Apple Intelligence & தனியுரிமை
Apple Intelligence உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Apple Intelligence என்பது உங்களது தினசரிப் பணிகளுக்கு உதவுவதற்குப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஜெனரேட்டிவ் AI அம்சங்களின் அமைப்பு ஆகும். Apple Intelligence மூலம் உங்கள் மின்னஞ்சல்கள் அல்லது குறிப்புகளை நீங்கள் மாற்றி எழுதலாம் அல்லது சரிபார்க்கலாம், நீங்கள் தவறவிட்ட மெசேஜ்களின் சுருக்கவிவரத்தைப் பெறலாம், ஃபோட்டோஸில் பிரத்தியேகமான நினைவுகளை உருவாக்கலாம், படங்களை உருவாக்கலாம், இன்னும் பலவற்றைச் செய்யலாம். Apple உங்கள் தனிப்பட்ட தரவைச் சேகரிக்காமலேயே, தனிப்பட்ட நுண்ணறிவை உங்களுக்கு வழங்கும் வகையில் Apple Intelligence வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரத்தியேகமான அனுபவத்தை வழங்க, உங்கள் சாதனத்தில் உள்ள தகவல்களை Apple Intelligence பயன்படுத்தும். உதாரணத்திற்கு, வரவிருக்கும் உங்களின் கேலண்டர் நிகழ்வுகள், நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் செயலிகள் என உங்கள் செயலிகள் அனைத்திலும் உள்ள தகவல்கள். உங்களுக்குச் சிறப்பான முறையில் உதவுவதற்கு ஜெனரேட்டிவ் மாடலுக்கு வழங்கத் தேவையான தரவுகளை Apple Intelligence அடையாளம் காணும். ஆனால் அதற்குத் தரவுகளுக்கான அணுகல் தேவையில்லை, தரவுகளை Apple சேமிக்கவும் தேவையில்லை.
சாத்தியமான நேரங்களில், தரவுகளை வேறு சாதனத்திற்கு மாற்றாமலேயே பணியை நிறைவுசெய்யும் வகையில் Apple Intelligence மாடல்கள் சாதனத்திலேயே முழுமையாக இயங்குகின்றன. உதாரணத்திற்கு, உங்கள் மின்னஞ்சல்கள், மெசேஜ்கள், அறிவிப்புகள் ஆகியவற்றுக்கான முன்னோட்டச் சுருக்கவிவரங்களை Apple Intelligence வழங்கும்போது இந்தச் சுருக்கங்கள் சாதனத்திலேயே உள்ள மாடல்களால் உருவாக்கப்படும். இருப்பினும், உங்கள் சாதனம் தனித்து வழங்குவதைவிட இன்னும் அதிகப்படியான செயலாக்கத் திறன் தேவைப்படக்கூடிய ஒரு மாடலை Apple Intelligence மேம்படுத்த வேண்டிய சமயங்களும் உள்ளன. இந்தப் பணிகளை மேற்கொள்ள, உங்கள் பிரைவேட் கிளவுடு கம்ப்யூட்டிற்கு உங்கள் கோரிக்கையை Apple Intelligence அனுப்பும். பிரைவேட் கிளவுடு கம்ப்யூட் என்பது உங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதுடன், மிகச் சிக்கலான கோரிக்கைகளையும் கையாள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சர்வர் சார்ந்த நுண்ணறிவு அமைப்பு ஆகும். உதாரணத்திற்கு, நீங்கள் எழுதும் கருவிகளை மின்னஞ்சலைச் சரிபார்க்கவோ திருத்தவோ பயன்படுத்தும்போது, சரிபார்க்கவோ திருத்தவோ சர்வர் சார்ந்த மாடலுக்கான பிரைவேட் கிளவுடு கம்ப்யூட்டிற்கு ஒரு மின்னஞ்சலை உங்கள் சாதனம் அனுப்பக்கூடும்.
