உணர்வைப் பாதிக்கும் உள்ளடக்க எச்சரிக்கை மேம்பாடு & தனியுரிமை
“உணர்வைப் பாதிக்கும் உள்ளடக்க எச்சரிக்கை மேம்பாடு” அம்சம் உங்கள் தகவலைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
“உணர்வைப் பாதிக்கும் உள்ளடக்க எச்சரிக்கை மேம்பாடு” அம்சத்தை நீங்கள் தேர்ந்தெடுத்தால், அம்சத்தின் செயல்திறனை மேம்படுத்தவும் புரிந்துகொள்ளவும் உணர்வைப் பாதிக்கும் உள்ளடக்க எச்சரிக்கை எப்படிப் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்த தரவுகளை Apple சேகரிக்கும். இந்தத் தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, வகையீட்டுத் தனியுரிமை போன்ற தனியுரிமையைப் பாதுகாக்கும் வழிமுறைகளுக்கு உட்பட்டுச் சேமிக்கப்படும். இது உங்கள் Apple கணக்கு அல்லது நீங்கள் பயன்படுத்தும் பிற சேவைகளில் இருந்து Apple சேமித்திருக்கக்கூடிய பிற தரவுகளுடன் இணைக்கப்படாது.
சேகரிக்கப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட தரவுகளின் உதாரணங்களில் இவையும் அடங்கும்:
- பெறப்பட்ட மொத்தப் படங்கள் அல்லது வீடியோக்களின் எண்ணிக்கை வெளிப்படையானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது
- “உதவி பெறுவதற்கான வழிகள்” என்பதில் செய்த தட்டல்கள் அல்லது கிளிக்குகளின் எண்ணிக்கை
- உணர்வைப் பாதிக்கும் உள்ளடக்க எச்சரிக்கை விருப்பங்களில் செய்த தட்டல்கள் அல்லது கிளிக்குகளின் சதவீதம்
உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில் அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > “உணர்வைப் பாதிக்கும் உள்ளடக்க எச்சரிக்கை” என்பதற்குச் சென்றோ Macஇல் சிஸ்டம் அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > ”உணர்வைப் பாதிக்கும் உள்ளடக்க எச்சரிக்கை” என்பதற்குச் சென்றோ எப்போது வேண்டுமானாலும் “உணர்வைப் பாதிக்கும் உள்ளடக்க எச்சரிக்கை மேம்பாடு” அம்சத்தை ஆஃப் செய்யலாம். Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும், இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.
2025-12-12