ஜர்னலிங் பரிந்துரைகள் & தனியுரிமை
பரிந்துரைகளுக்கு என்னென்ன தரவுகள் பயன்படுத்தப்பட வேண்டும் மற்றும் ஜர்னலிங் செயலிகளுடன் என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதைத் தேர்வுசெய்ய உங்களை அனுமதிப்பதன் மூலம் உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையில் ஜர்னலிங் பரிந்துரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜர்னலிங் பரிந்துரைகள் தினசரி தருணங்களையும் சிறப்பு நிகழ்வுகளையும் புத்திசாலித்தனமாகக் குழுவாக்குகிறது
பிரத்தியேகப் பரிந்துரைகளை உங்களுக்கு வழங்குவதற்காகவும் தருணங்களையும் நிகழ்வுகளையும் புத்திசாலித்தனமாகக் குழுவாக்கவும் ஜர்னலிங் பரிந்துரைகள் சாதனத்திலேயே செய்யப்படும் செயலாக்கத்தைப் பயன்படுத்துகின்றன. உங்கள் சாதனத்தில் சேமிக்கப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி, ஜர்னலிங் பரிந்துரைகள் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளவும், அவை குறித்து எழுதுவதற்காகவும் சிறப்புத் தருணங்களை உங்களுக்குப் பரிந்துரைக்கலாம். ஜர்னலிங் பரிந்துரைகளைப் பயன்படுத்தும் ஜர்னலிங் செயலிகளுடன் எந்தப் பரிந்துரைகள் பகிரப்படுகின்றன என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.
ஜர்னலிங் பரிந்துரைகளில், உங்கள் செயல்பாடுகளில் இருந்து பெறப்பட்ட பரிந்துரைகள் (உடற்பயிற்சி வகை, நேரஅளவு, பாதைகள், கலோரிகள், இதயத்துடிப்பு போன்றவை), மீடியா பயன்பாடு (நீங்கள் கேட்கும் பாட்காஸ்ட் மற்றும் பாடல், கலைஞர் பெயர், டிராக் பெயர் போன்றவை), தொடர்புகள் (மெசேஜ்கள், அழைப்புகள் மற்றும் FaceTime மூலம் யாருடன் தொடர்புகொண்டீர்கள் போன்றவை), புகைப்படங்கள் (உங்கள் லைப்ரரியில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள், நபர்கள் மற்றும் செல்லப்பிராணிகளின் பெயர்கள், பகிர்ந்த ஆல்பங்கள், காட்சி வகைப்படுத்தல்கள், நினைவுகள் போன்றவை), முக்கியமான இடங்கள் (நீங்கள் பங்கேற்ற நிகழ்வுகளைப் பற்றிய தகவல்கள் உட்பட சமீபத்தில் நீங்கள் சென்ற இடங்கள், அங்கே எப்போது எத்தனை முறை சென்றீர்கள், உங்களுக்கு முக்கியமான இடங்கள் குறித்து தெரிந்துகொள்வது போன்றவை) மனநிலை (நீங்கள் பதிவுசெய்யும் மனநிலைகள் மற்றும் உணர்ச்சிகள் போன்றவை) ஆகியவை அடங்கும்.
ஜர்னலிங் பரிந்துரைகளை நீங்கள் இயக்கும்போது, உங்கள் உடற்பயிற்சிகள், மீடியா பயன்பாடு, தகவல்தொடர்புகள், புகைப்படங்கள் ஆகியவை குறித்த தகவல்கள் உட்பட, உங்கள் iPhoneஇல் சேமிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட இதுவரையிலான தரவுகள் உங்களுக்குப் பொருத்தமான பரிந்துரைகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும். iPhoneஇல் அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > ஜர்னலிங் பரிந்துரைகள் என்பதற்குச் சென்று, ஒரு குறிப்பிட்ட வகையை இயக்க/முடக்க அதைத் தட்டுவதன் மூலம் உங்கள் ஜர்னலிங் பரிந்துரைகளில் சேர்ப்பதற்கான தரவு வகைகளை நீங்கள் பிரத்தியேகப்படுத்தலாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஜர்னலிங் செயலிகள் ஜர்னலிங் பரிந்துரைகளைப் பயன்படுத்தினால், உங்கள் ஜர்னலிங் பரிந்துரைகளில் சேர்ப்பதற்காக நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள வகைகள் அனைத்துச் செயலிகளுக்கும் பொருந்தும். iPhoneஇல் அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > ஜர்னலிங் பரிந்துரைகள் என்பதற்குச் சென்று, “இதுவரையான பதிவுகளை அழி” என்பதைத் தட்டுவதன் மூலம், ஜர்னலிங் செயலியுடன் பகிரப்படாத இதுவரையிலான பரிந்துரைகளையும் அழிக்கலாம். iPhoneஇல் அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > ஜர்னலிங் பரிந்துரைகள் என்பதற்குச் சென்று, “அனைத்தையும் ஆஃப் செய்” என்பதைத் தட்டுவதன் மூலம் ஜர்னலிங் பரிந்துரைகளை நீங்கள் முடக்கலாம். ஜர்னலிங் பரிந்துரைகளைப் பயன்படுத்தும் அனைத்து ஜர்னலிங் செயலிகளுக்கும் அனைத்துப் பரிந்துரைகளையும் ஆஃப் செய்வதற்கான உங்கள் முடிவு பொருந்தும். iPadஇல் ஜர்னலிங் பரிந்துரைகளை இனி நீங்கள் பார்க்க விரும்பவில்லை எனில், அமைப்புகள் > [உங்கள் பெயர்] > iCloud > அனைத்தையும் காட்டு > ஜர்னலிங் பரிந்துரைகள் என்பதற்குச் சென்று ஒத்திசைவைத் தட்டி ஆஃப் செய்து பரிந்துரைகள் ஒத்திசைக்கப்படுவதை நீங்கள் நிறுத்தலாம்.