நீங்கள் ஒரு Apple Intelligence பணியைத் தொடங்கும்போது, அந்தப் பணியைச் சாதனத்திலேயே நிறைவுசெய்ய முடியுமா என்பதைச் சாதனத்தில் இயங்கும் ஒரு மாடல் பகுப்பாய்வு செய்யும். இதைவிடப் பெரிய, சர்வர் சார்ந்த மாடல் தேவைப்பட்டால் Apple சிலிக்கான் சர்வர்களில் செயலாக்கம் செய்வதற்கான உங்கள் கோரிக்கையுடன் தொடர்புடைய தரவுகளை மட்டுமே அனுப்புவதற்கு பிரைவேட் கிளவுடு கம்ப்யூட்டை Apple Intelligence பயன்படுத்தும். பிரைவேட் கிளவுடு கம்ப்யூட்டுக்கு அனுப்பப்படும் அல்லது அதிலிருந்து திரும்பப்பெறப்படும் தரவுகள் சேமிக்கப்படாது, Appleஆல் அவற்றை அணுகவும் முடியாது. உங்கள் கோரிக்கையைப் பூர்த்திசெய்வதற்கு மட்டுமே தரவு செயலாக்கப்படும். அதன் பிறகு அது உங்கள் சாதனத்திற்கே பாதுகாப்பாக அனுப்பப்படும். அது பிரைவேட் கிளவுடு கம்ப்யூட்டால் தக்கவைக்கப்படாது. உங்கள் சாதனம் பிரைவேட் கிளவுடு கம்ப்யூட்டுக்கு ஒரு கோரிக்கையை அனுப்பும்போது, கோரிக்கையின் தோராயமான காலஅளவு மற்றும் செயலாக்கப்படும் விதம், கோரிக்கைக்குப் பயன்படுத்தப்படும் அம்சங்கள், கோரிக்கை நிறைவுசெய்யப்படுவதற்கு ஆகும் நேரம் போன்ற கோரிக்கை பற்றிய குறிப்பிட்ட சில தகவல்களை மட்டுமே Apple சேகரிக்கும். இந்தத் தரவில் உங்கள் கோரிக்கையின் உள்ளடக்கத்தைப் பற்றியோ வழங்கப்படும் முடிவைப் பற்றியோ எந்தத் தகவலும் இருக்காது. அதை அடையாளம் காண முடியாது மற்றும் உங்கள் Apple கணக்குடனோ பிற Apple சேவைகளைப் பயன்படுத்தியதில் இருந்து கிடைத்த பிற Apple தரவுகளுடனோ இணைக்கவும் முடியாது.
உங்கள் தரவு எப்படிச் செயலாக்கப்படுகிறது என்பதைப் பார்க்க, அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > Apple Intelligence புகார் என்பதற்குச் சென்று புகாருக்கான நேரஅளவைத் தேர்ந்தெடுத்து Apple Intelligenceக்கான வெளிப்படையான பதிவுசெய்தலை உங்கள் iOS, iPadOS, visionOS சாதனத்தில் நீங்கள் ஆன் செய்யலாம். Mac சாதனத்தில் சிஸ்டம் அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > Apple Intelligence புகார் என்பதற்குச் சென்று புகாருக்கான நேரஅளவைத் தேர்ந்தெடுக்கவும். கோரிய பிறகு, நீங்கள் கோப்பை எக்ஸ்போர்ட் செய்யலாம். உங்கள் சாதனத்தால் அனுப்பப்பட்டு பிரைவேட் கிளவுடு கம்ப்யூட்டால் செயல்படுத்தப்பட்ட கோரிக்கைகளை இந்த வெளிப்படையான பதிவுசெய்தல் காட்டும். இதில் watchOSஇல் இருந்து அனுப்பப்பட்ட கோரிக்கைகளும் அடங்கும். அத்துடன், நீங்கள் ChatGPT நீட்டிப்பைச் செயல்படுத்தினால் Siri, எழுதும் கருவிகள், விஷுவல் நுண்ணறிவு போன்ற ஆதரிக்கப்படும் அம்சங்களுடன் சேர்த்து ChatGPT பயன்படுத்தப்பட்டபோது அதற்கு அனுப்பப்பட்ட கோரிக்கைகளும் அதில் இருக்கும்.
நீங்கள் Apple உடன் சாதனப் பகுப்பாய்வுகளைப் பகிர்வதற்கு அனுமதியளித்தால் Apple Intelligenceஐ மேம்படுத்தும் வகையில், Apple Intelligence செயலாக்கிய உள்ளடக்கத்தைப் பற்றிய தரவுகள் உட்பட, ஒருங்கிணைக்கப்பட்ட டிரெண்டுகளைப் பற்றிய தரவுகளைச் சேகரிப்பதற்குத் தனியுரிமையைப் பாதுகாக்கும் உத்திகளை Apple பயன்படுத்தக்கூடும். இந்தப் பாதுகாப்புகளின் விளைவாக, தனிப்பட்ட பயனர்களின் தரவுகள் அல்லது உள்ளடக்கங்களைச் சேகரிக்காமலேயே Apple Intelligence அம்சங்களை எப்படி மேம்படுத்துவது என்பதைப் புரிந்துகொள்ள இந்த தரவுகளை Appleஆல் பயன்படுத்த முடியும். உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில், அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > பகுப்பாய்வுகள் & மேம்பாடுகள் என்பதற்குச் சென்று “[சாதனப் பெயர்] பகுப்பாய்வுகளைப் பகிர்” என்பதை ஆஃப் செய்து, சாதனப் பகுப்பாய்வுத் தரவுகளைப் பகிர்வதை எப்போது வேண்டுமானாலும் முடக்கலாம். Mac சாதனத்தில், சிஸ்டம் அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > பகுப்பாய்வுகள் & மேம்பாடுகள் என்பதற்குச் சென்று “Mac பகுப்பாய்வுகளைப் பகிர்” என்பதை ஆஃப் செய்யவும்.
2025-12-12