Mail தனியுரிமை பாதுகாப்பு & தனியுரிமை
மின்னஞ்சல் அனுப்புநர்கள் Mail செயலியில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகள் குறித்த தகவல்களை அறிந்துகொள்வதைத் தடுப்பதன் மூலம் உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க “Mail தனியுரிமை பாதுகாப்பு” அம்சம் உதவுகிறது.
நீங்கள் பெறும் மின்னஞ்சல்களில் தொலைநிலை உள்ளடக்கம் இருக்கக்கூடும். இது மின்னஞ்சல் அனுப்புநர் உங்களைப் பற்றிய தகவலை அறிய அனுமதிக்கும். நீங்கள் ஒரு மின்னஞ்சலைத் திறக்கும்போது, பகிரப்பட்ட தகவல் மீதான டிரான்ஸ்பெரன்சி மற்றும் கட்டுப்பாடு இல்லாமல் Mail செயலி மீதான உங்கள் செயல்பாடு குறித்தத் தகவல்களை அனுப்புநரால் சேகரிக்க முடியும். மின்னஞ்சல் அனுப்புநர்களின் மின்னஞ்சலை எப்போது, எத்தனை முறை திறந்தீர்கள், மின்னஞ்சலை முன்னனுப்பினீர்களா, உங்கள் இன்டர்நெட் புரோட்டோகால் (IP) முகவரி மற்றும் உங்கள் நடத்தையின் சுயவிவரத்தை உருவாக்கவும் உங்கள் இருப்பிடத்தை அறியவும் பயன்படுத்தக்கூடிய பிற தரவுகள் ஆகியவற்றை அனுப்புநர்கள் அறிந்துகொள்ளக்கூடும்.
Apple உட்பட மின்னஞ்சல் அனுப்புநர்கள் Mail செயலி மீதான உங்கள் செயல்பாடு குறித்த தகவல்களை அறிந்துகொள்வதை நீங்கள் தடுப்பதன் மூலம் உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க “Mail செயல்பாட்டைப் பாதுகாத்தல்” அம்சம் உதவுகிறது. நீங்கள் Mail செயலி அல்லது iCloud.com தளத்தின் Mailஇல் ஒரு மின்னஞ்சலைப் பெற்றால், அதைத் திறக்கும்போது மட்டும் தொலைநிலை உள்ளடக்கத்தைப் பதிவிறக்குவதற்குப் பதிலாக, “Mail செயல்பாட்டைப் பாதுகாத்தல்” அம்சம் நீங்கள் அந்த மின்னஞ்சலில் ஏதேனும் செயல்பாடுகளை மேற்கொண்டாலும் இல்லாவிடினும் தொலைநிலை உள்ளடக்கத்தைப் பின்னணியில் இயல்பாகவே பதிவிறக்குகிறது. மூன்றாம் தரப்பு Mail உள்ளடக்கத்தைப் பற்றிய எந்தத் தகவலையும் Apple அறிந்துகொள்வதில்லை.
கூடுதலாக, Mail மூலம் பதிவிறக்கப்பட்ட அனைத்துத் தொலைநிலை உள்ளடக்கத்தையும் வெவ்வேறு நிறுவனங்களால் இயக்கப்படும் இரண்டு தனித்தனி ரிலேக்கள் மூலம் “Mail செயல்பாட்டைப் பாதுகாத்தல்” அம்சம் வழிசெலுத்துகிறது. முதலாவது ரிலே உங்கள் IP முகவரியை அறிந்திருக்கும், ஆனால் நீங்கள் பெறும் மூன்றாம் தரப்பு Mail உள்ளடக்கத்தைப் பற்றி அறிந்திருக்காது. இரண்டாவது ரிலே நீங்கள் பெறும் தொலைநிலை Mail உள்ளடக்கத்தைப் பற்றி அறிந்திருக்கும், ஆனால் உங்கள் IP முகவரியை அறிந்திருக்காது, அதற்குப் பதிலாக இலக்கிற்குப் பொதுவான அடையாளத்தை வழங்கும். இவ்விதமாக, உங்களையும் நீங்கள் பெறும் மூன்றாம் தரப்பு Mail உள்ளடக்கத்தையும் அடையாளம் காணும் தகவல்கள் ஒரே நிறுவனத்திடம் இருக்காது. உங்களைப் பற்றிய சுயவிவரத்தை உருவாக்கவோ இணையதளங்கள் அல்லது செயலிகளுக்கு இடையே உங்கள் செயல்பாட்டை இணைக்கவோ அனுப்புநர்கள் உங்கள் IP முகவரியை ஒரு தனித்துவமான அடையாளத் தகவலாகப் பயன்படுத்த முடியாது.
உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில், அமைப்புகள் > செயலிகள் > Mail > தனியுரிமைப் பாதுகாப்பு என்பதற்குச் சென்று, “Mail செயல்பாட்டைப் பாதுகாத்தல்” என்பதைத் தட்டி ஆஃப் செய்வதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் அதை முடக்கலாம். Macஇல் “Mail > அமைப்புகள் > தனியுரிமை” என்பதற்குச் சென்று, “Mail செயல்பாட்டைப் பாதுகாத்தல்” அம்சத்தைத் தேர்வுநீக்கவும். iCloud.com தளத்தில் “Mail செயல்பாட்டைப் பாதுகாத்தல்” அம்சம் அதன் Mailக்கான அமைப்புகளைக் கொண்டுள்ளது. iCloud.com தளத்தில், அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு என்பதற்குச் சென்று, “Mail செயல்பாட்டைப் பாதுகாத்தல்” அம்சத்தைத் தேர்வுநீக்குங்கள்.
“Mail செயல்பாட்டைப் பாதுகாத்தல்” அம்சத்தை முடக்கத் தேர்வுசெய்தால், IP முகவரியை மறை அம்சம் அதே இரண்டு-தனிப்பட்ட-இன்டர்நெட்-ரிலேஸ் டிசைனைப் பயன்படுத்தி உங்கள் IP முகவரியை மறைக்கும். உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில், அமைப்புகள் > செயலிகள் > Mail > தனியுரிமைப் பாதுகாப்பு என்பதற்குச் சென்று, “IP முகவரியை மறை” என்பதைத் தட்டி ஆஃப் செய்வதன் மூலம் எந்த நேரத்திலும் அதை முடக்கலாம். Mac சாதனத்தில் Mail > அமைப்புகள் > தனியுரிமை என்பதற்குச் சென்று, “IP முகவரியை மறை” என்பதைத் தேர்வுநீக்கவும். iCloud.com தளத்தில், அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > “IP முகவரியை மறை” என்பதைத் தேர்வுநீக்குவதன் மூலம் “IP முகவரியை மறை” அம்சத்தை முடக்கலாம்.
இந்த அம்சங்களைப் பயன்படுத்துவதன் மூலம், Apple மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் மேலே விவரிக்கப்பட்டுள்ளவாறு இந்தத் தகவல்களைப் பரிமாற்றம் செய்வது, சேகரிப்பது, பராமரிப்பது, செயலாக்குவது மற்றும் பயன்படுத்துவதை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வழங்குகிறீர்கள்.
Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும், இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.
2025-12-12