தொடர்புநபர்களுடனான தருணங்களுக்கு முன்னுரிமையளி
உங்களுக்கு மிகவும் பொருத்தமான அல்லது தொடர்புடைய பரிந்துரைகளைத் தீர்மானிக்க, ஜர்னலிங் பரிந்துரைகள் Bluetooth சிக்னல்களைப் பயன்படுத்துகிறது. தொடர்புகளுடனான தருணங்களுக்கு முன்னுரிமை அளிப்பது அருகிலுள்ள பரஸ்பர தொடர்புகளின் எண்ணிக்கையைத் தீர்மானிக்க மற்றும் பரஸ்பர தொடர்புகள் உங்களை அருகிலுள்ள தொடர்புகளின் பட்டியலில் சேர்க்க அனுமதிக்க Bluetoothஐப் பயன்படுத்துகிறது. தொடர்புகளின் பெயர்களும் இருப்பிடங்களும் உங்களுடன் பகிரப்படவில்லை மற்றும் உங்கள் பெயரும் இருப்பிடமும் தொடர்புகளுடன் பகிரப்படவில்லை. அருகிலுள்ள தொடர்புகளின் எண்ணிக்கை சாதனத்தில் சேமிக்கப்பட்டு, உங்களுக்குத் தெரிந்தவர்களுடனான தருணங்களுக்கு முன்னுரிமை அளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஜர்னலிங் பரிந்துரைகள் உங்களுக்கு அருகிலுள்ள தொடர்புகளின் எண்ணிக்கையைப் பயன்படுத்துவதை நீங்கள் விரும்பவில்லையெனில் அல்லது தங்களுக்கு அருகிலுள்ள தொடர்புகளின் எண்ணிக்கையில் உங்களைச் சேர்க்க பிற தொடர்புகளை அனுமதிக்க வேண்டாமெனில், அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > ஜர்னலிங் பரிந்துரைகள் என்பதற்குச் சென்று, “தொடர்புநபர்களுடனான தருணங்களுக்கு முன்னுரிமையளி” என்பதை ஆஃப் செய்ய தட்டவும்.
தொடர்புகளுடனான தருணங்களுக்கு முன்னுரிமை அளிப்பது மட்டுமல்லாமல், பெரிய குழுக்களுடனான பரிந்துரைகளுக்கு முன்னுரிமை அளிக்க Apple சாதனங்கள் (தொடர்புகள் அல்லாதவையும்கூட) உங்களுக்கு அருகில் உள்ளதா என்பதைக் கண்டறிய, AirDropக்கான Bluetooth போன்ற பிற சாதனச் சிக்னல்களை ஜர்னலிங் பரிந்துரைகள் பயன்படுத்தக்கூடும். பெயர்களும் இருப்பிடங்களும் பகிரப்படவில்லை. Apple சாதனங்களின் எண்ணிக்கை மட்டும் பகிரப்படும்.
iCloud ஜர்னலிங் பரிந்துரைகள்
நீங்கள் iCloudஐப் பயன்படுத்தினால், பகிரப்படும்போதும் அப்படியே இருக்கும்போதும் ஜர்னலிங் பரிந்துரைகள் என்கிரிப்ஷன் செய்யப்பட்டிருக்கும் மற்றும் iCloud செயல்படுத்தப்பட்ட உங்கள் iPhone மற்றும் iPad அனைத்திலும் அவை சமீபத்தியதாக வைத்திருக்கப்படும். உங்களிடம் இயல்பாகவே இரு காரணி அங்கீகாரம் மற்றும் பாஸ்கோடு இருந்தால், iCloudஇல் சேமிக்கப்படும்போது ஜர்னலிங் பரிந்துரைகள் முழுமையாக என்கிரிப்ட் செய்யப்படும். எனவே Appleஆல் கூட அவற்றைப் பார்க்க முடியாது. iCloud செயல்படுத்தப்பட்ட iPhone, iPad ஆகியவற்றில் ஜர்னலிங் பரிந்துரைகளை ஒத்திசைக்க ஒரேயொரு iPhoneஐ மட்டுமே பயன்படுத்த முடியும். iPhoneஇல் அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > ஜர்னலிங் பரிந்துரைகள் என்பதற்குச் சென்று, “இந்த iPhoneஇல் இருந்து ஒத்திசை” என்பதைத் தட்டுவதன் மூலம் பரிந்துரைகளை ஒத்திசைப்பதற்கான முதன்மை iPhoneஐ நீங்கள் மாற்றலாம். அமைப்புகள் > [உங்கள் பெயர்] > iCloud > அனைத்தையும் காட்டு > ஜர்னலிங் பரிந்துரைகள் என்பதற்குச் சென்று ஒத்திசைவைத் தட்டி ஆஃப் செய்து உங்கள் iPhone அல்லது iPadஇல் ஜர்னலிங் பரிந்துரைகளுக்கான iCloudஐ எப்போது வேண்டுமானாலும் முடக்கலாம்.
