Siri மற்றும் டிக்டேஷனை மேம்படுத்துதல் & தனியுரிமை

“Siri மற்றும் டிக்டேஷனை மேம்படுத்துதல்” அம்சம், Siri, டிக்டேஷன், மொழிபெயர்ப்பு அல்லது குரல் கட்டுப்பாடு போன்ற குறிப்பிட்ட பிற மொழி செயலாக்க அம்சங்கள் ஆகியவற்றை Apple உருவாக்கவும் மேம்படுத்தவும் உதவ, Siri, டிக்டேஷன் ஆகியவற்றுடனான ஆடியோ உரையாடல்களின் மாதிரியைச் சேமித்து பணியாளர்களால் மதிப்பாய்வு செய்யப்பட Appleஐ அனுமதிக்கிறது.
 

“Siri மற்றும் டிக்டேஷனை மேம்படுத்துதல்” அம்சம், Siri, டிக்டேஷன், மொழிபெயர்ப்பு அல்லது குரல் கட்டுப்பாடு போன்ற குறிப்பிட்ட பிற மொழி செயலாக்க அம்சங்கள் ஆகியவற்றை Apple உருவாக்கவும் மேம்படுத்தவும் உதவ, Siri, டிக்டேஷன், மொழிபெயர்ப்பு ஆகியவற்றுடனான ஆடியோ உரையாடல்களின் மாதிரியைச் சேமித்து பணியாளர்களால் மதிப்பாய்வு செய்யப்பட Appleஐ அனுமதிக்கிறது.


Siri மற்றும் டிக்டேஷன்

Siri மற்றும் டிக்டேஷன் அம்சத்தை மேம்படுத்த நீங்கள் தேர்வுசெய்தால், Siri மற்றும் டிக்டேஷன் அம்சத்துடன் நீங்கள் உரையாடியவற்றின் ஆடியோவை Apple சேமிக்கலாம். ஆடியோ தரவு, டிரான்ஸ்கிரிப்ட்கள், தொடர்புடைய கோரிக்கைத் தரவு (எ.கா. கோரிக்கையின் வகை), சாதனத்தின் விவரக்குறிப்புகள், செயல்திறன் புள்ளிவிவரங்கள், கோரிக்கையைச் செய்த நேரத்தில் உங்கள் சாதனத்தின் தோராயமான இருப்பிடம் போன்றவை Apple தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் Siri, டிக்டேஷன், தேடல் மற்றும் வேறு சில குறிப்பிட்ட மொழிச் செயலாக்கங்களை உருவாக்கவும் மேம்படுத்தவும் பயன்படுத்தப்படலாம். உதாரணத்திற்கு, Siri, தேடல், குரல் கட்டுப்பாடு, மொழிபெயர்ப்பு, தானியங்குப் பேச்சறிதல் மாடல்கள் போன்றவற்றை மேம்படுத்த டிரான்ஸ்கிரிப்ட்கள் பயன்படுத்தப்படலாம். இந்தத் தரவின் சிறுபகுதி மதிப்பீட்டாளர்களால் மதிப்பாய்வு செய்யப்படலாம். ஆடியோ உடனான மதிப்பாய்வு Apple பணியாளர்களால் மட்டுமே செய்யப்படும்.

உங்கள் ஆடியோ தரவு, டிரான்ஸ்கிரிப்ட்கள் தொடர்புடைய கோரிக்கைத் தரவுகள் ஆகியவற்றுடன் சேர்த்து நீங்கள் இதுவரை செய்த கோரிக்கைகள் ஒரு மணிநேரத்திற்குப் பலமுறை மாறக்கூடிய, சாதனத்தால் உருவாக்கப்பட்ட சீரற்ற அடையாளத் தகவலுடன் இணைக்கப்பட்டிருக்கும், அவை உங்கள் Apple கணக்கு அல்லது மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்புபடுத்தப்படாது. Apple இந்தத் தரவுகளை இரண்டு ஆண்டுகள் வரை தக்கவைக்கக்கூடும் மற்றும் பயன்படுத்தக்கூடும். Siri, டிக்டேஷன், தேடல், மொழிச் செயலாக்கத்தின் வரம்பிடப்பட்ட பிற அம்சங்கள் போன்றவற்றின் தொடர் மேம்பாட்டிற்காக மறுஆய்வு செய்யப்பட்ட உரையாடல்களின் சிறுபகுதி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகச் சேமித்து வைக்கப்படலாம்.

