iTunes Store & தனியுரிமை

iTunes Storeஇல் உங்கள் அனுபவத்தைப் பிரத்தியேகமாக்க, மார்க்கெட்டிங் மின்னஞ்சல்கள் மற்றும் அறிவிப்புகளை உங்களுக்கு அனுப்ப, iTunes Store மற்றும் பிற Apple ஆன்லைன் ஸ்டோர்களை மேம்படுத்தவும் மோசடியைத் தடுக்கவும் உங்கள் தேடல்கள், உலாவல், வாங்குதல்கள், சாதனத்தின் நம்பகத்தன்மை மதிப்பெண் ஆகியவை பயன்படுத்தப்படலாம். நீங்கள் உங்கள் மார்க்கெட்டிங் மற்றும் பிரத்தியேக விருப்பத்தேர்வுகளை எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம்.
 

iTunes Store உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Privacy Icon

  • iTunes Store மற்றும் App Store, Apple Books போன்ற பிற Apple ஆன்லைன் ஸ்டோர்களில் நீங்கள் வாங்கும், பதிவிறக்கும் அல்லது புதுப்பிக்க விரும்பும் உள்ளடக்கத்தை உங்களுக்கு வழங்குவதற்காக நாங்கள் உங்கள் தனிப்பட்ட தரவைச் சேகரிக்கிறோம்.
  • App Store, Apple News மற்றும் பங்குகள் செயலிகளில் காட்டப்படும் விளம்பரங்கள் உங்களுக்குப் பொருத்தமானதாக இருப்பதை உறுதிப்படுத்த ஸ்டோர்களில் உங்கள் கணக்கு, வாங்குதல்கள் மற்றும் பதிவிறக்கங்கள் பற்றிய தகவல்களையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்த விளம்பரப்படுத்தல் தொடர்பாக கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி தேர்வுகளைக் கொண்டுள்ளீர்கள்.
  • உங்களுக்கு ஏற்ற அம்சங்கள் மற்றும் பிரத்தியேகப் பரிந்துரைகளை வழங்கவும் Apple மார்க்கெட்டிங் உள்ளிட்ட அறிவிப்புகளை உங்களுக்கு அனுப்பவும் ஸ்டோர்களில் உங்கள் வாங்குதல்கள், பதிவிறக்கங்கள் மற்றும் பிற செயல்பாடுகள் பற்றிய தகவல்களை நாங்கள் பயன்படுத்துகிறோம். கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி இந்த நோக்கத்திற்காக இந்தத் தரவு பயன்படுத்தப்படுவதில் இருந்து நீங்கள் விலகிக் கொள்ளலாம்.
  • மோசடியை அடையாளம் கண்டு தடுக்க உதவுவதற்காக, நீங்கள் வாங்க முயலும்போது உங்கள் சாதனத்தை நீங்கள் பயன்படுத்தும் விதத்தின் அடிப்படையில் சாதனத்தின் நம்பகத்தன்மை மதிப்பெண் கணக்கிடப்படும், பயன்படுத்தும் விதம் என்பதில் ஃபோன் அழைப்புகளின் தோராயமான எண்ணிக்கை அல்லது நீங்கள் அனுப்பும் மற்றும் பெறும் மின்னஞ்சல்களின் தோராயமான எண்ணிக்கை அடங்கும். உங்கள் சாதனத்தில் உள்ள உண்மை மதிப்புகளை Apple அறிந்துகொள்ளாத வகையில் இந்தக் கணக்கீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்கள் குறிப்பிட்ட காலத்திற்கு எங்கள் சர்வரில் சேமிக்கப்பட்டிருக்கும்.
  • ஸ்டோர்களை மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிவதற்காக உங்கள் உலாவல், வாங்குதல்கள், தேடல்கள் மற்றும் பதிவிறக்கங்கள் பற்றிய தகவல்களை நாங்கள் பயன்படுத்துகிறோம். IP முகவரி, ரேண்டமான தனித்துவ அடையாளத் தகவல் (தேவைப்படும் இடங்களில்), நீங்கள் App Store அல்லது பிற Apple ஆன்லைன் ஸ்டோர்களில் உள்நுழைந்திருக்கும்போது Apple கணக்கு ஆகியவற்றுடன் இந்தப் பதிவுகள் சேமிக்கப்படுகின்றன.