ஜர்னல் செயலி மற்றும் மூன்றாம் தரப்புச் செயலிகளுடன் ஜர்னலிங் பரிந்துரைகளைப் பகிர்தல்
உங்கள் முக்கியமான தருணங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைச் செயலியில் சேர்ப்பதன் மூலம் ஜர்னலிங் பரிந்துரைகளைப் பயன்படுத்தும் ஜர்னலிங் செயலிகளுடன் எந்தப் பரிந்துரைகள் பகிரப்படுகின்றன என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம். உங்கள் பரிந்துரைகளைப் பகிர்வதற்கு முன் நீங்கள் மட்டுமே அவற்றைப் பார்க்க முடியும். அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > ஜர்னலிங் பரிந்துரைகள் என்பதற்குச் சென்று, தனிப்பட்ட அணுகலைப் பயன்படுத்தி செயலிகளைப் பார்ப்பதன் மூலம் எந்தெந்த செயலிகள் ஜர்னலிங் பரிந்துரைகளைப் பயன்படுத்துகின்றன என்பதை நீங்கள் பார்க்கலாம்.
ஜர்னல் செயலியுடன் உங்கள் பரிந்துரைகளைப் பகிர்ந்தால், உங்கள் உள்ளீடுளை நீங்கள் கட்டுப்படுத்தலாம். பாஸ்கோடு மூலம் உங்கள் சாதனம் லாக் செய்யப்பட்டுள்ளபோது, ஜர்னல் செயலியில் உள்ள உள்ளீடுகள் என்கிரிப்ட் செய்யப்படுகின்றன. உங்களிடம் இயல்பாகவே இரு காரணி அங்கீகாரம் மற்றும் பாஸ்கோடு இருந்தால், iCloudஇல் சேமிக்கப்படும்போது அனைத்து ஜர்னல் உள்ளீடுகளும் முழுமையாக என்கிரிப்ட் செய்யப்படும். எனவே Appleஆல் கூட அவற்றைப் பார்க்க முடியாது. கூடுதலாக, இரண்டாம் நிலை அங்கீகாரத்தை இயக்கவும், உங்கள் சாதன பாஸ்கோடு, Face ID அல்லது Touch ID மூலம் ஜர்னல் செயலியை லாக் செய்யவும் தேர்வுசெய்யலாம்.
அறிவிப்புகள்
ஜர்னலிங் பரிந்துரைகளுக்கான அறிவிப்புகளை இயக்கினால், தருணங்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகள் குறித்து எழுதுமாறு ஜர்னலிங் பரிந்துரைகள் உங்களிடம் கேட்கக்கூடும். செயல்பாடுகள், செயலிப் பயன்பாடு போன்ற வழக்கங்களும் உங்கள் இருப்பிடமும் உங்களுக்கு எப்போது அறிவிப்புகள் அனுப்பப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன, நீங்கள் விரும்பினால் அமைப்புகளுக்குச் சென்று பிரத்தியேகத் திட்டஅட்டவணையை உருவாக்கலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட ஜர்னலிங் செயலிகளுக்கு ஜர்னலிங் பரிந்துரைகளை நீங்கள் செயல்படுத்தியிருந்தால், ஜர்னலிங் பரிந்துரைகள் அறிவிப்புகளுக்கு எந்தச் செயலியைத் திறக்க வேண்டும் என்பதை அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > ஜர்னலிங் பரிந்துரைகள் > அறிவிப்புகள் > அறிவிப்புகளைப் பிரத்தியேகமாக்கு > அறிவிப்புகளைத் திறக்க வேண்டிய செயலி என்பதற்குச் சென்று ஒரு செயலியைத் தட்டித் தேர்வுசெய்யலாம். அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > ஜர்னலிங் பரிந்துரைகள் > அறிவிப்புகள் என்பதற்குச் சென்று, அவற்றைத் தட்டி ஆஃப் செய்வதன் மூலம் ஜர்னலிங் பரிந்துரைகளுக்கான அறிவிப்புகளை முடக்கலாம்.
Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.
2025-12-12