இதுவரையிலான உங்கள் Siri மற்றும் டிக்டேஷன் உரையாடல்கள் உங்கள் சாதனத்தில் சேமிக்கப்பட்டு, உங்கள் Siri அனுபவத்தைத் தனிப்பயனாக்கப் பயன்படுத்தப்படலாம்.

இதுவரை நீங்கள் செய்த கோரிக்கைகள் சந்தைப்படுத்தல் சுயவிவரத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படாது. ஒருபோதும் எவருக்கும் விற்பனை செய்யப்படாது.

உங்கள் Siri அல்லது டிக்டேஷன் உரையாடல்களில் ஒன்று மதிப்பாய்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால், கோரிக்கையும் Siri வழங்கிய பதிலும் அவற்றின் துல்லியத்தைத் தீர்மானிக்கவும், Apple தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் Siri, டிக்டேஷன், தேடல் மற்றும் வரம்பிடப்பட்ட பிற மொழிச் செயலாக்கச் செயல்பாடுகளை மேம்படுத்தவும் பகுப்பாய்வு செய்யப்படும். உங்கள் கோரிக்கையின் சூழலைப் பொறுத்து, Siri வழங்கிய பதிலின் செயல்திறனை மதிப்பிட உங்கள் கோரிக்கையுடன் நேரடித் தொடர்புடைய கூடுதல் சூழல் தரவுகளை (உங்கள் தொடர்புகளின் பெயர்கள் அல்லது உங்கள் சாதனத்தில் நிறுவப்பட்டுள்ள செயலிகள் போன்றவை) அதன் மதிப்பீட்டாளர் அணுகக்கூடும். உங்கள் Siri மற்றும் டிக்டேஷன் உடனான ஆடியோ உரையாடல்களைக் கடுமையான இரகசியத்தன்மை பாதுகாப்புக்கு இணங்க Apple பணியாளர்கள் மட்டுமே அணுக முடியும். Siri மற்றும் டிக்டேஷனை மேம்படுத்துவதற்கான உங்கள் அமைப்பை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் மாற்றலாம். அதைச் செய்ய, அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > பகுப்பாய்வுகள் & மேம்பாடுகள் என்பதற்குச் செல்லுங்கள்.

அமைப்புகள் > Siri > “Siri & டிக்டேஷன் வரலாறு” என்பதற்குச் சென்று “Siri & டிக்டேஷன் வரலாற்றை நீக்கு” என்பதைத் தட்டுவதன் மூலம் உங்கள் சாதனத்தில் சேமிக்கப்பட்டுள்ள Siri & டிக்டேஷன் கோரிக்கைகளின் டிரான்ஸ்கிரிப்ட்களை நீக்கலாம்.

அமைப்புகள் > பொது அமைப்புகள் > கீபோர்டு என்பதற்குச் சென்று “டிக்டேஷனைச் செயல்படுத்து” என்பதைத் தட்டி ஆஃப் செய்வதன் மூலம் “Siri மற்றும் டிக்டேஷன்” அம்சத்தை முடக்கலாம். பிறகு, அமைப்புகள் > Siri > “Siri உடன் பேசுதல்” என்பதற்குச் சென்று ஆஃப் என்பதைத் தட்டவும். அதன் பிறகு, அமைப்புகள் > Siri என்பதற்குச் சென்று “Siriக்காக முகப்பை அழுத்துதல்”, “Siriஐ இயக்க பக்கவாட்டு பட்டனை அழுத்துதல்” ஆகியவற்றில் ஒன்றைத் தட்டி ஆஃப் செய்யவும். Siri மற்றும் டிக்டேஷனை முடக்கினால், உங்கள் சாதனத்தில் சேமிக்கப்பட்டு உங்கள் அனுபவத்தைத் தனிப்பயனாக்கப் பயன்படுத்தப்படும் உங்கள் Siri மற்றும் டிக்டேஷன் கோரிக்கைகளின் டிரான்ஸ்கிரிப்ட்கள் நீக்கப்படும்.