ஸ்டோர் சேவைகளை வழங்குதல்

iTunes Store மற்றும் பிற Apple ஆன்லைன் ஸ்டோர்களில் சேவைகள் மற்றும் அம்சங்களை வழங்க நாங்கள் உங்கள் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துகிறோம். உங்கள் கணக்கு, பேமெண்ட் தகவல் (அமைப்புகளில் இதை அணுகலாம், மாற்றலாம்), இதுவரை நீங்கள் வாங்கியவை போன்ற தகவல்கள் இதில் அடங்கும்.

iTunes Storeஇல் இருந்து நீங்கள் உள்ளடக்கத்தைப் பதிவிறக்கும்போது உங்கள் Apple கணக்குடன் உங்கள் சாதனத்தின் வன்பொருள் ஐடி, IP முகவரி போன்ற அடையாளத் தகவல்களை Apple பதிவுசெய்கிறது.

Apple நீங்கள் பதிவிறக்கும் iTunes உள்ளடக்கத்தை அதன் வகையின்படி Apple Music, Apple TV அல்லது Apple Books செயலிகளின் லைப்ரரி தாவலில் உங்களுக்குத் தானாக வழங்கும்.

ஸ்டோர் அனுபவத்தை மேம்படுத்துதல்

iTunes Store மற்றும் பிற Apple ஆன்லைன் ஸ்டோர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக iTunes Storeஐ நீங்கள் பயன்படுத்துவது தொடர்பான தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம், இதில் நீங்கள் ஸ்டோரைத் திறக்கும் அல்லது மூடும் நேரம், நீங்கள் தேடும் உள்ளடக்கம், நீங்கள் பார்க்கும் மற்றும் பதிவிறக்கும் உள்ளடக்கம், அறிவிப்புகளை நீங்கள் கையாளும் விதம் ஆகியவை அடங்கும். உங்கள் சாதனத்தின் வகை, ஆபரேட்டிங் சிஸ்டத்தின் பதிப்பு, சாதனத்தில் காலியாக உள்ள சேமிப்பிடம் போன்ற உங்கள் சாதனம் தொடர்பான தகவல்களையும் நாங்கள் சேகரிக்கிறோம். கோரப்பட்ட உள்ளடக்கத்தைப் பதிவிறக்க முடியுமா என்பதை மதிப்பிடுவதற்காக, சாதனத்தின் சேமிப்பகம் பயன்படுத்தப்படும் முறையைப் புரிந்துகொள்வதற்காக, உங்கள் சாதனம் Wi-Fi அல்லது மொபைல் டேட்டா மூலம் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிவதற்காக நாங்கள் இந்தத் தகவலைப் பயன்படுத்தக்கூடும். எடுத்துக்காட்டாக, நாங்கள் பின்வரும் வழிகளில் இந்தத் தகவலைப் பயன்படுத்தக்கூடும்:

  • பிரபலமடையும் தேடல்களை வழங்க உங்கள் தேடல் தொடர்பான தகவல் உதவுகிறது.
  • பிரத்தியேக அம்சங்களை வழங்க நீங்கள் பார்த்ததை அல்லது பதிவிறக்கியதை அறிந்துகொள்வது உதவுகிறது.
  • வாங்கும் நேரத்தில் பதிவிறக்க வேண்டிய தேவையின்றி உங்கள் iPhoneஇல் திரைப்படங்களை வாங்குவதற்கான அம்சத்தை உருவாக்க உங்கள் சாதனத்தின் மீதமுள்ள சேமிப்பகத்தை அறிந்துகொள்வது உதவுகிறது.

