சக்கர நாற்காலிப் பயன்முறையை மேம்படுத்துதல் & தனியுரிமை
சக்கர நாற்காலிப் பயன்முறையை மேம்படுத்துதல் அம்சம் உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Apple சாதனங்களில் உள்ள உடல்நலம் மற்றும் ஃபிட்னஸ் அம்சங்களின் செயல்திறனைப் புரிந்துகொண்டு மேம்படுத்த Appleக்கு உதவும் வகையில் iPhone மற்றும் Apple Watchஇல் இருந்து சக்கர நாற்காலி உடற்பயிற்சி மற்றும் செயல்பாட்டுத் தகவல்களை சக்கர நாற்காலிப் பயன்முறையை மேம்படுத்துதல் அம்சம் Appleக்கு அனுப்புகிறது. உங்கள் தரவு வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படாது, இதில் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்கள் இருக்காது. இந்தத் தகவல்களில் சக்கர நாற்காலி உடற்பயிற்சி மற்றும் செயல்பாட்டுத் தரவு அடங்கும் (வீல்சேர் இயக்க நேரம், புஷ்களின் எண்ணிக்கை, உடற்பயிற்சி நிமிடங்கள், நகர்வு வளையத்தை நிறைவுசெய்த சதவீதம் போன்றவை).
2025-12-12