேற்கொள்ளப்பட்டது மற்றும் அது எப்படிச் செயலாக்கப்பட்டது என்பன உட்பட உங்கள் சுற்றுச்சுழல், சாதனங்களுக்கு இடையிலான தொடர்புமுறைகள், எவ்வளவு நேரம் அம்சம் பயன்படுத்தப்பட்டது, பாதுகாப்பு தொடர்பான அறிவிப்புகள், செயலி, அமைப்புகள், அம்சங்களுடனான உங்கள் ஈடுபாடு ஆகியவை குறித்த தகவல்களையும் Apple பெறக்கூடும். மேலே உள்ள தரவுகள் அனைத்தும் Appleக்கு அனுப்பப்படுவதற்கு முன் உங்கள் iOS சாதனம் மற்றும் Apple Watch மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுப் பகுப்பாய்வு செய்யப்படக்கூடும்.
பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதை இயக்குவதன் மூலம், Apple மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் மேலே விவரிக்கப்பட்டுள்ளவாறு இந்தத் தகவல்களைப் பரிமாற்றம் செய்வது, சேகரிப்பது, பராமரிப்பது, செயலாக்குவது, பயன்படுத்துவது மற்றும் வெளியிடுவதை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வழங்குகிறீர்கள். இந்தத் தகவல்களை நம்பகமான மூன்றாம் தரப்புச் சேவை வழங்குநர்கள் மூலம் Apple செயலாக்கிச் சேமிக்கக்கூடும்.
பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துதலை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் முடக்கலாம். அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > பகுப்பாய்வுகள் & மேம்பாடுகள் என்பதற்குச் சென்று “பாதுகாப்பை மேம்படுத்துதல்” என்பதைத் தட்டி இதை ஆஃப் செய்யுங்கள்.
Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும், இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.
2025-12-12