ஸ்டோர்களைப் பிரத்தியேகமாக்குதல்

உங்களுக்கு மிகப் பொருத்தமான உள்ளடக்கத்தைக் கண்டறிய உங்களுக்கு உதவுவதற்காக iTunes Storeஐ நீங்கள் பயன்படுத்துவது தொடர்பான தகவல்களை நாங்கள் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, iTunes Storeஇல் இதற்கு முன்பு நீங்கள் தேடியவை, பார்த்தவை, பதிவிறக்கியவை, புதுப்பித்தவை அல்லது மதிப்பாய்வு செய்தவற்றின் அடிப்படையில் உங்களுக்குப் பொருத்தமானதாகக் கருதும் உள்ளடக்கத்தை நாங்கள் பரிந்துரைக்கிறோம். உங்கள் Apple கணக்கில் இருந்து பெறப்பட்ட கணக்குத் தகவல்களுடன் இதுவரை நீங்கள் வாங்கியவை, பேமெண்ட் முறைகள் ஆகியவற்றையும் பயன்படுத்துகிறோம். உங்கள் Apple கணக்கில் பிரத்தியேகப் பரிந்துரைகள் அம்சத்தை ஆஃப் செய்வதன் மூலம் App Store, Apple Books, iTunes Store, Apple TV, பாட்காஸ்ட்கள் மற்றும் Appleஇல் சந்தாக்களுக்கான பிரத்தியேகமாக்கல் அம்சங்களை முடக்கலாம். உங்கள் iOS அல்லது iPadOS சாதனங்களில், அமைப்புகள் > [உங்கள் பெயர்] > மீடியா & வாங்குதல்கள் என்பதற்குச் சென்று “கணக்கைக் காட்டு” என்பதைத் தட்டி பிரத்தியேகப் பரிந்துரைகளை ஆஃப் செய்யலாம்.

உங்களுடனான தகவல்தொடர்புகள்

iTunes Store மற்றும் நீங்கள் விரும்பக்கூடிய பிற Apple தயாரிப்புகள், சேவைகள் மற்றும் சலுகைகள் பற்றிய தகவல்களை உங்களுக்கு அனுப்ப, உங்களுக்குச் சொந்தமான Apple தயாரிப்புகள், Apple சேவைகளுக்கான உங்கள் சந்தாக்கள் போன்ற உங்கள் கணக்கு பற்றிய தகவல்களை Apple பயன்படுத்தக்கூடும். iTunes Storeஇல் கிடைக்கும் புதிய அம்சங்கள், உள்ளடக்கம் மற்றும் சலுகைகள் பற்றிய தகவல்களை அனுப்ப iTunes Storeஇல் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகள் பற்றிய தகவல்களையும் Apple பயன்படுத்தக்கூடும். Apple Music, Apple TV, Apple Books ஆகிய செயலிகளில் Apple வழங்கும் உங்கள் iTunes உள்ளடக்கம் பற்றிய தகவல்களை அந்தச் செயலிகள் அனுப்பக்கூடும்.

மின்னஞ்சல் மார்க்கெட்டிங்
மார்க்கெட்டிங் மின்னஞ்சல்களைப் பெற நீங்கள் ஒப்புதலளித்தால், இந்தத் தகவல்கள் மின்னஞ்சல் வழியாக உங்களுக்கு அனுப்பப்படலாம். account.apple.com இணையதளத்திற்குச் சென்று அல்லது உங்கள் iOS அல்லது iPadOS சாதனத்தில் அமைப்புகள் > [உங்கள் பெயர்] > தனிப்பட்ட தகவல்கள் என்பதற்குச் சென்று உங்கள் மின்னஞ்சல் முன்னுரிமைகளை நீங்கள் மாற்றலாம், இந்த மின்னஞ்சல்களைப் பெறுவதற்கான ஒப்புதலைத் திரும்பப் பெறலாம்.

அறிவிப்புகள்
Push, பேனர் அல்லது பேட்ஜ் அறிவிப்புகள் வழியாகவும் இந்தத் தகவல்களை நீங்கள் பெறலாம். உங்கள் அறிவிப்பு முன்னுரிமைகளைப் புதுப்பிக்க அல்லது அறிவிப்புகளைப் பெறுவதிலிருந்து விலக உங்கள் iOS அல்லது iPadOS சாதனத்தில், அமைப்புகள் > அறிவிப்புகள் > iTunes Store என்பதற்குச் செல்லுங்கள்.