மொழிபெயர்ப்பு

Siri மற்றும் டிக்டேஷன் மேம்படுத்தலைத் தேர்வுசெய்தால், உங்கள் ஆடியோ, வார்த்தை உள்ளீடு, சாதனத்தால் உருவாக்கப்படும் சீரற்ற, மாறக்கூடிய அடையாளத் தகவல்களுடன் தொடர்புடைய உங்களின் மொழிபெயர்ப்புக் கோரிக்கைகளுக்கான டிரான்ஸ்கிரிப்ட்கள் போன்றவை Apple தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் Siri, டிக்டேஷன், மொழிபெயர்ப்பு, வரம்பிடப்பட்ட பிற மொழிச் செயலாக்கச் செயல்பாடுகள் போன்றவற்றை உருவாக்கவும் மேம்படுத்தவும் மதிப்பாய்வு செய்யப்பட்டுச் சேமிக்கப்படலாம்.

Siri, டிக்டேஷன், மொழிபெயர்ப்பு, வேறு சில குறிப்பிட்ட மொழிச் செயலாக்கங்களை உருவாக்கவும் மேம்படுத்தவும் Appleக்கு உதவ, உங்களின் மொழிபெயர்ப்புக் கோரிக்கைகள் இரண்டு ஆண்டுகள் வரை தக்கவைக்கப்படலாம். உதாரணத்திற்கு, Siri, தேடல், குரல் கட்டுப்பாடு, மொழிபெயர்ப்பு, தானியங்குப் பேச்சறிதல் மாடல்கள் போன்றவற்றை மேம்படுத்த டிரான்ஸ்கிரிப்ட்கள் பயன்படுத்தப்படக்கூடும். உங்களின் மொழிபெயர்ப்புக்கான உரையாடல்களில் ஒன்று மதிப்பாய்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால், மொழிபெயர்ப்புக் கோரிக்கையும் அதற்கு மொழிபெயர்ப்பு செயலி வழங்கிய பதிலும் துல்லியத்தைத் தீர்மானிக்கப் பகுப்பாய்வு செய்யப்படும். உங்கள் மொழிபெயர்ப்பு ஆடியோக்களைக் கடுமையான இரகசியத்தன்மை பாதுகாப்புக்கு இணங்க Apple பணியாளர்கள் மட்டுமே அணுக முடியும். Apple தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் Siri, டிக்டேஷன், மொழிபெயர்ப்பு மற்றும் வரம்பிடப்பட்ட பிற மொழிச் செயலாக்க செயல்பாட்டுத்திறன் ஆகியவற்றின் தொடர் மேம்பாட்டிற்காக, மறுஆய்வு செய்யப்பட்ட உங்களின் மொழிபெயர்ப்பு உரையாடல்களின் சிறுபகுதி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகச் சேமித்து வைக்கப்படலாம்.

பொது

iPhone அல்லது iPadஐ அமைக்கும்போது நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒப்புதல் விருப்பம், Siri ஆன் செய்யப்பட்டிருக்கும் அந்த iPhone அல்லது iPad மூலம் அமைக்கப்பட்ட, எந்தவொரு புதிய Apple இணைக்கப்பட்ட சாதனம் அல்லது ஆதரிக்கப்படும் HomeKit ஆக்சஸரிக்கும் பொருந்தும். பிறகு நீங்கள் ஒவ்வொரு சாதனத்திற்கும் அமைப்புகளுக்குச் சென்று இதை மாற்றலாம்.

“Siri மற்றும் டிக்டேஷனை மேம்படுத்துதல்” அம்சத்தைச் செயல்படுத்தினால், மேலே விவரிக்கப்பட்டுள்ளவாறு Apple தயாரிப்புகளிலும் சேவைகளிலும் Siri, டிக்டேஷன், தேடல், மொழிபெயர்ப்பு மற்றும் வேறு சில குறிப்பிட்ட மொழிச் செயலாக்கங்களை வழங்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் Apple மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் இந்தத் தகவல்களைப் பரிமாற்றம் செய்வது, சேகரிப்பது, பராமரிப்பது, செயலாக்குவது மற்றும் பயன்படுத்துவதை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வழங்குகிறீர்கள். இந்தத் தகவல்களை நம்பகமான மூன்றாம் தரப்புச் சேவை வழங்குநர்கள் மூலம் Apple செயலாக்கிச் சேமிக்கக்கூடும். Siri, டிக்டேஷன், மொழிபெயர்ப்பு போன்றவற்றை நீங்கள் பயன்படுத்துவதன் அடிப்படையில் Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.

2026-02-11