iCloud Mail கிளீன்-அப் & தனியுரிமை
iCloud Mail கிளீன்-அப் உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
![]()
- உங்கள் இன்பாக்ஸைச் சுத்தமாகவும் சேமிப்பகத்தைக் காலியாகவும் வைத்திருக்க iCloud Mail கிளீன்-அப் பரிந்துரைகள் உதவுகின்றன.
- வகை மற்றும் ஏற்கெனவே iCloudஇல் சேமிக்கப்பட்டுள்ள உங்கள் மின்னஞ்சல்களின் மெட்டாடேட்டாவின் (மின்னஞ்சல் தலைப்பில் உள்ள தகவல்கள் போன்றவை) அடிப்படையில் பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன.
- அமைப்புகளில் iCloud Mail கிளீன்-அப்பை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் ஆஃப் செய்யலாம்.
உங்கள் இன்பாக்ஸைச் சுத்தமாகவும் சேமிப்பகத்தைக் காலியாகவும் வைத்திருக்க உதவ iCloud Mail கிளீன்-அப் உங்களுக்கு பரிந்துரைகளை வழங்குகின்றது. மின்னஞ்சல் வகையின் அடிப்படையிலும் அதன் ஒரு பகுதியாகவும் பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன. iOSஇல் உள்ள Mail செயலியில் iCloud மின்னஞ்சல்களை அணுகும்போது, வகைப்படுத்துதல் முழுவதும் உங்கள் சாதனத்திலேயே செயலாக்கப்படுகின்றன. iCloud Mail கிளீன்-அப்பிற்கு, பழைய விளம்பரங்களை அழித்தல், மெயிலிங் பட்டியலில் இருந்து குழுவிலகுதல் போன்ற பல செயல்களைச் செய்ய iCloudஇல் சேமிக்கப்பட்டுள்ள பிற iCloud மின்னஞ்சல் மெட்டாடேட்டாவுடன் சேர்த்து அந்த வகைப்படுத்துதல் தரவுகளையும் Apple செயலாக்குகிறது. iCloud.com தளத்தில் நீங்கள் iCloud Mailஐப் பயன்படுத்தினால் iCloud மின்னஞ்சல்களை வகைப்படுத்தவும், கிளீன்-அப் பரிந்துரைகளை வழங்கவும், மின்னஞ்சல் தலைப்பில் உள்ள தகவல்கள் போன்ற குறிப்பிட்ட சில மின்னஞ்சல் மெட்டாடேட்டாவை Apple செயலாக்குகிறது.
அமைப்புகளுக்குச் சென்று iOS மற்றும் iCloud.comஇல் iCloud Mail கிளீன்‑அப்பை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் ஆஃப் செய்துகொள்ளலாம்.
தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்குப் பொருந்தக்கூடிய அடிப்படைச் சட்டங்கள்
பொதுவாக Apple உடனான உங்கள் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்காகவும், சேவைகளை வழங்கத் தேவைப்படும் அளவிற்கும், எங்கள் சட்டரீதியான கடமைகளுக்கு இணங்குவதற்காகவும் iCloud.comஇல் உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்குகிறோம். ஒப்புதல் என்பது சட்டரீதியான அடிப்படையாக அமையும் இடங்களில், பொருந்தும் சட்டங்களின் அடிப்படையில் அதைப் பெற முயல்கிறோம்.
தக்கவைத்தல்
இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டபடி மற்றும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி, சேகரிக்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றத் தேவைப்படும் காலம் வரை அல்லது சட்டப்படி தேவைப்படும் காலம் வரை மட்டுமே Apple தனிப்பட்ட தரவைத் தக்கவைக்கும். தக்கவைத்தல் காலத்தை மதிப்பிடும்போது, சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவைத் தக்கவைப்பது தேவையா என்று முதலில் கவனமாக ஆராய்கிறோம். தக்கவைத்தல் தேவை எனில், சட்டப்படி அனுமதிக்கப்பட்ட குறுகிய காலத்திற்கு மட்டுமே தனிப்பட்ட தரவைத் தக்கவைக்க முயல்கிறோம்.
Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.
2025-12-12