விளம்பரப்படுத்தல்

App Store, Apple News மற்றும் பங்குகள் செயலிகளில் தயாரிப்புகள், சேவைகள், செயலிகள் ஆகியவற்றைக் கண்டறிய Apple வழங்கும் விளம்பரங்கள் உதவுகின்றன. விளம்பரங்கள் பொருத்தமாக இருப்பதை உறுதிப்படுத்த உங்கள் சாதனம், கணக்கு, வாங்குதல்கள், சந்தாக்கள், பதிவிறக்கங்கள் ஆகியவை பற்றிய தகவல்களை நாங்கள் பயன்படுத்துகிறோம். App Storeஇல் நீங்கள் தேடும்போது உங்கள் தேடல் சொற்களையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். ஒரே மாதிரியான பண்புகளைக் கொண்ட நபர்களை ஒன்றிணைத்து “பிரிவுகள்” எனப்படும் குழுக்களை உருவாக்குகிறோம், இலக்கிடப்பட்ட விளம்பரங்களை வழங்க இந்தக் குழுக்களை நாங்கள் பயன்படுத்துகிறோம். எந்தப் பிரிவுகளில் உங்களை வைப்பது, அதாவது எந்த விளம்பரங்களை உங்களுக்கு வழங்குவது என்பதைத் தீர்மானிக்க உங்களைப் பற்றிய தகவல்கள் பயன்படுத்தப்படும். உங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக, இலக்கிற்கான வரையறையை 5,000க்கும் அதிகமான நபர்கள் பூர்த்திசெய்தால் மட்டுமே இலக்கிடப்பட்ட விளம்பரங்கள் வழங்கப்படும். உங்களுக்குப் பொருத்தமான விளம்பரங்களைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் தகவல்கள் ரேண்டம் அடையாளத் தகவல்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் உங்கள் Apple கணக்குடன் அல்ல.

பிரத்தியேக விளம்பரங்கள் அமைப்பு ஆன் செய்யப்பட்டிருந்தால், Appleஇன் விளம்பரப்படுத்தல் தளம் உங்களுக்குப் பொருத்தமான விளம்பரங்களை வழங்க உங்கள் தகவல்களைப் பயன்படுத்தக்கூடும். நீங்கள் Appleஇன் விளம்பரப்படுத்தல் தளத்தில் இருந்து உங்கள் ஆர்வங்களை இலக்கிடும் விளம்பரங்களைப் பெற விரும்பவில்லையெனில், பிரத்தியேகமாக்கப்பட்ட விளம்பரங்களை ஆஃப் செய்யலாம். பிரத்தியேகமாக்கப்பட்ட விளம்பரங்களை ஆஃப் செய்வது விளம்பரங்களை இலக்கிடுவதற்காக உங்கள் தகவல்களைப் பயன்படுத்துவதில் இருந்து Appleஐத் தடுக்கும். இது நீங்கள் பெறும் விளம்பரங்களின் எண்ணிக்கையைக் குறைக்காது, ஆனால் விளம்பரங்கள் உங்களுக்குப் பொருத்தமானதாக இருப்பது குறையக்கூடும்.

Apple விளம்பரப்படுத்தல் & தனியுரிமை பற்றி மேலும் அறிய www.apple.com/in/legal/privacy/data/en/apple-advertising இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.

App Store, Apple News மற்றும் பங்குகள் செயலிகளில் பிரத்தியேகமாக்கப்பட்ட விளம்பரங்களில் இருந்து விலகுவது எப்படி என்று அறிய support.apple.com/105131 இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.

மூன்றாம் தரப்பினருடன் பகிர்தல்

எங்கள் தயாரிப்புகளையும் சேவைகளையும் வழங்க Apple உடன் இணைந்து பணியாற்றும், வாடிக்கையாளருக்கான சந்தைப்படுத்தலில் Appleக்கு உதவும், App Store, Apple News மற்றும் பங்குகள் செயலிகளில் காட்டுவதற்கான விளம்பரங்களை Appleஇன் சார்பாக விற்பனை செய்யும் உத்திசார் கூட்டாளர்களுக்குத் தனிப்பட்டவை அல்லாத சில தரவுகளை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எடுத்துக்காட்டாக, நீங்கள் வாங்கிய உள்ளடக்கம் பற்றிய தனிப்பட்டவை அல்லாத தரவை உள்ளடக்க உரிமையாளருடன் நாங்கள் பகிரக்கூடும், இதன்மூலம் தங்கள் படைப்புகளின் செயல்திறனை அவர்கள் மதிப்பிடலாம், ராயல்டி மற்றும் கணக்கியல் தேவைகளைப் பூர்த்திசெய்யலாம், தங்கள் தயாரிப்புகளையும் சேவைகளையும் மேம்படுத்தலாம்.

தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்குப் பொருந்தக்கூடிய சட்டரீதியான அடிப்படை

பொதுவாக Apple உடனான உங்கள் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்காகவும், சேவைகளை வழங்கத் தேவைப்படும் அளவிற்கும், எங்கள் சட்டரீதியான கடமைகளுக்கு இணங்குவதற்காகவும் iTunes Storeஇல் உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்குகிறோம். ஒப்புதல் என்பது சட்டரீதியான அடிப்படையாக அமையும் இடங்களில், பொருந்தும் உள்ளூர் சட்டங்களின் அடிப்படையில் அதைப் பெற முயல்கிறோம்.

பொருந்தும் உள்ளூர் சட்டங்கள் குறிப்பிடும் இடங்களில், பின்வரும் காரணங்களுக்காக எங்களின் அல்லது மூன்றாம் தரப்புகளின் நியாயமான நலன்களின் நோக்கத்திற்காகத் தேவைப்படும் அளவிற்குத் தனிப்பட்ட தரவைச் செயலாக்குகிறோம்:

  • தொடர்புடைய உள்ளடக்கத்தைக் காட்டுதல் மற்றும் கோரப்பட்ட உள்ளடக்கத்தைப் பதிவிறக்க போதுமான இடம் உங்கள் சாதனத்தில் உள்ளதா என்பதைத் தீர்மானித்தல்
  • உங்களுக்காகவும் பிறருக்காகவும் iTunes Storeஐ மேம்படுத்தி உகந்ததாக்க உதவுதல்
  • உங்கள் ஆர்வத்துடன் பொருந்தக்கூடிய சலுகைகளை மின்னஞ்சல் அல்லது Push அறிவிப்புகள் வழியாக அனுப்புதல், iTunes Storeஇல் உங்களுக்கு விளம்பரங்களை வழங்க பிரிவுகளை உருவாக்குதல்
  • உள்ளடக்க உரிமையாளர்களின் உள்ளடக்கம் வாங்கப்பட்டது தொடர்பான அறிக்கையை அவர்களுக்கு வழங்குதல்
  • மோசடி மற்றும் பிற தீங்கிழைக்கும் செயல்பாட்டைத் தடுத்தல்

பயன்படுத்தப்படும் தரவில் இவையும் அடங்கும்:

  • நீங்கள் தேடும், பார்க்கும், பதிவிறக்கும், வாங்கும் உள்ளடக்கத்துடனான உங்கள் செயல்பாடுகள் போன்ற iTunes Store செயலியை நீங்கள் பயன்படுத்தும் விதம் மற்றும் iTunes Store அறிவிப்புகள்
  • உங்கள் சாதனம் மற்றும் கணக்கு பற்றிய விவரங்கள்
  • உங்கள் இருப்பிடம் மற்றும் IP முகவரி
  • சாதனத்தின் நம்பகத்தன்மை மதிப்பெண்

தக்கவைத்தல்

iTunes Storeஇல் உங்கள் வாங்குதல்கள் மற்றும் பதிவிறக்கங்கள் தொடர்பான தனிப்பட்ட தரவை நிதி அறிக்கை தொடர்பான பொருந்தும் உள்ளூர் சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கால அளவிற்குத் தக்க வைக்கிறோம், இது வட்டாரத்தைப் பொறுத்து மாறுபடும். பெரும்பான்மையான வாடிக்கையாளர்களுக்குக் குறைந்தபட்சம் 10 வருடம் தக்கவைத்தல் காலம் தேவையாக இருக்கிறது, ஆனால் சீனா போன்ற சில வட்டாரங்களில் இந்தக் காலம் 30 வருடங்களாக இருக்கலாம். எங்கள் பொருந்தும் விதிமுறைகளுக்கு ஏற்ப நீங்கள் வாங்கும், பதிவிறக்கும் உள்ளடக்கத்தை மீண்டும் பதிவிறக்க உங்களுக்கு உதவுவதற்காக உங்கள் கணக்கு இருக்கும் காலம் வரை அந்தப் பதிவை நாங்கள் தக்கவைக்கிறோம். உலாவல் செயல்பாடு, தேடல்கள் போன்ற பிற தகவல்களைக் குறுகிய காலத்திற்குத் தக்கவைக்கிறோம். தரவைத் தக்கவைப்பதற்கான பொருந்தும் சட்டரீதியான தேவைகள், குறிப்பிட்ட வணிகப் பயன்பாட்டு நோக்கங்கள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு இந்தக் காலஅளவு தீர்மானிக்கப்படுகிறது. இருப்பினும், நீங்கள் உங்கள் கணக்கை மூடிய பின்னர் அல்லது iTunes Store அல்லது பிற Apple ஆன்லைன் ஸ்டோர்களைப் பயன்படுத்துவதை நிறுத்திய பின்னர் கூட வாங்குதல்கள் போன்ற சில தகவல்கள் (உங்கள் சேமிக்கப்பட்ட கார்டு விவரங்கள் இல்லை) வணிகப் பதிவுகளாகச் சேமிக்கப்பட்டிருக்கக்கூடும்.

நீங்கள் பேமெண்ட் கார்டைப் பயன்படுத்தும்போது எதிர்கால வாங்குதல்கள், தொடர் பரிவர்த்தனைகள் அல்லது நீங்கள் அங்கீகரிக்கும் பிற பயன்பாடுகளுக்காக Apple உங்கள் கார்டு எண்ணையும் பில்லிங் தகவல்களையும் தக்கவைத்து தானாகப் புதுப்பிக்கலாம். Apple இந்தத் தகவல்களை உங்கள் நிதி நிறுவனம் அல்லது பேமெண்ட் நெட்வொர்க்கிலிருந்து பெற்று மோசடித் தடுப்பு மற்றும் சரிபார்ப்புக்காகப் பயன்படுத்தலாம்.

மோசடி மற்றும் பிற தீங்கிழைக்கும் செயல்பாட்டைத் தடுத்தல்

iTunes Store மற்றும் பிற Apple ஆன்லைன் ஸ்டோர்கள், பிற Apple செயலிகள் மற்றும் சேவைகளில் மோசடி மற்றும் பிற தீங்கிழைக்கும் செயல்பாட்டைத் தடுப்பதற்காகவும் தனிப்பட்ட தரவைச் சேகரிக்கிறோம். இந்தத் தகவல்களில் சாதன வகை, மென்பொருள் பதிப்பு போன்ற சாதனத் தகவல்கள், இருப்பிடத் தகவல்கள் (உங்கள் இணைய இணைப்பின் IP முகவரியை உங்கள் புவியியல் வட்டாரத்துடன் பொருத்துவதன் மூலம் கிடைக்கும் தோராயமான இருப்பிடம்), இதுவரையான பதிவிறக்கங்களும் வாங்குதல்களும், ஸ்டோர்களுடனான உங்களின் பிற செயல்பாடுகள் ஆகியவை அடங்கும். நீங்கள் எதையேனும் வாங்கத் தொடங்கும்போது அந்தக் கோரிக்கையைச் செயலாக்கி, பேமெண்ட் கூட்டாளரிடமிருந்து அங்கீகாரத்தைப் பெறுவதற்கு முன்பாக அந்தத் தயாரிப்பு அல்லது சேவையை வழங்குவதா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க Apple உடனான உங்கள் வணிகத் தொடர்புகள் பற்றிய இதுவரையான தகவல்களை Apple பயன்படுத்தக்கூடும்.

நீங்கள் வாங்க முயலும்போது உங்கள் சாதனத்தை நீங்கள் பயன்படுத்தும் விதத்தின் அடிப்படையில் சாதனத்தின் நம்பகத்தன்மை மதிப்பெண்ணையும் நாங்கள் கணக்கிடுகிறோம், பயன்படுத்தும் விதம் என்பதில் ஃபோன் அழைப்புகளின் தோராயமான எண்ணிக்கை, நீங்கள் அனுப்பும் அல்லது பெறும் மின்னஞ்சல்கள் தோராயமான எண்ணிக்கை அடங்கும். உங்கள் சாதனத்தில் உள்ள பின்னணி மதிப்புகளை Apple அறிந்துகொள்ளாத வகையில் இந்தக் கணக்கீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண் குறிப்பிட்ட காலத்திற்கு எங்கள் சர்வரில் சேமிக்கப்பட்டிருக்கும்.

Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.

2025-12-12